Return to Video

கான் அக்கடமியின் ஒரு மணி நேர குறிமுறை பயிற்சிக்கு வரவேற்கிறோம்

  • 0:01 - 0:05
    ஹாய் என் பெயர் பமீலா கான் அக்காடமி குழுவை சேர்ந்தவள்
  • 0:05 - 0:09
    குறிமுறைகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் ,சரியா ?
  • 0:09 - 0:14
    அருமை ! சிறுமியாக ,முதல் முறை குறிமுறைகளை பற்றி நான் கற்று கொண்டது நினைவுக்கு வருகிறது
  • 0:14 - 0:19
    நான் ஏறத்தாழ 10,000 மணி நேரம் குறியீடு செய்துவிட்டேன் . ஆனால் இன்றும் மகிழ்ச்சியூட்டுவதாக உள்ளது
  • 0:19 - 0:24
    குறிமுறைகளை தெரிந்து கொள்ள பல வழிகள் உள்ளன . இதன் மூலம் பலவற்றையும் நீங்கள் செய்யலாம் .
  • 0:24 - 0:30
    Pac-Man ,Angry Bird ,Minecraft போன்ற கணினி விளையாட்டுகளை நீங்கள் உருவாக்கலாம் .
  • 0:30 - 0:37
    அல்லது அறிவியலில் ஆர்வம் என்றால் ,செய்நிரல்கள் மூலம் பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை காட்சி வடிவமாக்கலாம் .
  • 0:37 - 0:42
    மருத்துவ துறையில் ஆர்வம் என்றால் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை மருத்துவர்களுக்கு விளக்கலாம் .
  • 0:43 - 0:51
    இயந்திர மனிதன் ,தானே ஓடும் கார்,தரவு ஆய்வுகள் ,கான் அக்காடமி போன்ற இணையதளங்கள் போன்றவை உருவாக்கால்ம் .இன்னும் அதிகம் செய்யலாம் .
  • 0:55 - 0:58
    கான் அக்காடமியில் குறிமுறை பயிலும் பொழுது கணினி மூலம் வரைதல் கற்று கொள்ளலாம்
  • 0:58 - 1:04
    குறைந்த நேரத்தில் விரிவாக சொல்லமுடியாது .ஆனால் ஆரம்பத்திலேயே விரிவாக தெரிந்து கொள்ளும் அளவிற்கு உங்கள் ஆவலை தூண்டும் .
  • 1:04 - 1:08
    அடுத்த ஒரு மணி நேரத்தில் நீங்க்கள் இதை தான் செய்ய போகிறீர்கள் .
  • 1:08 - 1:10
    முதலில் இடை உடாட்ட (இண்டேரச்டிவே) முறையில் உள்ள இந்த விளக்க உரையை பாருங்கள்
  • 1:10 - 1:16
    இந்த காணொளியில் நாம் குறிமுறைகள் (code ) எழுதுவோம் .எழுதும் போதே விளக்குவோம் .வலது புறம் நீங்கள் வருவிளைவை (output )
    பார்க்கலாம் .
  • 1:16 - 1:19
    காணொளிகலில் செய்வது போல் இடை நிறுத்தம் (pause ) செய்யலாம் .
  • 1:19 - 1:25
    இன்னும் ஒரு படி மேலே போய் குறிமுறைய(எடிட்) திருத்தியமைக்க முடியும். மாற்றியமைத்த பிறகு என்ன நடக்கிறது என்றும் பார்க்கலாம் .
  • 1:25 - 1:28
    மீண்டும் பழைய குறிமுறைக்கு சென்று தொடரவும் செய்யலாம் .
  • 1:28 - 1:33
    ஒலி அமைவும் (ஆடியோ) உள்ளது .ஒலிபெருக்கி இணைப்பு கொடுக்கவும் .அல்லது கேட்பொறி (headphone ) அணிந்து கொள்ளவும் .
  • 1:33 - 1:37
    அடுத்து நாம் குறைமுறி சவாலுக்கு தயாராவோம் .
  • 1:37 - 1:42
    இப்படி நீங்கள் கற்றதை பயிற்சி செய்து புள்ளிகளை (points) பெற வேண்டும் .
    ஒவ்வொரு முறையும் ,சரியாக செய்யும் வரை இதை செய்ய வேண்டும் .
  • 1:42 - 1:50
    ஒவ்வொவொரு சவாலிலும் வெற்றியடையும் வரை முயற்சிக்கவும் முடியவில்லைஎன்றால் கவலைபடாதீர்கள் ,அடுத்த பயிற்சி உரைக்கு செல்லவும் .
  • 1:50 - 1:54
    கடைசியாக உங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்த கட்டுபாடற்ற (free form )
    திட்டம் (project ) தரப்படும் .
  • 1:54 - 1:59
    இது தான் சரியான முறை என்று ஒன்றுமில்லை . நீங்கள் கற்றுகொண்டதை மகிழ்ச்சியாக பயன்படுத்துங்கள் .
  • 1:59 - 2:08
    நீங்கள் ஒரு மணிநேரத்துக்கு மேல் எடுத்து கொண்டாலும் பரவாயில்லை ..கற்றுகொள்ளும் வேகம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்று கான் அக்காடமி நம்புகிறது .
  • 2:08 - 2:11
    நீங்கள் எவ்வளவு நேரம் எடுத்து கொண்டாலும் நீங்கள் கற்று கொள்ள நாங்கள உதவுவோம் .
  • 2:11 - 2:15
    தயாரா நீங்கள் ? குறிமுறை கற்றுகொள்வதை கொண்டாடலாமா ? வாவ் !
Title:
கான் அக்கடமியின் ஒரு மணி நேர குறிமுறை பயிற்சிக்கு வரவேற்கிறோம்
Description:

இந்த காணொளி பயிற்சி முறை மூலம் கான் அக்காடமி ஜாவா ஸ்கிரிப்ட் பயன்படுத்தி சித்திரம் வரவைதர்க்கும்( drawing ) அசைவூட்டம் (animation ) முறைகள் எளிதாக கற்று தரபடுகிறது .

more » « less
Video Language:
English
Duration:
02:16

Tamil subtitles

Incomplete

Revisions