Return to Video

Subtraction 2

  • 0:01 - 0:03
    இந்தக் காணொளியில் கழித்தல் கணக்கை
  • 0:03 - 0:05
    ஒருமுறை மறுபார்வை பார்த்து விடுவோம்.
  • 0:05 - 0:09
    5லிருந்து 3ஐக் கழிப்பது என்றால் அது எதைக் குறிக்கிறது?
  • 0:09 - 0:11
    இதை நம்மால் பல கோணங்களில் பார்க்க முடியும்.
  • 0:11 - 0:17
    நம்மிடம் 5 செர்ரிப் பழங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். செர்ரி என்றால் தெரியுமில்லையா.....
  • 0:17 - 0:22
    ரத்தச் சிவப்பில் அழகாக உருண்டையாக இருக்கும். அவை 1, 2, 3, 4, 5
  • 0:22 - 0:26
    5 பழங்கள் உள்ளன,
    இந்த ஐந்தில் 3ஐக் கழிப்பது என்றால்
  • 0:26 - 0:27
    அதாவது மூன்றைக் குறைப்பது
  • 0:27 - 0:30
    வேறு வார்த்தையில் சொன்னால் இந்த ஐந்து பழங்களில் இருந்து
  • 0:30 - 0:32
    3 பழங்களை எடுத்து விடுவது.
  • 0:32 - 0:35
    இந்த ஒன்று.... அடுத்து ஒன்று..... மற்றும் ஒன்று.......
  • 0:35 - 0:38
    3 பழங்களை எடுத்து விட்டோம்.
  • 0:38 - 0:40
    மூன்றினை எடுத்து விட்ட பிறகு, மீதம் இருப்பவை எத்தனை?
  • 0:40 - 0:43
    இங்கே மீதமாக இருப்பது 1, 2
  • 0:43 - 0:47
    இரண்டு பழங்கள் மீதி உள்ளன.
  • 0:47 - 0:50
    இதையே இன்னொரு விதமாகவும் செய்யலாம். எப்படி?
  • 0:50 - 0:54
    5 கழித்தல் 3 என்றால்,
  • 0:54 - 0:57
    5க்கும் 3க்கும் இடையில்
  • 0:57 - 1:00
    என்ன வித்தியாசம் இருக்கிறது?
  • 1:00 - 1:01
    இதை வரைந்து கொள்வோம்.
  • 1:01 - 1:02
    நம்மிடம் இருப்பது ஐந்து பெர்ரிப் பழங்கள்.
  • 1:02 - 1:05
    1, 2, 3, 4, 5
  • 1:05 - 1:08
    உங்களிடம் 3 பழங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
  • 1:08 - 1:10
    இதற்கு வேறு நிறம் கொடுப்போம்.
  • 1:10 - 1:12
    உங்களிடம் மூன்று பெர்ரிப் பழங்கள் உள்ளன.
  • 1:12 - 1:16
    5 இல் மூன்றைக் கழித்தால்
  • 1:16 - 1:19
    உங்களிடம் இருப்பதை விட என்னிடம்
    எத்தனை பழங்கள் அதிகமாக இருக்கும்..?
  • 1:19 - 1:22
    இந்த பெர்ரிப் பழங்களைப் பாருங்கள்
  • 1:22 - 1:24
    என்னிடம் ஒரு பழம்,
    உங்களிடம் ஒரு பழம்
  • 1:24 - 1:27
    என்னிடம் ஒரு பழம்,
    உங்களிடம் ஒரு பழம்
  • 1:27 - 1:30
    ஆனால், கூடுதலாக இந்த 2 பழங்கள்
    என்னிடம் உள்ளன, உங்களிடம் இல்லை
  • 1:30 - 1:33
    உங்களைவிட என்னிடம் இருப்பது 2 பழங்கள் அதிகம்.
  • 1:33 - 1:35
    இந்தக் கணக்கை நாம் எண் கோட்டின் வழியாகவும் செய்யலாம்.
  • 1:35 - 1:38
    உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.
  • 1:38 - 1:42
    ஓர் எண் கோட்டை வரைந்து கொள்கிறேன்.
  • 1:42 - 1:43
    இது நம்முடைய எண் கோடு
  • 1:43 - 1:45
    எண் கோட்டு முறையை பல காணொளிகளில் பார்த்திருப்பீர்கள்.
  • 1:45 - 1:47
    இந்த எண் கோட்டை நீட்டிக்கொண்டேபோகலாம்
    என்பது உங்களுக்குத் தெரியும்.
  • 1:47 - 1:49
    உண்மையில், நாம் 0க்கு இடப்பக்கமும்
    செல்லலாம்
  • 1:49 - 1:52
    இடப்பக்கம் சென்றால், அவை எதிர்மறை எண்கள்.
  • 1:52 - 1:54
    இப்போது நாம் 0 ல் தொடங்குவோம்.
  • 1:54 - 2:02
    0, 1, 2, 3, 4, 5... என
    7வரை வரைவோம்
  • 2:02 - 2:07
    5 கழித்தல் 3 என்றால்,
    5லிருந்து 3ஐக் கழிக்க வேண்டும்.
  • 2:07 - 2:11
    ஆகவே 5ல் தொடங்குவோம்.
  • 2:11 - 2:15
    5 + 3 என்றால்
    வலப்பக்கம் 3 இடங்கள் நகர வேண்டும்.
  • 2:15 - 2:17
    அது, நம்மிடமுள்ள எண்ணிக்கையை அதிகரிக்கும்.
  • 2:17 - 2:20
    ஆனால் இங்கே செய்யப்போவது மூன்றைக் கழித்தல்.
  • 2:20 - 2:29
    ஆகவே, 1, 2, 3 எனக் குறைத்துக் கொண்டே போக கிடைக்கும் விடை 2.
  • 2:29 - 2:32
    இந்தக் கோணத்தில் புரிந்து கொள்ள நாம்
  • 2:32 - 2:33
    இன்னொரு எண் கோடு வரைந்து கொள்வோம்.
  • 2:33 - 2:34
    அதுதான் தெளிவாகப் புரியும்.
  • 2:34 - 2:37
    ஐந்தானது மூன்றை விட
  • 2:37 - 2:39
    எத்தனை அதிகம் என்பது தெரியும்.
  • 2:39 - 2:42
    விடை அதே இரண்டு தான்.
  • 2:42 - 2:44
    ஆனால் நாம் கணக்கை இன்னொரு கோணத்தில் புரிந்து கொள்கிறோம்.
  • 2:44 - 2:45
    சரி மற்றுமொரு எண் கோடு வரையலாம்.
  • 2:45 - 2:47
    அதில் எண்களைக் குறித்துக் கொள்வோம்.
  • 2:50 - 2:58
    0, 1, 2, 3, 4, 5, 6, 7
  • 2:58 - 3:01
    இதில் ஐந்து எங்கே இருக்கிறது.
  • 3:01 - 3:03
    ஆங்..... இங்கே இருக்கிறது.
  • 3:03 - 3:05
    இந்த இடத்தைக் குறிக்க ஒரு பிங்க் நிற சதுரம் வரைவோம்
  • 3:05 - 3:06
    ஐந்து இங்கே இருக்கிறது.
  • 3:06 - 3:11
    அடுத்து 3 எங்கே உள்ளது?
    அதை மஞ்சளில் குறித்துக் கொள்வோம்.
  • 3:11 - 3:13
    இது மூன்று
  • 3:13 - 3:19
    இந்த இரண்டிற்கும்
  • 3:19 - 3:22
    இடையே உள்ள வேறுபாடு என்ன..?
  • 3:22 - 3:31
    ஐந்துக்கும் மூன்றுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை
  • 3:37 - 3:39
    அறிந்து கொள்ள எளிய முறை ஒன்று இருக்கிறது.
  • 3:39 - 3:43
    மூன்றுடன் எதைக் கூட்டினால் 5 வரும்?
  • 3:43 - 3:46
    வித்தியாசம் என்றால்,
    5லிருந்து 3 எவ்வளவு வேறுபடுகிறது என்பது தான்.
  • 3:46 - 3:50
    மூன்றில் இருந்து போவோம் ஒன்று.... இரண்டு 5க்குச் செல்ல 2 தேவை
  • 3:50 - 3:54
    ஆக, 5 க்கும் மூன்றுக்கும்
  • 3:54 - 4:05
    இடையிலான வித்தியாசம் இரண்டு.
  • 4:05 - 4:06
    இரண்டு நிலைகள் வேறுபட்டிருப்பது நமக்குத் தெரிந்து விட்டது.
  • 4:06 - 4:07
    அதை இங்கே வரைவோம்
  • 4:07 - 4:08
    இது 2
  • 4:08 - 4:12
    கழித்தல் என்பதற்கும் வித்தியாசம் என்பதற்கும் இடையே
  • 4:12 - 4:14
    உள்ள வேறுபாட்டை நாம் தெரிந்து கொள்வோம்.
  • 4:14 - 4:18
    இவை கழித்தலின் இரண்டு வேறுபட்ட கோணங்கள்.
  • 4:18 - 4:20
    எப்படிக் கணக்கிட்டாலும் மிகச் சரியாக ஒரே விடைதான் கிடைக்கும்.
  • 4:20 - 4:23
    எந்த முறையைப் பின்பற்றினாலும்,
    விடை ஒன்றுதான்
  • 4:23 - 4:25
    ஏனென்றால் ஒரே விடையைக் கண்டுபிடிக்கத்தான் இரண்டு வேறு கோணங்களில் முயற்சிக்கிறோம்.
  • 4:25 - 4:27
    சரி இன்னொரு கணக்கு. இப்போது வேறுபட்ட எண்களை எடுத்துக் கொள்வோம்.
  • 4:27 - 4:31
    7 கழித்தல் 4 என்ன?
  • 4:31 - 4:34
    என்னிடம் 7 அடி நீள மரம் உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.
  • 4:34 - 4:35
    இந்த மரக்கட்டை
  • 4:39 - 4:41
    ஏழு அடி நீளம் உள்ளது.
  • 4:41 - 4:44
    அதில் இங்கே ஒரு கோடு வரைகிறோம். இதைப் பூஜ்ஜியம் என்று வைத்துக் கொள்வோம்.
  • 4:44 - 4:50
    1, 2, 3, 4, 5, 6, 7
  • 4:50 - 4:53
    ஆக, இந்த மரக்கட்டையின் நீளம் ஏழு அடி.
  • 4:53 - 4:56
    இதில் 4 அடியை அறுத்து விடுகிறோம்.
  • 4:56 - 4:58
    இந்த 4 அடியை இதிலிருந்து எடுப்பது என்றால்
  • 4:58 - 5:02
    1, 2, 3, 4ஐ அறுத்து விட வேண்டும்.
  • 5:02 - 5:03
    அறுத்தது போக மீதி மரத்தின் நீளம் எவ்வளவு இருக்கும்?
  • 5:03 - 5:06
  • 5:06 - 5:08
  • 5:08 - 5:09
  • 5:09 - 5:11
  • 5:11 - 5:13
  • 5:13 - 5:15
    இதெல்லாம் நீக்கப்பட்டு விட்ட பின்னர்
  • 5:15 - 5:17
  • 5:17 - 5:18
  • 5:18 - 5:22
    4 அடி மரம் நீக்கிய பிறகு
  • 5:22 - 5:28
    மீதமிருப்பது 1, 2, 3 அடி மரம்
  • 5:28 - 5:29
    நம்மிடம் மீதமிருப்பது மூன்று அடி.
  • 5:29 - 5:34
    ஆக, ஏழு கழித்தல் நான்கு மூன்று
  • 5:34 - 5:36
    இங்கே கழித்தல் என்பது
    நீக்குதல்
  • 5:36 - 5:40
    மரத்தைப் பொறுத்த அளவில் அறுத்து நீக்குவது.
  • 5:40 - 5:45
    இதை இன்னொரு கோணத்தில் பார்க்கலாம்.
  • 5:45 - 5:48
    அப்போதும் அதே விடைதான் வரும்.
  • 5:48 - 5:50
    7 கழித்தல் நான்கு என்ற கணக்கு தான்.
  • 5:50 - 5:54
    இங்கே ஏழு அங்கு நீளத்திற்கு
  • 5:54 - 5:56
    மரத்தைப் போல ஒன்று இருக்கிறது.
  • 5:56 - 6:05
    இது 1, 2, 3, 4, 5, 6, 7
  • 6:05 - 6:08
    இது 7 அங்குலம்.
  • 6:08 - 6:11
    இதிலிருந்து 4 அங்குலத்தை எடுப்பதற்குப் பதிலாக
  • 6:11 - 6:14
    அதை ஒரு நான்கு அங்குல மரத்தால் அளந்து பார்ப்போம்.
  • 6:14 - 6:14
    இது மற்றொரு 4 அங்குல மரம்.
  • 6:14 - 6:19
    அங்குலம் என்றால் உங்களுக்குத் தெரியும் இல்லையா.... ஆங்கிலத்தில் இஞ்ச் என்று கூறுவது தான் தமிழில் அங்குலம் எனப்படுவது.
  • 6:19 - 6:23
    இது 7 அங்குல மரம், இது 4 அங்குல மரம்.
  • 6:23 - 6:26
    7 கழித்தல் 4 என்பதை,
  • 6:26 - 6:27
    ஏழிலிருந்து நான்கை
    நீக்குவதாக எடுத்துக் கொள்ளலாம்.
  • 6:27 - 6:31
    7 அங்குல மரத்திற்கும் 4 அங்குல மரத்திற்கும்
  • 6:31 - 6:34
    இடையை உள்ள வேறுபாட்டைக் காண்பதாகவும் வைத்துக் கொள்ளலாம்.
  • 6:34 - 6:35
    சரி இங்கே என்ன வேறுபாடு?
  • 6:35 - 6:38
    4 அங்குல மரத்திலிருந்து
    7 அங்குல மரத்துக்குச் செல்ல
  • 6:38 - 6:45
    நாம் 3 அங்குலத்தைச் சேர்க்க வேண்டும்.
  • 6:45 - 6:48
    ஏதோ ஒருவகையில் சேர்ப்பது
  • 6:48 - 6:51
    அல்லது, மூன்று அங்குல உயரத்தை வளர்ப்பது.
  • 6:51 - 6:52
    ஏதாவது அது அதிகமானால் தான் நான்கு அங்குலம் ஏழு அங்குலமாக மாறும்.
  • 6:52 - 6:55
    இந்த இரு முறைகளும் முற்றிலும் ஒன்று தான்.
  • 6:55 - 6:56
    இருவேறு முறைகளில் கழித்தல் அவ்வளவு தான்.
  • 6:56 - 6:59
  • 6:59 - 7:02
  • 7:02 - 7:03
  • 7:03 - 7:06
  • 7:06 - 7:09
    அடுத்து நாம் காணப் போவது சற்றே பெரிய கணக்கு.
  • 7:09 - 7:12
    எளிய கணக்குகளுக்கு எண் கோடு பயனுள்ளதாக இருக்கும்.
  • 7:12 - 7:16
    17 கழித்தல் 9 கணக்கைப் பார்க்கலாம்.
  • 7:16 - 7:18
    இதையும்
  • 7:18 - 7:19
    இரண்டு வழிகளில் கழிக்கலாம்.
  • 7:19 - 7:24
    இந்த இடத்தில் 17 பொருட்கள் என்பதைக் குறிக்க
  • 7:24 - 7:27
    பதினேழு சிப்ஸ் வரைந்து கொள்வோம். இந்த சிப்ஸ்களை கவனமாக கையாள வேண்டும். இல்லையென்றால் உடைந்து விடும்.
  • 7:27 - 7:36
    1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
    11, 12, 13, 14, 15, 16, 17 சிப்ஸ்.
  • 7:36 - 7:38
    இவற்றில் நாம் 9ஐ நீக்கப்போகிறோம்.
  • 7:38 - 7:45
    1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
    ஒன்பதை நீக்கி விடுகிறோம்.
  • 7:45 - 7:47
    மீதி எத்தனை சிப்ஸ் இருக்கும்.
  • 7:47 - 7:52
    1, 2, 3, 4, 5, 6, 7, 8
  • 7:52 - 7:56
    ஆக, 17 இல் ஒன்பது போக எட்டு மீதம் இருக்கும்.
  • 7:56 - 7:58
    ஆனால், இப்படி ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டிருந்தால்
  • 7:58 - 8:00
    கணக்குப் போட அதிக நேரமாகும்.
  • 8:00 - 8:03
    இத்தனை வட்டங்கள் வரைந்து,
    அவற்றை அடித்துக் கொண்டிருந்தால்
  • 8:03 - 8:05
    காகிதமும் வீணாகும்
  • 8:05 - 8:07
    நேரமும் வீணாகும்....
  • 8:07 - 8:10
    இந்தக் கணக்கைச் செய்ய எளிய வழி...
  • 8:10 - 8:12
    எண் கோடு வரைந்து கணக்கிடுவது தான்.
  • 8:12 - 8:14
    எண் கோட்டினை எப்போதுமே பூஜ்ஜியத்தில் தான் தொடங்க வேண்டும் என்பதில்லை.
  • 8:14 - 8:20
    எண் கோட்டில் 18இல் தொடங்கி 17, 16...
  • 8:20 - 8:32
    15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7... என்று தொடர்ந்து
  • 8:32 - 8:35
    இடது பக்கமாக பூஜ்ஜியம் வரை செல்லலாம்
  • 8:35 - 8:37
    இப்போது 17ல் தொடங்குவோம்.
  • 8:37 - 8:40
    17ல் தொடங்கி,
    அதில் 9ஐ நீக்குகிறோம்.
  • 8:40 - 8:49
    ஆக நம்மிடம் மீதமிருப்பது என்ன 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
  • 8:49 - 8:52
    இப்போதும் நமக்கு
  • 8:52 - 8:56
    விடையாகக் கிடைப்பது எட்டு.
  • 8:56 - 8:57
    இந்த முறை மிகவும் எளிதாக இருக்கும்.
  • 8:57 - 8:59
    ஆனால், ஒவ்வொருமுறையும்
    இப்படிக் கணக்கிட இயலாது
  • 8:59 - 9:02
    ஆனால், ஒவ்வொருமுறையும்
    இப்படிக் கணக்கிட இயலாது
  • 9:02 - 9:04
    ஆனால், ஒவ்வொருமுறையும்
  • 9:04 - 9:05
    கழிப்பது அல்லது வேறுபாட்டைக் கண்டுபிடிப்பது போன்றவற்றைச் செய்து கொண்டிருக்க இயலாது.
  • 9:05 - 9:07
    ஆகவே, நீங்கள் இதை ஆழமாகத்
  • 9:07 - 9:08
    தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
  • 9:08 - 9:11
    உதாரணமாக, 17 கழித்தல் 9 என்பதை மனப்பாடமாக என்று சொல்ல வேண்டும்.
  • 9:11 - 9:12
    என்னைக் கேட்டால் எட்டு என்று எண் கோடில்லாமல் ஒவ்வொன்றாக நீக்காமல் சொல்லி விட முடியும்.
  • 9:12 - 9:15
    சரி பதினேழு கழித்தல் எட்டு என்ன..?
  • 9:15 - 9:17
    பதினேழு கழித்தல் எட்டு
  • 9:17 - 9:20
    ஆம் ஒன்பது...
  • 9:20 - 9:22
    இது எப்படி?
  • 9:22 - 9:27
    8 + 9 என்றால் அது பதினேழிற்குச் சமம்.
  • 9:27 - 9:32
    ஆகவே, 17 இல் ஒன்பதைக் கழித்தால் கிடைப்பது எட்டு.
  • 9:32 - 9:35
    அல்லது, 17 கழித்தல் எட்டு என்றால் விடை ஒன்பது.
  • 9:35 - 9:39
    17 கழித்தல் எட்டு என்கிறபோது
  • 9:39 - 9:43
    ஒரு குறிப்பிட்ட எண்ணுடன் 8ஐக் கூட்டினால்
    17 வரும்
  • 9:43 - 9:44
    அந்த எண் தான் 9.
  • 9:44 - 9:47
    17 கழித்தல் ஒன்பது என்கிறபோது
  • 9:47 - 9:49
    ஏதோ ஓர் எண்ணுடன் 9ஐக் கூட்டினால்
    17 வரும்
  • 9:49 - 9:50
    அந்த எண் 8
  • 9:50 - 9:54
    இவை எல்லாமே ஒன்றுதான்
  • 9:54 - 9:55
  • 9:55 - 9:56
    8 கூட்டல் 9 சமம் 17
  • 9:56 - 9:59
    அல்லது, 17 கழித்தல் 9 சமம்எட்டு.
  • 9:59 - 10:03
    அல்லது, 17 கழித்தல் எட்டு என்றாலும் அது ஒன்பது.
  • 10:03 - 10:05
    இதில் ஒன்றும் குழப்பம் இல்லையே....
  • 10:05 - 10:09
    பெரும்பாலான கழித்தல் கணக்குகளில்
  • 10:09 - 10:13
    ஒற்றை இலக்க விடை என்றால்
  • 10:13 - 10:16
    உடனே உங்களது கற்பனையில் எண்கோடு வந்து விட வேண்டும்.
  • 10:16 - 10:17
    அதன் மூலமாக விடை சட்டென்று கிடைத்து விடும்.
  • 10:17 - 10:19
    மேலும் சில கணக்குகளைப் போட்டுப் பார்த்தால்
  • 10:19 - 10:22
    அவை நம் நினைவில் பதிய ஏதுவாகி விடும்.
  • 10:22 - 10:26
  • 10:26 - 10:29
    சிறிய எண்களை மனப்பாடம் செய்து விட்டு
  • 10:29 - 10:31
    அதன் பிறகு பெரிய எண்களைக் கழிக்கும் கணக்குகளைப் பார்க்கலாம்.
  • 10:31 - 10:37
    இப்போது, 13 லிருந்து ஐந்தைக் கழிப்போம்.
  • 10:37 - 10:40
    இந்தக் கணக்கிற்கு நாம் பழைய முறைப்படி
  • 10:40 - 10:41
    பழம், சிப்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளப் போவதில்லை.
  • 10:41 - 10:43
    அவற்றையெல்லாம் சாப்பிட்டு விட்டதாக நினைத்துக் கொண்டு
  • 10:43 - 10:46
    நேரடியாக எண் கோடு வரைவோம்.
  • 10:46 - 10:58
    தொடங்கலாமா 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5
  • 10:58 - 11:00
    என்று தொடர்ந்து கீழ் நோக்கிச்சென்று கொண்டே இருக்கலாம்.
  • 11:00 - 11:02
    பூஜ்ஜியத்தைக் கடந்தும் செல்லலாம்.
  • 11:02 - 11:04
    அதை அப்புறம் பார்க்கலாம்.
  • 11:04 - 11:06
    இப்போது 13ல் தொடங்கினோம்.
  • 11:06 - 11:09
  • 11:09 - 11:11
    அதிலிருந்து 5ஐ நீக்குகிறோம்.
  • 11:11 - 11:14
    இது கழித்தல் முறைப்படி
  • 11:14 - 11:15
    5ஐ நீக்குகிறோம்
  • 11:15 - 11:21
    1, 2, 3, 4, 5...
    விடை 8
  • 11:21 - 11:26
    ஆக, 13 கழித்தல் 5 சமம் 8
  • 11:26 - 11:30
  • 11:30 - 11:32
    இதையே இன்னொரு கோணத்தில் செய்யலாம்.
  • 11:32 - 11:34
    13ஐக் குறிக்கலாம்.
  • 11:34 - 11:36
    அடுத்து ஐந்தைக் குறிப்போம்.
  • 11:36 - 11:38
    இது 5
  • 11:38 - 11:40
    இந்த எண் கோட்டில்
    5 இங்கே இருக்கிறது.
  • 11:40 - 11:43
    5உடன் எதைக் கூட்டினால்
    13 வரும்?
  • 11:43 - 11:43
    பார்ப்போம்.
  • 11:43 - 11:49
    1, 2, 3, 4, 5, 6, 7, 8
  • 11:49 - 11:52
    5 உடன் 8ஐக் கூட்டினால் 13 வரும்
  • 11:52 - 11:56
    5 கூட்டல்எட்டு என்றால் பதிமூன்று.
  • 11:56 - 12:00
    பதிமூன்று கழித்தல் ஐந்து சமம் எட்டு
  • 12:00 - 12:06
  • 12:06 - 12:09
    இவை அனைத்திலும் நாம் புரிந்து கொள்வது ஒன்று தான்.
  • 12:09 - 12:10
  • 12:10 - 12:12
    13க்கும் 5க்கும் வித்தியாசம் 8
  • 12:12 - 12:14
    13க்கும் 8க்கும் வித்தியாசம் 5
  • 12:14 - 12:17
  • 12:17 - 12:19
    இது நமக்குப் புரிகிறது தானே.
  • 12:19 - 12:23
    இது நமக்கு நல்ல பயிற்சியாக அமையும்.
  • 12:23 - 12:26
    ஏதேனும் இரண்டு எண்களை எடுத்துக் கொண்டு
  • 12:26 - 12:28
    கழித்துப் பார்ப்போம். அதையே கூட்டிப் பார்ப்போம்.
  • 12:28 - 12:32
    அது ஒரு நல்ல பயிற்சியாக அமையும்.
Title:
Subtraction 2
Description:

Different ways to view subtraction

more » « less
Video Language:
English
Duration:
12:32
Poppu Purushothaman edited Tamil subtitles for Subtraction 2
Poppu Purushothaman edited Tamil subtitles for Subtraction 2
Poppu Purushothaman edited Tamil subtitles for Subtraction 2
Poppu Purushothaman edited Tamil subtitles for Subtraction 2
Naga Chokkanathan edited Tamil subtitles for Subtraction 2
jayanthi sridharan edited Tamil subtitles for Subtraction 2
jayanthi sridharan edited Tamil subtitles for Subtraction 2
jayanthi sridharan edited Tamil subtitles for Subtraction 2
Show all

Tamil subtitles

Revisions