Problem connecting to Twitter. Please try again.
Problem connecting to Twitter. Please try again.
Problem connecting to Twitter. Please try again.
Problem connecting to Twitter. Please try again.
Problem connecting to Twitter. Please try again.

Return to Video

Sri Kamakshi Amman Virutham

  • 0:02 - 0:09
    ஸ்ரீ காமாக்ஷியம்மன் விருத்தம்
  • 0:19 - 1:18
    மங்களம் சேர், காஞ்சிநகர் மன்னு காமாட்சி மிசை
    துங்கமுள நற்பதிகம் சொல்லவே - திங்கட்
    பயமருவும் பணியணியும் பரமன் உளந்தனில் மகிழும்
    கயமுக ஐங்கரன் இருதாள் காப்பு
    கயமுக ஐங்கரன் இருதாள் காப்பு
  • 1:30 - 1:48
    சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி ஜோதியாய் நின்ற உமையே! சுக்ரவாரதிளுனைக் கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கி விடுவாய்
  • 1:49 - 2:07
    சிந்தைதனில் உன்பாதம் தன்னையே தொழுபவர்கள் துயரத்தை மாற்றி விடுவாய்.... ஜெகமெல்லாம் உன் மாயை புகழ என்னாலாமோ சிறியனால் முடிந்திராது
  • 2:07 - 2:25
    சொந்தவுன் மைந்தனாம் என்தனை இரட்சிக்க சிறிய கடனுள்ளதம்மா!....சிவசிவ மஹேஸ்வரி பரமனிட ஈஸ்வரி சிரோன்மணி மனோன் மணியுநீ!
  • 2:25 - 2:51
    அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி அனாத ரட்சகியும் நீயே! .....அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே!
  • 2:59 - 3:17
    பத்து விரல் மோதிரம் எத்தனை பிரகாசமானது பாடகம் தண்டை கொலுசும் பட்சைவைடூரியம் இச்சையா இழைத்திட்ட பாதச் சிலம்பினொலியும்
  • 3:17 - 3:34
    முத்து மூக்குத்தியும் இரத்தின பதக்கமும் மோகன மாலைஅழகும்....முழுதும் வைடூரிய புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலியழகும்
  • 3:34 - 3:50
    சுத்தமாய் இருக்கின்ற காதினிர்க் கம்மலுஞ் செங்கையில் பொன்கங்கணம்.... ஜெயமெலாம் விலைபெற முகமெலாம் ஒளியுற்ற சிறகாது கொப்பினழகும்
  • 3:50 - 4:16
    அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை அடியனார் சொல்ல திறமோ?..... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே!
  • 4:25 - 4:43
    கதியாக உந்தனைக் கொண்டாடி நினதுமுன்
    குறைகளைச் சொல்லி நின்று....
    கொடுமையாய் என்மீது வறுமையாய் வைத்துநீ
    குழப்பமாய் இருப்பதேனோ?
  • 4:43 - 5:01
    சதிகாரிஎன்று நானறியாமல் உந்தனைச் சதமாக நம்பினேனே! ....சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க சாதகமுனக்கில்லையோ?
  • 5:01 - 5:19
    மதிபோல ஒளியுற்ற புகழ் நெடுங்கரமுடைய மதகஜனை ஈன்ற தாயே! .....மாயனது தங்கையே பரமனது மங்கையே மயானத்தில் நின்ற உமையே!
  • 5:19 - 5:42
    அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன்
    அன்பு வைத்தென்னை ஆள்வாய்....
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி உமையே!
    அம்மை காமாட்சி உமையே!
  • 5:50 - 6:09
    பூமியிற் பிள்ளையாய் பிறந்து வளர்ந்து நான் பேரான ஸ்தலமும் அறியேன்.... பெரியோர்கள் தரிசனம் ஒரு நாளும் கண்டு நான் போற்றிக் கொண்டாடிஅறியேன்
  • 6:09 - 6:26
    வாமிஎன்றுன்னை சிவகாமி என்றே சொல்லி வாயினாற் பாடி அறியேன்.... மாதா பிதாவினது பாதத்தை நானுமே வணங்கி கொண்டாடி அறியேன்
  • 6:26 - 6:43
    சாமியென்றே சொல்லி சதுருடன் கைகூப்பிச்
    சரணங்கள் செய்துமஅறியேன்....
    சத்குருவின் பாதார விந்தங்களை கண்டு
    சாஷ்டாங்க தண்டனரியேன்
  • 6:43 - 7:11
    ஆமிந்த பூமியிலடியேனைப் போல் மூடன் ஆச்சி நீ கண்டதுண்டோ?.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே!
  • 7:18 - 7:35
    பெற்றதாய் என்றுன்னை மெத்தவும் நம்பி நான் பிரியமாயிருந்தேனம்மா... பித்தலாட்டக் காரியென்று நானறியாது உன் புருஷனை மறந்தேனம்மா
  • 7:35 - 7:53
    பக்தனாயிருந்து முன் சித்தமும் இறங்காமல்
    பாராமுகம் இருந்தால்
    பாலன் நானெப்படி விசனமில்லாமலே
    பாங்குடன் இருப்பதம்மா ?
  • 7:53 - 8:09
    இத்தனை மோசங்களாகாது ஆகாது இது தர்மமல்ல அம்மா எந்தனை ரக்ஷிக்க சிந்தனைக ளில்லையோ இது நீதியல்ல அம்மா
  • 8:10 - 8:39
    அத்தி முகனாசையா லிப்புத்திரனை மறந்தாயோ அதை எனக்கருள் புரிகுவாய்.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே!
  • 8:48 - 9:06
    மாயவன் தங்கைநீ மரகதவல்லிநீ மனிமந்த்ரக் காரி நீயே.... மாயசொரூபிநீ மகேஸ்வரியுமானநீ மலையரையன் மகளான நீ!
  • 9:06 - 9:25
    தாயே மீனாட்சிநீ சற்குண வல்லிநீ தயாநிதி விசாலாட்சி நீ.... தாரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும்நீ சரவணனை ஈன்றவளும் நீ!
  • 9:25 - 9:43
    பேய்களுடனாடிநீ அத்தனிட பாகமதில் பேர்பெற வளர்ந்தவளும் நீ.... ப்ரணவஸ்வரூபி நீ பிரசன்ன வல்லி நீ பிரியவுண்ணா மலையும் நீ!
  • 9:43 - 10:08
    ஆயிமகமாயி நீ ஆனந்தவல்லி நீ அகிலாண்ட வல்லி நீயே.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே!
  • 10:43 - 11:04
    பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்ற தாய் புத்திகள் சொல்வதில்லையோ?.... பேய்பிள்ளை ஆனாலும் தான்பெற்ற பிள்ளையை பிரியமாய் வளர்ப்ப தில்லையோ?
  • 11:04 - 11:22
    கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய்விடும் கதறி நான் அழுத குரலில்.... கடுகதனிலெட்டி லொரு கூறுவதி லாகிலுன் காதினுள் நுழைந்த தில்லையோ?
  • 11:22 - 11:40
    இல்லாத வன்மங்களென்மீதில் யேனம்மா இனி விடுவதில்லை சும்மா.... இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வது இது தரும மல்ல அம்மா
  • 11:40 - 12:03
    எல்லோரும் உன்னையே சொல்லியே யேசுவர்
    இது நீதியல்ல அம்மா....அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே!
  • 12:14 - 12:33
    முன்னையோர் ஜென்மாந்த்ரம் என்னென்ன பாவங்கள்
    இம்மூடன் செய்தானம்மா....
    மெய்யன்று பொய் சொல்லி கைதனில் பொருள்தட்டு
    மோசங்கள் பண்ணினேனோ?
  • 12:33 - 12:50
    என்னமோ தெரியாது இக்ஷனம் தன்னிலே இக்கட்டு வந்ததம்மா.... ஏழை நான் செய்தபிழை தாய் பொருத்தருள் தந்து என் கவலை தீரும்மம்மா!
  • 12:50 - 13:09
    சின்னங்களாகாது ஜெயமில்லையோ தாயே சிறு நாணம் ஆகுதம்மா.... சிந்தினைகள் என்மீதில் வைத்து நர்பாக்கியமருள் சிவசக்தி காமாக்ஷி நீ!
  • 13:09 - 13:38
    அன்னவாகனமேரி ஆனந்தமாக உன் அடியேன் முன் வந்து நிற்பாய்.... அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே!
  • 13:46 - 14:06
    எந்தனைப் போலவே ஜெனனம் எடுத்தோர்கள் இன்பமாய் வாழ்ந்திருக்க.... யான் செய்த பாவமோ இத்தனை வருமயிலுன் அடியேன் தவிப்பதம்மா
  • 14:06 - 14:24
    உன்னையே துணை என்றுரிதியாய் நம்பினேன் உன் பாதம் சாட்சியாக.... உன்னையன்றி வேறு துணை இனியாரயுங் காணேன் உலங்கந்தனில் எந்தனுக்கு
  • 14:24 - 14:43
    பிள்ளை என்றெண்ணி நீ சொல்லாமல் என் வறுமை போக்கடிதென்னை ரட்சி....
    பூலோகம் மெச்சவே பாலன் மார்கண்டன் போல்
    பிரியமாய் காத்திடம்மா
  • 14:43 - 15:06
    அன்னையே இன்னும் உன்னடியேனை ரட்சிக்க அட்டி செய்யாதேயம்மா....அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! அம்மை காமாட்சி உமையே!
  • 15:14 - 15:33
    பாரதனில் உள்ளளவும் பாக்கியத்தோடு என்னைப் பாங்குடன் இரட்சிக்கவும்.... பக்தியாய் உன் பாதம் நித்தம் தரிசித்த பாலருக்கருள் புரியவும்
  • 15:33 - 15:51
    சீர்பெற்ற தேகத்தை சிறுபிணிகள் அணுகாமல் செங்கலிய னணுகாமலும்....சேயனிட பாக்கியம் செல்வங்களைத் தந்து ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்
  • 15:51 - 16:08
    பேர்பெற்ற காலனைப் பின்தொடர வொட்டாமல் பிரியமாய்க் காத்திடம்மா....பிரியமாயுன்மீதில் சிறியனான் சொன்னகவி பிழைகளைப் பொறுத்து ரட்சி
  • 16:08 - 16:37
    ஆறுதனில் மணல் குவித்தரிய பூஜை செய்த என்
    அம்மை ஏகாம்பரி... நீயே...
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி உமையே!
    அம்மை காமாட்சி உமையே!
    அம்மை காமாட்சி உமையே!
  • 16:45 - 17:04

    எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது
    இப்பூமி தன்னிலம்மா....
    இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்
    இனி ஜெனனமெடுதிடாமல்
  • 17:04 - 17:22
    முக்திதர வேண்டுமென்றுன்னையே தொழுத நான் முக்காலும் நம்பினேனே....முன்னும்பினும் தோணாத மனிதரை போலநீ முழித்திருக்காதே அம்மா
  • 17:22 - 17:40
    வெற்றிபெற உன் மீது பக்தியாய் சொன்ன கதை விருத்தங்கள் பதினொன்றையும்....விருப்பமுடன் நீ கேட்டு அளித்திடும் செல்வத்தை விமலனாய் ஏசப் போறார்
  • 17:40 - 18:14

    அத்தனிட பாகத்தை விட்டு வந் தென்னரும்
    குறைகளை தீருமம்மா
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி உமையே!
    அம்மை காமாட்சி உமையே!
    அம்மை காமாட்சி உமையே!
    யே......
  • 18:14 -
    ஸ்ரீ காமாக்ஷியம்மன் விருத்தம் with Tamil sub-titles - Jan 2012
Title:
Sri Kamakshi Amman Virutham
Description:

Combination of videos with Tamil sub-titles; The idea is to provide video and lyrics to read-along at the same time

more » « less
Video Language:
Tamil
Duration:
18:21
arvindaa edited Tamil subtitles for Sri Kamakshi Amman Virutham
arvindaa edited Tamil subtitles for Sri Kamakshi Amman Virutham
arvindaa added a translation

Tamil subtitles

Incomplete

Revisions