Return to Video

கனமூலங்களை கண்டறிதல்

  • 0:01 - 0:05
    நாம் -512 -ன் கன மூலத்தை கண்டறிய வேண்டும்
  • 0:05 - 0:09
    அல்லது வேறு வழியில் சிந்தித்தால், நம்மிடம் ஒரு எண் உள்ளது,
  • 0:09 - 0:13
    அதன் கன மூலம் -512 என்பதாகும்.
  • 0:13 - 0:18
    அப்படியென்றால், நாம் ஒரு எண்ணை மூன்றின் அடுக்கிற்கு உயர்த்தினால்,
  • 0:18 - 0:23
    நமக்கு -512 கிடைக்கும்.
  • 0:23 - 0:30
    எந்த எண் என்பதை கண்டறிய,
  • 0:30 - 0:33
    நாம் இதனை பகாக்காரணி படுத்த வேண்டும்.
  • 0:33 - 0:38
    நாம் இதன் காரணிகளை கண்டறிவதற்கு முன்னர்,
  • 0:38 - 0:41
    நாம் இதன் எதிர்மறையை பார்க்கலாம்.
  • 0:41 - 0:45
    எனவே, -512 என்பதை மாற்றி எழுதுகிறேன்,
  • 0:45 - 0:52
    இது -1 பெருக்கல் 512 என்பதன் கன மூலம்.
  • 0:52 - 0:55
    அதாவது,
  • 0:55 - 1:04
    -1 கனமூலம் பெருக்கல் 512 கனமூலம் என்பதற்கு சமம்,
  • 1:04 - 1:07
    இது நேரான வழியில் விடையளிக்கும்.
  • 1:07 - 1:10
    எந்த எண்ணை மூன்றின் அடுக்கிற்கு உயர்த்தினால், -1 கிடைக்கும்?
  • 1:10 - 1:13
    -1! கிடைக்கும். இங்கு உள்ளது -1
  • 1:13 - 1:20
    -1 அடுக்கு 3 என்பது -1 பெருக்கல் -1 பெருக்கல் -1 அதாவது -1 என்பதாகும்.
  • 1:20 - 1:23
    எனவே, -1 என்பதன் கனமூலம் -1 தான்.
  • 1:23 - 1:28
    எனவே, இது -1 பெருக்கல் இந்த எண்
  • 1:28 - 1:33
    பெருக்கல் 512 கனமூலம்.
  • 1:33 - 1:36
    எனவே, இதனை பகாக்காரணி படுத்தலாம்.
  • 1:36 - 1:41
    ஆக, 512 என்பது 2 பெருக்கல் 256
  • 1:41 - 1:46
    256 என்பது 2 பெருக்கல் 128
  • 1:46 - 1:50
    128 என்பது 2 பெருக்கல் 64
  • 1:50 - 1:51
    நாம் இங்கு மூன்று 2-களை பார்க்கிறோம்.
  • 1:51 - 1:57
    64 என்பது 2 பெருக்கல் 32
  • 1:57 - 1:58
    32 என்பது 2 பெருக்கல் 16
  • 1:58 - 2:00
    இதில் பல இரண்டுகள் உள்ளன
  • 2:00 - 2:04
    16 என்பது 2 பெருக்கல் 8
  • 2:04 - 2:10
    8 என்பது 2 பெருக்கல் 4,
  • 2:10 - 2:11
    மற்றும் 4 என்பது 2 பெருக்கல் 2.
  • 2:11 - 2:12
    இதில் பல இரண்டுகள் உள்ளன.
  • 2:12 - 2:13
    இதனை பெருக்கினால்,
  • 2:13 - 2:19
    1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 முறை இரண்டை பெருக்கினால்,
  • 2:19 - 2:21
    512 கிடைக்கும்
  • 2:21 - 2:23
    அல்லது 2 அடுக்கு 9 என்பது 512.
  • 2:23 - 2:26
    இது கனமூலம் என்பதை விளக்கும் என்று நினைக்கிறேன்.
  • 2:26 - 2:29
    வேறு வழியில் இதனை சிந்திக்க வேண்டும் என்றால்,
  • 2:29 - 2:30
    நாம் இதில்,
  • 2:30 - 2:31
    இதில் கண்டிப்பாக 3 இரண்டுகள் உள்ளது,
  • 2:31 - 2:34
    ஆனால், இதில் மூன்று குழுக்களாக இரண்டை பிரிக்க முடியுமா?
  • 2:34 - 2:35
    அல்லது
  • 2:35 - 2:36
    நாம் இதனை
  • 2:36 - 2:38
    இதனை இவ்வாறு பாருங்கள்.
  • 2:38 - 2:42
    நாம் இதில் இரு இரண்டுகளை மூன்று குழுவாக பிரிக்கலாம்.
  • 2:42 - 2:44
    ஆக, அது 2 பெருக்கல் 2 என்பது 4
  • 2:44 - 2:45
    2 பெருக்கல் 2 என்பது 4
  • 2:45 - 2:49
    எனவே, இதில் 4 மூன்று முறை பெருக்கப்பட்டுள்ளது.
  • 2:49 - 2:55
    இதில் மூன்று 2-களை மூன்று குழுக்களாக பிரிக்க முடிகிறதா என்று பார்க்கலாம்.
  • 2:55 - 3:01
    ஒன்று, இரண்டு, மூன்று.
  • 3:01 - 3:03
    இதில் ஒவ்வொரு குழுவும்,
  • 3:03 - 3:05
    2 பெருக்கல் 2 பெருக்கல் 2, அதாவது 8.
  • 3:05 - 3:07
    இது தான் 8
  • 3:07 - 3:08
    இது 2 பெருக்கல் 2 பெருக்கல் 2,
  • 3:08 - 3:10
    இதுவும் 2 பெருக்கல் 2 பெருக்கல் 2,
  • 3:10 - 3:11
    எனவே, இது 8
  • 3:11 - 3:15
    நாம் இந்த 512 என்பதை
  • 3:15 - 3:18
    8 பெருக்கல் 8 பெருக்கல் 8 எனலாம்.
  • 3:18 - 3:21
    எனவே, நாம் இந்த வெளிப்பாடை மாற்றி எழுதலாம்.
  • 3:21 - 3:25
    8 பெருக்கல் 8 பெருக்கல் 8 என்பதன் கனமூலம் எனலாம்.
  • 3:25 - 3:26
    இது -1-க்கு சமம்
  • 3:26 - 3:28
    இது -1-க்கு சமம்
  • 3:28 - 3:30
    நான் இங்கே ஒரு எதிர்மறை குறியை போடுகிறேன்.
  • 3:30 - 3:36
    -1 பெருக்கல் (8 பெருக்கல் 8 பெருக்கல் 8) என்பதன் கனமூலம்.
  • 3:36 - 3:38
    எனவே, நமது கேள்வி என்னவென்றால்,
  • 3:38 - 3:40
    எந்த எண்ணை மூன்று முறை பெருக்கினால்,
  • 3:40 - 3:43
    அல்லது மூன்றின் அடுக்கிற்கு உயர்த்தினால் 512 கிடைக்கும்.
  • 3:43 - 3:45
    8 பெருக்கல் 8 பெருக்கல் 8
  • 3:45 - 3:47
    எனவே, இது 8.
  • 3:47 - 3:48
    இது தான் விடை.
  • 3:48 - 3:50
    இங்கு உள்ள இந்த பகுதியை எளிதாக்கினால் 8 கிடைக்கும்.
  • 3:50 - 3:52
    எனவே, நமது விடை
  • 3:52 - 3:58
    -512-ன் கனமூலம் என்பது -8 ஆகும்.
  • 3:58 - 4:00
    அவ்வளவு தான்.
  • 4:00 - 4:01
    இதனை நீங்கள் சரி பார்க்கலாம்.
  • 4:01 - 4:04
    -8 என்பதை மூன்று முறை பெருக்குங்கள்.
  • 4:04 - 4:05
    நாம் செய்து பார்க்கலாம்.
  • 4:05 - 4:09
    -8 பெருக்கல் -8 பெருக்கல் -8
  • 4:09 - 4:12
    -8 பெருக்கல் -8 என்பது +64
  • 4:12 - 4:14
    நாம் இதனை -8 உடன் பெருக்கலாம்.
  • 4:14 - 4:18
    நமக்கு -512 கிடைக்கும்.
Title:
கனமூலங்களை கண்டறிதல்
Description:

கனமூலங்களை கண்டறிதல்

more » « less
Video Language:
English
Duration:
04:18
Karuppiah Senthil edited Tamil subtitles for Finding Cube Roots

Tamil subtitles

Revisions