Return to Video

கணக்கு வரிசை

  • 0:01 - 0:05
    நாம் 8 + (5)(4) - (6 + 10 ÷ 2) + 44
  • 0:05 - 0:09
    என்ற கணக்கை செய்யவேண்டும்.
  • 0:09 - 0:12
    இதை போன்ற பெரிய கணக்கிருக்கும்பொழுது-
  • 0:12 - 0:15
    கூட்டல், கழித்தல், அடைப்பு குறியீடுகள், மற்றும்
  • 0:15 - 0:18
    வகுத்தல் இருக்கும் கணக்கில்- எந்த வரிசையில்
  • 0:18 - 0:19
    இந்த கணக்குகளை செய்வது?
  • 0:19 - 0:21
    இங்கே நான் சரியான வரிசையை எழுதுகிறேன்.
  • 0:21 - 0:23
    இதை போன்ற கணக்குகளை செய்வதற்கு
  • 0:23 - 0:25
    இந்த வரிசை மனதில்
  • 0:25 - 0:30
    நன்றாக பதிய வேண்டும்.
  • 0:30 - 0:31
    முதலில்-
  • 0:31 - 0:38
    முதலில், அடைப்பு குறியீடுகளில் இருக்கும் கணக்குகளை செய்ய வேண்டும்.
  • 0:38 - 0:40
    அடைப்பு குறியீடுகள் என்றால்
  • 0:40 - 0:41
    ( )
  • 0:41 - 0:42
    இதை ( ) அடைப்பு குறியீடுகள் என்போம்.
  • 0:42 - 0:44
    இதை முதல் செய்யவேண்டும்.
  • 0:44 - 0:46
    பிறகு, அடுக்கேற்றத்தை செய்யவேண்டும்.
  • 0:46 - 0:48
    இந்த கணக்கில் அடுகேற்றங்கள் இல்லை.
  • 0:48 - 0:52
    ஆனால் நான் இங்கே எழுதுகிறேன்.
  • 0:52 - 0:55
    அடைப்பு குறியீடுகளில் இருக்கும் கணக்கை முதல் செய்து
  • 0:55 - 0:59
    "வேகம்" படி மற்ற கணக்குகளை செய்யவேண்டும்.
  • 0:59 - 1:02
    "வேகம்" என்றால், எவ்வளவு வேகத்தில்
  • 1:02 - 1:05
    மிக பெரிய எண்களை இந்த கணக்கால் செய்யமுடியும்?
  • 1:05 - 1:08
    அடுக்கேற்றம் செய்யும்பொழுது,
  • 1:08 - 1:10
    எண்கள் மிக வேகமாகவே கூடும்.
  • 1:10 - 1:13
    அதை விட கொஞ்சம் மெதுவாக
  • 1:13 - 1:16
    பெருக்கலும் வகுத்தலும் இருக்கும்.
  • 1:16 - 1:18
    அதனால், வரிசையில் அடுத்தது
  • 1:18 - 1:22
    பெருக்கலும் வகுத்தலும்.
  • 1:22 - 1:25
    கடைசியில்
  • 1:25 - 1:28
    கூட்டலும் கழித்தலும்.
  • 1:28 - 1:30
    இந்த கணக்குகள் மிக மெதுவாக இருக்கும்.
  • 1:30 - 1:31
    இந்த இரண்டும் கொஞ்சம் வேகம்.
  • 1:31 - 1:34
    அடுக்கேற்றம் தான் மிகவும் வேகம்.
  • 1:34 - 1:35
    எப்பொழுதும் அடைப்பு குறியீடுகளில்
  • 1:35 - 1:37
    இருக்கும் கணக்கை முதல் செயயுங்கள்.
  • 1:37 - 1:38
    வரிசையை பயன்படுத்தலாம்.
  • 1:38 - 1:40
    கணக்கை மறுபடியும் எழுதுகிறேன்.
  • 1:40 - 1:48
    8 + (5)(4) - (6 + 10 ÷ 2) + 44.
  • 1:48 - 1:53
    8 + (5)(4) - (6 + 10 ÷ 2) + 44.
  • 1:53 - 1:56
    அடைப்பு குறியீடுகளோடு தொடங்குவோம்.
  • 1:56 - 2:00
    இரண்டு இடங்களில் இருக்கின்றன.
  • 2:00 - 2:02
    முதல் கணக்கு மிக எளிமையானது.
  • 2:02 - 2:05
    இந்த குறியீடுகளில் இருக்கும் கணக்கு
  • 2:05 - 2:08
    5 பெருக்கல் 4 தான்.
  • 2:08 - 2:11
    இதை முதல் செய்வோம்.
  • 2:11 - 2:15
    முதல் அடைப்பு குறியீடுகளில் 5 இருக்கிறது
  • 2:15 - 2:17
    அடுத்த அடைப்பு குறியீடுகளில்
  • 2:17 - 2:19
    4 இருக்கிறது.
  • 2:19 - 2:21
    இரண்டும் பக்கத்து பக்கத்தில் இருப்பதால்
  • 2:21 - 2:23
    பெருக்கவேண்டும்.
  • 2:23 - 2:28
    5 பெருக்கல் 4 என்றால் 20.
  • 2:28 - 2:30
    சரியான வண்ணத்தை பயன்படுத்துகிறேன்.
  • 2:30 - 2:34
    அடுத்த அடைப்பு குறியீடுகளை இங்கே எழுதுகிறேன்.
  • 2:34 - 2:38
    இந்த கணக்கை முதல் செய்யவேண்டும்.
  • 2:38 - 2:40
    அடைப்பு குறியீடுகளை மூடுகிறேன்.
  • 2:40 - 2:43
    கூட்டல் 44.
  • 2:43 - 2:46
    அடைப்பு குறியீடுகளில்
  • 2:46 - 2:48
    இருக்கும் கணக்கு என்ன?
  • 2:48 - 2:49
    இடது பக்கத்திலிருந்து வலது
  • 2:49 - 2:50
    பக்கம் செய்தால்...
  • 2:50 - 2:54
    6 கூட்டல் 10 என்றால் 16, வகுத்தல் 2
  • 2:54 - 2:55
    என்றால் 8.
  • 2:55 - 2:57
    ஆனால் வரிசையை பயன்படுத்த வேண்டும்!!
  • 2:57 - 3:02
    வகுத்தலை முதல் செய்யவேண்டும்.
  • 3:02 - 3:05
    இங்கே நாம் இப்படி
  • 3:05 - 3:06
    எழுதலாம்.
  • 3:06 - 3:08
    இங்கே நாம் அடைப்பு குறியீடுகள் எழுதலாம்.
  • 3:08 - 3:10
    நான் ஊதா நிறத்தில் எழுதுகிறேன்.
  • 3:10 - 3:13
    வகுத்தல் முதல் செய்யவேண்டும்
  • 3:13 - 3:16
    என்பதால், நாம் இங்கேயும்
  • 3:16 - 3:18
    அடைப்பு குறியீடுகள் எழுதலாம்.
  • 3:18 - 3:25
    10 வகுத்தல் 2 என்றால் 5.
  • 3:25 - 3:28
    அப்படியென்றால், இந்த கணக்கு
  • 3:28 - 3:29
    6 கூட்டல் 5.
  • 3:29 - 3:32
    இந்த கணக்கை நாம் இன்னும் செய்யவேண்டும்.
  • 3:32 - 3:35
    6 கூட்டல் 5 என்றால் என்ன?
  • 3:35 - 3:36
    அது 11 தான்.
  • 3:36 - 3:39
    நான் மறுபடியும்
  • 3:39 - 3:40
    இதை எழுதுகிறேன்.
  • 3:40 - 3:44
    இது 8 கூட்டல் 20 கழித்தல் 11
  • 3:44 - 3:47
    கூட்டல் 44.
  • 3:47 - 3:51
    எல்லா கணக்குகளும் கூட்டலும் கழித்தலும் தான்.
  • 3:51 - 3:54
    இப்பொழுது இடதிலிருந்து வலது பக்கம் செல்லலாம்.
  • 3:54 - 3:59
    8 கூட்டல் 20 என்றால் 28. அதனால் இது
  • 3:59 - 4:02
    28 கழித்தல் 11 கூட்டல் 44.
  • 4:02 - 4:06
    28 - 10 என்றால் 18, அதனால்
  • 4:06 - 4:07
    28 - 11 என்றால் 17.
  • 4:07 - 4:11
    இது 17 கூட்டல் 44.
  • 4:11 - 4:16
    நான் கீழே செல்லுகிறேன்.
  • 4:16 - 4:21
    7 + 44 என்றால் 51, அதனால் 17 + 44 என்றால் 61.
  • 4:21 - 4:25
    விடை 61.
  • 4:25 - 4:26
    கணக்கு முடிந்தது!
Title:
கணக்கு வரிசை
Description:

more » « less
Video Language:
English
Duration:
04:27
Shruthi Chockkalingam edited Tamil subtitles for Order of Operations
Shruthi Chockkalingam edited Tamil subtitles for Order of Operations

Tamil subtitles

Revisions