நாம் 8 + (5)(4) - (6 + 10 ÷ 2) + 44 என்ற கணக்கை செய்யவேண்டும். இதை போன்ற பெரிய கணக்கிருக்கும்பொழுது- கூட்டல், கழித்தல், அடைப்பு குறியீடுகள், மற்றும் வகுத்தல் இருக்கும் கணக்கில்- எந்த வரிசையில் இந்த கணக்குகளை செய்வது? இங்கே நான் சரியான வரிசையை எழுதுகிறேன். இதை போன்ற கணக்குகளை செய்வதற்கு இந்த வரிசை மனதில் நன்றாக பதிய வேண்டும். முதலில்- முதலில், அடைப்பு குறியீடுகளில் இருக்கும் கணக்குகளை செய்ய வேண்டும். அடைப்பு குறியீடுகள் என்றால் ( ) இதை ( ) அடைப்பு குறியீடுகள் என்போம். இதை முதல் செய்யவேண்டும். பிறகு, அடுக்கேற்றத்தை செய்யவேண்டும். இந்த கணக்கில் அடுகேற்றங்கள் இல்லை. ஆனால் நான் இங்கே எழுதுகிறேன். அடைப்பு குறியீடுகளில் இருக்கும் கணக்கை முதல் செய்து "வேகம்" படி மற்ற கணக்குகளை செய்யவேண்டும். "வேகம்" என்றால், எவ்வளவு வேகத்தில் மிக பெரிய எண்களை இந்த கணக்கால் செய்யமுடியும்? அடுக்கேற்றம் செய்யும்பொழுது, எண்கள் மிக வேகமாகவே கூடும். அதை விட கொஞ்சம் மெதுவாக பெருக்கலும் வகுத்தலும் இருக்கும். அதனால், வரிசையில் அடுத்தது பெருக்கலும் வகுத்தலும். கடைசியில் கூட்டலும் கழித்தலும். இந்த கணக்குகள் மிக மெதுவாக இருக்கும். இந்த இரண்டும் கொஞ்சம் வேகம். அடுக்கேற்றம் தான் மிகவும் வேகம். எப்பொழுதும் அடைப்பு குறியீடுகளில் இருக்கும் கணக்கை முதல் செயயுங்கள். வரிசையை பயன்படுத்தலாம். கணக்கை மறுபடியும் எழுதுகிறேன். 8 + (5)(4) - (6 + 10 ÷ 2) + 44. 8 + (5)(4) - (6 + 10 ÷ 2) + 44. அடைப்பு குறியீடுகளோடு தொடங்குவோம். இரண்டு இடங்களில் இருக்கின்றன. முதல் கணக்கு மிக எளிமையானது. இந்த குறியீடுகளில் இருக்கும் கணக்கு 5 பெருக்கல் 4 தான். இதை முதல் செய்வோம். முதல் அடைப்பு குறியீடுகளில் 5 இருக்கிறது அடுத்த அடைப்பு குறியீடுகளில் 4 இருக்கிறது. இரண்டும் பக்கத்து பக்கத்தில் இருப்பதால் பெருக்கவேண்டும். 5 பெருக்கல் 4 என்றால் 20. சரியான வண்ணத்தை பயன்படுத்துகிறேன். அடுத்த அடைப்பு குறியீடுகளை இங்கே எழுதுகிறேன். இந்த கணக்கை முதல் செய்யவேண்டும். அடைப்பு குறியீடுகளை மூடுகிறேன். கூட்டல் 44. அடைப்பு குறியீடுகளில் இருக்கும் கணக்கு என்ன? இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் செய்தால்... 6 கூட்டல் 10 என்றால் 16, வகுத்தல் 2 என்றால் 8. ஆனால் வரிசையை பயன்படுத்த வேண்டும்!! வகுத்தலை முதல் செய்யவேண்டும். இங்கே நாம் இப்படி எழுதலாம். இங்கே நாம் அடைப்பு குறியீடுகள் எழுதலாம். நான் ஊதா நிறத்தில் எழுதுகிறேன். வகுத்தல் முதல் செய்யவேண்டும் என்பதால், நாம் இங்கேயும் அடைப்பு குறியீடுகள் எழுதலாம். 10 வகுத்தல் 2 என்றால் 5. அப்படியென்றால், இந்த கணக்கு 6 கூட்டல் 5. இந்த கணக்கை நாம் இன்னும் செய்யவேண்டும். 6 கூட்டல் 5 என்றால் என்ன? அது 11 தான். நான் மறுபடியும் இதை எழுதுகிறேன். இது 8 கூட்டல் 20 கழித்தல் 11 கூட்டல் 44. எல்லா கணக்குகளும் கூட்டலும் கழித்தலும் தான். இப்பொழுது இடதிலிருந்து வலது பக்கம் செல்லலாம். 8 கூட்டல் 20 என்றால் 28. அதனால் இது 28 கழித்தல் 11 கூட்டல் 44. 28 - 10 என்றால் 18, அதனால் 28 - 11 என்றால் 17. இது 17 கூட்டல் 44. நான் கீழே செல்லுகிறேன். 7 + 44 என்றால் 51, அதனால் 17 + 44 என்றால் 61. விடை 61. கணக்கு முடிந்தது!