Return to Video

முதல் முயற்சி நிறுவனங்கள் வெற்றி பெறுவதின் ஒரே முக்கிய காரணம்.

  • 0:01 - 0:03
    இதைப் பகிர்ந்து கொள்வதில்
    மிக்க மகிழ்ச்சி.
  • 0:03 - 0:06
    என்னை ஆச்சரியத்திலாழ்த்தும் சில ஆய்வுகளை.
  • 0:06 - 0:08
    நிறுவனங்கள் வெற்றி பெற
    எது முக்கிய காரணம்?
  • 0:08 - 0:12
    புது முயற்சி நிறுவனங்களின்
    வெற்றிக்கு முக்கிய காரணங்கள் என்ன?
  • 0:13 - 0:15
    புது முயற்சி நிறுவனங்களால் தான்
  • 0:15 - 0:19
    உலகம் செழிக்கிறது என்று நான் நம்புகிறேன்.
  • 0:20 - 0:23
    ஒரு குழுவிற்கு சரியான முதலீட்டுடன்
  • 0:23 - 0:25
    புது முயற்சியில் ஈடுபட உதவினால்
  • 0:25 - 0:29
    முன்பு சாத்தியமில்லாதிருந்த
    மனித ஆற்றல்களை வெளிக் கொணரலாம்
  • 0:29 - 0:31
    நம்ப முடியாத பல விஷயங்களை
    சாதிக்கவைக்க முடியும்
  • 0:32 - 0:34
    ஆனால் புது முயற்சிகள்
    போற்றப்படுபவையானாலும்
  • 0:34 - 0:35
    ஏன் பல தோல்வி அடைகின்றன?
  • 0:35 - 0:37
    இதைத் தான் ஆராய விரும்பினேன்.
  • 0:37 - 0:39
    முக்கிய காரணங்களை
    கண்டு பிடிக்க விரும்பினேன்.
  • 0:39 - 0:41
    புது முயற்சியின் வெற்றியை
  • 0:41 - 0:43
    முறைப்படி ஆய முடியுமாவெனப்
    பார்க்க விரும்பினேன்
  • 0:43 - 0:46
    உள்ளுணர்வுகளையும்,
    பல நிறுவனங்களை வருடக் கணக்காகப் பார்த்து
  • 0:46 - 0:48
    உருவான தவறான கருத்துகளையும் தவிர்த்து
  • 0:48 - 0:49
    இதை அறிய விரும்பினேன்
  • 0:49 - 0:52
    என் 12 வயது முதல்
    புது நிறுவனங்கள் தொடங்கி வருகிறேன்
  • 0:52 - 0:55
    பள்ளியில் படிக்கும்போது
    பஸ் நிலையத்தில் மிட்டாய் விற்பனை
  • 0:55 - 0:57
    உயர் நிலைப் பள்ளியில்
    சூரிய சக்தி கருவிகள்
  • 0:57 - 0:59
    கல்லூரியில் ஒலி பெருக்கிகள்
  • 0:59 - 1:02
    பட்டம் பெற்ற பிறகு
    மென் பொருள் நிறுவனங்கள்
  • 1:02 - 1:04
    20 வ.க்கு முன்"ஐடியாலேப்"ஐ
    தொடங்கினேன்.
  • 1:04 - 1:07
    இந்த 20 ஆண்டுகளில் 100க்கும் அதிகமான
    கம்பெனிகள் தொடங்கினோம்.
  • 1:07 - 1:10
    பல வெற்றிகள் , பல படு தோல்விகள்
  • 1:10 - 1:11
    தோல்விகளிலிருந்து கற்றவை ஏராளம்
  • 1:12 - 1:15
    ஆகவே தான் ஆராய முயன்றேன்
  • 1:15 - 1:18
    வெற்றிக்கும் தோல்விக்கும் என்ன காரணங்கள்
  • 1:18 - 1:19
    ஆக ஐந்து தன்மைகளை ஆராய்ந்தேன்
  • 1:19 - 1:20
    ஒன்று, ஐடியா (யோசனை)
  • 1:20 - 1:23
    ஐடியா தான் எல்லாமென எண்ணியிருந்தேன்
  • 1:23 - 1:25
    அதனாலேயே என் கம்பெனிக்கு
    ஐடியா லேப் என்று பெயர்
  • 1:25 - 1:27
    ஒரு ஐடியா முதலில் உதிக்கும்போது
    உங்கள் "ஆகா" உற்சாகம்
  • 1:27 - 1:28
    சில காலம் பொறுத்து
  • 1:28 - 1:32
    வெற்றியின் காரணம் கூட்டணி, இயக்கம்,
    நெகிழ்வு திறன் என எண்ணினேன்
  • 1:32 - 1:34
    ஐடியாவை விட இவை முக்கியமென நினைத்தேன்
  • 1:34 - 1:38
    TED அரங்கில் மைக் டைஸன் சொன்னதை
    மேற்கோள் காட்டுவேன் என்று நினைத்ததில்லை
  • 1:38 - 1:40
    அவர் ஒரு சமயம் கூறினாராம்
  • 1:40 - 1:45
    "எல்லோருக்கும் ஒரு திட்டம் உள்ளது
    முகத்தில் குத்து கிட்டும் வரை" (சிரிப்பு)
  • 1:45 - 1:48
    அது மிகவும் சரி என்று நினைக்கிறேன்
    வியாபாரத்திலும் கூட
  • 1:48 - 1:50
    ஆக, ஒரு கூட்டணியின் செயற்பாங்கு
  • 1:50 - 1:54
    கஸ்டமர்கள் கொடுக்கும் குத்துகளை
    சமாளிக்கும் திறனே.
  • 1:54 - 1:56
    கஸ்டமர் மட்டுமே ஒரே உண்மை
  • 1:56 - 1:57
    அதனால் நான் நினைக்கிறேன்
  • 1:57 - 2:00
    கூட்டணி ஒரு காலத்தில்
    முக்கியமாக இருந்திருக்கலாம்
  • 2:00 - 2:02
    அடுத்தது வணிகத் திட்டம் .
    அதை நோக்கினேன்
  • 2:02 - 2:05
    கஸ்டமர்களிடமிருந்து வருமானம் பெற
    கம்பெனிக்கு தெளிவான பாதை உள்ளதா?
  • 2:05 - 2:08
    அது இப்பொழுது முக்கியமெனத்
    தோன்றியது.
  • 2:08 - 2:10
    அது தான் வெற்றிக்கு காரணமென
    நினைத்தேன்
  • 2:10 - 2:11
    பிறகு நிதியை உற்று நோக்கினேன்
  • 2:11 - 2:14
    சில நேரங்களில் கம்பெனிகளுக்கு
    தாராளமான நிதி கிடைக்கிறது
  • 2:14 - 2:16
    ஒரு கால் அது தான் மிக முக்கியமோ?
  • 2:16 - 2:17
    பிறகு , ஐடியா
    வெளிவரும் நேரம்
  • 2:17 - 2:20
    ஐடியா உலகம் தயாராவதற்கு
    மிக முன்பே உதித்து விட்டதோ?
  • 2:20 - 2:24
    அது முன்பு என்பதனால் , நீங்கள்
    உலகத்திற்கு அதை கற்றுக் கொடுக்க வேண்டுமோ?
  • 2:24 - 2:24
    அது சரி தானா?
  • 2:24 - 2:27
    அல்லது அது மிகத் தாமதாகி,
    போட்டியாளர்கள் அதிகமாக உள்ளனரோ?
  • 2:27 - 2:30
    ஆகையால் இந்த 5 காரணிகளை
    கவனத்துடன் ஆராயத் துவங்கினேன்
  • 2:30 - 2:31
    பல கம்பெனிகளை அலசினேன்
  • 2:31 - 2:33
    ஐடியா லேபின் 100 கம்பெனிகள்
  • 2:33 - 2:35
    மேலும் வேறு 100 கம்பெனிகள்
  • 2:35 - 2:37
    முடிவுகளை விஞ்ஞான ரீதியாக
    ஆராய முயன்றேன்
  • 2:38 - 2:40
    முதலில் ஐடியா லேப் கம்பெனிகளைப் பார்ப்போம்
  • 2:40 - 2:42
    ஐந்து உயர் மட்டக் கம்பெனிகள்
  • 2:42 - 2:45
    Citysearch, CarsDirect, GoTo,
    NetZero, Tickets.com --
  • 2:45 - 2:47
    இவைகளெல்லாம் பில்லியன் டாலர் வெற்றி
  • 2:47 - 2:49
    அடிமட்டத்திலுள்ள ஐந்து கம்பெனிகள்
  • 2:49 - 2:52
    Z.com, Insider Pages, MyLife,
    Desktop Factory, Peoplelink
  • 2:52 - 2:54
    நாங்கள் உயர் எதிர்பார்ப்புடன் இருந்தவை
    ஆனால் வெற்றி பெறவில்லை
  • 2:55 - 2:58
    இந்த ஐந்து தன்மைகளை வைத்து இவைகளை
    வரிசைப் படுத்த முயன்றேன்
  • 2:58 - 3:01
    என் கருத்துப்படி ஒவ்வொரு பரிமாணத்திலும்
    அவை மதிப்பெண்கள் பெற்றன.
  • 3:01 - 3:05
    ஐடியா லேப் அல்லாத கம்பெனிகளில்
    அபார வெற்றி பெற்றவை
  • 3:05 - 3:08
    Airbnb , Instagram , Uber
    Youtube LinkedIn. போன்றவை
  • 3:08 - 3:09
    தோல்வியடைந்த சில
  • 3:09 - 3:11
    Webvan, Kozmo, Pets.com
  • 3:11 - 3:12
    Flooz and Friendster
  • 3:12 - 3:14
    அடிமட்ட கம்பெனிகள் தாராள நிதியுதவி பெற்றவை
  • 3:14 - 3:17
    சிலவற்றிற்கு வணிகத் திட்டங்களும் இருந்தன
  • 3:17 - 3:18
    ஆனால் வெற்றி பெறவில்லை
  • 3:18 - 3:21
    மிக முக்கிய காரணம் எது
    என்று ஆராய்ந்தேன்.
  • 3:21 - 3:23
    இவைகளின் வெற்றிக்கும் தோல்விக்கும்?
  • 3:23 - 3:25
    முடிவுகள் என்னை ஆச்சரியத்திலாழ்த்தின
  • 3:25 - 3:27
    முதலிடம் : தொடங்கும் நேரத்திற்கு.
  • 3:28 - 3:30
    42 சதவிகிதத்திற்கு நேரமே காரணம்
  • 3:30 - 3:33
    அதுவே வெற்றி தோல்வியை நிர்ணயித்தது
  • 3:33 - 3:35
    இரண்டாம் இடம் கூட்டணியும் செயல் திறனும்
  • 3:35 - 3:36
    அடுத்ததாக ஐடியா
  • 3:36 - 3:38
    வித்தியாசமான ஐடியா மற்றும் அதன்
    தனித்தன்மை
  • 3:38 - 3:40
    இது மூன்றாவதாக இருந்தது
  • 3:40 - 3:42
    இதை முழு நிச்சயத்துடன் சொல்ல முடியாது
  • 3:42 - 3:44
    ஐடியா முக்கியமில்லை என்று கூறாவிட்டாலும்
  • 3:44 - 3:48
    ஐடியா மிக முக்கியமானது அல்ல என்பது
    என்ன மிகவும் ஆச்சரியப்பட வைத்தது
  • 3:48 - 3:50
    சில சமயத்தில் முக்கியம் தான்
    நேரம் சரியாக இருந்தால்
  • 3:50 - 3:54
    வணிகத் திட்டம் , நிதி 2 ம் கடைசி என்பது
    எனக்கு சரியாகத் தோன்றியது
  • 3:54 - 3:56
    வணிகத் திட்டம் கடைசியில் இருப்பது
    சரியே
  • 3:56 - 3:58
    ஏனெனில் ஒரு திட்டமில்லாமல்
    வியாபாரம் தொடங்கலாம்.
  • 3:58 - 4:02
    அதை பிற்பாடு தீட்டிக் கொள்ளலாம்
    உங்கள் பொருள்களை கஸ்டமர்கள் விரும்பினால்
  • 4:02 - 4:03
    நிதி தேடுவதும் அது போலவே.
  • 4:03 - 4:06
    முதலில் நிதி குறைவாக இருந்து
    உங்கள் வியாபாரம் வளர்ந்தால்
  • 4:06 - 4:07
    முக்கியமாக தற்காலத்தில்
  • 4:07 - 4:09
    நிதி கிடைப்பது மிக மிக சுலபம்.
  • 4:09 - 4:13
    இப்பொழுது இவை ஒவ்வொன்றிற்கும்
    குறிப்பிட்ட உதாரணங்கள் தருகிறேன்
  • 4:13 - 4:15
    அனைவரும் அறிந்த அபார வெற்றி
    Airbnb ஐ எடுத்துக் கொள்வோம்
  • 4:15 - 4:19
    பல ஸ்மார்ட் முதலீட்டாளர்களால்
    ஒதுக்கப்பட்ட புகழ் பெற்றது இது
  • 4:19 - 4:20
    ஏனெனில் மக்கள் எண்ணினர்
  • 4:20 - 4:23
    "முகமறியாதவருக்கு எவரும் தங்கள்
    வீட்டில் இடத்தை வாடகைக்கு தரார்"
  • 4:23 - 4:24
    மக்கள் அதைத் தவறென்று நிரூபித்தனரே
  • 4:24 - 4:26
    ஆனால் அது வெற்றி பெற்றதற்கு ஒரு காரணம்
  • 4:26 - 4:29
    நல்ல ஐடியா, வியாபாரத் திட்டம், நன்கு
    செயல்படுத்தியதன்றி
  • 4:29 - 4:30
    அதன் நேரமே
  • 4:30 - 4:33
    சரியாக பொருளாதாரச் சரிவின்
    உச்சத்தில் திட்டத்தை வெளியிட்டதே
  • 4:33 - 4:35
    மக்களுக்கு பணம் தேவைப்பட்ட நேரம்
  • 4:35 - 4:37
    அதுவே அவர்களை முகமறியாதவர்க்கு
  • 4:37 - 4:40
    வாடகைக்கு வீட்டைக் கொடுக்கும் எதிர்ப்பை
    ஒதுக்கி வைக்க உதவியது
  • 4:40 - 4:41
    Uber. ம் அதே போலவே
  • 4:41 - 4:42
    Uber வெளி வந்த போது
  • 4:42 - 4:44
    அது சிறந்த கம்பெனி,
    சிறந்த வணிகத் திட்டம்
  • 4:44 - 4:45
    நன்றாகவும் இயக்கினர்
  • 4:45 - 4:47
    ஆனால் நேரம் மிகச் சரி.
  • 4:47 - 4:49
    அவர்களுக்கு தேவையான டிரைவர்களை
    உள்ளே கொண்டு வர
  • 4:49 - 4:52
    மேலும் சம்பாதிக்க விரும்பும் டிரைவர்கள்
    மிக முக்கியமாக இருந்தது
  • 4:52 - 4:56
    எங்கள் ஆரம்ப வெற்றி Citysearch - காரணம்
    மக்களின் web pages தேவை
  • 4:56 - 4:58
    GoTo.com நிஜமாக நாங்கள் 1988ல்
    TED ல் அறிவித்தபோது
  • 4:58 - 5:02
    போக்குவரத்தை சகாய விலையில்
    கம்பெனிகள் எதிர்பார்த்த நேரம்
  • 5:02 - 5:03
    இந்த ஐடியா மேலானதென்று எண்ணினோம்
  • 5:03 - 5:06
    ஆனால் நிஜமாகவே நேரம் ஒருகால்
    முக்கியமாக இருந்திருக்கலாம்
  • 5:06 - 5:07
    பிறகு எங்களுடைய சில தோல்விகள்
  • 5:07 - 5:11
    Z.com, என்று ஒரு கம்பெனி தொடங்கினோம்
    அது ஆன்லைன் கேளிக்கை கம்பெனி
  • 5:11 - 5:12
    வெகு ஆர்வமாக இருந்தோம்
  • 5:12 - 5:15
    தேவையான நிதி திரட்டினோம்
    மேலான வணிகத் திட்டம்
  • 5:15 - 5:18
    ஒரு சிறந்த ஹாலிவுட் திறனாளியைக் கூட
    கம்பெனியில் சேர்த்துக் கொண்டோம்
  • 5:18 - 5:20
    ஆனால் 1999-2000 broadband அவ்வளவு
    பரவியிருக்கவில்லை
  • 5:20 - 5:23
    ஆன்லைனில் வீடியோ பார்ப்பது
    மிகக் கடினம்
  • 5:23 - 5:25
    உங்கள் ப்ரௌஸரில் கோடெக்ஸ் போட்டு
    இதைப் பார்க்க வேண்டும்
  • 5:25 - 5:28
    முடிவில் கம்பெனி 2003ல் திவாலாகியது
  • 5:28 - 5:29
    இரண்டே ஆண்டுகள் தள்ளி
  • 5:29 - 5:32
    Adobe Flash கோடெக் பிரச்சினைக்கு
    தீர்வு கண்ட போது
  • 5:32 - 5:36
    அமெரிக்காவில் broadband 50% க்கும் அதிகமாக
    ஊடுருவியபோது
  • 5:36 - 5:38
    YouTube க்கிற்கு சரியான நேரம்
  • 5:38 - 5:39
    மேலான ஐடியா, ஆனால் சிறந்த நேரம்
  • 5:39 - 5:43
    உண்மையில் YouTube ற்கு தொடக்கத்தில்
    நல்ல வணிகத் திட்டம் இருக்கவில்லை
  • 5:43 - 5:45
    அது செயல்படும் என்ற உறுதிப்பாடும்
    இருக்கவில்லை
  • 5:45 - 5:47
    ஆனால் வெளிவந்த நேரம் மிக மிக
    அழகாக இருந்தது
  • 5:47 - 5:49
    சுருக்கமாகச் சொன்னால்
  • 5:49 - 5:52
    செயலாக்கம் நிச்சயமாக முக்கியம் தான்
  • 5:52 - 5:53
    ஐடியாவும் மிக முக்கியம்
  • 5:53 - 5:55
    ஆனால் அதை விட முக்கியம் நேரம்
  • 5:55 - 5:57
    நேரத்தைக் கணிக்க சிறந்த வழி
  • 5:57 - 5:59
    கஸ்டமர்கள் நிஜமாகவே தயாராக
    இருக்கிறார்களா என்று காண்பதே
  • 5:59 - 6:01
    தரப்போகும் விஷயத்திற்கு
  • 6:01 - 6:03
    நிஜமாகவே வரவேற்பு தருவார்களா
  • 6:03 - 6:05
    தகவல்களின் கணிப்புகளை
    புறக்கணிக்காதீர்கள்
  • 6:05 - 6:08
    ஏனெனில் ஒரு விஷயத்தில் ஆர்வமிருக்கையில்
    அதை முன்னே தள்ள ஆவலிருக்கும்
  • 6:08 - 6:11
    ஆனால் அந்த நேரம் பற்றி நீங்கள்
    மிக உண்மையாக சிந்திக்க வேண்டும்
  • 6:11 - 6:12
    முன்பு கூறியபடி
  • 6:12 - 6:15
    புது முயற்சிகள் உலகத்தை மாற்றும்.
    அதன் மேம்பாடை உயர்த்தும்
  • 6:15 - 6:17
    இந்த உள் நோக்குகளில் சில
  • 6:17 - 6:20
    ஒருகால் உங்கள் வெற்றி விகிதத்தை
    மேலும் உயர்த்த உதவலாம்
  • 6:20 - 6:22
    இப்படியாக சிறந்த விஷயங்களை
    உலகிற்கு அளிக்கலாம்.
  • 6:22 - 6:24
    வேறு வகையில் முடியாதவைகளை.
  • 6:24 - 6:26
    செவி மடுத்து கேட்டதற்கு மிக்க நன்றி
  • 6:26 - 6:27
    (கை தட்டல் )
Title:
முதல் முயற்சி நிறுவனங்கள் வெற்றி பெறுவதின் ஒரே முக்கிய காரணம்.
Speaker:
பில் கிராஸ்
Description:

பில் கிராஸ் அனேக முதல் முயற்சி நிறுவனங்களை ஸ்தாபித்துள்ளார்.மற்றும் பலவற்றை அடைகாத்து வளர்த்துள்ளார். ஏன் சில வெற்றி பெற்றன, ஏன் சில தோல்வியடைந்தன என்பதை அறிய ஆவல் கொண்டார். அதனால் தன்னுடைய மற்றும் மற்றவர்களுடைய நூற்றுக் கணக்கான கம்பெனிகளிடமிருந்து தகவல்கள் சேகரித்தார். .ஐந்து முக்கிய தன்மைகளின் படி அவைகளை வரிசைப் படுத்தினார். மற்ற காரணங்களிடமிருந்து தனித்து நின்ற ஒரு காரணம் அவரையுமே ஆச்சரியத்திலாழ்த்தியது.

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
06:40

Tamil subtitles

Revisions