Return to Video

ஏன் வடிவமைப்பு எல்லோரையும் உள்ளடக்க வேண்டும்

  • 0:00 - 0:04
    நான் உங்களுக்கு ஒரு புதிய முன்னோக்கை
    கொடுக்க விரும்புகிறேன்.
  • 0:04 - 0:07
    பகட்டாக ஒலிக்கும் ஒன்றை, ஆமாம்.
  • 0:07 - 0:10
    அயர்லாந்திலுருந்து நான்
    நேற்று காலை கிளம்பினேன்.
  • 0:10 - 0:12
    நான் டப்ளினிலிருந்து ந்யூயார்க்
    வரை பயணம் செய்தேன்
  • 0:12 - 0:14
    தன்னந்தனியாக.
  • 0:14 - 0:16
    ஆனால், வானிலயத்தின் வடிவமைப்பு,
  • 0:16 - 0:18
    விமானம் மற்றும் அதன் முனையம்
  • 0:18 - 0:23
    ஒருவர் 105.5செ.மீ உயரம் இருக்கும்போது
    மிகக் குறைவான சுதந்திரம் அளிக்கிறது
  • 0:23 - 0:28
    அமெரிக்க மக்களுக்கு, அது 3 அடி 5 அங்குலங்கள்.
  • 0:28 - 0:32
    வானிலையத்தின் உதவியாளர்கள் என்னை ஒரு
    சக்கர நாற்காலியில் விரைவாக கொண்டு சென்றனர்
  • 0:32 - 0:35
    சொல்லப்போனால், எனக்கு சக்கர நாற்காலி
    பயன்படுத்தவேண்டிய அவசியமில்லை,
  • 0:35 - 0:38
    ஆனால் வானிலையத்தின் வடிவமைப்பு
  • 0:38 - 0:40
    மற்றும் அதன் அணுகல் இல்லாமை
  • 0:40 - 0:43
    எனில், நான் செல்ல இருக்கும்
    ஒரே வழி அது மாத்திரமே.
  • 0:43 - 0:46
    உடன் எடுத்துச் செல்லும் பை
    என் கால்களுக்கிடையில் இருக்க,
  • 0:46 - 0:49
    சக்கர நாற்காலியில் பாதுகாப்பு, முன் அனுமதி
    வழியாக அழைத்து வரப் பட்டு
  • 0:49 - 0:52
    என்னுடைய புறப்பாடு வாசலை
    நான் வந்தடைந்தேன்.
  • 0:52 - 0:56
    நான் வானிலையத்தில் அணுகல்
    சேவைகளைப் பயன் படுத்துகிறேன்
  • 0:56 - 1:00
    ஏனெனில், முனையத்தில் பெரும்பாலானவை
    என்னை மனதில் கொண்டு வடிவமைக்கப்படவில்லை
  • 1:00 - 1:02
    உதாரணத்திற்கு, பாதுகாப்பை
    எடுத்துக் கொள்ளுங்கள்.
  • 1:02 - 1:05
    உடன் எடுத்துச் செல்லும் பையை
    தூக்கத் தேவையான பலம் எனக்கு இல்லை,
  • 1:05 - 1:08
    நிலத்திலிருந்து கொணர்வி வரை.
  • 1:08 - 1:10
    நான் அதன் கண் மட்டத்தில் நிற்கிறேன்.
  • 1:10 - 1:15
    அங்கு பாதுகாப்பை முன்னிட்டு வேலை
    செய்பவர்கள் எனக்கு உதவ முடியாது
  • 1:15 - 1:18
    மேலும் எனக்காகச் செய்யவும் முடியாது.
  • 1:18 - 1:23
    வடிவமைப்பு என்னுடைய தன்னுரிமை
    மற்றும் சுதந்திரத்தைத் தடுக்கிறது.
  • 1:23 - 1:27
    ஆனால் இந்த அளவில் பயணம் செய்வது
    எந்த விதத்திலும் மோசமில்லை.
  • 1:27 - 1:31
    சிக்கன வர்க்கத்தில், கால் வைக்க இருக்கும்
    இடம், வணிக வர்க்கத்தில் இருப்பது போலுள்ளது
  • 1:31 - 1:33
    (சிரிப்பு)
  • 1:33 - 1:35
    நான் ஒரு சிறிய நபர் என்பதை
    அடிக்கடி மறந்து விடுகிறேன்.
  • 1:35 - 1:40
    பருநிலை சூழலும் சமூகமும் தான்
    அதை எனக்கு ஞாபகப் படுத்துகிறது.
  • 1:40 - 1:45
    பொதுக் குளியலறையைப் பயன்படுத்துவது
    ஒரு கடும் வேதனையான அனுபவம்.
  • 1:45 - 1:47
    நான் தனி அறைக்குள் நுழைகிறேன்
  • 1:47 - 1:50
    ஆனால், என்னால் கதவிலிருக்கும்
    பூட்டை எட்ட முடியாது.
  • 1:50 - 1:53
    படைப்புத் திறனுடன் வளைந்து கொடுக்கும்
    தன்மையுடையவள் நான்.
  • 1:53 - 1:57
    சுற்றிலும் பார்க்கிறேன் ஏதாவது தலைகீழாகத்
    திருப்பக்கூடிய ஒரு தொட்டி இருக்கிறதா என.
  • 1:57 - 1:59
    அது பாதுகாப்பானதா?
  • 1:59 - 2:00
    உண்மையில் இல்லை.
  • 2:00 - 2:03
    அது ஆரோக்கியமானதும்
    சுகாதாரமானதுமா?
  • 2:03 - 2:06
    நிச்சியமாக இல்லை.
  • 2:06 - 2:08
    ஆனால் அதன் மாற்று அதைவிட மோசமானது.
  • 2:08 - 2:11
    அது வேலை செய்யவிலையெனில் என்
    கைப்பேசியைப் பயன்படுத்துகிறேன்.
  • 2:11 - 2:14
    அது, நான் எட்டக்கூடியதை 4 முதல் 6
    அங்குலங்கள் கூட்டுகிறது.
  • 2:14 - 2:18
    மேலும், பூட்டை மூட, என் ஐ-போனை
    பயன்படுத்த முயற்சிக்கிறேன்.
  • 2:18 - 2:22
    ஜோனி ஐவ், ஐ-போனை வடிவமைத்தபோது இதை
    மனதில் கொள்ளவில்லை என நம்புகிறேன்,
  • 2:22 - 2:25
    ஆனால் அது வேலை செய்கிறது.
  • 2:25 - 2:28
    இதற்கு மாற்று, நான் ஒரு அந்நியரை அணுகுவது.
  • 2:28 - 2:31
    அளவிற்கப்பால் அவரிடம் மன்னிப்பு கேட்டு
  • 2:31 - 2:35
    அவர்களை என் தனி அறைக்கு வெளியே
    காவலுக்கு இருக்கச் சொல்வது.
  • 2:35 - 2:37
    அவர்கள் செய்கிறார்கள்
  • 2:37 - 2:39
    நான் நன்றியுடன் வெளி வருகிறேன்
  • 2:39 - 2:42
    ஆனால், முற்றிலும் புண்பட்ட உணர்ச்சியோடு,
  • 2:42 - 2:44
    அவர்கள் கவனித்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்,
  • 2:44 - 2:47
    கைகளைக் கழுவாமல் குளியலறையிலிருந்து நான் வெளி வந்ததை.
  • 2:47 - 2:51
    நான் என்னுடன் ஒவ்வொரு நாளும்
    கை சுத்திகரிப்பானை எடுத்துச் செல்கிறேன்
  • 2:51 - 2:57
    ஏனெனில், நீர்த்தொட்டி.சோப் வினியோகி,
    கை உலர்த்தி மற்றும் கண்ணாடி
  • 2:57 - 2:59
    எல்லாமே என் கைகளுக்கு எட்டாது.
  • 2:59 - 3:02
    அணுகல் உடைய குளியலறை,
    ஏறக்குறைய ஒரு விருப்பத்தேர்வு போல.
  • 3:02 - 3:05
    இங்கு, கதவிலிருக்கும்
    பூட்டு, மேலும் நீர்த்தொட்டி,
  • 3:05 - 3:10
    சோப் வினியோகி, கை உலர்த்தி, மற்றும்
    கண்ணாடியை என்னால் அணுக முடியும்.
  • 3:10 - 3:15
    ஆனாலும், நான் கழிப்பறையை
    பயன்படுத்த முடியாது,
  • 3:15 - 3:17
    அது வேண்டுமென்றே உயரத்தில்
    வடிவமைக்கப் பட்டிருக்கிறது
  • 3:17 - 3:21
    சக்கர நாற்காலி பயன்படுத்துவோர்
    சுலபமாக இடம் மாறுவதற்கு ஏற்றபடி,
  • 3:21 - 3:25
    இது ஒரு அற்புதமான மற்றும்
    தேவையான கண்டுபிடிப்பு,
  • 3:25 - 3:31
    வடிவமைப்பு உலகத்தில் ஒரு புதிய திட்டம் அல்லது யோசனை அணுகல் உடையது என விவரிக்கும்போது,
  • 3:31 - 3:33
    அதற்கு என்ன அர்த்தம்?
  • 3:33 - 3:36
    அது யாருக்கு அணுகல் உடையது?
  • 3:36 - 3:40
    மேலும், யாருடைய தேவைகள்
    பூர்த்தி செய்யப்படவில்லை?
  • 3:40 - 3:42
    இப்போது, குளியலறை ஒரு உதாரணம்
  • 3:42 - 3:45
    எங்கு வடிவமைப்பு என்னுடைய தன்மானத்துடன்
    மோதுகிறது என்று,
  • 3:45 - 3:49
    ஆனால், பருநிலை சூழல் பல தற்செயலான வழிகளில்
    கூட என்னைப் பாதிக்கிறது
  • 3:49 - 3:52
    ஒரு கப் காபி ஆர்டர் செய்வது போன்ற
    எளிய செயல் கூட.
  • 3:52 - 3:54
    இப்போது, நான் ஒப்புக் கொள்கிறேன்.
  • 3:54 - 3:56
    நான் மிக அதிகமாகக்
    காப்பி குடிக்கிறேன் என்று,
  • 3:56 - 3:59
    நான் ஆர்டர் செய்தது, ஒரு
    ஸ்கின்னி வனிலா லாட்டே,
  • 3:59 - 4:03
    ஆனால், மருந்திலிருந்து நான் என்னை
    விலக்கிக் கொள்ள முயற்சிக்கிறேன்.
  • 4:03 - 4:06
    அனால், காப்பிக் கடை நன்றாக
    வடிவமைக்கப்பட வில்லை,
  • 4:06 - 4:08
    என்னைப் பொருத்த மட்டிலுமாவது.
  • 4:08 - 4:10
    வரிசையில், மாவுப்பண்டம் உள்ள
    பெட்டிக்கு அருகில் நிற்கிறேன்
  • 4:10 - 4:13
    மேலும், காப்பி கொடுப்பவர்,அடுத்த
    ஆர்டர் செய்தவரை அழைக்கிறார்,
  • 4:13 - 4:16
    "தயவு செய்து அடுத்தவர் வாருங்கள்" என
    அவர்கள் சப்தமிடுகிறார்கள்,
  • 4:16 - 4:19
    அவர்களால், என்னைப் பார்க்க முடியாது,
  • 4:19 - 4:22
    வரிசையில் எனக்குப் பின்னால் இருப்பவர்
    நான் இருப்பதை சுட்டிக் காட்டுகிறார்
  • 4:22 - 4:24
    மேலும், எல்லோரும் சங்கடப் படுகிறார்கள்
  • 4:24 - 4:28
    விரைவாக நான் ஆர்டர் செய்து விட்டு, என்
    காப்பியைப் பெற்றுகொள்வதற்காக நகருகிறேன்,
  • 4:28 - 4:32
    இப்போது, ஒரே ஒருவினாடி யோசனை செய்யுங்கள்,
  • 4:32 - 4:34
    அதை அவர்கள் எங்கே வைப்பார்கள்?
  • 4:34 - 4:36
    மேலே உயரத்தில் மூடிகூட இல்லாமல்.
  • 4:36 - 4:39
    நான் பணம் கொடுத்து வாங்கிய
    காப்பியைப் பெறச் செல்வது
  • 4:39 - 4:43
    ஒரு நம்பமுடியாத ஆபத்தான அனுபவம்.
  • 4:43 - 4:46
    வடிவமைப்பு, நான் அணிய விரும்பும்
    துணிகளுக்குக் கூட இடையே வருகிறது.
  • 4:46 - 4:49
    என்னுடைய குணநலன்களை பிரதிபலிக்கும்
    ஆடைகள் எனக்கு வேண்டும்.
  • 4:49 - 4:53
    குழந்தைகள் ஆடைகள் உள்ள துறையில்
    அதைக் காண்பது கடினம்
  • 4:53 - 4:57
    மேலும், மகளிருக்குடைய ஆடைகளில்,
    பல திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கும்.
  • 4:57 - 5:02
    என்னுடைய முதிர்ச்சி, தொழில்முறை மற்றும்
    பண்பிற்கேற்ப எனக்கு காலணிகள் வேண்டும்,
  • 5:02 - 5:07
    மாறாக, வெல்க்ரோ பட்டைகள் வைத்த ஸ்னீக்கர்ஸ் மற்றும் ஒளிமிளிர் காலணிகளை வழங்குகிறார்கள்.
  • 5:07 - 5:11
    இப்போது, ஒளிமிளிர் காலணிகளை நான்
    முற்றிலும் எதிர்ப்பவளில்லை.
  • 5:11 - 5:13
    (சிரிப்பு)
  • 5:13 - 5:16
    ஆனால், வடிவமைப்பு கீழ் கண்ட, எளிய
    விஷயங்களைக் கூட பாதிக்கிறது,
  • 5:17 - 5:19
    ஒரு நாற்காலியின் மேல் உட்காருவதை,
  • 5:19 - 5:23
    என்னால், நிற்கும் நிலையிலிருந்து உட்காரும்
    நிலைக்கு ஒரு வசீகரத்துடன் செல்ல முடியாது.
  • 5:23 - 5:27
    நாற்காலி உயரங்களின் வடிவமைப்பு
    தர நிலைகளின் காரணமாக,
  • 5:27 - 5:29
    என் கைகளாலும் முட்டிகளாலும் நான் தவழ வேண்டும்,
  • 5:29 - 5:31
    அதன் மேல் ஏறுவதற்காக,
  • 5:31 - 5:36
    அதே சமயத்தில், எந்த நிலையிலும்
    கீழே விழலாம் என்ற உணர்வுடன்.
  • 5:36 - 5:38
    ஆனால் வடிவமைப்பு எனக்கு
    தாக்கம் ஏற்படுத்தினாலும்
  • 5:38 - 5:43
    நாற்காலியோ, குளியலறையோ, ஒரு காப்பிக் கடையோ அல்லது ஆடைகளோ,
  • 5:43 - 5:46
    நான் முழுமையாக நம்பி நன்மை அடைவது
  • 5:46 - 5:50
    அந்நியர்களின் இரக்கத்தினால்.
  • 5:50 - 5:52
    ஆனால், எல்லோரும் அவ்வளவு
    நல்லவர்களாக இருப்பதில்லை.
  • 5:52 - 5:55
    ஒரு சிறிய நபர் என்று நினைவூட்டப்படுகிறது,
  • 5:55 - 5:57
    ஒரு அந்நியர் கை காட்டும் போது,
  • 5:58 - 5:59
    உற்றுப் பார்க்கும் போது,
  • 5:59 - 6:01
    சிரிக்கும் போது,
  • 6:01 - 6:03
    என்னை ஒரு பெயர் சொல்லி அழைக்கும்போது,
  • 6:03 - 6:06
    அல்லது, என்னை ஒரு
    புகைப்படம் எடுக்கும்போது.
  • 6:06 - 6:09
    இது அனேகமாக தினமும் நிகழ்கிறது.
  • 6:09 - 6:12
    சமூக ஊடகங்களின் எழுச்சி ஒரு
    வலைப்பதிவாளர் மற்றும்
  • 6:12 - 6:16
    செயல்வாதியாக குரல் எழுப்ப ஒரு மேடை
    மற்றும் வாய்ப்பு அளித்திருக்கிறது,
  • 6:16 - 6:19
    ஆனால், அது என்னை பதற்றப்
    படுத்தியும் இருக்கிறது
  • 6:19 - 6:21
    ஒரு நினைவூட்டுப் பொருளாக
    அல்லது
  • 6:21 - 6:23
    ஒரு வைரல் செய்தியாகி விடுவேனோ என்று,
  • 6:23 - 6:26
    எல்லாமே என் அனுமதி இல்லாமல்.
  • 6:26 - 6:29
    ஆகையால், ஒரு கணம் எடுத்துக் கொள்வோம்
  • 6:29 - 6:32
    சிலவற்றை மிகத் தெளிவுபடுத்த.
  • 6:32 - 6:35
    "சிறிய மனிதன்" என்ற வார்த்தை ஒரு அவதூறு.
  • 6:35 - 6:41
    அது பி.டி.பர்னூம் காலத்தில் சர்க்கஸ்
    மற்றும் அசாதாரண நிகழ்சிகளால் உருவானது.
  • 6:41 - 6:44
    சமுதாயம் படிப்படியாக
    உருவாகி இருக்கிறது
  • 6:44 - 6:46
    நம் சொல்வளமும் அப்படியே உருவாகவேண்டும்.
  • 6:46 - 6:48
    மொழி ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.
  • 6:48 - 6:51
    அது நம் சமுதாயத்தின் பெயரை மட்டும்
    குறிப்பிடுவதில்லை.
  • 6:51 - 6:53
    அது அதற்கு உருவம் கொடுக்கிறது.
  • 6:53 - 6:56
    நான் சிறிய நபராக இருப்பதில்
    நம்பமுடியாத பெருமை கொள்கிறேன்,
  • 6:56 - 7:00
    அகோன்ட்ரோப்ளேசியா என்ற நிலைமையை
    மரபு உரிமையாகப் பெற்றதற்காக.
  • 7:00 - 7:03
    ஆனால், சினேயாட் ஆக இருப்பதில் நான்
    அளவற்ற பெருமைப்படுகிறேன்.
  • 7:03 - 7:06
    குள்ளத்தன்மையின் ஒரு மிகப் பொதுவான
    வடிவம், அகோன்ட்ரோப்ளேசியா .
  • 7:06 - 7:11
    "குருத்தெலும்பு உருவாக்கம் இல்லாமல்" என
    அகோன்ட்ரோப்ளேசியா-வை மொழிபெயர்க்கலாம்
  • 7:11 - 7:15
    எனக்கு சிறிய கை கால்கள் மற்றும்
    அகோன்ட்ரோப்ளாஸ்டிக் முக அம்சங்களை கொண்டுள்ளேன்,
  • 7:15 - 7:18
    என்னுடைய நெற்றியிலும்ம என்னுடைய மூக்கிலும்.
  • 7:18 - 7:20
    என் கைகள் முழுமையாக நேராகாது.
  • 7:20 - 7:23
    ஆனால் என் முழங்கையை என்னால் நக்க முடியும்.
  • 7:23 - 7:25
    அதை நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை.
  • 7:25 - 7:31
    பிரதி 20,000 பிறப்புகளில் அகோன்ட்ரோப்ளேசியா
    தோராயமாக ஒருவருக்கு ஏற்படுகிறது
  • 7:31 - 7:35
    சிறிய மனிதர்கள் 80 சதவிகிதம், சராசரி
    உயரமுள்ள 2 பெற்றோர்களுக்கு பிறக்கிறார்கள்.
  • 7:35 - 7:40
    எனில், இந்த அறையில் எவருக்கு வேண்டுமானாலும்
    அகோன்ட்ரோப்ளேசியா உடைய குழந்தை பிறக்கலாம்.
  • 7:40 - 7:44
    ஆம், என் நிலையை நான்
    என் தந்தையின் மரபுரிமையாகப் பெற்றேன்.
  • 7:44 - 7:47
    என் குடும்பத்தின் ஒரு புகைப்படத்தை நான்
    உங்களுக்கு காட்ட விரும்புகிறேன்.
  • 7:47 - 7:49
    என் தாயார், சராசரி உயரம் உடையவர்,
  • 7:49 - 7:52
    என் தந்தை சிறிய மனிதர்
  • 7:52 - 7:54
    மேலும், ஐந்து குழந்தைகளில் நான் மூத்தவள்.
  • 7:54 - 7:58
    எனக்கு மூன்று சகோதரிகளும்
    ஒரு சகோதரனும் உள்ளனர்.
  • 7:58 - 8:00
    அவர்கள் எல்லோரும் சராசரி உயரமுடையவர்கள்.
  • 8:00 - 8:04
    ஒரு குடும்பத்தில் பிறந்திருப்பது நான் அளவற்ற அதிர்ஷ்டமுடையவள்
  • 8:04 - 8:08
    என்னுடைய ஆர்வத்தையும்
    விடா முயற்சியையும் அது வளர்த்தது,
  • 8:08 - 8:13
    அன்பற்ற மற்றும் அறியாமை உடைய
    அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றியது,
  • 8:13 - 8:17
    நெகிழும் தன்மை, படைப்பாற்றல் மற்றும்
    நம்பிக்கையை எனக்கு பக்கபலமாகக் கொடுத்தது,
  • 8:17 - 8:23
    நான் உயிர்பிழைத்து மற்றும் சூழலை
    திறமையாகக் கையாள தேவைப்பட்டது.
  • 8:23 - 8:27
    நான் ஏன் வெற்றிகரமாக உள்ளேன் என்பதற்கு
    ஒரு காரணம் சுட்டிக் காட்ட வேண்டுமென்றால்,
  • 8:27 - 8:32
    நான் ஒரு விரும்பப்பட்ட மற்றும் விரும்பப்படும் குழந்தை,
  • 8:32 - 8:35
    இப்போது, ஒரு விரும்பப்பட்ட குழந்தை
    நிறைய அகம்பாவம் மற்றும் கிண்டலுடன்,
  • 8:35 - 8:38
    எவ்வாறு இருப்பினும், ஒரு
    விரும்பப்படும் குழந்தை,
  • 8:38 - 8:42
    நான் யார் என்று இன்று உங்களுக்கு ஒரு
    உள்ளுணர்வு கொடுக்கும் போது
  • 8:42 - 8:45
    நான் உங்களுக்கு ஒரு புதிய முன்னோக்கை
    முன்வைக்க விரும்பினேன்.
  • 8:45 - 8:47
    கருத்துக்கு சவால்விட
    நினைத்தேன்
  • 8:47 - 8:51
    அதாவது, வடிவமைப்பு என்பது, செயல்பாடு
    மற்றும் அழகை உண்டாக்கும் ஒரு கருவி மட்டுமே
  • 8:51 - 8:55
    வடிவமைப்பு, மக்களின் வாழ்க்கையில் ஒரு
    பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது,
  • 8:55 - 8:57
    அனைத்து வாழ்க்கைகளுக்கும்.
  • 8:57 - 9:01
    வடிவமைப்பு என்ற ஒரு வழியின் வாயிலாக நாம்
    உலகுடன் ஒன்றி இருப்பதை உணரமுடியும்,
  • 9:01 - 9:05
    ஆனால் அது ஒரு நபரின் கண்ணியத்தையும்
    அவருடைய மனித உரிமைகளையும்
  • 9:05 - 9:08
    நாம் நிலைநாட்டும் ஒரு வழியும் கூட.
  • 9:08 - 9:10
    வடிவமைப்பு பாதிப்பு நிலையைக்
    கூட ஏற்படுத்தலாம்
  • 9:10 - 9:14
    ஒரு குழுவின் தேவைகளை
    கருத்தில் கொள்ளாத போது.
  • 9:14 - 9:19
    இன்று, நான் உங்கள் முன்னோக்கு.களுக்கு
    சவால் விடுக்க விரும்புகிறேன்
  • 9:19 - 9:21
    யார் யாருக்காக நாம் வடிவமைக்கவில்லை?
  • 9:21 - 9:24
    அவர்கள் குரல்களையும் அனுபவங்களையும்
  • 9:24 - 9:26
    எவ்வாறு நாம் பெரிதாக்கிக் காட்டலாம்
  • 9:26 - 9:28
    அடுத்த படி என்ன?
  • 9:28 - 9:31
    வடிவமைப்பு ஒரு மிகப்பெரிய பாக்கியம்,
  • 9:31 - 9:34
    ஆனால் அது ஒரு பெரிய பொறுப்பும் கூட,
  • 9:34 - 9:37
    எல்லோரும் உங்கள் கண்களைத்
    திறந்துகொள்ளுங்கள்.
  • 9:37 - 9:38
    மிக்க நன்றி.
  • 9:38 - 9:44
    (கரவொலி)
Title:
ஏன் வடிவமைப்பு எல்லோரையும் உள்ளடக்க வேண்டும்
Speaker:
சினேயாட் பர்கே
Description:

நம்மில் பலருக்கு நடைமுறையில் தெரியாத பல விவரங்களை சினேயாட் பர்கே, தீவீரமாக அறிந்திருக்கிறார். 105செ.மீ (அல்லது 3'5") உயரமுள்ள அவருக்கு, இந்த வடிவமைக்கப்பட்ட உலகில்-ஒரு பூட்டு உள்ள உயரத்திலிருந்து கிடைக்கும் ஷூ அளவுகளின் வீச்சு வரை- அவரே தனக்கு வேண்டியதை செய்து கொள்ளும் ஆற்றலை அடிக்கடி தடுக்கிறது. ஒரு சிறிய நபராக உலகில் உலாவும்போது, என்னென்ன சந்திக்க வேண்டி இருக்கிறது என்று அவர் கூறுகிறார். மேலும் "யார்யாருக்கு நாம் வடிவமைக்கவில்லை" என்று கேட்கிறார்

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
09:57
Tharique Azeez approved Tamil subtitles for Why design should include everyone
Vijaya Sankar N accepted Tamil subtitles for Why design should include everyone
Vijaya Sankar N edited Tamil subtitles for Why design should include everyone
Vijaya Sankar N edited Tamil subtitles for Why design should include everyone
DEVANATHAN RENGACHARI edited Tamil subtitles for Why design should include everyone
DEVANATHAN RENGACHARI edited Tamil subtitles for Why design should include everyone
DEVANATHAN RENGACHARI edited Tamil subtitles for Why design should include everyone
DEVANATHAN RENGACHARI edited Tamil subtitles for Why design should include everyone
Show all
  • Hi,
    I did not complete it. I have to do editing of sentences in many cases to trim it to the required characters /sec, and also correct typo errors. I would like to get control of the file again. Please advise how to go about, as this is my first attempt.
    Regards,
    Devanathan.

Tamil subtitles

Revisions