Return to Video

என் தந்தை, உடலில் சிறைப்பட்டவர்.ஆனால் ஒரு சுதந்திரப் பறவை

  • 0:01 - 0:06
    எனக்குத் தெரிந்த ஒருவர் ஒவ்வோர் இரவும்
    நகரத்தின் மேலே பறக்கிறார்
  • 0:06 - 0:09
    தன் கனவுகளில் சுற்றுகிறார், சுழலுகிறார்
  • 0:09 - 0:12
    கால் விரல்களை பூமியில் பதித்துக் கொண்டு.
  • 0:12 - 0:15
    அனைத்துமே இயக்கமுள்ளது என்கிறார் அவர்.
  • 0:15 - 0:20
    தன்னுடையதைப் போல் செயலிழந்த உடலுக்குக் கூட
  • 0:20 - 0:25
    இவர் தான் என் தந்தை
  • 0:25 - 0:27
    மூன்று வருடம் முன்பு ஒரு நாள் என் தந்தை
  • 0:27 - 0:29
    பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்
  • 0:29 - 0:31
    அவர் மூளைத் தண்டு தாக்கப்பட்டது.
  • 0:31 - 0:35
    நான் அவருடைய ஐ ஸி யூ அறைக்குச் சென்றேன்
  • 0:35 - 0:38
    மான்ட்ரீல் நியோரோ இன்ஸ்டிட்யூட்டில்
  • 0:38 - 0:41
    அவர் சலனமில்லாமல் கிடப்பதைப் பார்த்தேன்
  • 0:41 - 0:43
    மூச்சு இயந்திரத்தில் இணைத்திருந்தார்கள்
  • 0:43 - 0:48
    பக்கவாதம் உடலில் மெள்ளப் பரவியிருந்தது
  • 0:48 - 0:50
    கால் விரல்களில் தொடங்கி, பிறகு கால்கள்
  • 0:50 - 0:52
    உடம்பு, விரல்கள், கைகள் என்று.
  • 0:52 - 0:55
    கழுத்து வரை வந்து அவரை
  • 0:55 - 0:57
    மூச்சு விட முடியாமல் செய்து,
    கண்களுக்குச்
  • 0:57 - 1:01
    சற்று கீழே நின்று விட்டிருந்தது.
  • 1:01 - 1:04
    ஆனால் நினைவை மட்டும் அவர் இழக்கவில்லை
  • 1:04 - 1:06
    உள்ளிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்
  • 1:06 - 1:08
    தன் உடல் மெல்லச் செயலிழப்பதை
  • 1:08 - 1:11
    ஒவ்வொரு உறுப்பாக,
  • 1:11 - 1:14
    ஒவ்வொரு தசையாக.
  • 1:14 - 1:18
    ஐ ஸீ யூ அறையில் அவரருகில் சென்றேன்
  • 1:18 - 1:22
    நடுங்கும் குரலில் கண்ணீருடன்
  • 1:22 - 1:25
    எழுத்துகளை சொல்ல துவங்கினேன்
  • 1:25 - 1:31
    A, B, C, D, E, F, G,
  • 1:31 - 1:35
    H, I, J, K.
  • 1:35 - 1:38
    K வந்தபோது கண்களில் அசைவு.
  • 1:38 - 1:40
    திரும்பவும் ஆரம்பித்தேன்
  • 1:40 - 1:45
    A, B, C, D, E, F, G,
  • 1:45 - 1:47
    H, I.
  • 1:47 - 1:50
    I வந்தபோது திரும்பவும் கண்களைக் கொட்டினார்
  • 1:50 - 1:54
    பிறகு T பிறகு R மேலும் A
  • 1:54 - 1:56
    KITRA
  • 1:56 - 2:00
    "கித்ரா, என் அன்பே! அழாதே ", என்றார்
  • 2:00 - 2:04
    "இது ஒரு ஆசீர்வாதம் தான்" என்றார்
  • 2:04 - 2:07
    கேட்கும் குரலில் அல்ல:
    ஆனால் என் தந்தை
  • 2:07 - 2:10
    என் பெயரை சக்தியுடன் அழைத்தார்.
  • 2:10 - 2:13
    பக்கவாதம் தாக்கி வெறும் 72 மணி நேரம் தான்
  • 2:13 - 2:15
    இருந்தாலும் ஒப்புக் கொண்டு விட்டார்
  • 2:15 - 2:18
    தன் நிலைமையை முழுவதுமாக
  • 2:18 - 2:21
    அவருடைய மோசமான உடல் நிலையிலும்
  • 2:21 - 2:24
    முழுவதுமாக என்னுடன் இருந்தார்
  • 2:24 - 2:26
    அரவணைத்து, வழிகாட்டி
  • 2:26 - 2:29
    என் தந்தையாகவே இருந்தார்.
  • 2:29 - 2:32
    முன்னைப் போலவே.
  • 2:32 - 2:33
    நோயில் சிறைப்படுவது
  • 2:33 - 2:37
    பலருக்கு பயங்கரமான ஒரு விஷயம்
  • 2:37 - 2:39
    அதை பிரென்சு மொழியில் சொல்வார்கள்
  • 2:39 - 2:41
    "மலாடி டி லெம்மூரே விவாந்த்" என்று
  • 2:41 - 2:47
    "உயிருடன் நோயில் சிறை" என்று பொருள்
  • 2:47 - 2:48
    பலருக்கு, அனேகமாக அனைவருக்கும்
  • 2:48 - 2:52
    பக்கவாதம் சொல்ல இயலாத கொடுமை
  • 2:52 - 2:54
    ஆனால் என் தந்தையின் அனுபவமோ
  • 2:54 - 2:57
    அவர் உடலின் அனைத்து செயலையும் இழந்தது
  • 2:57 - 3:00
    பொறியில் சிக்கிய அனுபவமாகஇல்லாமல்
  • 3:00 - 3:04
    ஆன்மாவின் உள்-நோக்காக இருந்தது.
  • 3:04 - 3:07
    வெளியே உள்ள அரவங்களை அடக்கி
  • 3:07 - 3:10
    தன் ஆழ்-மனத்திற்குச் சென்று,
  • 3:10 - 3:12
    பிறகு அந்த இடத்தில்
  • 3:12 - 3:16
    வாழ்வுடனும் உடலுடனும் புதிய அன்பு
  • 3:16 - 3:19
    ஒருமதகுருவாக , ஆன்மீகவாதியாக,
  • 3:19 - 3:23
    மனம்,- உடல் , வாழ்வு -மரணத்திற்கிடையே
  • 3:23 - 3:28
    பக்கவாதம் ஒரு புதிய உணர்வு தந்தது
  • 3:28 - 3:30
    அவருக்கு புரிந்தது - இனிமேல்
  • 3:30 - 3:33
    உடலின் வெளியே செல்ல வேண்டியதில்லை.
  • 3:33 - 3:36
    தெய்வீகத்தை உணர
  • 3:36 - 3:40
    "சொர்க்கம் இந்த உடலில் தான்
  • 3:40 - 3:44
    அது இந்த உலகில்தான்" என்றார் அவர்.
  • 3:44 - 3:48
    முதல் 4 மாதங்கள் அருகிலேயே உறங்கினேன்
  • 3:48 - 3:50
    முடிந்தவரை கவனித்துக் கொண்டேன்
  • 3:50 - 3:53
    அவருடைய வலிகளையும்
  • 3:53 - 3:56
    ஆழ்ந்த மனோ பயத்தையும் புரிந்து கொண்டேன்
  • 3:56 - 4:00
    அவரால் யாரையும் உதவிக்கு அழைக்க முடியாதே.
  • 4:00 - 4:03
    அன்னையும் சகோதரரும், சகோதரிகளும் நானும்
  • 4:03 - 4:08
    குணமாக்கும் பட்டு நூலாக சுற்றிக் கொண்டோம்
  • 4:08 - 4:10
    நாங்கள் தான் அவர் குரல்வளை
  • 4:10 - 4:14
    எழுத்துகள் சொல்வதில் பல மணி நேரங்கள்
  • 4:14 - 4:16
    அவர் போதனைகளை முணுமுணுக்கும்போது
  • 4:16 - 4:20
    கண்னசைவால் கவிதைகள் சொல்லும்போது
  • 4:20 - 4:25
    அவர் அறை எங்கள் சிகிச்சைக் கோயிலாயிற்று.
  • 4:25 - 4:28
    அவர் படுக்கை ஒரு கூடமாயிற்று
  • 4:28 - 4:32
    அவருடைய ஆன்மீக போதனைகளைத் தேடியவர்களுக்கு
  • 4:32 - 4:34
    எங்கள் மூலமாக அவரால் பேச முடிந்தது
  • 4:34 - 4:37
    அவர்களை உயர்த்த முடிந்தது
  • 4:37 - 4:39
    ஒவ்வொரு எழுத்தாக
  • 4:39 - 4:41
    ஒவ்வொரு கண்ணசைவாக
  • 4:41 - 4:45
    எங்கள் உலகம் மெதுவும் மென்மையுமாக ஆகியது
  • 4:45 - 4:48
    ஹாஸ்பிடல் வார்டின் அரவமும் மரணமும்
  • 4:48 - 4:52
    பின்னணிக்குத் தள்ளப்பட்டன.
  • 4:52 - 4:54
    உங்களுக்கு படித்துக் காட்ட விரும்புகிறேன்
  • 4:54 - 4:58
    நோயில் விழுந்த அடுத்த வாரத்தில்
    அவர் எழுதியதை
  • 4:58 - 5:01
    அவர் ஒரு கடிதம் தயாரித்தார்
  • 5:01 - 5:03
    தன் கோயிலுக்கு வருபவர்களுக்கு
  • 5:03 - 5:07
    முடிவில் கூறிய சில வரிகள் இதோ.
  • 5:07 - 5:09
    "என் பிடரி வெடித்தபோது
  • 5:09 - 5:12
    நான் மற்றொரு பரிமாணத்தில் நுழைந்தேன்
  • 5:12 - 5:17
    முதல் நிலை உப-கிரக ப்ரோடோஸானில்.
  • 5:17 - 5:21
    பிரபஞ்சங்கள் என்றும் திறந்து மூடுகின்றன
  • 5:21 - 5:23
    அவற்றில் பல கீழே தள்ளப்பட்டு
  • 5:23 - 5:25
    அவைகளின் வளர்ச்சி நின்று விடுகிறது.
  • 5:25 - 5:28
    சென்ற வாரம் நான்
    மிகவும் கீழே தள்ளப்பட்டேன்
  • 5:28 - 5:31
    ஆனால் தந்தையின் அணைப்பை உணர்ந்தேன்
  • 5:31 - 5:34
    என் தந்தை எனக்கு உயிர் கொடுத்தார்."
  • 5:34 - 5:37
    நாங்கள் அவர் குரலாக இல்லாதபோது
  • 5:37 - 5:40
    அவருடைய கை கால்களாக ஆனோம்.
  • 5:40 - 5:43
    அவைகளை அசைப்பேன் -
  • 5:43 - 5:45
    என் கை கால்களை
  • 5:45 - 5:49
    அவைகள் மரத்துப் போனால் எப்படி
    அசைப்பேனோ அப்படி
  • 5:49 - 5:53
    அவர் விரல்களை என் முகத்தருகே வைத்து
  • 5:53 - 5:57
    மென்மையாக்க ஒவ்வொரு மூட்டாக வளைப்பேன்
  • 5:57 - 6:00
    அவரிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன்
  • 6:00 - 6:02
    அசைவுகளைப் பார்ப்பதற்கு.
  • 6:02 - 6:06
    உள் மனதிலிருந்து விரல்கள் வளையும்போது
  • 6:06 - 6:10
    பிறகு நீளும்போது
    அந்த அசைவுகளொடு
  • 6:10 - 6:13
    மனதில் ஒன்றிவிடுவதற்கு
  • 6:13 - 6:15
    பிறகு ஒரு நாள் ஓரக் கண்ணால் பார்த்தேன்
  • 6:15 - 6:18
    அவர் உடல் பாம்பு போல் நெளிவதை
  • 6:18 - 6:22
    ஒரு அனிச்சையான ஓட்டம்.
  • 6:22 - 6:24
    அவருடைய உடலின் ஊடே
  • 6:24 - 6:26
    முதலில் அது ஒரு பிரமை என்று எண்ணினேன்
  • 6:26 - 6:30
    அவர் உடலைப் பேண அவ்வளவு முயன்றிருக்கிறேன்
  • 6:30 - 6:34
    அவர் தன்னியக்கம் பெற அடங்காத ஆசை .
  • 6:34 - 6:37
    அவர் உணர்வு தோன்றியதாக சொன்னார்
  • 6:37 - 6:41
    மின்சாரப் பொறிகள் வந்து போவது போல்.
  • 6:41 - 6:44
    தோல் பரப்பின் சற்று கீழே உணர்வு என்றார்.
  • 6:44 - 6:48
    அடுத்த வாரம் மிக மிக மெதுவாக
  • 6:48 - 6:50
    அவருடையதசைகள் வலுவைக் காட்டத் துவங்கின
  • 6:50 - 6:53
    தொடர்புகள் ஏற்படத் தொடங்கின.
  • 6:53 - 6:58
    உடல் மெல்ல, மெதுவாக விழித்துக் கொண்டது
  • 6:58 - 7:02
    ஒவ்வொரு உறுப்பாக ஒவ்வொரு தசையாக
  • 7:02 - 7:05
    துடிப்பின் பின் துடிப்பாக
  • 7:05 - 7:07
    டாகுமென்டரி படங்கள் எடுக்கும் ஒருவராக
  • 7:07 - 7:09
    நான் அவற்றை படமெடுக்க விரும்பினேன்
  • 7:09 - 7:11
    அவருடைய ஒவ்வொரு முதல் அசைவுகளையும்
  • 7:11 - 7:14
    புதியதாகப் பிறந்த குழந்தையின் தாய் போல.
  • 7:14 - 7:18
    முதன் முதலில் தானாக மூச்சு விட்டதை .
  • 7:18 - 7:21
    கொண்டாட வேண்டிய அந்த வினாடியை
  • 7:21 - 7:25
    முதன் முதலில் அவர் தசைகள் வலுவடைந்தபோது .
  • 7:25 - 7:28
    நவீன தொழில் நுட்பங்களால்
  • 7:28 - 7:32
    அவர் சுதந்திரம் அதிகமாவதை
  • 7:32 - 7:34
    அன்பும் ஆதரவும்
  • 7:34 - 7:36
    அவரைச் சுற்றி நிற்பதை
  • 7:45 - 7:48
    ஆனால் என் படங்கள் சொன்னது புறக்கதையை
  • 7:48 - 7:52
    ஹாஸ்பிடல் படுக்கையில் கிடக்கும் ஒரு மனிதனை
  • 7:52 - 7:53
    மூச்சு மெஷினுடன் இணைத்திருப்பதை
  • 7:53 - 7:57
    அவரின் உள்கதைகளை படம் பிடிக்க முடியவில்லை
  • 7:57 - 8:00
    ஆக அதைக் காண புதிய மொழியொன்று தேடினேன்
  • 8:00 - 8:04
    எது விளக்கும் தாற்காலிகமான அவர்
  • 8:04 - 8:07
    ஆன்மீக அனுபவத்தை ?
  • 8:26 - 8:28
    உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
  • 8:28 - 8:32
    நான் எடுத்த வீடியோக்களில் ஒன்றை .
  • 8:32 - 8:35
    அவர் இடைக்கால வாழ்வை அது விளக்க முயலுகிறது
  • 8:35 - 8:38
    என் தந்தையின் அனுபவத்தை.
  • 8:38 - 8:41
    அவர் மூச்சு விடும் சக்தி பெற துவங்கியதும்
  • 8:41 - 8:44
    அவர் எண்ணங்களைப் பதிய ஆரம்பித்தேன்
  • 8:44 - 8:46
    ஆகையால் இந்த விடியோவில் நீங்கள் கேட்பது
  • 8:46 - 8:48
    அவருடைய குரலே
  • 8:48 - 8:51
    (விடியோ) ரான்னி கஹானா : நீ ஒப்புக் கொள்
  • 8:51 - 8:54
    உனக்கு பக்கவாதம் வந்தது
  • 8:54 - 8:57
    ஒரு வேடம் போடுவதற்காக
  • 8:57 - 9:02
    ஒரு கை-கால் செயலிழந்தவன் வேடத்தை.
  • 9:02 - 9:04
    என்னால் முடியாது
  • 9:04 - 9:07
    என் மனதில்
  • 9:07 - 9:09
    மேலும் என் கனவுகளிலும்
  • 9:09 - 9:12
    ஒவ்வொரு இரவும்
  • 9:12 - 9:17
    நான் சாகால்-மனிதன் மிதக்கிறேன்
  • 9:17 - 9:20
    நகரத்தின் மேலே
  • 9:20 - 9:24
    சுற்றுகிறேன் மேலும் சுழலுகிறேன்
  • 9:24 - 9:31
    என் கால் விரல்களால் தரையில் முத்தமிட்டு.
  • 9:31 - 9:38
    எனக்கு ஒன்றும் தெரியாது
  • 9:38 - 9:44
    அசைவில்லாத மனிதன் பற்றி
  • 9:44 - 9:48
    எல்லாவற்றிற்கும் இயக்கம் இருக்கிறது
  • 9:48 - 9:51
    இதயம் துடிக்கிறது
  • 9:51 - 9:55
    உடல் மேல்-கீழ் செல்கிறது
  • 9:55 - 10:00
    வாய் அசைகிறது
  • 10:00 - 10:04
    நாம் ஒருபொழுதும் தேங்கிக் கிடப்பதில்லை
  • 10:04 - 10:11
    வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் வரும்
  • 10:11 - 10:13
    கித்ரா கஹானா: நம்மில் பலருக்கு
  • 10:13 - 10:16
    தசைகள் துடிக்க -இயங்கத் துவங்குகின்றன
  • 10:16 - 10:18
    நமக்கு நினைவு வருவதற்கு வெகு முன்பாக
  • 10:18 - 10:21
    ஆனால் தந்தை சொல்கிறார்
  • 10:21 - 10:23
    "அவ்வனுபவத்தின் எல்lலையில் வாழ்ந்தது
  • 10:23 - 10:26
    அவருடைய அதிர்ஷ்டம்"
  • 10:26 - 10:29
    ஒரு விண்வெளி வீரன் காண்பது போல, நம்மில்
  • 10:29 - 10:32
    சிலருக்கே பகிர்ந்து கொள்ள முடிவது போல
  • 10:32 - 10:35
    அவர் அதிசயிக்கிறார், மேலும் பார்க்கிறார்
  • 10:35 - 10:37
    அவருடைய முதல்மூச்சை
  • 10:37 - 10:41
    தவழ்ந்து வீடு திரும்புவதாகக் கனவு காண்பதை
  • 10:41 - 10:45
    57ல் வாழ்வின் தொடக்கம் என்கிறார்
  • 10:45 - 10:49
    ஒரு சிசுவிற்கு தன்னைத் தெரியாது
  • 10:49 - 10:54
    ஆயின் மனிதன் என்றும்
    தனக்கு உலகம் தெரியும் என்கிறான்
  • 10:54 - 10:58
    நம்மில் சிலருக்கே உடல் செயலிழப்பு வரும்
  • 10:58 - 11:01
    என் தந்தையின் அளவிற்கு மோசமாக .
  • 11:01 - 11:04
    ஆனால் நமக்கு வேறு விதமான செயலிழப்பு
  • 11:04 - 11:06
    நம் வாழ்க்கையில்
  • 11:06 - 11:10
    எனக்கு அடிக்கடி பிரச்சினைகள் எதிர்ப்படும்
  • 11:10 - 11:13
    சில தீர்வு காண முடியாதவைகள்
  • 11:13 - 11:15
    ஆனால் என் தந்தை வலியுறுத்துகிறார்
  • 11:15 - 11:18
    முடிவடைந்த பாதைகளே இல்லையென்று
  • 11:18 - 11:23
    கூட்டு சிகிச்சைக்காக
    அவர் இடத்துக்கு அழைக்கிறார்
  • 11:23 - 11:27
    என்னுடைய சிறந்ததை அவருக்கு அளிக்க,
  • 11:27 - 11:30
    மேலும்அவருடைய சிறந்ததை எனக்கு அளிக்க
  • 11:30 - 11:33
    செயலிழப்பு அவருக்கு ஒரு திறப்பு
  • 11:33 - 11:36
    மேலெழும்ப ஒரு வாய்ப்பு
  • 11:36 - 11:38
    உயிர் சக்தியை மீண்டும் தூண்ட.
  • 11:38 - 11:40
    தன்னுடன் மட்டும் வெகு நேரம் இருக்க
  • 11:40 - 11:43
    அவ்வாறு முழுவதுமாக அன்புடன் தொடர்ந்து
  • 11:43 - 11:45
    படைப்பு சக்தியுடன் ஒன்றிவிட
  • 11:45 - 11:49
    இன்று என் தந்தை நோய் சிறையில் இல்லை
  • 11:49 - 11:53
    தன் கழுத்தை சுலபமாக அசைக்கிறார்
  • 11:53 - 11:55
    உணவு தரும் குழல் அகற்றப்பட்டு விட்டது
  • 11:55 - 11:58
    தன் நுரையீரல்களாலேயே மூச்சு விடுகிறார்
  • 11:58 - 12:02
    தன் குரலிலேயே மெல்லப் பேசுகிறார்
  • 12:02 - 12:04
    தினமும் பணியில் ஈடுபடுகிறார்.
  • 12:04 - 12:09
    தன் பக்கவாத உடம்பின் இயக்கத்தை அதிகரிக்க
  • 12:09 - 12:11
    ஆனால் பணி என்றும் தீராது.
  • 12:11 - 12:16
    அவர் சொல்வது போல " நான் குறைகளுள்ள
    ஒரு உலகத்தில் வாழ்கிறேன்?"
  • 12:16 - 12:19
    புனிதப் பணிகள் நிறைய இருக்கின்றன,"
  • 12:19 - 12:21
    நன்றி
  • 12:21 - 12:25
    (கை தட்டல்கள்)
Title:
என் தந்தை, உடலில் சிறைப்பட்டவர்.ஆனால் ஒரு சுதந்திரப் பறவை
Speaker:
கித்ரா கஹானா
Description:

2011ல் ரோனி கஹானா கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உடலில் சிறை வைக்கப்பட்டவர் போலானார்.;கண்களைத் தவிர முழுவதுமாக செயலிழந்தார்.சாதாரணமாக ஒரு மனிதனின் மன நிலையை இது குலைத்துவிடுமானுலும் கஹானோவோ "வெளி அரவங்கள் ஒடுங்கும்போது" ஒரு அமைதியைக் கண்டார்..மேலும் புதிய உடல் மற்றும் வாழக்கையுடன் காதல் கொண்டார்..இந்த சோகமான உணர்ச்சிகரமான சொற்பொழிவில், அவரது மகள் கித்ரா, தன்னுடைய செயலிழந்த நிலையிலும் மற்றவர்களுக்கு வழிகாட்டி உதவிய தன் தந்தையின் ஆன்மீக அனுபவத்தை எப்படிப் பதிந்தார் என்பதைப் பகிர்ந்து கொள்கிறார்.

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
12:38

Tamil subtitles

Revisions Compare revisions