Return to Video

எண் தொகுதிகள் 2

  • 0:00 - 0:00
    -
  • 0:00 - 0:05
    3.4028 மீள் தொடர் எண்
  • 0:05 - 0:07
    எந்த எண் தொகுதியை சார்ந்தது?
  • 0:07 - 0:09
    இதற்கு விடை அளிப்பதற்கு முன், இந்த எண்
  • 0:09 - 0:11
    எதைக் குறிக்கிறது எனப் பார்ப்போம்.
  • 0:11 - 0:13
    குறிப்பாக மேலே உள்ள இந்தக் கோட்டின் அர்த்தம் என்ன.
  • 0:13 - 0:16
    மேலே உள்ள கோடு, இந்த 28 முடியாமல்,
  • 0:16 - 0:17
    நீண்டு கொண்டே வரும் என்பதைக் குறிக்கிறது.
  • 0:17 - 0:25
    இந்த எண்ணை 3.4028 என்று வெளிப்படுத்தலாம்.
  • 0:25 - 0:26
    ஆனால் 28 முடியாமல் தொடர்ந்து வரும்.
  • 0:26 - 0:30
    மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருக்கும்.
  • 0:30 - 0:32
    28 ஐ மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டே போகலாம்.
  • 0:32 - 0:35
    அதைவிட, 28-ன் மேல் இப்படி ஒரு கோடு வரைந்தால்,
  • 0:35 - 0:38
    அது தொடர்ந்து கொண்டே இருக்கும் என அர்த்தம்.
  • 0:38 - 0:41
    இப்பொழுது இது, எந்த எண் தொகுதியை சேர்ந்தது என்று பார்ப்போம்.
  • 0:41 - 0:45
    நாம் பார்த்ததிலே பெரிய அளவு எண் தொகுதிகளை கொண்டது
  • 0:45 - 0:45
    மெய்யெண்கள் தான்.
  • 0:45 - 0:48
    இது, இந்த எண் மெய்யெண்கள் தொகுதியைச் சார்ந்தது.
  • 0:48 - 0:50
    மெய்யெண்களில் நமது அனைத்து எண் வரிசைகலும்
  • 0:50 - 0:52
    இதில் அடங்கும்.
  • 0:52 - 0:56
    3.4028 தொடரும் எண்ணும் இதில் தான் உள்ளது.
  • 0:56 - 1:01
    இது எதிர்மறை 1. இது 0,1,2,3,4,
  • 1:01 - 1:05
    3.4028 இங்கு 3.4 க்கு சற்று அதிகமாக இருக்கும்.
  • 1:05 - 1:06
    3.41 க்கு சற்று குறைவாக இருக்கும்.
  • 1:06 - 1:08
    இது இந்த இடத்தில் இருக்கும்.
  • 1:08 - 1:09
    எனவே இது கண்டிப்பாக எண் கோட்டில் வருகிறது.
  • 1:09 - 1:11
    இது ஒரு மெய்யெண்.
  • 1:11 - 1:14
    இந்த எண் கண்டிப்பாக
  • 1:14 - 1:16
    ஒரு மெய் எண்ணாக இருக்கும்.
  • 1:16 - 1:19
    ஆனால், நாம் தெரிந்து கொள்ள வேண்டியது,
  • 1:19 - 1:20
    இது ஒரு விகிதமுறு எண்ணா என்று தான்.
  • 1:20 - 1:25
    விகிதமுறு எண் என்பதன் பொருள்,
  • 1:25 - 1:27
    விகிதமாகவோ அல்லது பின்னமாகவோ பிரிக்க முடிந்தது.
  • 1:27 - 1:34
    p என்பது விகிதமுறு எண்ணாக இருந்தால்,
  • 1:34 - 1:38
    அது இரண்டு முழு எண்களின் விகிதமாக இருக்க வேண்டும்.
  • 1:38 - 1:44
    அப்படியென்றால், p என்பது
  • 1:44 - 1:48
    m/n, ஆகிய இரண்டு எண்களின் விகிதமாக இருக்க வேண்டும்.
  • 1:48 - 1:51
    இந்த 2 முழு எண்களை நான் இப்போது விகிதத்தில் கூறமுடியுமா?
  • 1:51 - 1:51
    என்பதுதான் நமது கேள்வி.
  • 1:51 - 1:52
    வேறு வழியில் இதை யோசிக்கிறேன்.
  • 1:52 - 1:54
    இதை நாம் பின்னமாக மாற்ற முடியுமா?
  • 1:54 - 1:59
    இதை இப்பொழுது பின்னமாக வெளிப்படுத்தலாம்.
  • 1:59 - 2:01
    x ஐ இந்த எண்ணுக்கு சமமாக எடுத்துக் கொள்வோம்.
  • 2:01 - 2:10
    x = 3.4028 தொடரும் எண் எனலாம்.
  • 2:10 - 2:13
    10,000x என்றால் என்ன என்று பார்ப்போம்.
  • 2:13 - 2:14
    10,000x -ஐ ஏன் எடுத்தேன் என்றால்,
  • 2:14 - 2:17
    தசமப் புள்ளியை வலதுபக்கம் நகர்த்தவேண்டும்.
  • 2:17 - 2:22
    எனவே, 10,000x
  • 2:22 - 2:23
    இது எதற்கு சமம்?
  • 2:23 - 2:26
    ஒவ்வொரு முறை 10 ஆல் பெருக்கும் பொழுதும் தசமப்புள்ளியை
  • 2:26 - 2:27
    வலதுபக்கம் ஒரு இடம் நகர்த்த வேண்டும்.
  • 2:27 - 2:30
    10,000 என்பது 10ன் 4 அடுக்குக்குச் சமம்.
  • 2:30 - 2:32
    எனவே, தசமப்புள்ளியை வலதுபக்கம் நான்கு
  • 2:32 - 2:33
    இடம் நகர்த்த வேண்டும்.
  • 2:33 - 2:36
    1,2,3,4
  • 2:36 - 2:41
    எனவே, இந்த எண் 34,028 ஆகும்.
  • 2:41 - 2:43
    ஆனால், இங்கு 28 தொடருகிறது.
  • 2:43 - 2:46
    எனவே, 28 தொடர்ந்து கொண்டே செல்லுகிறது.
  • 2:46 - 2:47
    தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
  • 2:47 - 2:50
    இவை அனைத்தும் தசமப்புள்ளியின் இடதுபக்கம்
  • 2:50 - 2:50
    5 இடங்கள் நகர்கிறது.
  • 2:50 - 2:51
    இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால்,
  • 2:51 - 2:53
    இது உங்களுக்கு புரியும்.
  • 2:53 - 2:55
    இது தோராயமாக 3 1/2.
  • 2:55 - 2:58
    10,000 -ஆல் பெருக்கும்போது சராசரியாக 35,000 வரும்.
  • 2:58 - 2:59
    இது தான் 10,000x.
  • 2:59 - 3:01
    இப்பொழுது 100x என்ன என்று யோசிப்போம்.
  • 3:01 - 3:04
    இப்பொழுது நான் என்ன செய்ய முயல்கிறேன் என்றால்
  • 3:04 - 3:07
    கழிக்கும் பொழுது x-ன் உருவில் வரும் இரண்டு எண்கள் தேவை.
  • 3:07 - 3:08
    அதன் தொடரும் பகுதி மறைய வேண்டும்.
  • 3:08 - 3:11
    பிறகு அந்த எண்ணை சராசரி எண்ணாகக் கருதலாம்.
  • 3:11 - 3:13
    இப்பொழுது 100 x என்பது என்ன என்று யோசிப்போம்.
  • 3:13 - 3:16
    100x.
  • 3:16 - 3:17
    இது தசமப்புள்ளியை நகர்த்தும்.
  • 3:17 - 3:18
    நினைவு கொள்ளவும், தசமப்புள்ளி முன்பு இங்கு இருந்தது.
  • 3:18 - 3:21
    இது தசமப்புள்ளியை வலதுபக்கமாக இரண்டு இடம் தள்ளி நகர்த்துகிறது.
  • 3:21 - 3:25
    ஆகவே,100x என்பது - இதை இப்படி எழுதுகிறேன்.
  • 3:25 - 3:31
    340.28. இதில் 28 தொடர்கிறது.
  • 3:31 - 3:32
    28 இங்கு மீள்நிகழ்வு எண்ணாகப் போடலாம்
  • 3:32 - 3:33
    ஆனால், அது அர்த்தமுள்ளதாகத் தெரியவில்லை.
  • 3:33 - 3:35
    இதை தசமப்புள்ளிக்கு அடுத்ததாக எழுதவேண்டும்.
  • 3:35 - 3:37
    ஆகவே, 28ஐ எழுதி அது மீண்டும் மீண்டும் தொடர்வதைக் காட்டுகிறோம்.
  • 3:37 - 3:40
    மிகவும் சுவாரஸ்யமான ஒன்றை இங்கு பார்க்கப் போகிறோம்.
  • 3:40 - 3:42
    இந்த இரண்டு எண்களும் xன் பெருக்குத் தொகைகள்.
  • 3:42 - 3:46
    இப்பொழுது கீழுள்ள எண்ணை மேலுள்ள எண்ணால்
  • 3:46 - 3:47
    கழித்தால் என்னவாகும்?
  • 3:47 - 3:49
    இந்த தொடரும் எண் மறைந்துவிடும்.
  • 3:49 - 3:49
    இதை இப்பொழுது செய்வோம்.
  • 3:49 - 3:52
    இதை சமன்பாட்டின் இருபக்கமும் செய்யவேண்டும்.
  • 3:52 - 3:53
    இப்பொழுது செய்துபார்ப்போம்.
  • 3:53 - 3:58
    ஆகவே, இப்பொழுது இடதுபக்கத்தில் உள்ள 10,000x ல்
  • 3:58 - 4:04
    இருந்து 100xஐ கழித்தால் வருவது 9,900x.
  • 4:04 - 4:07
    இப்பொழுது வலதுபக்கம் பார்த்தோமானால்
  • 4:07 - 4:08
    தசமப்பகுதி நீங்கிவிடும்.
  • 4:08 - 4:12
    அடுத்து 34,028 ல் இருந்து 340ஐக் கழித்தால் என்ன வரும் எனக் கணக்கிட வேண்டும்.
  • 4:12 - 4:14
    இப்பொழுது அதைக் கண்டுபிடிப்போம்.
  • 4:14 - 4:16
    8, 0 வைவிட பெரியது. எனவே, எதையும்
  • 4:16 - 4:17
    மாற்றி அமைக்கத்தேவையில்லை.
  • 4:17 - 4:20
    2, 4 ஐவிடச் சிறியது.
  • 4:20 - 4:22
    அதனால், இதை மாற்றி அமைக்கவேண்டும்.
  • 4:22 - 4:26
    பக்கத்தில் உள்ள எண் 0 ஆக இருப்பதால் அங்கிருந்து கடன் வாங்க முடியாது.
  • 4:26 - 4:28
    இதில் 0, 3 ஐவிட குறைவாக உள்ளது. அதனால் அதையும்
  • 4:28 - 4:29
    மாற்றி அமைத்து கடன் வாங்க வேண்டும்.
  • 4:29 - 4:32
    முதலில் 4ல் இருந்து கடன் வாங்குவோம்.
  • 4:32 - 4:37
    4ல் இருந்து கடன் வாங்கும்பொழுது 4, 3 ஆகிறது
  • 4:37 - 4:38
    0, 10 ஆகிறது.
  • 4:38 - 4:40
    இப்பொழுது 2க்கு 10ல் இருந்து கடன் வாங்கலாம்.
  • 4:40 - 4:44
    2, 12 ஆகிறது. 10 ,9 ஆகிறது.
  • 4:44 - 4:46
    இப்பொழுது நாம் கழித்தலைச் செய்யலாம்.
  • 4:46 - 4:48
    8 கழித்தல் 0 என்பது 8 ஆகும்.
  • 4:48 - 4:51
    12 கழித்தல் 4 = 8.
  • 4:51 - 4:54
    9 கழித்தல் 3 = 6.
  • 4:54 - 4:56
    3 கழித்தல் பூஜ்யம் என்பது 3
  • 4:56 - 4:58
    3 கழித்தல் பூஜ்யம் என்பது 3.
  • 4:58 - 5:05
    ஆகையால், 9,900x என்பது 33,688 க்கு சமம்.
  • 5:05 - 5:09
    இங்கு, நாம் 340ஐ மேலுள்ள எண்ணில் இருந்து கழித்தோம்.
  • 5:09 - 5:13
    கழித்தலில் 33,688 கிடைக்கிறது.
  • 5:13 - 5:16
    இப்பொழுது x ஐக் கண்டுபிடிக்க
  • 5:16 - 5:22
    இரண்டு பக்கமும் 9,900 ஆல் வகுக்க வேண்டும்.
  • 5:22 - 5:24
    இடது பக்கமும் 9,900 ஆல் வகுக்க வேண்டும்.
  • 5:24 - 5:27
    வலது பக்கமும் 9,900 ஆல் வகுக்க வேண்டும்.
  • 5:27 - 5:28
    இப்பொழுது மீதம் என்ன வரும்?
  • 5:28 - 5:37
    x என்பது 33,688 ன் கீழ் 9,900 க்கு சமம்.
  • 5:37 - 5:39
    இதன் முக்கியத்துவம் என்ன?
  • 5:39 - 5:42
    x என்ற பெயரில் இந்த எண்ணைத்தான் (3.4028) எடுத்துக்கொண்டோம்
  • 5:42 - 5:45
    இதில்தான் மீள்நிகழ்வு எண் 28 உள்ளது.
  • 5:45 - 5:48
    கொஞ்சம் இயற்கணிதத்தைப் பயன்படுத்தி
  • 5:48 - 5:50
    இரண்டின் பெருக்குத்தொகையையும் ஒன்றில் இருந்து ஒன்றைக் கழித்து
  • 5:50 - 5:53
    x ஐ ஒரு பின்னத்தில் வெளிப்படுத்திவிட்டோம்.
  • 5:53 - 5:56
    இதை நாம் இன்னும் எளிதாக்கவில்லை.
  • 5:56 - 5:59
    இவை 2 ஆல் வகுபடும். 4 ஆல் கூட வகுபடலாம்.
  • 5:59 - 6:02
    எனவே, இதை எளிதாக்கி குறைந்த மதிப்பில் கொண்டு வரலாம்.
  • 6:02 - 6:03
    ஆனால், அது நமக்குத் தேவையில்லை.
  • 6:03 - 6:04
    நமக்குத் தேவையானதெல்லாம் அவை x-ஐ குறிக்க வேண்டும்.
  • 6:04 - 6:05
    அதாவது, இந்த எண்ணை பின்னத்தில் குறிக்க வேண்டும்.
  • 6:05 - 6:12
    இரண்டு முழு எண்களின் விகிதமாக.
  • 6:12 - 6:15
    எனவே, இந்த எண் விகிதமுறு எண்.
  • 6:15 - 6:17
    இந்த எண்ணும் விகிதமுறு எண்.
  • 6:17 - 6:19
    நாம் இங்கு செய்த முறை இந்த ஒரு
  • 6:19 - 6:21
    எண்ணிற்கு மட்டும் இல்லை.
  • 6:21 - 6:24
    தொடர் எண்கள் இருக்கும் எந்த ஒரு எண்ணிற்கும் இந்த
  • 6:24 - 6:25
    செயல்முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • 6:25 - 6:28
    ஆகையால், தொடர் எண்கள் எப்பொழுதும் விகிதமுறு எண்களாகத்தான் இருக்கும்.
  • 6:28 - 6:30
    விகிதமுறா எண்களில் தொடர் எண்கள் இருக்காது.
  • 6:30 - 6:33
    உதாரணத்திற்கு, பை(pi).
  • 6:33 - 6:35
    இங்கு நாம் அறியும் மேலும் ஒன்று,
  • 6:35 - 6:36
    இவை முழு எண்கள் இல்லை.
  • 6:36 - 6:37
    ஒருங்கிணைந்த முழு எண்கள் தான்
  • 6:37 - 6:38
    நாம் எதிர்கொள்ளும் முழு எண்கள்.
  • 6:38 - 6:40
    இவை முழு எண்களுக்கு இடைப்பட்டவை.
  • 6:40 - 6:43
    இது இயல் எண்ணும் இல்லை, முழுஎண்ணும் இல்லை.
  • 6:43 - 6:46
    அது இருக்கும் இடத்தை வைத்து முழுக்களின் பகுதியாக கருத்தில் கொள்ளலாம்.
  • 6:46 - 6:47
    கண்டிப்பாக அந்த எண் இவற்றில் எதுவும் இல்லை.
  • 6:47 - 6:49
    இது ஒரு மெய் எண் மற்றும் விகிதமுறு எண்.
  • 6:49 - 6:51
    இதைப் பற்றி இவ்வளவு தான் கூற முடியும்.
Title:
எண் தொகுதிகள் 2
Description:

எண் தொகுதிகள் எடுத்துக்காட்டுடன் விளக்கப்பட்டுள்ளது.

more » « less
Video Language:
English
Duration:
06:52
Karuppiah Senthil edited Tamil subtitles for Number Sets 2
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Number Sets 2
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Number Sets 2
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Number Sets 2
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Number Sets 2
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Number Sets 2
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Number Sets 2
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Number Sets 2
Show all

Tamil subtitles

Revisions