Return to Video

செயல்முறை வரிசை - அறிமுகம்

  • 0:00 - 0:02
    இந்த காணொளியில் நாம்
  • 0:02 - 0:05
    செயல் முறைகளின் வரிசைகள் குறித்து பார்க்கப்போகிறோம்.
  • 0:05 - 0:07
    இதை நன்றாக கவனிக்கவும்
  • 0:07 - 0:09
    ஏனெனில், கணிதத்தில் உள்ள
  • 0:09 - 0:11
    அனைத்தும் இந்த
  • 0:11 - 0:15
    செயல்முறை வரிசைகளின் அடிப்படையில் தான் உள்ளது.
  • 0:15 - 0:16
    நாம் கூறும், இந்த
  • 0:16 - 0:18
    செயல்முறை வரிசை என்றால் என்ன?
  • 0:18 - 0:19
    நான் ஒரு எடுத்துக்காட்டை தருகிறேன்.
  • 0:19 - 0:21
    இதன் கருத்து என்னவென்றால்,
  • 0:21 - 0:24
    இது கணிதத்தை பொருள் கொள்ளும் ஒரு வழி.
  • 0:24 - 0:26
    இப்பொழுது இந்த கணக்கை எடுத்துக்கொள்வோம்
  • 0:26 - 0:32
    7 கூட்டல் 3 பெருக்கல் 5.
  • 0:32 - 0:37
    இப்பொழுது செயல்முறை வரிசை ஏதும் இல்லாமல்,
  • 0:37 - 0:39
    இதை இரு வழிகளில் செய்யலாம்.
  • 0:39 - 0:41
    நாம் இதை இடது புறத்தில் இருந்து வலது புறம் படிக்கலாம்
  • 0:41 - 0:45
    முதலில் 7 + 3
  • 0:45 - 0:49
    முதலில் 7 + 3 பிறகு பெருக்கல் 5 எனலாம்.
  • 0:49 - 0:53
    7 + 3 = 10 ஆகும்.
  • 0:53 - 0:57
    பிறகு 5 ஆல் பெருக்க வேண்டும்.
  • 0:57 - 1:00
    10 * 5 = 50 ஆகும்.
  • 1:00 - 1:02
    நாம் செயல்முறை வரிசைகளை பின்பற்ற வில்லையெனில்,
  • 1:02 - 1:04
    இது ஒரு வழி.
  • 1:04 - 1:06
    நாம் இயற்கையாகவே இடதில் இருந்து வலது புறம் செல்லலாம்.
  • 1:06 - 1:07
    மற்றொரு வழியில் இதை,
  • 1:07 - 1:10
    பெருக்கல் முதலில் செய்து பின் கூட்டல் செய்யலாம்
  • 1:10 - 1:14
    இதை வேறு நிறத்தில் எழுதுகிறேன்
  • 1:14 - 1:18
    பெருக்கல் முதலில் செய்து, 3 * 5 = 15
  • 1:18 - 1:24
    பின் கூட்டல் செய்யலாம் 7 + 15
  • 1:24 - 1:33
    7 + 15 = 22 ஆகும்.
  • 1:33 - 1:36
    நாம் இந்த கணக்கை இரு வழிகளில் செய்திருக்கிறோம்.
  • 1:36 - 1:38
    இது இடதில் இருந்து வலம்,
  • 1:38 - 1:40
    முதலில் கூட்டல் பின் பெருக்கல்.
  • 1:40 - 1:42
    இது, முதலில் பெருக்கல் பின் கூட்டல்.
  • 1:42 - 1:44
    நமக்கு இரு வெவ்வேறு விடை கிடைத்தது.
  • 1:44 - 1:46
    இது கணக்கில் சரியானது அல்ல.
  • 1:46 - 1:50
    இது, நிலாவிற்கு செல்லும் ஒரு முயற்சியாக இருந்தால்,
  • 1:50 - 1:52
    இதை இருவர் வெவ்வேறு வகைகளில் கணக்கிடுவதால்,
  • 1:52 - 1:54
    அல்லது ஒரு கணினி ஒரு வகையிலும்,
  • 1:54 - 1:55
    மற்றொரு கணினி வேறு வகையிலும் கணக்கிடுவதால்,
  • 1:55 - 1:57
    செயற்கைகோள் தவறுதலாக செவ்வாய் கிரகத்திற்கு சென்று விடும்!!
  • 1:57 - 1:59
    இது ஒப்புக்கொள்ள முடியாதது.
  • 1:59 - 2:01
    அதனால் தான் நாம்
  • 2:01 - 2:03
    செயல்முறை வரிசையை ஒப்புக்கொண்டோம்.
  • 2:03 - 2:07
    இது அனைவரும் ஒப்புக்கொண்ட வழிமுறை.
  • 2:07 - 2:09
    எனவே, இந்த வரிசைகளின் படி,
  • 2:09 - 2:11
    முதலில் அடைப்புக்குறியை செய்ய வேண்டும்.
  • 2:11 - 2:13
    இதை இங்கு எழுதுகிறோம்.
  • 2:13 - 2:20
    முதலில், அடைப்புக்குறி, பிறகு அடுக்குகள்.
  • 2:20 - 2:21
    அடுக்குகள் என்றால் என்னவென்று தெரியாது என்றால்,
  • 2:21 - 2:25
    கவலைப் படாதீர்கள். இப்பொழுது
  • 2:25 - 2:28
    நாம் அடுக்குகளை பற்றி பார்க்கப்போவதில்லை.
  • 2:28 - 2:30
    எனவே, இப்பொழுது கவலை வேண்டாம்.
  • 2:30 - 2:32
    பிறகு பெருக்கல்,
  • 2:32 - 2:36
    பெருக்கல் என எழுதுகிறேன்,
  • 2:36 - 2:38
    அடுத்தது பெருக்கல் மற்றும் வகுத்தல்,
  • 2:38 - 2:41
    இவை இரண்டிற்கும் ஒரே முதன்மை தான்.
  • 2:41 - 2:48
    இறுதியாக கூட்டல் / கழித்தல் செய்யவேண்டும்
  • 2:48 - 2:50
    ஆக, செயல்முறை வரிசை என்றால் என்ன?
  • 2:50 - 2:51
    இதை குறிக்கிறேன்,
  • 2:51 - 2:56
    இது தான் அனைவரும் ஒப்புக்கொண்ட செயல்முறை வரிசை.
  • 2:56 - 2:58
    இந்த வரிசையில் நாம் கணக்கை அணுகினால்
  • 2:58 - 3:00
    நமக்கு சரியான விடை கிடைக்கும்.
  • 3:00 - 3:03
    இது என்ன கூறுகிறது?
  • 3:03 - 3:05
    இதை எந்த வழியில் செய்ய வேண்டும்?
  • 3:05 - 3:07
    இதற்கு அடைப்புக்குறி இல்லை,
  • 3:07 - 3:09
    அடைப்புக்குறி இவ்வாறு இருக்கும் -- ( )
  • 3:09 - 3:11
    எண்களை சுற்றி ஒரு வளைந்த கோடு - ( )
  • 3:11 - 3:12
    இங்கு அடைப்புக்குறி இல்லை.
  • 3:12 - 3:15
    நான் இது இருக்குமாறு சில எடுத்துகாட்டுகள் செய்கிறேன்.
  • 3:15 - 3:17
    இங்கு அடுக்குகள் இல்லை,
  • 3:17 - 3:19
    ஆனால், பெருக்கல் மற்றும் வகுத்தல் இருக்கிறது.
  • 3:19 - 3:21
    அதாவது, இங்கு ஒரு பெருக்கல் உள்ளது.
  • 3:21 - 3:23
    எனவே, செயல்முறை வரிசையின் படி,
  • 3:23 - 3:25
    முதலில் பெருக்கல் மற்றும் வகுத்தல்.
  • 3:25 - 3:28
    முதலில் பெருக்கல் செய்ய வேண்டும்,
  • 3:28 - 3:32
    இது பெருக்கல்,
  • 3:32 - 3:37
    பிறகு கூட்டல்/கழித்தல் செய்ய வேண்டும்.
  • 3:37 - 3:40
    3 * 5 என்பது 15 ஆகும்.
  • 3:40 - 3:43
    பிறகு ஏழை கூட்ட வேண்டும்.
  • 3:43 - 3:45
    இதை இங்கு செய்கிறேன்.
  • 3:45 - 3:48
    இங்கு கூட்டல் உள்ளது.
  • 3:48 - 3:50
    முதலில், பெருக்கல், 15 கிடைக்கும்.
  • 3:50 - 3:52
    பிறகு 7 ஐ கூட்ட வேண்டும், 22 கிடைக்கும்..
  • 3:52 - 3:56
    எனவே, செயல்முறை வரிசையின் படி,
  • 3:56 - 3:59
    இங்கு உள்ளது தான் சரியான விடை,
  • 3:59 - 4:02
    இவ்வாறு தான் செய்ய வேண்டும்.
  • 4:02 - 4:03
    அடுத்த எடுத்துக்காட்டை பார்க்கலாம்.
  • 4:03 - 4:08
    இதன் மூலம் உங்களுக்கு தெளிவாக புரியும்.
  • 4:08 - 4:10
    இந்த எடுத்துக்காட்டை நான் இளஞ்சிவப்பில் செய்கிறேன்
  • 4:10 - 4:18
    எனவே, 7 + 3,
  • 4:18 - 4:20
    ஒரு அடைப்புக்குறியை போடலாம்.
  • 4:20 - 4:31
    x 4 வகுத்தல் 2 - 5 x 6.
  • 4:31 - 4:32
    இங்கு அனைத்தும் உள்ளது,
  • 4:32 - 4:35
    ஆனால், நீங்கள் செயல்முறை வரிசையை பின்பற்றினால்,
  • 4:35 - 4:38
    இதை சுலபமாக எளிதாக்கலாம்.
  • 4:38 - 4:39
    உங்களுக்கு அதே விடை தான் கிடைக்கும்.
  • 4:39 - 4:42
    எனவே, செயல்முறை வரிசையை பின்பற்றலாம்.
  • 4:42 - 4:44
    முதலில் ( ) உள்ளதா என்று பார்க்கவும்.
  • 4:44 - 4:46
    இருக்கின்றது.
  • 4:46 - 4:49
    ( 7 + 3 ) உள்ளது.
  • 4:49 - 4:54
    எனவே, இதை முதலில் செய்ய வேண்டும்... 7+3 = 10
  • 4:54 - 4:55
    இதை நாம் செயல்முறை
  • 4:55 - 4:57
    வரிசைகளை கொண்டு எளிதாக்கலாம்.
  • 4:57 - 5:01
    இதை இங்கு எழுதுகிறேன்.
  • 5:01 - 5:04
    இதை மீண்டும் எழுத வேண்டாம்,
  • 5:04 - 5:07
    எனவே, இதை நகல் செய்கிறேன்.
  • 5:07 - 5:10
    எனவே, இது 10 பெருக்கல் மற்றவை ஆகும்.
  • 5:10 - 5:13
    நாம் முதலில் அடைப்புக்குறிகளை செய்திருக்கிறோம்.
  • 5:13 - 5:15
    இந்த கணக்கில் இப்பொழுது அடைப்புக்குறி இல்லை
  • 5:15 - 5:17
    பிறகு அடுக்குகளை பார்க்க வேண்டும்.
  • 5:17 - 5:18
    இங்கு அடுக்குகள் இல்லை.
  • 5:18 - 5:20
    அடுக்குகள் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள
  • 5:20 - 5:21
    வேண்டும் என்றால், அது இப்படி இருக்கும்.
  • 5:21 - 5:23
    ஏழு அடுக்கு 2.
  • 5:23 - 5:26
    மேலே இந்த சிறிய எண்களை காண முடியும்.
  • 5:26 - 5:27
    இங்கு அடுக்குகள் இல்லை,
  • 5:27 - 5:28
    எனவே, நாம் கவலை பட தேவை இல்லை.
  • 5:28 - 5:33
    பிறகு பெருக்கல் மற்றும் கழித்தலை பார்க்கலாம்.
  • 5:33 - 5:34
    இந்த கணக்கில் பெருக்கல்,
  • 5:34 - 5:39
    வகுத்தல் மற்றும் பெருக்கல் உள்ளது.
  • 5:39 - 5:44
    இதை எந்த வரிசையில் நாம் அணுகவேண்டும் என்று பார்க்கலாம்
  • 5:44 - 5:46
    அடிப்படையில் பெருக்கல் / வகுத்தல் ஒரே வரிசையில் இருந்தால்
  • 5:46 - 5:50
    நாம் இடது புறத்திலிருந்து வலது புறம் அணுகவேண்டும்
  • 5:50 - 5:54
    இந்த கணக்கில் நாம் முதலில் 4 * 10 பெருக்கிவிட்டு
  • 5:54 - 5:59
    பிறகு அதை 2 ஆல் வகுக்கவேண்டும்
  • 5:59 - 6:04
    அதன் பின் நாம் 5 * 6 செய்து பிறகு கழித்தல்,
  • 6:04 - 6:07
    இதை எவ்வாறு செய்யவேண்டும்.
  • 6:07 - 6:09
    முதலில் பெருக்கல்
  • 6:09 - 6:10
    முதலில் பெருக்கல்
  • 6:10 - 6:12
    நாம் இந்த பெருக்கல்களை ஒன்றாக செய்யலாம்,
  • 6:12 - 6:14
    ஏனெனில், இது மதிப்பை மாற்றாது.
  • 6:14 - 6:16
    ஆனால், நான் ஒவ்வொன்றாக செய்கிறேன்.
  • 6:16 - 6:20
    அடுத்த நிலையில் 10 x 4 செய்யலாம்.
  • 6:20 - 6:26
    10 * 4 = 40
  • 6:26 - 6:28
    பிறகு, 40 வகுத்தல் 2
  • 6:28 - 6:32
    இதை நகல் செய்கிறேன்.
  • 6:32 - 6:34
    இதை எளிதாக்க வேண்டும்.
  • 6:34 - 6:36
    பெருக்கல் மற்றும் வகுத்தல்
  • 6:36 - 6:38
    ஒரே நிலையில் உள்ளது,
  • 6:38 - 6:40
    எனவே, நாம் இடது புறத்தில் இருந்து வலது புறம் செல்கிறோம்.
  • 6:40 - 6:43
    இதான் நாம் 1/2 ஆல் பெருக்குவது எனலாம்,
  • 6:43 - 6:46
    ஆனால், இதை எளிதாக்க வேண்டும் என்றால்,
  • 6:46 - 6:49
    இடதில் இருந்து வலது செல்ல வேண்டும்.
  • 6:49 - 6:53
    ( 40 ÷ 2 ) - ( 5 * 6 )
  • 6:53 - 6:55
    வகுத்தல், இங்கு 1 உள்ளது.
  • 6:55 - 6:58
    இதனை நாம் செய்ய வேண்டும்.
  • 6:58 - 7:00
    இங்கு வகுத்தல் மற்றும் பெருக்கல் உள்ளது.
  • 7:00 - 7:01
    இவை ஒன்றாக இல்லை.
  • 7:01 - 7:04
    ஆகையால், இதை ஒரே நேரத்தில் செய்யலாம்.
  • 7:04 - 7:07
    மேலும், குறிப்பாக இதை கழித்தல் செய்வதற்கு முன் செய்ய வேண்டும்.
  • 7:07 - 7:12
    ஏனெனில் பெருக்கல்/வகுத்தலுக்கு பிறகு தான் கூட்டல்/கழித்தல்.
  • 7:12 - 7:13
    நாம் இதை சுற்றி அடைப்புக்குறி இடலாம்.
  • 7:13 - 7:16
    நாம் முதலில் இதனை செய்ய வேண்டும்
  • 7:16 - 7:18
    பிறகு கழித்தல் செய்ய வேண்டும்.
  • 7:18 - 7:22
    ஏனெனில் பெருக்கல்/கழித்தல் தான் முதன்மையானது.
  • 7:22 - 7:25
    40 ÷ 2 = 20 ஆகும்.
  • 7:25 - 7:27
    பிறகு கழித்தல்,
  • 7:27 - 7:31
    - 5 பெருக்கல் 6 என்பது 30 ஆகும்.
  • 7:31 - 7:36
    20 - 30 = -10 ஆகும்.
  • 7:36 - 7:39
    இது தான் சரியான செய்முறை.
  • 7:39 - 7:41
    நான் ஒன்றை மிகத் தெளிவாக கூறுகிறேன்.
  • 7:41 - 7:46
    ஒரே நிலையில் எண்கள் இருந்தால்,
  • 7:46 - 7:52
    அதாவது, 1 + 2 - 3 + 4 - 1,
  • 7:52 - 7:55
    கூட்டல் மற்றும் கழித்தல் இரண்டும் ஒரே நிலையில் உள்ளது.
  • 7:55 - 7:58
    எனவே, இடதில் இருந்து வலதிற்கு செல்ல வேண்டும்.
  • 7:58 - 8:01
    இதை 1 + 2 = 3 எனலாம்.
  • 8:01 - 8:06
    இது தான் 3 - 3 + 4 - 1 ஆகும்.
  • 8:06 - 8:10
    பிறகு 3 - 3 என்பது 0, +4, -1.
  • 8:10 - 8:13
    அல்லது இது 4 - 1 ஆகும்.
  • 8:13 - 8:17
    அதாவது 3 .
  • 8:17 - 8:21
    பெருக்கல், வகுத்தல் ஒரே வரிசையில் இருந்தால்
  • 8:21 - 8:23
    இதே போன்று தான்.
  • 8:23 - 8:29
    4 x 2 வகுத்தல் 3 பெருக்கல் 2 இருந்தால்,
  • 8:29 - 8:35
    4 x 2 என்பது 8 ஆகும், வகுத்தல் 3 பெருக்கல் 2,
  • 8:35 - 8:39
    8/3 என்பது, இது பின்னமாகும்.
  • 8:39 - 8:44
    இது 8/3 பெருக்கல் 2
  • 8:44 - 8:51
    8/3 x 2 என்பது 16/3 ஆகும்.
  • 8:51 - 8:53
    இவ்வாறு தான் இதனை செய்ய வேண்டும்,
  • 8:53 - 8:56
    முதலில் பெருக்கல் செய்து பிறகு 2 ஆல் வகுக்க கூடாது.
  • 8:56 - 9:00
    நீங்கள் செயல்முறை வரிசை இல்லாமல் எப்பொழுது செய்யலாம் என்றால்,
  • 9:00 - 9:03
    அனைத்தும் கூட்டலாகவோ அல்லது பெருக்கலாகவோ இருந்தால் மட்டுமே.
  • 9:03 - 9:09
    நம்மிடம் 1 + 5 + 7 + 3 + 2 இருந்தால்,
  • 9:09 - 9:11
    இதில் வரிசை முக்கியம் இல்லை.
  • 9:11 - 9:12
    நீங்கள் 2 + 3 செய்யலாம்,
  • 9:12 - 9:14
    நீங்கள் வலதில் இருந்து இடம் செல்லலாம்,
  • 9:14 - 9:15
    நீங்கள் இடதில் இருந்து வலம் செல்லலாம்.
  • 9:15 - 9:16
    நீங்கள் நடுவில் இருந்து கூட தொடங்கலாம்,
  • 9:16 - 9:18
    இது முற்றிலும் கூட்டலாக இருந்தால்,
  • 9:18 - 9:21
    அனைத்தும் பெருக்கலாக இருந்தாலும் இது பொருந்தும்.
  • 9:21 - 9:25
    இது 1 x 5 x 7 x 3 x 2 என்று இருந்தால்,
  • 9:25 - 9:28
    இதன் வரிசை முக்கியம் இல்லை.
  • 9:28 - 9:32
    இது பெருக்கல் அல்லது கூட்டலுக்கு மட்டும் தான்.
  • 9:32 - 9:35
    ஆனால் நமக்கு கழித்தல் அல்லது வகுத்தல் இருந்தால்
  • 9:35 - 9:39
    நாம் இடது புறத்திலிருந்து வலது புறம் செல்வது சிறந்தது.
Title:
செயல்முறை வரிசை - அறிமுகம்
Description:

செயல்முறை வரிசை - அறிமுகம்

more » « less
Video Language:
English
Duration:
09:40

Tamil subtitles

Revisions