Return to Video

Division 3: More long division and remainder examples

  • 0:00 - 0:02
    நிறையப் பயிற்சி பெறுவது எப்பொழுதுமே பயனில்லாமல் போனதில்லை.
  • 0:02 - 0:03
    எனவே, இந்த வீடியோவில் நான்
  • 0:03 - 0:08
    நீள் வகுத்தல் கணக்குகளின் பல அடிப்படை விஷயங்களை நான் இப்பொழுது செய்யப்போகிறேன்.
  • 0:08 - 0:17
    எனவே, இரண்டாயிரத்து இருநூற்று தொண்ணூற்று-இரண்டு வகுத்தல் நான்கு என்பது உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால்,
  • 0:17 - 0:20
    அதை ஏன் நீள்வகுத்தல் எனச் சொல்கிறார்கள் என்பது எனக்குச் சரியாகத் தெரியவில்லை,
  • 0:20 - 0:24
    மேலும், இதை நாம் சென்ற வீடியோவில் சிறிது பார்த்திருக்கிறோம்.
  • 0:24 - 0:26
    நான் அதை நீள் வகுத்தல் என அழைக்கவில்லை,
  • 0:26 - 0:28
    ஆனால் நான் நினைக்கிறேன், அதற்கு நீண்ட நேர ஆவதாலோ,
  • 0:28 - 0:32
    அல்லது அதைச் செய்வதற்கு அதிகமான காகிதம் தேவைப்படுவதாலோ அது அவ்வாறு அழைக்கப்படுகின்றது.
  • 0:32 - 0:35
    நீங்கள் அதைச் செய்யும்போது,
  • 0:35 - 0:37
    கணக்கில் வரக்கூடிய இந்த நீண்ட வாலைப் பெறுவது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
  • 0:37 - 0:40
    அவை அனைத்துமே, அதை நீள் வகுத்தல் என அழைப்பதற்கு
  • 0:40 - 0:41
    காரணமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
  • 0:41 - 0:45
    ஆனால், பெருக்கல் வாய்ப்பாட்டில் பத்தாம் வாய்ப்பாடு பத்து வரையிலுமோ அல்லது பன்னிரண்டாம் வாய்பாடு பன்னிரண்டு வரையிலுமோ
  • 0:45 - 0:47
    உங்களுக்குத் தெரிந்திருந்தால் எந்த ஒரு வகுத்தல் கணக்கையும் சுலபமாகச் செய்ய முடியும் என
  • 0:47 - 0:50
    நாம் சென்ற வீடியோவில் பார்த்தோம்.
  • 0:50 - 0:52
    ஆனால் ஒரு சிறிய ஆய்வினைப் போன்று, இது
  • 0:52 - 0:58
    இரண்டாயிரத்து இருநூற்று-இரண்டு வகுத்தல் நான்கு என்பதைப் போன்றது ஆகும்.
  • 0:58 - 0:59
    மேலும் இது உண்மையில் --
  • 0:59 - 1:01
    நீங்கள் அநேகமாக இதற்கு முன்பு இந்தக் குறிப்பினைப் பார்த்திருக்க மாட்டீர்கள் --
  • 1:01 - 1:07
    இரண்டாயிரத்து இருநூற்று-இரண்டு வகுத்தல் நான்கு என்பதைப் போன்றது ஆகும்.
  • 1:07 - 1:09
    இவை -- இது, இது, மற்றும் இது --
  • 1:09 - 1:13
    ஒரே மட்டத்தில் உள்ள சமான கூற்றுக்கள் ஆகும்.
  • 1:13 - 1:15
    மேலும், அது ஒரு பின்னத்தைப் போலக் காணப்படுகின்றது என நீங்கள் சொல்ல முடியும்.
  • 1:15 - 1:17
    ஏற்கனவே நீங்கள் பின்னத்தைப் பார்த்திருந்தால்.
  • 1:17 - 1:19
    அது என்ன என்பதை இது சரியாகக் கூறுகின்றது.
  • 1:19 - 1:20
    அது ஒரு பின்னம் ஆகும்.
  • 1:20 - 1:22
    ஆனால் எப்படியாவது, நான் இந்த அமைப்பில் நான் கவனம் செலுத்த வேண்டும்,
  • 1:22 - 1:27
    மேலும், வகுத்தலைக் குறிபிடுவதற்கான வேறு வழிகள் குறித்து எதிர்கால வீடியோக்களில் நாங்கள் சிந்திப்போம்.
  • 1:27 - 1:28
    நாம் இந்தக் கணக்கைச் செய்வோம்.
  • 1:28 - 1:31
    இரண்டில் நான்கு எத்தனை முறை செல்கின்றது?
  • 1:31 - 1:35
    இரண்டில் நான்கு செல்லாது, எனவே நாம் நகர்வோம் --
  • 1:35 - 1:35
    நான் வண்ணங்களை மாற்றிக்கொள்கிறேன் --
  • 1:35 - 1:37
    நாம் இருபத்து-இரண்டுக்கு நகர்வோம்.
  • 1:37 - 1:40
    இருபத்து-இரண்டில் நான்கு எத்தனை முறை செல்கின்றது?
  • 1:40 - 1:40
    நாம் பார்க்கலாம்.
  • 1:40 - 1:45
    நான்கு முறை ஐந்து சமம் இருபது ஆகும்.
  • 1:45 - 1:50
    நான்கு முறை ஆறு சமம் இருபத்து-நான்கு ஆகும்
  • 1:50 - 1:51
    எனவே ஆறு என்பது மிகவும் அதிகம் ஆகும்.
  • 1:51 - 1:55
    எனவே நான்கு ஆனது இருபத்து-இரண்டில் ஐந்து முறைகள் செல்கின்றது
  • 1:55 - 1:58
    ஐந்து முறை நான்கு சமம் இருபது ஆகும்.
  • 1:58 - 2:00
    இங்கு சிறிது மீதி வரும்,
  • 2:00 - 2:02
    அதன் பிறகு நாம் கழிக்கிறோம்.
  • 2:02 - 2:04
    இருபத்து-இரண்டு கழித்தல் இருபது எவ்வளவு?
  • 2:04 - 2:06
    அது இரண்டு ஆகும்.
  • 2:06 - 2:09
    பிறகு இந்த ஒன்பதை நீங்கள் கீழே இறக்குகிறீர்கள்.
  • 2:09 - 2:11
    அது சரியாக எதைக் குறிக்கின்றது என்பதை கடந்த வீடியோவில் நீங்கள் பார்த்தீர்கள், சரியா?
  • 2:11 - 2:14
    இந்த ஐந்தை நீங்கள் இங்கே எழுதினால், நீங்கள் அதை நூறுகள் இடத்தில் எழுதுகிறீர்கள் என்பதை கவனியுங்கள்.
  • 2:14 - 2:16
    எனவே இது உண்மையில் ஐநூறு ஆகும்.
  • 2:16 - 2:18
    ஆனால் இந்த வீடியோவில் நான் செயல்முறையில் மட்டுமே அதிக கவனம் செலுத்தப் போகிறேன்,
  • 2:18 - 2:20
    மேலும் நான் எண்களை எழுதுவதன் அடிப்படையில்
  • 2:20 - 2:22
    அது உண்மையில் எதைக் குறிக்கின்றது என்பதைப் பற்றி நீங்கள் அதிகமாக சிந்தித்துக் கொள்ளலாம்.
  • 2:22 - 2:24
    ஆனால், நிச்சயமாக, இந்தச் செயல்முறை
  • 2:24 - 2:26
    இந்த வீடியோவின் இறுதியில் தான் தெளிவாகத் தெரியப்போகின்றது.
  • 2:26 - 2:27
    நாம் ஒன்பதை கீழே இறக்குகிறோம்.
  • 2:27 - 2:30
    இருபத்து-ஒன்பதில் நான்கு எத்தனை முறை செல்கின்றது?
  • 2:30 - 2:31
    குறைந்தது ஆறு முறை செல்கின்றது.
  • 2:31 - 2:33
    நான்கு முறை ஏழு என்பது என்ன?
  • 2:33 - 2:35
    நான்கு முறை ஏழு என்பது இருபத்து-எட்டு ஆகும்.
  • 2:35 - 2:37
    எனவே அது அதில் குறைந்தபட்சம் ஏழு முறை செல்கின்றது.
  • 2:37 - 2:39
    நான்கு முறை எட்டு எவ்வளவு?
  • 2:39 - 2:42
    நான்கு முறை எட்டு என்பது முப்பத்து-இரண்டு ஆகும், எனவே இது அதில் எட்டு முறை செல்லும்.
  • 2:42 - 2:43
    எனவே அது அதற்குள் ஏழு முறை செல்கின்றது.
  • 2:43 - 2:46
    நான்கு ஆனது இருபத்து-ஒன்பதுக்குள் ஏழு முறை செல்கின்றது.
  • 2:46 - 2:50
    ஏழு முறை நான்கு சமம் இருபத்து-எட்டு ஆகும்.
  • 2:50 - 2:52
    இருபத்து-ஒன்பது கழித்தல் இருபத்து-எட்டு,
  • 2:52 - 2:56
    இந்தக் கணக்கில், இந்தப் படியில் நமக்குக் கிடைக்கும் மீதி, ஒன்று ஆகும்.
  • 2:56 - 3:00
    மற்றும் இப்பொழுது நாம் இந்த இரண்டை கீழே இறக்கப் போகிறோம்.
  • 3:00 - 3:04
    நாம் அதை கீழே இறக்கப் போகிறோம், உங்களுக்கு பன்னிரண்டு கிடைக்கின்றது.
  • 3:04 - 3:05
    பன்னிரண்டை நான்கால் வகுக்க முடியுமா?
  • 3:05 - 3:05
    அது மிகவும் சுலபமானது.
  • 3:05 - 3:07
    நான்கு முறை மூன்று என்பது பன்னிரண்டு ஆகும் .
  • 3:07 - 3:09
    நான்கு ஆனது பன்னிரண்டுக்குள் மூன்று முறை செல்கின்றது.
  • 3:09 - 3:11
    மூன்று முறை நான்கு என்பது பன்னிரண்டு ஆகும்.
  • 3:11 - 3:13
    பன்னிரண்டு கழித்தல் பன்னிரண்டு சமம் பூச்சியம் ஆகும்.
  • 3:13 - 3:15
    இங்கு மீதி இல்லை.
  • 3:15 - 3:20
    எனவே நான்கு ஆனது இரண்டாயிரத்து இருநூற்று தொண்ணூற்று-இரண்டுக்குள் மிகச் சரியாக ஐநூற்று எழுபத்து-மூன்று முறை செல்கின்றது.
  • 3:20 - 3:26
    இரண்டாயிரத்து இருநூற்று தொண்ணூற்று-இரண்டு வகுத்தல் நான்கு என்பது, சமம் ஐநூற்று எழுபத்து மூன்று என நாம் கூற முடியும்.
  • 3:26 - 3:32
    அல்லது, இங்கே கொடுக்கப்பட்டுள்ள இது சமம் ஐநூற்று எழுபத்து-மூன்று என நாம் கூற முடியும்.
  • 3:32 - 3:35
    நாம் மேலும் இரண்டு கணக்குகள் செய்வோம்.
  • 3:35 - 3:39
    மேலும் சில கணக்குகளை நாம் செய்வோம்.
  • 3:39 - 3:41
    நான் அதை சிவப்பு நிறத்தில் செய்வேன்.
  • 3:41 - 3:51
    ஆறாயிரத்து நானூற்று எழுபத்து-ஐந்துக்குள் ஏழு எத்தனை முறை செல்கின்றது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
  • 3:51 - 3:52
    அதை நீள் வகுத்தல் என்றுகூட நாம் அழைக்கலாம்.
  • 3:52 - 3:54
    ஏனெனில் இதை நீங்கள் இங்கு தெளிவாகவும், நீளமாகவும் எழுதுகிறீர்கள், நீங்கள் இந்தக் கோட்டைப் போடுங்கள்.
  • 3:54 - 3:56
    எனக்குத் தெரியாது.
  • 3:56 - 3:58
    அது ஏன் நீள் வகுத்தல் என அழைக்கப்படுகின்றது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
  • 3:58 - 4:01
    ஆறில் ஏழு பூச்சியம் முறை செல்கிறது என நீங்கள் கூறலாம்.
  • 4:01 - 4:04
    எனவே நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்.
  • 4:04 - 4:06
    பின்பு, நாம் அறுபத்து-நான்குக்குச் செல்கிறோம்.
  • 4:06 - 4:09
    அறுபத்து-நான்கில் ஏழு எத்தனை முறை செல்கின்றது?
  • 4:09 - 4:11
    நாம் பார்க்கலாம்.
  • 4:11 - 4:15
    ஏழு முறை ஏழு எவ்வளவு?
  • 4:15 - 4:17
    நன்று, அது மிகவும் சிறியதாக இருக்கும்.
  • 4:17 - 4:18
    அதைப்பற்றி நான் சிறிது சிந்திக்கிறேன்.
  • 4:18 - 4:21
    ஏழு முறை ஒன்பது என்பது அறுபத்து-மூன்று ஆகும்.
  • 4:21 - 4:21
    மிகவும் நெருங்கி வந்துவிட்டோம்.
  • 4:21 - 4:23
    ஏழு முறை பத்து என்பது மிகவும் பெரியதாக இருக்கும்.
  • 4:23 - 4:25
    ஏழு முறை பத்து என்பது எழுபது ஆகும்.
  • 4:25 - 4:26
    அது மிகவும் பெரியது.
  • 4:26 - 4:30
    ஏழு ஆனது அறுபத்து-நான்கில் ஒன்பது முறை செல்கின்றது.
  • 4:30 - 4:33
    ஒன்பது முறை ஏழு என்பது அறுபத்து-மூன்று ஆகும்.
  • 4:33 - 4:38
    அறுபத்து-நான்கு கழித்தல் அறுபத்து-மூன்று, இந்தப் படியில் நமக்குக் கிடைக்கும் மீதி, ஒன்று ஆகும்.
  • 4:38 - 4:41
    ஏழைக் கீழே இறக்கவும்.
  • 4:41 - 4:43
    பதினேழுக்குள் ஏழு எத்தனை முறை செல்கின்றது?
  • 4:43 - 4:45
    நன்று, ஏழு முறை இரண்டு என்பது பதினான்கு ஆகும்.
  • 4:45 - 4:47
    மேலும் ஏழு முறை மூன்று என்பது இருபத்து-ஒன்று ஆகும்.
  • 4:47 - 4:49
    எனவே மூன்று என்பது மிகவும் பெரியதாக உள்ளது.
  • 4:49 - 4:51
    எனவே ஏழு ஆனது பதினேழில் இரண்டு முறை செல்கின்றது.
  • 4:52 - 4:54
    இரண்டு முறை ஏழு என்பது பதினான்கு ஆகும்.
  • 4:54 - 4:58
    பதினேழு கழித்தல் பதினான்கு சமம் மூன்று ஆகும்.
  • 4:58 - 5:04
    இப்பொழுது நாம் ஐந்தை கீழே இறக்குகிறோம்.
  • 5:04 - 5:05
    மேலும் முப்பத்து-ஐந்தில் ஏழு செல்வது-
  • 5:05 - 5:08
    அது நம்முடைய ஏழாவது பெருக்கல் வாய்ப்பாட்டில் இருக்கின்றது—ஐந்து முறை.
  • 5:08 - 5:14
    ஐந்து முறை ஏழு என்பது முப்பத்து-ஐந்து ஆகும்.
  • 5:14 - 5:15
    சரியாகச் சொன்னீர்கள்.
  • 5:15 - 5:18
    மீதி பூச்சியம் ஆகும்.
  • 5:18 - 5:20
    இதுவரை நான் செய்த அனைத்து எடுத்துக்காட்டுகளிலும் மீதி எதுவுமில்லை.
  • 5:20 - 5:22
    இப்பொழுது நாம் மீதி கிடைக்கக்கூடிய ஒன்றைச் செய்வோம்.
  • 5:22 - 5:24
    அது மீதியைப் பெற்றுள்ளதை உறுதி செய்வதற்கு,
  • 5:24 - 5:25
    நான் கணக்கை உருவாக்குகிறேன்.
  • 5:25 - 5:27
    மீதியைப் பெற்றிருக்காத கணக்குகளை உருவாக்குவதை விட,
  • 5:27 - 5:30
    மீதியைப் பெற்றிருக்கக்கூடிய கணக்குகளை உருவாக்குவது மிகவும் சுலபமானதாகும்.
  • 5:30 - 5:37
    எடுத்துக்காட்டாக, நான் மூன்றை --
  • 5:37 - 5:40
    நான் அதை வகுக்கப் போகிறேன்
  • 5:40 - 5:47
    ஒன்று ஏழு மூன்று ஐந்து பூச்சியம் ஒன்பது இரண்டு, எனக் கொள்வோம்.
  • 5:47 - 5:49
    இது ஒரு அருமையான, கடினமான கணக்காகும்.
  • 5:49 - 5:51
    எனவே, நாம் இதைச் செய்ய முடிந்தால் அனைத்துக் கணக்குகளையும் நாம் செய்துவிடலாம்.
  • 5:51 - 5:54
    இது, ஒரு பதினேழு லட்சத்து முப்பத்தைந்து ஆயிரத்தி தொண்ணூற்று இரண்டு ஆகும்.
  • 5:54 - 5:57
    இதை நாம் மூன்றால் வகுக்கிறோம்.
  • 5:57 - 5:59
    எனவே மூன்று ஆனது செல்வது--
  • 5:59 - 6:00
    உண்மையில், இதில் மீதி இருக்குமா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.
  • 6:00 - 6:03
    எதிர்காலத்தில் வரும் வீடியோவில்
  • 6:03 - 6:06
    ஒரு எண் மூன்றால் வகுபடக் கூடியதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை நான் காண்பிப்பேன்.
  • 6:06 - 6:07
    உண்மையில், நாம் இப்பொழுதே அதைச் செய்ய முடியும்.
  • 6:07 - 6:09
    இந்த அனைத்து இலக்கங்களையும் நாம் கூட்டுவோம்.
  • 6:09 - 6:11
    ஒன்று கூட்டல் ஏழு சமம் எட்டு.
  • 6:11 - 6:13
    எட்டு கூட்டல் மூன்று சமம் பதினொன்று.
  • 6:13 - 6:16
    பதினொன்று கூட்டல் ஐந்து சமம் பதினாறு.
  • 6:16 - 6:20
    பதினாறு கூட்டல் ஒன்பது சமம் இருபத்து-ஐந்து.
  • 6:20 - 6:22
    இருபத்து-ஐந்து கூட்டல் இரண்டு சமம் இருபத்து-ஏழு.
  • 6:22 - 6:25
    எனவே உண்மையில், இந்த எண் மூன்றால் வகுபடும்.
  • 6:25 - 6:27
    அனைத்து இலக்கங்களையும் நீங்கள் கூட்டினால், உங்களுக்கு இருபத்து-ஏழு கிடைக்கின்றது.
  • 6:27 - 6:29
    பின்பு நீங்கள் அந்த இலக்கங்களை கூட்டிக்கொள்ள முடியும் --
  • 6:29 - 6:31
    இரண்டு கூட்டல் ஏழு சமம் ஒன்பது.
  • 6:31 - 6:32
    இது மூன்றால் வகுபடும்.
  • 6:32 - 6:34
    இது மூன்றுக்கு மட்டுமே பயன்படுத்த முடிகின்ற ஒரு உத்தி ஆகும்.
  • 6:34 - 6:36
    எனவே இந்த எண் உண்மையிலேயே மூன்றால் வகுபடுகின்றது.
  • 6:36 - 6:38
    எனவே அதை நான் சிறிது மாற்றிக்கொள்கிறேன்.
  • 6:38 - 6:41
    அது மூன்றால் வகுபடாது.
  • 6:41 - 6:45
    இதை நான் ஒன்று என மாற்றிக்கொள்கிறேன்.
  • 6:45 - 6:47
    இப்பொழுது இந்த எண்ணை மூன்றால் வகுக்க முடியாது.
  • 6:47 - 6:50
    நிச்சயமாக மீதி வரக்கூடிய ஒரு எண் மட்டுமே எனக்குத் தேவை.
  • 6:50 - 6:53
    அது எவ்வாறு தோன்றுகின்றது என்பதை நீங்கள் பாருங்கள்.
  • 6:53 - 6:55
    நாம் இதைச் செய்வோம்.
  • 6:55 - 6:57
    ஒன்றில் மூன்று பூச்சியம் முறை செல்கின்றது.
  • 6:57 - 6:58
    எனவே நாம் சற்று முன்னோக்கி நகர்வோம்.
  • 6:58 - 6:59
    இங்கு நீங்கள் ஒரு பூச்சியம் எழுதிக்கொண்டு.
  • 6:59 - 7:01
    அதைப் பெருக்கிக் கொள்ளலாம்.
  • 7:01 - 7:03
    ஆனால், இது எனக்கு சற்றுக் குழப்பமாக இருக்கின்றது.
  • 7:03 - 7:04
    எனவே, நாம் ஒரு இலக்கம் வலது பக்கமாக நகர்கிறோம்.
  • 7:04 - 7:07
    பதினேழில் மூன்று எத்தனை முறை செல்கின்றது?
  • 7:07 - 7:11
    நன்று, மூன்று முறை ஐந்து சமம் பதினைந்து ஆகும்.
  • 7:11 - 7:14
    மூன்று முறை ஆறு சமம் பதினெட்டு ஆகும், அது மிகவும் பெரிதாக இருக்கும்.
  • 7:14 - 7:18
    எனவே மூன்று ஆனது பதினேழுக்குள் இங்கு ஐந்து முறை செல்கின்றது.
  • 7:18 - 7:21
    ஐந்து முறை மூன்று சமம் பதினைந்து ஆகும்.
  • 7:21 - 7:22
    நாம் கழிக்கிறோம்.
  • 7:22 - 7:27
    பதினேழு கழித்தல் பதினைந்து சமம் இரண்டு ஆகும்.
  • 7:27 - 7:31
    இப்பொழுது இந்த மூன்றை நாம் கீழே இறக்குகின்றோம்.
  • 7:31 - 7:33
    இருபத்து-மூன்றில், மூன்று எத்தனை முறை செல்கின்றது?
  • 7:33 - 7:37
    நல்லது, மூன்று முறை ஏழு என்பது இருபத்து-ஒன்று ஆகும்.
  • 7:37 - 7:38
    மூன்று முறை எட்டு என்பது மிகவும் பெரியதாக இருக்கும்.
  • 7:38 - 7:40
    அது இருபத்து-நான்கு ஆகும்.
  • 7:40 - 7:44
    எனவே, மூன்று ஆனது இருபத்து-மூன்றில் ஏழு முறை செல்கின்றது.
  • 7:44 - 7:47
    ஏழு முறை மூன்று என்பது இருபத்து-ஒன்று ஆகும்.
  • 7:47 - 7:48
    பின்பு நாம் கழிக்கிறோம்.
  • 7:48 - 7:52
    இருபத்து-மூன்று கழித்தல் இருபத்து-ஒன்று சமம் இரண்டு ஆகும்.
  • 7:52 - 7:53
    இப்பொழுது அடுத்த எண்ணை நாம் கீழே இறக்குகிறோம்.
  • 7:53 - 7:55
    ஐந்தை நாம் கீழே இறக்குகிறோம்.
  • 7:55 - 7:57
    அது ஏன் நீள் வகுத்தல் என அழைக்கப்படுகின்றது என்பது இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நான் நினைக்கிறேன்.
  • 7:57 - 8:00
    இந்த ஐந்தை நாம் கீழே இறக்குகிறோம்.
  • 8:00 - 8:02
    மூன்று ஆனது இருபத்து-ஐந்தில் எத்தனை முறை செல்கின்றது?
  • 8:02 - 8:05
    மூன்று முறை எட்டு என்பது மிகவும் நெருங்கிய எண்ணை உங்களுக்குக் கொடுக்கின்றது.
  • 8:05 - 8:06
    மேலும், மூன்று முறை ஒன்பது என்பது மிகவும் பெரியதாக உள்ளது.
  • 8:06 - 8:08
    எனவே அது அதற்குள் எட்டு முறை செல்கின்றது.
  • 8:08 - 8:10
    எட்டு முறை மூன்று என்பது இருபத்து-நான்கு ஆகும்.
  • 8:10 - 8:12
    நான் இந்த இடத்தை விட்டுச் செல்லப்போகிறேன்.
  • 8:12 - 8:14
    கழித்தால், உங்களுக்கு ஒன்று கிடைக்கின்றது.
  • 8:14 - 8:17
    இருபத்து-ஐந்து கழித்தல் இருபத்து-நான்கு சமம் ஒன்று ஆகும்.
  • 8:17 - 8:20
    இப்பொழுது இந்த பூச்சியத்தை நாம் கீழே இறக்க முடியும்.
  • 8:20 - 8:23
    இந்தப் பூச்சியத்தை நீங்கள் கீழே கொண்டு வருகின்றீர்கள், இதைப் போன்று.
  • 8:23 - 8:25
    மூன்று ஆனது பத்தில் எத்தனை முறை செல்கின்றது?
  • 8:25 - 8:26
    அது மிகவும் சுலபமானது.
  • 8:26 - 8:27
    அது அதில் மூன்று முறை செல்கின்றது.
  • 8:27 - 8:28
    மூன்று முறை மூன்று என்பது ஒன்பது ஆகும்.
  • 8:28 - 8:30
    நாம் பெறும் எண் கிட்டத்தட்ட பத்துக்கு நெருக்கத்தில் உள்ளது.
  • 8:30 - 8:33
    மூன்று முறை மூன்று என்பது ஒன்பது ஆகும்.
  • 8:33 - 8:34
    பத்து கழித்தல் ஒன்பது--
  • 8:34 - 8:36
    இங்கு நான் சிறிது மேலேயும் கீழேயும் நகர்த்தப் போகிறேன் --
  • 8:36 - 8:38
    பத்து கழித்தல் ஒன்பது சமம் ஒன்று ஆகும்,
  • 8:38 - 8:40
    பின்பு நாம் அடுத்த எண்ணை கீழிறக்க முடியும்.
  • 8:40 - 8:41
    நான் இங்கு வண்ணங்களைப் பயன்படுத்தவில்லை.
  • 8:41 - 8:45
    அந்த ஒன்பதை நான் கீழே இறக்குகிறேன்.
  • 8:45 - 8:47
    மூன்று ஆனது பத்தொன்பதில் எத்தனை முறை செல்கின்றது?
  • 8:47 - 8:49
    நன்று, ஆறு என்பது நம்முடைய எண்ணுக்கு நெருக்கமாக உள்ளது.
  • 8:49 - 8:50
    அது நமக்கு பதினெட்டு என்பதைக் கொடுக்கின்றது.
  • 8:50 - 8:52
    எனவே, மூன்று முறை ஆறு.
  • 8:52 - 8:54
    மூன்று ஆனது பத்தொன்பதில் ஆறு முறைகள் செல்கின்றது.
  • 8:54 - 8:56
    ஆறு முறை மூன்று -- நான் கீழே நகர்த்துகிறேன்.
  • 8:56 - 9:00
    ஆறு முறை மூன்று என்பது பதினெட்டு ஆகும்.
  • 9:00 - 9:02
    பத்தொன்பது கழித்தல் பதினெட்டு -- இங்கும் கூட நாம் அதைக் கழிக்கிறோம்.
  • 9:02 - 9:04
    பத்தொன்பது கழித்தல் பதினெட்டு சமம் ஒன்று, மேலும் நாம் கிட்டத்தட்ட முடித்துவிட்டோம்.
  • 9:04 - 9:06
    நான் திரும்பவும் இளஞ்சிவப்பு நிறத்துக்கு வருகிறேன்.
  • 9:06 - 9:10
    இந்த ஒன்றை நாம் அங்கு கீழே இறக்குகிறோம்.
  • 9:10 - 9:12
    மூன்று ஆனது பதினொன்றில் எத்தனை முறை செல்கின்றது?
  • 9:12 - 9:16
    நன்று, மூன்று முறை செல்கின்றது, ஏனெனில் மூன்று முறை நான்கு என்பது மிகவும் பெரிதாகும்.
  • 9:16 - 9:17
    மூன்று முறை நான்கு சமம் பன்னிரண்டு ஆகும், இது மிகவும் பெரியது.
  • 9:17 - 9:19
    எனவே அது அதில் மூன்று முறை செல்கின்றது.
  • 9:19 - 9:22
    மூன்று ஆனது பதினொன்றில் மூன்று முறை செல்கின்றது.
  • 9:22 - 9:26
    மூன்று முறை மூன்று என்பது ஒன்பது ஆகும்.
  • 9:26 - 9:31
    பின்பு நாம் கழித்தால், நமக்கு இரண்டு கிடைக்கின்றது.
  • 9:31 - 9:33
    இனி கீழே இறக்குவதற்கு எதுவும் இல்லை.
  • 9:33 - 9:35
    சரியா? நாம் பார்க்க்கும்போது, இங்கே கீழே இறக்குவதற்கு எதுவுமில்லை.
  • 9:35 - 9:36
    நாம் முடித்துவிட்டோம்!
  • 9:36 - 9:38
    எனவே, இந்த முழுக் கணக்கையும் செய்து முடித்த பிறகு,
  • 9:38 - 9:40
    நமக்கு இரண்டு மீதியாக கிடைக்கின்றது.
  • 9:40 - 9:45
    எனவே விடை, மூன்று ஆனது ஒரு பதினேழு லட்சத்து முப்பத்து-ஐந்தாயிரத்து தொண்ணூற்று-ஒன்றில் --
  • 9:45 - 9:53
    இது ஐநூற்று எழுபத்து-எட்டாயிரத்து முன்னூற்று அறுபத்து-மூன்று முறை செல்கின்றது, மற்றும் மீதி இரண்டு ஆகும்.
  • 9:53 - 9:57
    மீதி இரண்டு என்பது, கடைசியாக கீழே நமக்குக் கிடைப்பது ஆகும்.
  • 9:57 - 9:58
    நிச்சயமாக நீங்கள் இப்பொழுது
  • 9:58 - 10:01
    எந்த ஒரு வகுத்தல் கணக்கையும் எளிமையாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றிருப்பீர்கள்.
  • 10:01 - 10:03
    நீங்களும் கூட, இந்தப் பயிற்சியின் வாயிலாக,
  • 10:03 - 10:06
    அது ஏன் நீள் வகுத்தல் என அழைக்கப்படுகின்றது என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள்.
Title:
Division 3: More long division and remainder examples
Description:

More long division and remainder examples

more » « less
Video Language:
English
Duration:
10:07

Tamil subtitles

Revisions