0:00:00.165,0:00:01.946 நிறையப் பயிற்சி பெறுவது எப்பொழுதுமே பயனில்லாமல் போனதில்லை. 0:00:01.961,0:00:02.845 எனவே, இந்த வீடியோவில் நான் 0:00:02.845,0:00:07.540 நீள் வகுத்தல் கணக்குகளின் பல அடிப்படை விஷயங்களை நான் இப்பொழுது செய்யப்போகிறேன். 0:00:07.540,0:00:17.040 எனவே, இரண்டாயிரத்து இருநூற்று தொண்ணூற்று-இரண்டு வகுத்தல் நான்கு என்பது உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், 0:00:17.050,0:00:20.280 அதை ஏன் நீள்வகுத்தல் எனச் சொல்கிறார்கள் என்பது எனக்குச் சரியாகத் தெரியவில்லை, 0:00:20.280,0:00:23.580 மேலும், இதை நாம் சென்ற வீடியோவில் சிறிது பார்த்திருக்கிறோம். 0:00:23.580,0:00:25.548 நான் அதை நீள் வகுத்தல் என அழைக்கவில்லை, 0:00:25.548,0:00:28.486 ஆனால் நான் நினைக்கிறேன், அதற்கு நீண்ட நேர ஆவதாலோ, 0:00:28.486,0:00:31.890 அல்லது அதைச் செய்வதற்கு அதிகமான காகிதம் தேவைப்படுவதாலோ அது அவ்வாறு அழைக்கப்படுகின்றது. 0:00:31.890,0:00:35.102 நீங்கள் அதைச் செய்யும்போது, 0:00:35.102,0:00:37.270 கணக்கில் வரக்கூடிய இந்த நீண்ட வாலைப் பெறுவது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். 0:00:37.280,0:00:39.663 அவை அனைத்துமே, அதை நீள் வகுத்தல் என அழைப்பதற்கு 0:00:39.663,0:00:41.060 காரணமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். 0:00:41.060,0:00:44.588 ஆனால், பெருக்கல் வாய்ப்பாட்டில் பத்தாம் வாய்ப்பாடு பத்து வரையிலுமோ அல்லது பன்னிரண்டாம் வாய்பாடு பன்னிரண்டு வரையிலுமோ 0:00:44.588,0:00:46.746 உங்களுக்குத் தெரிந்திருந்தால் எந்த ஒரு வகுத்தல் கணக்கையும் சுலபமாகச் செய்ய முடியும் என 0:00:46.746,0:00:49.810 நாம் சென்ற வீடியோவில் பார்த்தோம். 0:00:49.820,0:00:52.034 ஆனால் ஒரு சிறிய ஆய்வினைப் போன்று, இது 0:00:52.034,0:00:57.854 இரண்டாயிரத்து இருநூற்று-இரண்டு வகுத்தல் நான்கு என்பதைப் போன்றது ஆகும். 0:00:57.854,0:00:59.368 மேலும் இது உண்மையில் -- 0:00:59.368,0:01:01.385 நீங்கள் அநேகமாக இதற்கு முன்பு இந்தக் குறிப்பினைப் பார்த்திருக்க மாட்டீர்கள் -- 0:01:01.385,0:01:06.644 இரண்டாயிரத்து இருநூற்று-இரண்டு வகுத்தல் நான்கு என்பதைப் போன்றது ஆகும். 0:01:06.644,0:01:09.006 இவை -- இது, இது, மற்றும் இது -- 0:01:09.006,0:01:12.780 ஒரே மட்டத்தில் உள்ள சமான கூற்றுக்கள் ஆகும். 0:01:12.790,0:01:14.930 மேலும், அது ஒரு பின்னத்தைப் போலக் காணப்படுகின்றது என நீங்கள் சொல்ல முடியும். 0:01:14.930,0:01:17.040 ஏற்கனவே நீங்கள் பின்னத்தைப் பார்த்திருந்தால். 0:01:17.040,0:01:18.550 அது என்ன என்பதை இது சரியாகக் கூறுகின்றது. 0:01:18.560,0:01:20.060 அது ஒரு பின்னம் ஆகும். 0:01:20.060,0:01:21.865 ஆனால் எப்படியாவது, நான் இந்த அமைப்பில் நான் கவனம் செலுத்த வேண்டும், 0:01:21.865,0:01:26.870 மேலும், வகுத்தலைக் குறிபிடுவதற்கான வேறு வழிகள் குறித்து எதிர்கால வீடியோக்களில் நாங்கள் சிந்திப்போம். 0:01:26.870,0:01:28.460 நாம் இந்தக் கணக்கைச் செய்வோம். 0:01:28.460,0:01:31.210 இரண்டில் நான்கு எத்தனை முறை செல்கின்றது? 0:01:31.210,0:01:34.580 இரண்டில் நான்கு செல்லாது, எனவே நாம் நகர்வோம் -- 0:01:34.590,0:01:35.320 நான் வண்ணங்களை மாற்றிக்கொள்கிறேன் -- 0:01:35.320,0:01:37.250 நாம் இருபத்து-இரண்டுக்கு நகர்வோம். 0:01:37.260,0:01:40.100 இருபத்து-இரண்டில் நான்கு எத்தனை முறை செல்கின்றது? 0:01:40.100,0:01:40.380 நாம் பார்க்கலாம். 0:01:40.390,0:01:45.140 நான்கு முறை ஐந்து சமம் இருபது ஆகும். 0:01:45.140,0:01:49.590 நான்கு முறை ஆறு சமம் இருபத்து-நான்கு ஆகும் 0:01:49.590,0:01:51.430 எனவே ஆறு என்பது மிகவும் அதிகம் ஆகும். 0:01:51.430,0:01:55.405 எனவே நான்கு ஆனது இருபத்து-இரண்டில் ஐந்து முறைகள் செல்கின்றது 0:01:55.405,0:01:58.050 ஐந்து முறை நான்கு சமம் இருபது ஆகும். 0:01:58.059,0:01:59.908 இங்கு சிறிது மீதி வரும், 0:01:59.908,0:02:02.166 அதன் பிறகு நாம் கழிக்கிறோம். 0:02:02.166,0:02:03.843 இருபத்து-இரண்டு கழித்தல் இருபது எவ்வளவு? 0:02:03.843,0:02:05.692 அது இரண்டு ஆகும். 0:02:05.692,0:02:08.710 பிறகு இந்த ஒன்பதை நீங்கள் கீழே இறக்குகிறீர்கள். 0:02:08.720,0:02:11.148 அது சரியாக எதைக் குறிக்கின்றது என்பதை கடந்த வீடியோவில் நீங்கள் பார்த்தீர்கள், சரியா? 0:02:11.148,0:02:13.706 இந்த ஐந்தை நீங்கள் இங்கே எழுதினால், நீங்கள் அதை நூறுகள் இடத்தில் எழுதுகிறீர்கள் என்பதை கவனியுங்கள். 0:02:13.706,0:02:15.595 எனவே இது உண்மையில் ஐநூறு ஆகும். 0:02:15.595,0:02:17.856 ஆனால் இந்த வீடியோவில் நான் செயல்முறையில் மட்டுமே அதிக கவனம் செலுத்தப் போகிறேன், 0:02:17.856,0:02:19.860 மேலும் நான் எண்களை எழுதுவதன் அடிப்படையில் 0:02:19.870,0:02:21.650 அது உண்மையில் எதைக் குறிக்கின்றது என்பதைப் பற்றி நீங்கள் அதிகமாக சிந்தித்துக் கொள்ளலாம். 0:02:21.650,0:02:24.358 ஆனால், நிச்சயமாக, இந்தச் செயல்முறை 0:02:24.358,0:02:25.780 இந்த வீடியோவின் இறுதியில் தான் தெளிவாகத் தெரியப்போகின்றது. 0:02:25.780,0:02:27.030 நாம் ஒன்பதை கீழே இறக்குகிறோம். 0:02:27.030,0:02:29.960 இருபத்து-ஒன்பதில் நான்கு எத்தனை முறை செல்கின்றது? 0:02:29.970,0:02:31.370 குறைந்தது ஆறு முறை செல்கின்றது. 0:02:31.380,0:02:32.740 நான்கு முறை ஏழு என்பது என்ன? 0:02:32.750,0:02:34.840 நான்கு முறை ஏழு என்பது இருபத்து-எட்டு ஆகும். 0:02:34.840,0:02:36.610 எனவே அது அதில் குறைந்தபட்சம் ஏழு முறை செல்கின்றது. 0:02:36.610,0:02:38.760 நான்கு முறை எட்டு எவ்வளவு? 0:02:38.770,0:02:41.770 நான்கு முறை எட்டு என்பது முப்பத்து-இரண்டு ஆகும், எனவே இது அதில் எட்டு முறை செல்லும். 0:02:41.770,0:02:43.210 எனவே அது அதற்குள் ஏழு முறை செல்கின்றது. 0:02:43.210,0:02:46.390 நான்கு ஆனது இருபத்து-ஒன்பதுக்குள் ஏழு முறை செல்கின்றது. 0:02:46.400,0:02:49.700 ஏழு முறை நான்கு சமம் இருபத்து-எட்டு ஆகும். 0:02:49.710,0:02:51.684 இருபத்து-ஒன்பது கழித்தல் இருபத்து-எட்டு, 0:02:51.684,0:02:56.370 இந்தக் கணக்கில், இந்தப் படியில் நமக்குக் கிடைக்கும் மீதி, ஒன்று ஆகும். 0:02:56.370,0:02:59.520 மற்றும் இப்பொழுது நாம் இந்த இரண்டை கீழே இறக்கப் போகிறோம். 0:02:59.530,0:03:03.760 நாம் அதை கீழே இறக்கப் போகிறோம், உங்களுக்கு பன்னிரண்டு கிடைக்கின்றது. 0:03:03.770,0:03:04.750 பன்னிரண்டை நான்கால் வகுக்க முடியுமா? 0:03:04.750,0:03:05.170 அது மிகவும் சுலபமானது. 0:03:05.180,0:03:06.680 நான்கு முறை மூன்று என்பது பன்னிரண்டு ஆகும் . 0:03:06.680,0:03:09.080 நான்கு ஆனது பன்னிரண்டுக்குள் மூன்று முறை செல்கின்றது. 0:03:09.080,0:03:11.390 மூன்று முறை நான்கு என்பது பன்னிரண்டு ஆகும். 0:03:11.400,0:03:13.360 பன்னிரண்டு கழித்தல் பன்னிரண்டு சமம் பூச்சியம் ஆகும். 0:03:13.360,0:03:14.730 இங்கு மீதி இல்லை. 0:03:14.740,0:03:20.390 எனவே நான்கு ஆனது இரண்டாயிரத்து இருநூற்று தொண்ணூற்று-இரண்டுக்குள் மிகச் சரியாக ஐநூற்று எழுபத்து-மூன்று முறை செல்கின்றது. 0:03:20.400,0:03:26.500 இரண்டாயிரத்து இருநூற்று தொண்ணூற்று-இரண்டு வகுத்தல் நான்கு என்பது, சமம் ஐநூற்று எழுபத்து மூன்று என நாம் கூற முடியும். 0:03:26.500,0:03:32.240 அல்லது, இங்கே கொடுக்கப்பட்டுள்ள இது சமம் ஐநூற்று எழுபத்து-மூன்று என நாம் கூற முடியும். 0:03:32.250,0:03:34.680 நாம் மேலும் இரண்டு கணக்குகள் செய்வோம். 0:03:34.680,0:03:39.080 மேலும் சில கணக்குகளை நாம் செய்வோம். 0:03:39.090,0:03:40.960 நான் அதை சிவப்பு நிறத்தில் செய்வேன். 0:03:40.960,0:03:50.800 ஆறாயிரத்து நானூற்று எழுபத்து-ஐந்துக்குள் ஏழு எத்தனை முறை செல்கின்றது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். 0:03:50.810,0:03:52.200 அதை நீள் வகுத்தல் என்றுகூட நாம் அழைக்கலாம். 0:03:52.200,0:03:54.350 ஏனெனில் இதை நீங்கள் இங்கு தெளிவாகவும், நீளமாகவும் எழுதுகிறீர்கள், நீங்கள் இந்தக் கோட்டைப் போடுங்கள். 0:03:54.360,0:03:55.610 எனக்குத் தெரியாது. 0:03:55.610,0:03:58.160 அது ஏன் நீள் வகுத்தல் என அழைக்கப்படுகின்றது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. 0:03:58.160,0:04:00.760 ஆறில் ஏழு பூச்சியம் முறை செல்கிறது என நீங்கள் கூறலாம். 0:04:00.770,0:04:03.660 எனவே நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். 0:04:03.660,0:04:06.050 பின்பு, நாம் அறுபத்து-நான்குக்குச் செல்கிறோம். 0:04:06.060,0:04:09.160 அறுபத்து-நான்கில் ஏழு எத்தனை முறை செல்கின்றது? 0:04:09.160,0:04:11.040 நாம் பார்க்கலாம். 0:04:11.050,0:04:15.300 ஏழு முறை ஏழு எவ்வளவு? 0:04:15.300,0:04:16.800 நன்று, அது மிகவும் சிறியதாக இருக்கும். 0:04:16.800,0:04:18.060 அதைப்பற்றி நான் சிறிது சிந்திக்கிறேன். 0:04:18.060,0:04:20.610 ஏழு முறை ஒன்பது என்பது அறுபத்து-மூன்று ஆகும். 0:04:20.620,0:04:21.390 மிகவும் நெருங்கி வந்துவிட்டோம். 0:04:21.390,0:04:23.350 ஏழு முறை பத்து என்பது மிகவும் பெரியதாக இருக்கும். 0:04:23.360,0:04:25.126 ஏழு முறை பத்து என்பது எழுபது ஆகும். 0:04:25.126,0:04:25.982 அது மிகவும் பெரியது. 0:04:25.982,0:04:29.681 ஏழு ஆனது அறுபத்து-நான்கில் ஒன்பது முறை செல்கின்றது. 0:04:29.711,0:04:32.680 ஒன்பது முறை ஏழு என்பது அறுபத்து-மூன்று ஆகும். 0:04:32.690,0:04:38.040 அறுபத்து-நான்கு கழித்தல் அறுபத்து-மூன்று, இந்தப் படியில் நமக்குக் கிடைக்கும் மீதி, ஒன்று ஆகும். 0:04:38.050,0:04:41.230 ஏழைக் கீழே இறக்கவும். 0:04:41.240,0:04:43.110 பதினேழுக்குள் ஏழு எத்தனை முறை செல்கின்றது? 0:04:43.120,0:04:45.240 நன்று, ஏழு முறை இரண்டு என்பது பதினான்கு ஆகும். 0:04:45.240,0:04:47.000 மேலும் ஏழு முறை மூன்று என்பது இருபத்து-ஒன்று ஆகும். 0:04:47.000,0:04:48.590 எனவே மூன்று என்பது மிகவும் பெரியதாக உள்ளது. 0:04:48.600,0:04:51.490 எனவே ஏழு ஆனது பதினேழில் இரண்டு முறை செல்கின்றது. 0:04:51.500,0:04:54.350 இரண்டு முறை ஏழு என்பது பதினான்கு ஆகும். 0:04:54.350,0:04:57.610 பதினேழு கழித்தல் பதினான்கு சமம் மூன்று ஆகும். 0:04:57.620,0:05:03.527 இப்பொழுது நாம் ஐந்தை கீழே இறக்குகிறோம். 0:05:03.527,0:05:05.336 மேலும் முப்பத்து-ஐந்தில் ஏழு செல்வது- 0:05:05.350,0:05:07.810 அது நம்முடைய ஏழாவது பெருக்கல் வாய்ப்பாட்டில் இருக்கின்றது—ஐந்து முறை. 0:05:07.810,0:05:14.093 ஐந்து முறை ஏழு என்பது முப்பத்து-ஐந்து ஆகும். 0:05:14.093,0:05:15.465 சரியாகச் சொன்னீர்கள். 0:05:15.465,0:05:17.990 மீதி பூச்சியம் ஆகும். 0:05:17.990,0:05:20.120 இதுவரை நான் செய்த அனைத்து எடுத்துக்காட்டுகளிலும் மீதி எதுவுமில்லை. 0:05:20.120,0:05:22.230 இப்பொழுது நாம் மீதி கிடைக்கக்கூடிய ஒன்றைச் செய்வோம். 0:05:22.240,0:05:23.694 அது மீதியைப் பெற்றுள்ளதை உறுதி செய்வதற்கு, 0:05:23.694,0:05:24.860 நான் கணக்கை உருவாக்குகிறேன். 0:05:24.870,0:05:27.300 மீதியைப் பெற்றிருக்காத கணக்குகளை உருவாக்குவதை விட, 0:05:27.310,0:05:29.510 மீதியைப் பெற்றிருக்கக்கூடிய கணக்குகளை உருவாக்குவது மிகவும் சுலபமானதாகும். 0:05:29.510,0:05:37.016 எடுத்துக்காட்டாக, நான் மூன்றை -- 0:05:37.016,0:05:40.343 நான் அதை வகுக்கப் போகிறேன் 0:05:40.343,0:05:47.365 ஒன்று ஏழு மூன்று ஐந்து பூச்சியம் ஒன்பது இரண்டு, எனக் கொள்வோம். 0:05:47.365,0:05:49.480 இது ஒரு அருமையான, கடினமான கணக்காகும். 0:05:49.490,0:05:50.940 எனவே, நாம் இதைச் செய்ய முடிந்தால் அனைத்துக் கணக்குகளையும் நாம் செய்துவிடலாம். 0:05:50.940,0:05:54.210 இது, ஒரு பதினேழு லட்சத்து முப்பத்தைந்து ஆயிரத்தி தொண்ணூற்று இரண்டு ஆகும். 0:05:54.220,0:05:56.514 இதை நாம் மூன்றால் வகுக்கிறோம். 0:05:56.529,0:05:58.721 எனவே மூன்று ஆனது செல்வது-- 0:05:58.721,0:06:00.390 உண்மையில், இதில் மீதி இருக்குமா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. 0:06:00.390,0:06:03.136 எதிர்காலத்தில் வரும் வீடியோவில் 0:06:03.136,0:06:06.260 ஒரு எண் மூன்றால் வகுபடக் கூடியதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை நான் காண்பிப்பேன். 0:06:06.260,0:06:07.150 உண்மையில், நாம் இப்பொழுதே அதைச் செய்ய முடியும். 0:06:07.160,0:06:08.780 இந்த அனைத்து இலக்கங்களையும் நாம் கூட்டுவோம். 0:06:08.790,0:06:10.920 ஒன்று கூட்டல் ஏழு சமம் எட்டு. 0:06:10.930,0:06:13.180 எட்டு கூட்டல் மூன்று சமம் பதினொன்று. 0:06:13.180,0:06:15.680 பதினொன்று கூட்டல் ஐந்து சமம் பதினாறு. 0:06:15.680,0:06:20.240 பதினாறு கூட்டல் ஒன்பது சமம் இருபத்து-ஐந்து. 0:06:20.250,0:06:22.190 இருபத்து-ஐந்து கூட்டல் இரண்டு சமம் இருபத்து-ஏழு. 0:06:22.190,0:06:24.660 எனவே உண்மையில், இந்த எண் மூன்றால் வகுபடும். 0:06:24.670,0:06:27.420 அனைத்து இலக்கங்களையும் நீங்கள் கூட்டினால், உங்களுக்கு இருபத்து-ஏழு கிடைக்கின்றது. 0:06:27.420,0:06:28.878 பின்பு நீங்கள் அந்த இலக்கங்களை கூட்டிக்கொள்ள முடியும் -- 0:06:28.878,0:06:30.545 இரண்டு கூட்டல் ஏழு சமம் ஒன்பது. 0:06:30.545,0:06:32.120 இது மூன்றால் வகுபடும். 0:06:32.120,0:06:34.050 இது மூன்றுக்கு மட்டுமே பயன்படுத்த முடிகின்ற ஒரு உத்தி ஆகும். 0:06:34.060,0:06:35.880 எனவே இந்த எண் உண்மையிலேயே மூன்றால் வகுபடுகின்றது. 0:06:35.890,0:06:37.698 எனவே அதை நான் சிறிது மாற்றிக்கொள்கிறேன். 0:06:37.698,0:06:41.260 அது மூன்றால் வகுபடாது. 0:06:41.260,0:06:44.867 இதை நான் ஒன்று என மாற்றிக்கொள்கிறேன். 0:06:44.867,0:06:46.940 இப்பொழுது இந்த எண்ணை மூன்றால் வகுக்க முடியாது. 0:06:46.940,0:06:50.425 நிச்சயமாக மீதி வரக்கூடிய ஒரு எண் மட்டுமே எனக்குத் தேவை. 0:06:50.425,0:06:53.090 அது எவ்வாறு தோன்றுகின்றது என்பதை நீங்கள் பாருங்கள். 0:06:53.100,0:06:54.570 நாம் இதைச் செய்வோம். 0:06:54.570,0:06:57.010 ஒன்றில் மூன்று பூச்சியம் முறை செல்கின்றது. 0:06:57.020,0:06:57.889 எனவே நாம் சற்று முன்னோக்கி நகர்வோம். 0:06:57.889,0:06:59.368 இங்கு நீங்கள் ஒரு பூச்சியம் எழுதிக்கொண்டு. 0:06:59.368,0:07:00.878 அதைப் பெருக்கிக் கொள்ளலாம். 0:07:00.878,0:07:03.207 ஆனால், இது எனக்கு சற்றுக் குழப்பமாக இருக்கின்றது. 0:07:03.207,0:07:04.368 எனவே, நாம் ஒரு இலக்கம் வலது பக்கமாக நகர்கிறோம். 0:07:04.383,0:07:06.880 பதினேழில் மூன்று எத்தனை முறை செல்கின்றது? 0:07:06.880,0:07:11.050 நன்று, மூன்று முறை ஐந்து சமம் பதினைந்து ஆகும். 0:07:11.060,0:07:13.930 மூன்று முறை ஆறு சமம் பதினெட்டு ஆகும், அது மிகவும் பெரிதாக இருக்கும். 0:07:13.930,0:07:18.010 எனவே மூன்று ஆனது பதினேழுக்குள் இங்கு ஐந்து முறை செல்கின்றது. 0:07:18.010,0:07:20.570 ஐந்து முறை மூன்று சமம் பதினைந்து ஆகும். 0:07:20.570,0:07:22.000 நாம் கழிக்கிறோம். 0:07:22.010,0:07:27.010 பதினேழு கழித்தல் பதினைந்து சமம் இரண்டு ஆகும். 0:07:27.010,0:07:31.410 இப்பொழுது இந்த மூன்றை நாம் கீழே இறக்குகின்றோம். 0:07:31.420,0:07:33.480 இருபத்து-மூன்றில், மூன்று எத்தனை முறை செல்கின்றது? 0:07:33.480,0:07:36.740 நல்லது, மூன்று முறை ஏழு என்பது இருபத்து-ஒன்று ஆகும். 0:07:36.750,0:07:38.350 மூன்று முறை எட்டு என்பது மிகவும் பெரியதாக இருக்கும். 0:07:38.350,0:07:40.010 அது இருபத்து-நான்கு ஆகும். 0:07:40.010,0:07:44.070 எனவே, மூன்று ஆனது இருபத்து-மூன்றில் ஏழு முறை செல்கின்றது. 0:07:44.080,0:07:46.850 ஏழு முறை மூன்று என்பது இருபத்து-ஒன்று ஆகும். 0:07:46.860,0:07:47.910 பின்பு நாம் கழிக்கிறோம். 0:07:47.910,0:07:51.740 இருபத்து-மூன்று கழித்தல் இருபத்து-ஒன்று சமம் இரண்டு ஆகும். 0:07:51.750,0:07:53.420 இப்பொழுது அடுத்த எண்ணை நாம் கீழே இறக்குகிறோம். 0:07:53.420,0:07:54.570 ஐந்தை நாம் கீழே இறக்குகிறோம். 0:07:54.570,0:07:57.350 அது ஏன் நீள் வகுத்தல் என அழைக்கப்படுகின்றது என்பது இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நான் நினைக்கிறேன். 0:07:57.360,0:08:00.050 இந்த ஐந்தை நாம் கீழே இறக்குகிறோம். 0:08:00.060,0:08:02.040 மூன்று ஆனது இருபத்து-ஐந்தில் எத்தனை முறை செல்கின்றது? 0:08:02.040,0:08:04.506 மூன்று முறை எட்டு என்பது மிகவும் நெருங்கிய எண்ணை உங்களுக்குக் கொடுக்கின்றது. 0:08:04.506,0:08:06.153 மேலும், மூன்று முறை ஒன்பது என்பது மிகவும் பெரியதாக உள்ளது. 0:08:06.153,0:08:08.230 எனவே அது அதற்குள் எட்டு முறை செல்கின்றது. 0:08:08.240,0:08:10.170 எட்டு முறை மூன்று என்பது இருபத்து-நான்கு ஆகும். 0:08:10.170,0:08:12.210 நான் இந்த இடத்தை விட்டுச் செல்லப்போகிறேன். 0:08:12.220,0:08:14.170 கழித்தால், உங்களுக்கு ஒன்று கிடைக்கின்றது. 0:08:14.180,0:08:16.810 இருபத்து-ஐந்து கழித்தல் இருபத்து-நான்கு சமம் ஒன்று ஆகும். 0:08:16.810,0:08:20.146 இப்பொழுது இந்த பூச்சியத்தை நாம் கீழே இறக்க முடியும். 0:08:20.146,0:08:23.059 இந்தப் பூச்சியத்தை நீங்கள் கீழே கொண்டு வருகின்றீர்கள், இதைப் போன்று. 0:08:23.059,0:08:25.254 மூன்று ஆனது பத்தில் எத்தனை முறை செல்கின்றது? 0:08:25.254,0:08:25.840 அது மிகவும் சுலபமானது. 0:08:25.850,0:08:26.940 அது அதில் மூன்று முறை செல்கின்றது. 0:08:26.940,0:08:28.000 மூன்று முறை மூன்று என்பது ஒன்பது ஆகும். 0:08:28.010,0:08:30.070 நாம் பெறும் எண் கிட்டத்தட்ட பத்துக்கு நெருக்கத்தில் உள்ளது. 0:08:30.080,0:08:32.870 மூன்று முறை மூன்று என்பது ஒன்பது ஆகும். 0:08:32.870,0:08:33.612 பத்து கழித்தல் ஒன்பது-- 0:08:33.612,0:08:36.150 இங்கு நான் சிறிது மேலேயும் கீழேயும் நகர்த்தப் போகிறேன் -- 0:08:36.150,0:08:37.712 பத்து கழித்தல் ஒன்பது சமம் ஒன்று ஆகும், 0:08:37.712,0:08:39.681 பின்பு நாம் அடுத்த எண்ணை கீழிறக்க முடியும். 0:08:39.681,0:08:41.420 நான் இங்கு வண்ணங்களைப் பயன்படுத்தவில்லை. 0:08:41.420,0:08:44.750 அந்த ஒன்பதை நான் கீழே இறக்குகிறேன். 0:08:44.750,0:08:46.590 மூன்று ஆனது பத்தொன்பதில் எத்தனை முறை செல்கின்றது? 0:08:46.600,0:08:48.880 நன்று, ஆறு என்பது நம்முடைய எண்ணுக்கு நெருக்கமாக உள்ளது. 0:08:48.880,0:08:49.861 அது நமக்கு பதினெட்டு என்பதைக் கொடுக்கின்றது. 0:08:49.861,0:08:51.867 எனவே, மூன்று முறை ஆறு. 0:08:51.867,0:08:53.659 மூன்று ஆனது பத்தொன்பதில் ஆறு முறைகள் செல்கின்றது. 0:08:53.659,0:08:56.390 ஆறு முறை மூன்று -- நான் கீழே நகர்த்துகிறேன். 0:08:56.400,0:08:59.520 ஆறு முறை மூன்று என்பது பதினெட்டு ஆகும். 0:08:59.530,0:09:01.560 பத்தொன்பது கழித்தல் பதினெட்டு -- இங்கும் கூட நாம் அதைக் கழிக்கிறோம். 0:09:01.570,0:09:04.360 பத்தொன்பது கழித்தல் பதினெட்டு சமம் ஒன்று, மேலும் நாம் கிட்டத்தட்ட முடித்துவிட்டோம். 0:09:04.370,0:09:06.120 நான் திரும்பவும் இளஞ்சிவப்பு நிறத்துக்கு வருகிறேன். 0:09:06.120,0:09:09.900 இந்த ஒன்றை நாம் அங்கு கீழே இறக்குகிறோம். 0:09:09.910,0:09:11.830 மூன்று ஆனது பதினொன்றில் எத்தனை முறை செல்கின்றது? 0:09:11.840,0:09:15.670 நன்று, மூன்று முறை செல்கின்றது, ஏனெனில் மூன்று முறை நான்கு என்பது மிகவும் பெரிதாகும். 0:09:15.670,0:09:17.170 மூன்று முறை நான்கு சமம் பன்னிரண்டு ஆகும், இது மிகவும் பெரியது. 0:09:17.170,0:09:18.890 எனவே அது அதில் மூன்று முறை செல்கின்றது. 0:09:18.890,0:09:22.260 மூன்று ஆனது பதினொன்றில் மூன்று முறை செல்கின்றது. 0:09:22.260,0:09:26.180 மூன்று முறை மூன்று என்பது ஒன்பது ஆகும். 0:09:26.190,0:09:30.590 பின்பு நாம் கழித்தால், நமக்கு இரண்டு கிடைக்கின்றது. 0:09:30.600,0:09:32.669 இனி கீழே இறக்குவதற்கு எதுவும் இல்லை. 0:09:32.669,0:09:34.675 சரியா? நாம் பார்க்க்கும்போது, இங்கே கீழே இறக்குவதற்கு எதுவுமில்லை. 0:09:34.675,0:09:35.750 நாம் முடித்துவிட்டோம்! 0:09:35.750,0:09:37.896 எனவே, இந்த முழுக் கணக்கையும் செய்து முடித்த பிறகு, 0:09:37.896,0:09:40.410 நமக்கு இரண்டு மீதியாக கிடைக்கின்றது. 0:09:40.410,0:09:45.313 எனவே விடை, மூன்று ஆனது ஒரு பதினேழு லட்சத்து முப்பத்து-ஐந்தாயிரத்து தொண்ணூற்று-ஒன்றில் -- 0:09:45.313,0:09:52.940 இது ஐநூற்று எழுபத்து-எட்டாயிரத்து முன்னூற்று அறுபத்து-மூன்று முறை செல்கின்றது, மற்றும் மீதி இரண்டு ஆகும். 0:09:52.950,0:09:57.190 மீதி இரண்டு என்பது, கடைசியாக கீழே நமக்குக் கிடைப்பது ஆகும். 0:09:57.190,0:09:58.417 நிச்சயமாக நீங்கள் இப்பொழுது 0:09:58.417,0:10:01.140 எந்த ஒரு வகுத்தல் கணக்கையும் எளிமையாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றிருப்பீர்கள். 0:10:01.140,0:10:02.940 நீங்களும் கூட, இந்தப் பயிற்சியின் வாயிலாக, 0:10:02.955,0:10:06.110 அது ஏன் நீள் வகுத்தல் என அழைக்கப்படுகின்றது என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள்.