Return to Video

எதற்காக நாம் வெவ்வேறு எதிர்காலங்களை கற்பனை செய்ய வேண்டும்.

  • 0:01 - 0:04
    நான் வாழ்வாதாரத்திற்காக
    எதிர்காலத்திற்கு வருகை தருகிறேன்.
  • 0:04 - 0:06
    ஒரே ஒரு எதிர்காலம் மட்டுமல்ல,
  • 0:06 - 0:08
    ஆனால் சாத்தியமாகக்கூடிய பல எதிர்காலங்கள்,
  • 0:08 - 0:13
    அந்த எதிர்கால தடயங்களை நீங்கள் இன்று
    அனுபவிக்க எடுத்து வந்துள்ளேன்.
  • 0:13 - 0:15
    ஒரு எதிர்கால தொல்பொருள்
    ஆராய்ச்சியாளர் போல,
  • 0:16 - 0:19
    பல ஆண்டுகளில் என் பல பயணங்கள் பல விஷயத்தை
    கொண்டு வந்துள்ளது
  • 0:19 - 0:23
    செயற்கையாகப் பொறிக்கப்பட்ட ஒரு புதிய
    இனத்தைச் சார்ந்த தேனீக்கள் போலே;
  • 0:25 - 0:27
    "பெட்ஸ் ஆஸ் ப்ரொட்டின்" என்ற
    பெயருடைய புத்தகம்;
  • 0:28 - 0:31
    மரபணுத் தரவை வர்த்தகம் செய்து உங்களைப்
    பணக்காரர் ஆக்கும் இயந்திரம்;
  • 0:31 - 0:33
    சர்க்கரையினால் இயக்கப்படும் ஒரு விளக்கு;
  • 0:34 - 0:36
    உணவு உற்பத்தி செய்ய ஒரு கணினி,
  • 0:37 - 0:41
    நான் இன்னமும் உண்மையில் வெவ்வேறு
    எதிர்காலங்களுக்குப் பயணம் செய்வதில்லை--
  • 0:41 - 0:45
    கணவர் ஜானும் நானும் ஸ்டூடியோவில்
    வெவ்வேறு எதிர்காலங்களின் தொலைநோக்கை
  • 0:45 - 0:48
    சிந்தித்து உருவாக்க நிறைய
    நேரம் செலவழிக்கிறோம்
  • 0:48 - 0:51
    நாங்கள் தொடர்ந்து பலவீனமான
    சமிக்ஞைகளைத் தேடி வருகிறோம்,
  • 0:51 - 0:53
    அந்த எதிர்கால ஆற்றலின் முணுமுணுப்புகள்.
  • 0:53 - 0:57
    எதிர்காலத்துடன் ஒன்றி இருக்கும் ஆற்றலின்
    இழைகளை அதன் சுவட்டுடன் கண்டுபிடித்து,
  • 0:58 - 1:01
    இந்த எதிர்காலத்தில் வாழ்வதெப்படி
    இருக்குமென கேட்கிறோம்?

  • 1:01 - 1:04
    நாம் எதைப் பார்ப்போம், கேட்போம்
    மேலும் சுவாசிப்போம் கூட?
  • 1:05 - 1:10
    பின் நாங்கள் சோதனைகள் நடத்தி முன்மாதிரிகள்
    செய்து அந்த எதிர்காலங்களின் அம்சங்களுக்கு,
  • 1:10 - 1:12
    உயிரூட்டும்படி பொருட்களை,
  • 1:12 - 1:14
    மெய்யாகவும் தொட்டுணரக்
    கூடியதாகவும் செய்கிறோம்
  • 1:14 - 1:18
    நீங்கள் அந்த எதிர்கால சாத்தியங்களின்
    தாக்கத்தை உண்மையில் உணரும்படி
  • 1:18 - 1:20
    இங்கேயே இப்போதே.
  • 1:21 - 1:24
    ஆனால், இந்த வேலை முன்கூட்டியே
    கூறுவதைப் பற்றியது இல்லை.
  • 1:24 - 1:26
    அது கருவிகளை உருவாக்குவது பற்றியது..
  • 1:26 - 1:29
    நம் நிகழ்கால மக்களுடன் எதிர்கால மக்களை
    இணைக்க உதவும் கருவிகள், ஆதலால்
  • 1:29 - 1:34
    நமக்கு வேண்டிய ஒரு எதிர்காலத்தை உருவாக்க
    செயல்படும் பங்கேற்பாளராகி விடுகிறோம்..
  • 1:34 - 1:36
    அனைவருக்கும் வேலைசெய்யும் ஒரு எதிர்காலம்.
  • 1:37 - 1:39
    இதை நாம் எப்படி செய்வோம்?
  • 1:39 - 1:42
    சமீபத்திய திட்டமான 'ட்ரோன் ஏவியரி',
  • 1:43 - 1:44
    ஆய்வதில் ஆர்வமாக இருந்தோம்,
  • 1:44 - 1:47
    நம் நகரங்களில் வாழ்வது
    எப்படி இருக்குமென்று
  • 1:47 - 1:50
    ஆளில்லா விமானங்களுடைய ஆற்றல்
    நாம் பார்க்க முடியாததை பார்க்கும்,
  • 1:50 - 1:52
    செல்ல முடியாத இடத்திற்கு செல்லும்,
  • 1:52 - 1:55
    அவ்வாறு அதிகரிக்கும்
    சுய அதிகாரத்துடன் செய்வது.
  • 1:55 - 1:56
    தொழில் நுட்பத்தைப்
    புரிந்துகொள்ள,
  • 1:56 - 1:59
    எமது கைகளால் வேலை செய்வது
    முக்கியமாக இருந்தது.
  • 1:59 - 2:01
    எங்கள் ஸ்டூடியோவில் பல்வேறு
    ஆளில்லா விமானங்களை கட்டமைத்தோம்.
  • 2:02 - 2:05
    பெயர்கள், செயல்பாடுகள் கொடுத்து
    பின் அவற்றைப் பறக்கவிட்டோம்..
  • 2:05 - 2:07
    ஆனால், சிரமங்கள் இல்லாமல் இல்ல.
  • 2:07 - 2:09
    பொருட்கள் தளர்ந்து போயின,
  • 2:09 - 2:10
    ஜி.பி.எஸ். சமிக்ஞைகள் தடுமாறின.
  • 2:10 - 2:12
    மற்றும் ஆளில்லா விமானங்கள் நொறுங்கின.
  • 2:13 - 2:15
    ஆனால் இது போன்ற சோதனைகளினால் தான்
  • 2:15 - 2:19
    நாங்கள் ஒரு சாத்தியமான எதிர்காலத்தின் ஒரு
    மிக மெய்யான அனுபவபூர்வமான ஒரு பகுதியை
  • 2:19 - 2:21
    கட்டமைக்க முடிந்தது.
  • 2:22 - 2:24
    இப்போது நாம் அந்த
    எதிர்காலத்திற்கு செல்வோம்,
  • 2:24 - 2:28
    இது போன்ற ஆளில்லா விமானங்களுடன் ஒரு
    நகரத்தில் நாம் வசிப்பதாக கற்பனை செய்வோம்.
  • 2:28 - 2:30
    அதை நாம், நைட்வாட்ச்மேன் என்று அழைப்போம்,
  • 2:31 - 2:35
    அது தெருக்களை ரோந்து செய்கிறது. அடிக்கடி
    மாலையிலும் இரவிலும் தென்படுகிறது.
  • 2:35 - 2:39
    அதன் குறைவான மந்த ஓசையைக் கேட்டு
    நம்மில் பலர் முதலில் எரிச்சலடைந்தோம்.
  • 2:39 - 2:42
    ஆனால், அனைத்தையும் போல் அதுவும்
    நமக்கு பழக்கமாகி விட்டது.
  • 2:42 - 2:46
    அதன் கண்களினால் நாம் உலகை
    பார்க்கலாமெனில் எப்படி இருக்கும்?
  • 2:47 - 2:51
    அண்டையிலுள்ள ஒவ்வொரு குடியிருப்பாளரையும்
    எப்படி ஓயாமல் பதிவு செய்கிறதென பாருங்கள்;
  • 2:51 - 2:54
    அனுமதியற்ற பகுதியில் கால்பந்து ஆடும்
    குழந்தைகளை பதிவு செய்து, அச்செயல்
  • 2:54 - 2:57
    சட்டரீதியில் இம்சையென
    அடையாளப் படுத்துகிறதென்று.
  • 2:57 - 2:58
    (சிரிப்பு)
  • 2:58 - 3:02
    இளைஞர்களான இந்த மற்ற குழுவை ஒரு சுயாட்சி
    அச்சுறுத்தலுடன் வழங்கிய உத்திரவினால்
  • 3:02 - 3:05
    எவ்வாறு கலைக்கிறது என்று பாருங்கள்
  • 3:06 - 3:10
    பின்னர், மாடிஸன் எனும் அந்த இராட்சத
    மிதக்கும் வட்டு உள்ளது,
  • 3:10 - 3:12
    அதன் வெளிப்படையான இருப்பு
    பிரமிப்பாக இருக்கிறது
  • 3:12 - 3:15
    அதை உற்றுப் பார்க்காமல்
    என்னால் இருக்க முடியாது
  • 3:15 - 3:17
    ஒவ்வொரு முறையும் அதை
    நோக்கும் போது அதற்கு
  • 3:17 - 3:19
    என்னைப்பற்றி இன்னும் சற்று
    அதிகம் தெரியும் போலிருக்கிறது--
  • 3:20 - 3:23
    இந்த"ப்ரியினேர்" விளம்பரங்களை
    என்முன் மிளிரவைக்கிறது, அதற்கு
  • 3:23 - 3:25
    நான் திட்டமிட்ட விடுமுறையைப் பற்றி
    தெரிந்தது போல்
  • 3:26 - 3:30
    இது ஒரு மிதமான பொழுதுபோக்கா அல்லது
    முற்றிலும் ஆக்கிரமிக்கும் ஒன்றா என்று
  • 3:30 - 3:32
    எனக்கு நிச்சியமாகத் தெரியவில்லை.
  • 3:34 - 3:36
    மீண்டும் நிகழ்காலத்திற்கு வருவோம்,
  • 3:36 - 3:38
    இந்த எதிர்காலம் உருவாக்குவதில்
    நாங்கள் நிறைய கற்றறிந்தோம்.
  • 3:38 - 3:41
    இயந்திரங்கள் எப்படி இயங்குகிறது
    என்பது மட்டுமல்லாமல்,
  • 3:41 - 3:44
    அவைகளுடன் ஒன்றி வாழும் உணர்வு
    எவ்வாறு இருக்கும் என்றும் கூட.
  • 3:44 - 3:46
    மாடிஸன் மற்றும் நைட்வாட்ச்மேன்
    போன்ற ஆளில்லா விமானங்கள்
  • 3:47 - 3:48
    இந்த குறிப்பிட்ட வடிவங்களில்,
  • 3:48 - 3:50
    இன்னமும் உண்மையாக இல்லையெனினும்,
  • 3:50 - 3:54
    எதிர்கால ஆளில்லா விமானத்தின் பெறும்பாலான
    கூறுகள் இன்று நிச்சியமாக உண்மையாக உள்ளது.
  • 3:54 - 3:55
    எடுத்துக்காட்டாக,
  • 3:55 - 3:58
    முகம் அடையாளம் காணும் அமைப்புகள்
    எங்குமிருக்கிறது
  • 3:58 - 4:00
    நம் கைபேசிகளில், நம் தெர்மோஸ்டாட்டில் கூட
  • 4:00 - 4:03
    மேலும் நம் நகரங்களைச் சுற்றியுள்ள
    காமிராக்களில்--
  • 4:03 - 4:05
    நம் செயல்கள் அனைத்தும் பதிவாகிறது,
  • 4:05 - 4:10
    நாம் கண்ணோட்டத்தில் பார்த்த ஒரு விளம்பரமோ
    அல்லது நாம் பங்கேற்ற ஒரு எதிர்ப்போ.
  • 4:10 - 4:11
    இந்த விஷயங்கள் எல்லாம் இங்கு உள்ளன,
  • 4:11 - 4:14
    அவை வேலை செய்யும் விதம், அவைகளின்
    விளைவு என்னவாக இருக்கலாமென
  • 4:14 - 4:17
    அடிக்கடி நமக்குப் புரிவதில்லை.
  • 4:17 - 4:19
    நம்மைச்சுற்றி இதை பார்க்கிறோம்.
  • 4:19 - 4:21
    நம் இன்றைய செயல்களின் விளைவு, எப்படி
  • 4:21 - 4:25
    நம் எதிர்காலத்தைப் பாதிக்குமென கற்பனை
    செய்வதில் கூட ஏற்படும் ஒரு சிரமம்.
  • 4:25 - 4:28
    யூகே-வில் நான் வசிக்குமிடத்தில்
    சென்ற ஆண்டு ஓர் வாக்கெடுப்பில்,
  • 4:28 - 4:31
    ஈயூ-விட்டுப் போக விரும்புபவர்,
    யூகே-விற்கு வாக்களிக்கலாம், அல்லது
  • 4:31 - 4:32
    ஈயூ-வில் இருக்கலாம்,
  • 4:32 - 4:35
    இது பிரபலமாக "ப்ரெக்ஸிட்" எனப்பட்டது.
  • 4:35 - 4:37
    முடிவுகள் வெளிவந்தவுடன்,
  • 4:37 - 4:40
    "ப்ரெக்ரெட்'எனப்படும் ஒரு வார்த்தை
    எழும்பத் தொடங்கியது--
  • 4:40 - 4:41
    (சிரிப்பு)
  • 4:41 - 4:44
    ப்ரெக்ஸிட்டிற்கு வாக்களித்தவர்களை ஒரு
    எதிர்ப்பாளர்கள் என்று விவரித்து,
  • 4:44 - 4:48
    ஆனால், அதன் சாத்திய விளைவுகளை
    சிந்தித்துப் பார்க்காமல்.
  • 4:49 - 4:53
    இந்த தொடர்பு இல்லாமை மிக எளிய
    விஷயங்களில் கூட தெளிவாகத் தெரிகிறது.
  • 4:53 - 4:56
    சட்டென குடிக்க வெளியே செல்வதாக
    வைத்துக் கொள்ளுங்கள்
  • 4:56 - 4:58
    பின்னர், இன்னும் கொஞ்சம் குடிக்க
    தீர்மானம் செய்கிறீர்கள்,
  • 4:58 - 5:01
    காலையில் மோசமாக உணர்வீர்கள் என தெரியும்,
  • 5:01 - 5:02
    ஆயினும் அதை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்கள்,
  • 5:02 - 5:06
    "எதிர்காலத்திலுள்ள வேறாகிய நான் இதை
    சமாளிப்பேன் என்று" கூறி.
  • 5:06 - 5:07
    ஆனால், காலையில் நமக்குத் தெரிகிறபடி,
  • 5:07 - 5:10
    அந்த எதிர்காலத்தில் வரும் "நீங்கள்"
    நீங்கள்தான் என்று.
  • 5:10 - 5:14
    70-ன் பிற்பகுதி, 80-ன் தொடக்கத்தில் நான்
    இந்தியாவில் வளர்ந்து கொண்டிருந்தபோது
  • 5:14 - 5:15
    ஒரு அபிப்ராயம் இருந்தது

  • 5:15 - 5:18
    எதிர்காலத்தை திட்டமிட வேண்டும், உண்மையாக
    அதை திட்டமிட முடியுமென.
  • 5:18 - 5:22
    எளியதற்கு கூட பெற்றோர்கள் திட்டமிட
    வேண்டி இருந்தது என் நினைவிலுள்ளது.
  • 5:22 - 5:24
    எங்கள் வீட்டில் அவர்களுக்கு ஒரு
    ஒரு தொலைபேசி தேவைப்பட்ட போது,
  • 5:24 - 5:26
    அதற்கு பதிவு செய்து காத்திருக்க
    வேண்டி இருந்தது--
  • 5:26 - 5:29
    5 வருடங்கள் வரை காத்திருந்த பின் அது
    எங்கள் வீட்டில் நிறுவப்பட்டது.
  • 5:29 - 5:30
    (சிரிப்பு)
  • 5:30 - 5:34
    இன்னொரு நகரத்தில் வசித்த என் தாத்தா
    பாட்டியுடன் பேச வேண்டுமானால்,
  • 5:34 - 5:36
    அவர்கள், "ட்ரங்க் கால்"
    சேவைக்குப் பதிவு செய்து,
  • 5:36 - 5:39
    மணி அல்லது நாள் கணக்கில் மறுபடி
    காத்திருக்க வேண்டும்,
  • 5:39 - 5:42
    பின் காலை 2 மணிக்கு திடீரென்று
    தொலைபேசி மணி அடிக்கும்,
  • 5:42 - 5:46
    எல்லோரும் படுக்கையை விட்டு வெளியே
    குதித்து, தொலைபேசி சுற்றி கூடுவோம்
  • 5:46 - 5:48
    அதனுள் கிறீச்சென்ற ஓலத்துடன்
    பொதுநலன் விவாதிப்போம்
  • 5:48 - 5:49
    அதிகாலை 2 மணிக்கு.
  • 5:49 - 5:53
    இன்று செயல்கள் எல்லாமே அதிவிரைவில்
    நடப்பதாகத் தோன்றுகிறது--
  • 5:53 - 5:55
    எவ்வளவு விரைவென்றால்,
    சரித்திரத்தில் நம் இடத்தைப் பற்றி
  • 5:55 - 5:58
    ஒரு புரிதலுக்குக் கூட முடியாதபடி.
  • 5:58 - 6:02
    அது ஒரு பெரிய நிச்சியமற்ற மற்றும் கவலையான
    உணர்வை ஏற்படுத்துவதால்,
  • 6:02 - 6:06
    நாம், எதிர்காலத்தை அப்படியே நமக்கு
    நிகழும்படியாக விட்டு விடுகிறோம்
  • 6:06 - 6:08
    நாம், அந்த எதிர்கால "நம்முடன்"
    இணைவதில்லை
  • 6:09 - 6:11
    நம்முடைய எதிர்காலத்தை நாம் ஒரு
    அந்நியராக நடத்துகிறோம்,
  • 6:11 - 6:13
    மற்றும் எதிர்காலத்தை ஒரு வெளிநாடாக.
  • 6:14 - 6:15
    அது, ஒரு வெளிநாடு அல்ல:
  • 6:15 - 6:17
    அது நம் கண்களுக்கு
    முன் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது,
  • 6:17 - 6:19
    இன்று நம் செயல்களால்
    தொடர்ந்து உருவம் கொடுக்கப்பட்டு.
  • 6:20 - 6:21
    அந்த எதிர்காலம் நாம்தான்,
  • 6:22 - 6:25
    நான் நம்புகிறேன் வேண்டிய ஒரு
    எதிர்காலத்திற்காக முறையிடுவது
  • 6:25 - 6:27
    முன்பெல்லாம் விட மிக அவசரம்
    மற்றும் தேவையான ஒன்று.
  • 6:28 - 6:30
    நம் பணிகளில் நாம் அறிந்தது
  • 6:30 - 6:33
    மாற்றம் விளைவிக்க மிகவும் ஆற்றல் வாய்ந்த
    வழிமுறைகளில் ஒன்று
  • 6:33 - 6:37
    மக்கள் நேரடியாக, தெளிவாக,
    உணர்வுபூர்வமாக அவர்களடைய
  • 6:37 - 6:40
    இன்றைய செயல்களின் சில
    எதிர்கால விளைவுகளை அனுபவிப்பது
  • 6:41 - 6:45
    முன்பு இந்த ஆண்டில், ஐக்கிய அரபு எமிரெட்ஸ்
    அரசாங்கம் எங்களுக்கு அழைப்பு விடுத்தது
  • 6:45 - 6:48
    நாட்டின் ஆற்றல் வியூகத்தை வடிவமைக்க
  • 6:48 - 6:49
    2050 வருடம் வரையிலும்.
  • 6:50 - 6:54
    அரசாங்க பொருளாதார கணித புல்லியல் தரவு படி, இந்தப் பெரிய நகர மாதிரியை உண்டாக்கினோம்,
  • 6:54 - 6:57
    மேலும், பல சாத்தியமான எதிர்காலங்களை
    மனதளவில் உருவாக்கிப் பார்த்தோம்.
  • 6:58 - 7:02
    அரசாங்க அதிகாரிகளின் குழு, மற்றும்
    ஆற்றல் நிறுவனங்களின் உறுப்பினர்களை
  • 7:02 - 7:03
    நிலையான ஓர் எதிர்கால மாதிரி வழியாக
  • 7:03 - 7:06
    உற்சாகத்துடன் நான் அழைத்துச் சென்ற போது,
  • 7:06 - 7:08
    அவர்களில் ஒருவர் என்னிடம் சொன்னார்,
  • 7:08 - 7:11
    "எதிர்காலத்தில் கார் ஓட்டுவதை
    நிறுத்திவிட்டு, பொது போக்குவரத்தைப்
  • 7:11 - 7:13
    மக்கள் பயன் படுத்துவார்களென
    என்னால் நம்ப முடியவில்லை".
  • 7:14 - 7:15
    மேலும், அவர் சொன்னார்,
  • 7:15 - 7:19
    "என் மகனை, அவனுடைய காரை ஓட்டாதே
    என்று என்னால் சொல்லவே முடியாது"
  • 7:20 - 7:22
    ஆனால் இந்த எதிர்வினைக்கு நாங்கள் தயாராக
    இருந்தோம்.
  • 7:23 - 7:27
    இந்தியாவில் என் நகரில் வேதியியல் ஆய்வக
    விஞ்ஞானிகளுடன் வேலை செய்த போது,
  • 7:27 - 7:29
    நாங்கள் தோராயமான மாதிரிகள்
    உண்டாக்கினோம்
  • 7:29 - 7:34
    நம் நடத்தைகள் இந்த நிலையிலேயே இருந்தால்
    2030-ல் காற்று எப்படி இருக்கக்கூடுமென்பது.
  • 7:34 - 7:38
    அந்தக்குழுவை அந்த காற்று மாதிரிகளிலிருந்து
  • 7:38 - 7:40
    ஆவி வெளிப்படுத்தும் பொருளுக்கு அருகில்
    நடாத்தி அழைத்து வந்தேன்.
  • 7:41 - 7:45
    2030-ன் விஷமுள்ள அந்த காற்றை
    ஒரே ஒருமுறை சுவாசித்தது
  • 7:45 - 7:48
    அளவிடமுடியாத தரவு சொல்ல இயலாத
    செய்தியை தெளிவாக முன்னே வைத்தது,
  • 7:49 - 7:52
    குழந்தைகள் உரிமையாக பெறவேண்டும்
    என நீங்கள் விரும்பும் எதிர்காலம் இது அல்ல.
  • 7:53 - 7:55
    அடுத்த நாள், அரசாங்கம் ஒரு பெரிய
    அறிவிப்பை விடுத்தது.
  • 7:55 - 7:58
    புதுப்பிடத்தக்கவற்றில் பல பில்லியன் $-கள்
    முதலீடு செய்வதாக,
  • 7:58 - 8:03
    எங்கள் எதிர்கால அனுபவங்கள், இந்த முடிவில்
    வகித்த பங்கு எங்களுக்குத் தெரியாது.
  • 8:03 - 8:05
    ஆற்றல் கொள்கையை அவர்கள் மாற்றியது
    நாங்கள் அறிவோம்
  • 8:05 - 8:07
    அத்தகைய ஒரு சூழ்நிலை தணிக்க.
  • 8:07 - 8:10
    எதிர்காலக் காற்றைப் போன்றது செயல்விளைவு
    மேலும் அளவிடக்கூடியதாக இருப்பினும்,
  • 8:10 - 8:13
    நம் நிகழ்கால பாதையிலிருந்து
    எதிர்கால விளைவுகள்
  • 8:13 - 8:15
    எப்போதுமே அவ்வளவு நேற்கோடாக இல்லை.
  • 8:15 - 8:19
    ஒரு தொழில்நுட்பம் கற்பனை இலட்சியங்களுடன்
    உருவாக்கப் பட்டாலும்,
  • 8:19 - 8:21
    ஆய்வகத்தை விட்டு வெளி உலகை
    அது அடையும் தருணத்திலிருந்து,
  • 8:21 - 8:25
    அது படைப்பாளியின் கட்டுப்பாட்டிற்கு
    அப்பார்பட்ட சக்திகளுக்கு உட்படுகிறது
  • 8:26 - 8:30
    ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு நாங்கள்
    மருத்துவ மரபணுக்களை ஆராய்ந்தோம்:
  • 8:30 - 8:33
    தனித்துவம் வாய்ந்த மருந்துகளை படைக்க
    மக்களின் மரபணு தரவை சேகரித்து
  • 8:33 - 8:35
    பயன்படுத்தும் தொழில் நுட்பத்திற்காக.
  • 8:35 - 8:37
    நாங்கள் கேட்டோம்:
  • 8:37 - 8:40
    நம் மரபணுக்களை சுகாதாரப் பராமரிப்புடன்
    இணைப்பதினால், ஏற்படும் திட்மிடப்படாத
  • 8:40 - 8:42
    விளைவுகள் என்ன என்று?
  • 8:43 - 8:45
    இந்த கேள்வியை மேலும் ஆராய,
  • 8:45 - 8:47
    நாங்கள் ஒரு கற்பனை வழக்கை உண்டாக்கி
  • 8:48 - 8:52
    கவனமாக செதுக்கப்பட்ட 31சான்றுகள் மூலம்
    அதற்கு உயிர் கொடுத்தோம்.
  • 8:53 - 8:56
    நாங்கள் ஒரு சட்ட விரோதமான மரபணு
    மருந்தகத்தை உறுவாக்கினோம்.
  • 8:56 - 8:59
    ஒரு டூ இட் யுவர்செல்ஃப் கரியமில வாயு
    அடை காக்கும் கருவி,
  • 8:59 - 9:01
    மேலும், ஈபே-யில் உறைந்த எலியைக் கூட
    வாங்கினோம்.
  • 9:02 - 9:05
    அதனால், இந்த வழக்கைத் திறந்து காட்டுகிற
    அந்த எதிர்காலத்திற்கு நாம் சென்று
  • 9:05 - 9:08
    பிரதிவாதி ஆர்னால்ட் மேன்-னை சந்திப்போம்.
  • 9:08 - 9:12
    ஆர்னால்ட், இந்த உலகளவிய மாபெரும்
    உயிரி நிறுவனமான டைனமிக் ஜெனடிக்ஸ்-ஆல்
  • 9:12 - 9:13
    குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
  • 9:14 - 9:15
    ஏனெனில், அவர்களிடம் ஆதாரமுள்ளது
  • 9:15 - 9:20
    நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற மரபணு
    பொருளை, ஆர்னால்ட் சட்டத்திற்கு விரோதமாக
  • 9:20 - 9:21
    தன் உடலுக்குள் செலுத்தினாரென்று,
  • 9:21 - 9:24
    இந்த உலகத்தில், ஆர்னால்ட்-ஆல்
    அதை எப்படி செய்ய முடிந்தது?
  • 9:25 - 9:26
    இது எல்லாம் ஆரம்பித்தது
  • 9:26 - 9:30
    ஆர்னால்ட் உமிழ்நீர் மாதிரியை, ஒரு
    உமிழும் பையில் என்ஹெச்ஐ-க்கு--
  • 9:30 - 9:32
    சமர்ப்பிக்கும்படி கேட்கப்பட்டபோது.
  • 9:32 - 9:35
    யூகே-வின் தேசிய சுகாதார காப்பீடு சேவைக்கு.
  • 9:35 - 9:38
    ஆர்னால்ட், தன் சுகாதார காப்பீடு
    மசோதாவைப் பெற்றபோது,
  • 9:38 - 9:40
    அவர் அதிர்ச்சியடைந்து பயந்துவிட்டார்
  • 9:40 - 9:42
    அவருடைய காப்பீடு கட்டணம்
    மிக அதிகரித்திருந்ததால்,
  • 9:42 - 9:45
    அவர் அல்லது அவர் குடும்பத்தினர்
    கொடுக்க சக்தி இல்லாத அளவிற்கு,
  • 9:46 - 9:49
    மாநிலத்தின் வழிமுறை, அவரது மரபணு
    தரவை ஆராய்ந்து, அவருடைய
  • 9:49 - 9:53
    டி என் ஏ-வில், தீவிர ஆரோக்கிய ஆபத்து நிலை
    பதுங்கி இருப்பதாக கண்டறிந்தார்கள்.
  • 9:53 - 9:56
    எதிர்காலத்தில் வரக்கூடிய நோயை விரட்ட
    தேவைப்படும் சாத்தியமான செலவுகளுக்கு
  • 9:57 - 9:58
    ஆர்னால்ட் பணம் கட்ட வேண்டி இருந்தது--
  • 9:58 - 10:00
    சாத்தியமான எதிர்கால நோய், இன்றிலிருந்து,
  • 10:00 - 10:02
    பயமும் பீதிக்கும் உள்ளான அந்த கணம்,
  • 10:02 - 10:04
    ஆர்னால்ட் நகரத்தின் வழியாக நழுவி
  • 10:04 - 10:07
    சட்ட விரோதமான இந்த மருந்தகத்தின் நிழலில்
    சிகிச்சைக்காக வந்தார்--
  • 10:07 - 10:10
    அவரது டி என் ஏ-வை மாற்றும்
    ஒரு சிகிச்சை
  • 10:10 - 10:13
    அதனால், மாநிலத்தின் வழிமுறை இனி அவரை
    ஒரு ஆபத்தானவர் என்று பார்க்க முடியாது
  • 10:13 - 10:16
    மேலும் காப்பீடு கட்டணங்கள் மறுபடி
    அவருக்கு கட்டுப்படி ஆகும்,
  • 10:16 - 10:18
    ஆனால், ஆர்னால்ட் பிடிபட்டார்.
  • 10:18 - 10:23
    டைனமிக் ஜெனடிக்ஸ்-க்கு எதிராக மேன்
    வழக்கில் சட்ட நடவடிக்கைகள் தொடங்கின.
  • 10:23 - 10:25
    அத்தகைய எதிர்காலம்
    உயிர் பெரும்போது
  • 10:25 - 10:28
    எங்களுக்கு முக்கியம் எது என்றால், மக்கள்
    அதை நிஜமாகவே தொட்டு,
  • 10:28 - 10:30
    பார்த்து, அதன் ஆற்றல் வளத்தை உணர
    முடிந்தது
  • 10:30 - 10:33
    அத்தகைய உடனடி மற்றும் நெருக்கமான
    சந்திப்பு மக்களை
  • 10:33 - 10:35
    சரியான கேள்விகள் கேட்க தூண்டுகிறது
  • 10:35 - 10:36
    இதைப் போன்ற கேள்விகள்:
  • 10:36 - 10:38
    மரபணுக்கள் கொண்டு என்னை மதிப்பிடும்
  • 10:38 - 10:41
    ஒரு உலகில் வாழ்வதன் தாக்கங்கள் என்ன?
  • 10:41 - 10:44
    அல்லது: என் மரபணு தரவுக்கு யார்
    சொந்தம் கொண்டாடக்கூடும், மேலும்,
  • 10:44 - 10:47
    அதை அவர்கள் என்ன செய்யக்கூடும்?
  • 10:47 - 10:50
    இது நம்பும் வகையில் இல்லை தோன்றினாலும்,
  • 10:50 - 10:54
    இன்று அமெரிக்கன் காங்கிரஸ் பிரபலமற்ற
    ஹெச் ஆர் 1313 மசோதாவை அமூலாக்குகிறது
  • 10:54 - 10:58
    இது பணியாளர் நலத் திட்டங்கள்
    சட்டம் எனப்படும்.


  • 10:58 - 11:03
    பொதுவாக ஜி ஐ என் எ என்றழைக்கப்படும் இந்த
    மசோதா, மரபணு தகவல் பாகுபாடற்ற சட்டத்தை
  • 11:03 - 11:05
    திருத்தி அமைக்க முன்மொழிகிறது.
  • 11:05 - 11:08
    வேலையில் அமர்த்துபவர் குடும்ப
    மருத்துவ வரலாறு மற்றும் மரபணு தரவு
  • 11:08 - 11:09
    பற்றி வினவ அனுமதிக்கிறது
  • 11:09 - 11:13
    எல்லா ஊழியர்களுக்கும் முதல் முறையாக.
  • 11:13 - 11:17
    மறுக்கிறவர்கள் அதிக அபராதங்களை
    கட்ட வேண்டி இருக்கும்.
  • 11:17 - 11:19
    இதுவரை நான் காட்டிய பணிகளில்,
  • 11:19 - 11:21
    ஆளற்ற விமானங்களோ அல்லது
    மரபணு குற்றங்களோ,
  • 11:21 - 11:24
    இந்தக் கதைகள் சிக்கலான எதிர்காலத்தை
    விவரிக்கின்றன
  • 11:24 - 11:27
    நாம் அந்த எதிர்காலங்களை தவிர்க்க
    உதவும் எண்ணத்தோடு,
  • 11:27 - 11:29
    ஆனால், நாம் தவிர்க்க முடியாதவை
    என்ன ஆகும்?
  • 11:30 - 11:32
    இன்று, குறிப்பாக கால நிலை மாற்றங்களினால்,
  • 11:32 - 11:34
    நாம் சிக்கலை நோக்கி செல்வதாகத் தெரிகிறது.
  • 11:34 - 11:37
    எனவே நாம் இப்போது செய்ய விரும்புவது
    அந்த எதிர்காலத்திற்கு தயாராவது தான்
  • 11:37 - 11:42
    நமக்கு நம்பிக்கைத் தரும் கருவிகள் மற்றும்
    மனப்போக்கை உருவாக்குவதன் மூலம்--
  • 11:42 - 11:45
    நடவடிக்கையை ஊக்குவிக்கும் நம்பிக்கை,
  • 11:45 - 11:48
    இப்போது, எங்கள் ஸ்டூடியோவில் ஒரு
    சோதனை நடத்தி வருகிறோம்,
  • 11:48 - 11:49
    அது, நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வேலை,
  • 11:50 - 11:52
    காலநிலை தரவு கணிப்புகளின் அடிப்படையில்,
  • 11:52 - 11:53
    நாங்கள் தேடும் ஒரு எதிர்காலத்தில்
  • 11:53 - 11:57
    மேற்கத்திய உலகம் ஏராளத்திலிருந்து
    பற்றாக்குறையை நோக்கி நகர்ந்திருக்கிறது,
  • 11:57 - 12:00
    அடிக்கடி வெள்ளம் வரும் எதிர்கால
    நகரத்தில் வசிப்பதாக கற்பனை செய்கிறோம்.
  • 12:00 - 12:03
    பல் பொருள் அங்காடிகளில் உணவே
    இல்லாத காலங்கள்,
  • 12:03 - 12:05
    நிலையில்லா பொருளாதார நிலைகள்,
  • 12:05 - 12:07
    உடைந்த விநியோகச் சங்கிலிகள்,
  • 12:07 - 12:12
    இத்தகைய உலகில், உயிர் பிழைக்க மட்டுமன்றி
    நம் வளம்பெருக நாம் என்ன செய்ய முடியும்?
  • 12:12 - 12:14
    நாம் எந்த உணவை சாப்பிடலாம்?
  • 12:14 - 12:16
    இந்த கேள்விகளுக்குள் நிஜமாகவே நுழைய,
  • 12:16 - 12:21
    இந்த அறையை லண்டனில் ஒரு
    அடுக்கு மாடி வீட்டில் 2050-ல் கட்டுகிறோம்,
  • 12:21 - 12:24
    அது, எதிர்காலத்திலிருந்து நாம் மீட்ட
    ஒரு டைம் காப்ஸ்யூல் போல,
  • 12:24 - 12:26
    குறைந்த பட்ச தேவைக்கு ஏற்ப
    அதைக் குறைத்தோம்.
  • 12:26 - 12:28
    நம் வீடுகளில் அன்புடன்
    வைக்கும் அனைத்தும்
  • 12:28 - 12:30
    உதாரணமாக: ஃப்ளாட்-பானல் டிவி,
  • 12:30 - 12:32
    இணையத்துடன்- இணைந்த
    ஃப்ரிஜ்கள்
  • 12:32 - 12:33
    வீட்டிலுள்ள கைவினை பொருட்கள்,
  • 12:33 - 12:34
    எல்லாம் எடுக்க வேண்டியிருந்தது
  • 12:34 - 12:37
    அந்த இடத்தில் நாம்
    உணவு கணினி கட்டுகிறோம்
  • 12:37 - 12:41
    கைவிட்ட, மீட்ட, மேலும் புதுநோக்கம்
    கொடுக்கப்பட்ட பொருள்களிலிருந்து,
  • 12:41 - 12:45
    இன்றைய தேவையற்ற பொருட்களை
    நாளைய இரவு உணவாக மாற்றினோம்,
  • 12:45 - 12:46
    உதாரணத்திற்கு,
  • 12:46 - 12:50
    முதல் முழு தானியங்கி ஃபாக்பானிக்ஸ்
    இயந்திரத்தை இப்போதுதான் செய்திருக்கிறோம்,
  • 12:50 - 12:53
    அது, ஃபாக்பானிக்ஸ் நுட்பம் படுத்துகிறது--
    மூடுபனியை ஒரு ஊட்டச்சத்தாக,
  • 12:53 - 12:55
    நீர் அல்லது மண் கூட இல்லாமல்--
  • 12:55 - 12:57
    விரைவாகப் பொருட்களை விளைவிக்க,
  • 12:57 - 12:59
    இந்த தருணத்தில்,
  • 12:59 - 13:01
    நாங்கள் வெற்றிகரமாக தக்காளி
    வளர்த்து இருக்கிறோம்.
  • 13:01 - 13:05
    ஆனால், இந்த சிறிய அறையில் விளைவதை விட
    எங்களுக்கு அதிக உணவு தேவைப்படும்.
  • 13:05 - 13:07
    நகரத்திலிருந்து இன்னும் என்ன
    தேடிக் கண்டுபிடிக்க முடியும்?
  • 13:08 - 13:14
    பூச்சிகள்? புறாக்கள்? நரிகள்?
  • 13:14 - 13:16
    முன்னர், நாம் எதிர்காலத்திலிருந்து
    காற்று எடுத்து வந்தோம்.
  • 13:16 - 13:20
    இம்முறை எதிர்காலத்திலிருந்து நாம் ஒரு
    முழு அறையே எடுத்து வருகிறோம்.
  • 13:20 - 13:22
    நம்பிக்கை, கருவிகள் மேலும் உத்திகள்
    நிறைந்த அறை
  • 13:22 - 13:25
    விரோத நிலமைகளில் சாதகமான
    நடவடிக்கைகள் உருவாக்க,
  • 13:25 - 13:27
    இந்த அறையில் நேரம் செலவழித்து,
  • 13:27 - 13:29
    நம் எதிர்கால வீடாக
    இருக்கக்கூடிய ஒரு அறை,
  • 13:29 - 13:33
    காலநிலை மாற்றம் மற்றும் உணவு
    பாதுகாப்பின்மை, விளைவுகளை
  • 13:33 - 13:37
    மிகவும் உடனடியானதாகவும், தொட்டறியக்
    கூடியதாகவும் ஆக்குகிறது .
  • 13:37 - 13:40
    இந்த சோதனைகள் மற்றும் பயிற்சிகள்
    மேலும் நாம் ஈடுபடும் மக்களிடம்
  • 13:40 - 13:42
    நாம் என்ன கற்று கொள்கிறோமெனில்
  • 13:42 - 13:44
    திடமான அனுபவங்களை உருவாக்குவது
  • 13:44 - 13:48
    இன்றுமற்றும் நாளைக்கு இடையில் உள்ள
    இடைவெளிக்குப் பாலமாக அமையும்.
  • 13:48 - 13:51
    பல்வேறு சாத்தியமான எதிர் காலங்களில்
    நம்மை வைத்து பார்ப்பதால்
  • 13:51 - 13:52
    திறந்த மனநிலையுடன் மனமுவந்ததால்
  • 13:52 - 13:57
    அந்த செயல் கொண்டுவர்க்கூடிய நிச்சயமற்ற
    மற்றும் அசௌகரியத்தை தழுவ முடியும்
  • 13:57 - 14:00
    புதிய சாத்தியங்களைக் கற்பனை செய்ய
    நமக்கு வாய்ப்புகள் இருக்கிறது




  • 14:00 - 14:02
    நாம் நம்பிக்கை சார்ந்த எதிர்காலத்தை
    கண்டு பிடிக்கலாம்:
  • 14:02 - 14:04
    நாம் முன்னேறும் பாதைகள் காணலாம்;
  • 14:04 - 14:07
    நம்பிக்கைக்கு அப்பால் செயலுக்கு
    நாம் நகரலாம்.
  • 14:07 - 14:11
    அப்படி எனில் நமக்கு திசை மாற
    ஒரு வாய்ப்பு இருக்கிறது,
  • 14:11 - 14:14
    நம் குரல்களை பிறரை கேட்க வைப்பதற்கு
    ஒரு வாய்ப்பு,
  • 14:14 - 14:19
    நாம் விரும்பும் எதிர்காலத்தில் நம்மை
    எழுதிக் கொள்ள ஒரு வாய்ப்பு.
  • 14:20 - 14:22
    பிற உலகங்கள் சாத்தியமானது,
  • 14:22 - 14:24
    நன்றி.
  • 14:24 - 14:27
    (கரவொலி)
Title:
எதற்காக நாம் வெவ்வேறு எதிர்காலங்களை கற்பனை செய்ய வேண்டும்.
Speaker:
அநாப் ஜெயின்.
Description:

அநாப் ஜெயின் எதிர்காலத்திற்கு உயிரூட்டுகிறார், நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் உலகை, தொட்டு, பார்த்து மேலும் உணரும் சாத்திய அனுபவங்களை உருவாக்குகிறார். உதாரணமாக, நமக்கு நம் தெருக்களை ரோந்து செய்யும் புத்திசாலியான இயந்திரங்கள் வேண்டுமா, அல்லது நமது மரபில் வரும் மரபணுக்கள் நம் சுகாதார பராமரிப்பை தீர்மானம் செய்ய வேண்டுமா? ஜெயினுடைய திட்டங்கள், நாம் ஏன் நமக்குத் தேவையான உலகிற்காக போராடுவது முக்கியம் என்று காண்பிக்கின்றன. இந்த கண்திறக்கும் பேச்சில், சாத்தியமான எதிர் காலத்தின் ஒரு க்ண்ணோட்டத்தைப் பாருங்கள்.

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
14:41

Tamil subtitles

Revisions