Return to Video

லிசா பு : புத்தகங்கள் எப்படி உங்கள் மனதை திறக்கின்றன

  • 0:01 - 0:03
    1970களில், சீனாவின் ஹுனான் நகரத்தில், உடற்பயிற்சியாளராக
  • 0:03 - 0:07
    இரண்டு ஆண்டுகளுக்கு பயிற்றுவிக்கபட்டேன்.
  • 0:07 - 0:10
    நான் முதல் வகுப்பில் படிக்கும் பொழுது,
  • 0:10 - 0:12
    அரசாங்கமே செலவுகளை ஏற்று ,
  • 0:12 - 0:14
    என்னை ஒரு தடகள வீரர்களுக்கான பள்ளிக்கு மாற்ற முற்பட்டது,
  • 0:14 - 0:17
    ஆனால் என் அம்மா "வேண்டாம்" என்றார்.
  • 0:17 - 0:19
    என் பெற்றோர் என்னை அவர்களைப் போல்
  • 0:19 - 0:21
    ஒரு பொறியாளராக உருவாக்க முற்பட்டனர்.
  • 0:21 - 0:23
    கலாச்சார புரட்சிக்கு பிறகு,
  • 0:23 - 0:27
    மகிழ்ச்சிக்கான ஒரே உறுதியான வழி என அவர்கள் நம்பியது:
  • 0:27 - 0:30
    ஒரு பாதுகாப்பான நன்கு சம்பளம் தருகிற வேலை.
  • 0:30 - 0:33
    எனக்கு அந்த வேலை பிடித்து இருக்கிறதா இல்லையா என்பது அவர்களுக்கு முக்கியம் இல்லை.
  • 0:33 - 0:38
    ஆனால் என்னுடைய கனவு ஒரு மேடைப் பாடகராக ஆக்குவது.
  • 0:38 - 0:42
    அது நான் என் கற்பனைப் பியானோவை வாசித்துக்கொண்டிருப்பது.
  • 0:42 - 0:44
    ஒரு ஒபேரா பாடகர் சிறு வயதிலேயே
  • 0:44 - 0:45
    அக்ரோபாடிக்ஸ் பயிற்சிகளை கற்றுகொள்ளத் தொடங்கவேண்டும்,
  • 0:45 - 0:48
    ஆதலால் ஒபேரா பள்ளிக்குச் செல்வதற்கான அனைத்தையும் முயன்றேன்.
  • 0:48 - 0:51
    நான் என் பள்ளித் தலைமை ஆசிரியருக்கும்
  • 0:51 - 0:53
    ஒரு வானொலி தொகுப்பாளருக்கும் கூட இதைப்பற்றி எழுதி இருந்தேன்.
  • 0:53 - 0:57
    ஆனால் எந்த பெரியவர்களுக்கும் என் திட்டம் பிடிக்கவில்லை.
  • 0:57 - 1:00
    எந்த பெரியவர்களும் நான் தீவிரமாக இருப்பதை நம்பவில்லை.
  • 1:00 - 1:03
    என் நண்பர்கள் மட்டுமே என்னை ஆதரித்தார்கள்,
  • 1:03 - 1:06
    ஆனால் அவர்களும் என்னை போன்று வலுவற்ற சிறுவர்கள் தான்.
  • 1:06 - 1:12
    ஆதலால், 15 வயதில் நான் பயில்விப்பதற்கு மிகவும் முதிர்ந்தவள்.
  • 1:12 - 1:15
    என் கனவு எப்பொழுதும் நனவாகாது.
  • 1:15 - 1:18
    என் வாழ்வில் எப்பொழுதும் ஏதாவது இரண்டாம் தர மகிழ்ச்சியோடு
  • 1:18 - 1:20
    இருப்பதே சிறந்ததென ஏற்றுக்கொண்டிருந்துவிடுவேனோ
  • 1:20 - 1:22
    என்று பயந்தேன்.
  • 1:22 - 1:25
    ஆனால் அது மிகவும் நியாயமற்றது.
  • 1:25 - 1:29
    அதனால், நான் வேறு ஒன்றைத் தேர்வு செய்ய தீர்மானித்தேன்.
  • 1:29 - 1:31
    என்னைப் பயிற்றுவிக்க யாரும் இல்லையா? நல்லது.
  • 1:31 - 1:34
    நான் புத்தகங்கள் பக்கம் திரும்பினேன்.
  • 1:34 - 1:37
    எழுத்தாளர்களும் இசைஞர்களும் கொண்ட குடும்பத்தினர் எழுதிய "Correspondence in the Family of Fou Lei"
  • 1:37 - 1:42
    என்ற புத்தகம் பெற்றதும் அறிவுரை இல்லை என்ற ஏக்கத்தைப் போக்கியது.
  • 1:42 - 1:45
    கண்புசியஸ் மரபு அடிபணிதலை வேண்டிய பொழுது, ஜேன் எயரின்
  • 1:45 - 1:49
    நூல்களில் ஒரு சுதந்திரப்பெண்ணின் முன்மாதிரியய்காண்டேன்.
  • 1:49 - 1:53
    "Cheaper by the Dozen" என்கிற நூலிலிருந்து திறமான பெண்ணாக இருப்பதற்குக் கற்றுக்கொண்டேன்.
  • 1:53 - 1:57
    "Complete Works of Sanmao" மற்றும் "Lessons from History" என்ற நூல்களைப் படித்ததும் வெளிநாட்டில் கல்வி பயிலவேண்டும்
  • 1:57 - 1:59
    என்ற உந்துதல் வந்தது.
  • 1:59 - 2:02
    1995ல் நான் அமெரிக்கா வந்தேன்.
  • 2:02 - 2:05
    இங்கு நான் படித்த முதல் புத்தகம் என்ன தெரியுமா?
  • 2:05 - 2:08
    நிச்சயமாக, சீனாவில் தடை செய்யப்பட்ட புத்தகங்கள் தான்.
  • 2:08 - 2:12
    "The Good Earth" என்பது சீன உழவர்களின் வாழ்க்கையைப் பற்றிய புத்தகம்.
  • 2:12 - 2:16
    அது சீனாவில் பிரசூரிக்க ஏற்றதல்ல. புரிந்ததா ?
  • 2:16 - 2:20
    பைபிள் சுவாரஸ்யமானது, ஆனால் விந்தையானது.
  • 2:20 - 2:22
    (சிரிப்பொலி)
  • 2:22 - 2:26
    அது வேரோர் நாளுக்கான தலைப்பு.
  • 2:26 - 2:29
    ஆனால், ஐந்தாவது கட்டளை எனக்குள் ஒரு உள்ளர்ததைத் தந்தது :
  • 2:29 - 2:32
    "நீங்கள் உங்கள் தாய் தந்தையை கௌரவப்படுத்துவீராக."
  • 2:32 - 2:35
    நான் சொன்ன, "மரியாதை" என்பது "மிக வித்தியாசமானது,
  • 2:35 - 2:37
    கீழ்ப்படிதலை விடச் சிறந்தது என உணர்ந்தேன்."
  • 2:37 - 2:39
    அது (புத்தகம்) என் கன்புசிய குற்ற உணர்விலிருந்து
  • 2:39 - 2:41
    தப்பித்து என் குடும்பத்தினருடன் உறவைப் புதுபிக்க
  • 2:41 - 2:46
    ஒரு கருவியாக இருந்தது,
  • 2:46 - 2:49
    ஒரு புதிய கலாச்சாரத்தை எதிகொள்வது
  • 2:49 - 2:51
    எனக்குள் ஒப்பீட்டு வாசிக்கும் தன்மையை ஆரம்பித்தது.
  • 2:51 - 2:52
    இது பல உள்நோக்கை வழங்குகிறது.
  • 2:52 - 2:57
    ஒரு எடுத்துக்காட்டாக முதலில் இந்த வரைபடம் முரண்பாடற்ற ஒன்றாகத் எனக்குத் தோன்றியது, ஏனெனில்
  • 2:57 - 3:02
    இதைக்கண்டுதான் சீன குழந்தைகள் வளர்ந்தனர்.
  • 3:02 - 3:04
    சீனா உலகத்தின் மத்தியில் இருக்க வேண்டியதில்லை
  • 3:04 - 3:07
    என எனக்குத் தோன்றியதே இல்லை .
  • 3:07 - 3:11
    ஒரு வரைபடம், உண்மையில் யாரோ ஒருவருடைய பார்வையைத் தாங்கிச் செல்கிறது.
  • 3:11 - 3:13
    ஒப்பீட்டு வாசிப்பு, உண்மையில் புதிதல்ல.
  • 3:13 - 3:17
    இது கல்வி உலகில் ஒரு அளவுகோலாக இருந்து வருகிறது.
  • 3:17 - 3:18
    ஒப்பீட்டு சமயம் மற்றும் ஒப்பீட்டு இலக்கியம் போன்ற
  • 3:18 - 3:22
    ஆராய்ச்சித் துறைகள் கூட உள்ளன.
  • 3:22 - 3:24
    ஒப்பீட்டும் பகுத்தறிதலும் அறிஞர்களுக்கு,
  • 3:24 - 3:27
    ஒரு தலைப்பை முழுமையாகப் புரிய வைக்கிறது.
  • 3:27 - 3:29
    ஒப்பபிட்டு வாசிப்பது ஆராய்ச்சிக்கு உதவி செய்யுமெனில்
  • 3:29 - 3:33
    ஏன் நிகழ் வாழ்க்கையில பயன்படுத்தக் கூடாதென நினைத்தேன்?
  • 3:33 - 3:36
    அதனால், நான் புத்தகங்கள இரட்டையாகப் படிக்க ஆரம்பித்தேன்.
  • 3:36 - 3:38
    அவைகள் மனிதர்களைப் பற்றி இருக்கலாம்
  • 3:38 - 3:38
    "வால்ட்டர் ஐசாக்சன்னின் பெஞ்சமின் பிராங்க்ளின்" மற்றும் "டேவிட் மெக்கல்லோவின் ஜான் அடம்ஸ்" போல
  • 3:38 - 3:41
    ஒரே நிகழ்வுகளில் பங்குபெற்ற இருவர்,
  • 3:41 - 3:44
    அல்லது ஒரே அனுபவமுடைய நண்பர்களைப் பற்றியோ இருக்கலாம்.
  • 3:44 - 3:45
    கேத்தரின் க்ரஹாமின் சுய வரலாறு மற்றும் ஆலிஸ் ஸ்ரோடரின் "Warren Buffett and the Business of Life " போல.
  • 3:45 - 3:49
    நான் இரு பாணியாக உள்ள ஒரே கதைகளை ஒப்பிட்டுப் பார்ப்பேன் -- (சிரிப்பொலி)
  • 3:49 - 3:51
    "புனித வேதாகமம்: கிங் ஜேம்ஸ் பதிப்பு" மற்றும் கிறிஸ்டோபர் மூரின் "லாம்ப்" போல
  • 3:51 - 3:55
    அல்லது ஜோசப் காம்ப்பெல் தனது The Power of Myth புத்தகத்தில்
  • 3:55 - 3:58
    படைத்தது போல் இரு கலாச்சாரங்களில் உள்ள ஒத்த கதைகளை ஒப்பிட்டுப் பார்ப்பேன்.
  • 3:58 - 4:01
    ஒரு எடுத்து காட்டாக புத்தரும் இயேசுவும் மூன்று
  • 4:01 - 4:03
    சலனங்களுக்கு உள்ளானார்கள் .
  • 4:03 - 4:05
    இயேசுவுக்கு அச்சலனங்கள்
  • 4:05 - 4:09
    பொருளாதார, அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாக இருந்தன.
  • 4:09 - 4:13
    புத்தரின் சலனங்கள் நடந்த உந்துதல்கள் அனைத்துமே உளவியல் ரீதியானவை :
  • 4:13 - 4:21
    அவை காமம், பயம் மற்றும் சமூகக் கடமை. சுவாரஸ்யமாக உள்ளது.
  • 4:21 - 4:24
    ஆதலால், உங்களுக்குப் பிற மொழிகள் தெரிந்திருப்பின் உங்களுக்குப்
  • 4:24 - 4:26
    பிடித்த நூலை இரு மொழிகளில் வாசிப்பது மகிழ்ச்சி தரக்கூடியது.
  • 4:26 - 4:27
    தாமஸ் மெர்ட்டனின் "The Way of Chuang Tzu" மற்றும் அலன் வாட்ஸின் "The Watercourse Way" போல.
  • 4:27 - 4:31
    மொழிபெயர்ப்பில் தொலைந்து போகாமல் அதிகமாகப் பலன் பெறுவதையே உணர்ந்தேன்.
  • 4:31 - 4:35
    ஒரு எடுத்து காட்டு, மொழிபெயர்ப்பு மூலமா தான்
  • 4:35 - 4:41
    "மகிழ்ச்சி" ங்கற வார்த்தைக்கு "வேகமான மகிழ்வு" னு அர்த்தம்ங்க்ரத உணர்ந்தேன்.
  • 4:41 - 4:46
    அதாவது "மணமகள்" ங்கற வார்த்தைக்கு சீன மொழில "புது அம்மா" னு .!
  • 4:46 - 4:49
    (சிரிப்பொலி)
  • 4:49 - 4:55
    புத்தகங்கள் எனக்கு கடந்த கால மற்றும் தற்போதைய மக்கள்
  • 4:55 - 4:57
    இணைக்க ஒரு மாய வாயிலை கொடுத்துள்ளனர்.
  • 4:57 - 5:02
    எனக்கு தெரியும் நான் மீண்டும் தனிமை அல்லது வலிமையிழந்து உணரமாட்டேன் என்று.
  • 5:02 - 5:04
    சிதைந்து ஒரு கனவு கொண்ட என்னை
  • 5:04 - 5:07
    பாதிக்கப்பட்ட மற்றவருடன் ஒப்பிடும் போது அது ஒன்றும் இல்லை என்று தோன்றியது.
  • 5:07 - 5:10
    நான் இப்பொழுது நம்புகிறேன் உண்மையாக வருவது மட்டுமே
  • 5:10 - 5:13
    கனவு காண்பதின் உண்மையான நோக்கம் அல்ல என்று.
  • 5:13 - 5:17
    அதன் முக்கிய நோக்கம், நம்மை;கனவுகள் எங்கிருந்து வருகின்றன;
  • 5:17 - 5:19
    உணர்ச்சி எங்கிருந்து வருகின்றன
  • 5:19 - 5:22
    மகிழ்ச்சி எங்கிருந்து வருகின்றன இவற்றுடன் தொடர்புபடுத்தி கொள்வதற்காக.
  • 5:22 - 5:26
    ஒரு உடைந்த கனவு கூட அதை உங்களுக்கு செய்ய முடியும்.
  • 5:26 - 5:29
    அதனால புத்தகங்களால நான் இங்க இருக்கிறேன்,
  • 5:29 - 5:32
    மகிழ்ச்சியாக, மீண்டும் வாழ்கிறேன் ஒரு தெளிவோடும் நோக்கத்தோடும்,
  • 5:32 - 5:34
    பல நேரங்களில்.
  • 5:34 - 5:38
    எனவே, புத்தகங்கள் எப்பொழுதும் உங்களுடன் இருக்கட்டும்.
  • 5:38 - 5:39
    நன்றி.
  • 5:39 - 5:41
    (கரகோஷம்)
  • 5:41 - 5:44
    நன்றி. (கரகோஷம்)
  • 5:44 - 5:50
    நன்றி. (கரகோஷம்)
Title:
லிசா பு : புத்தகங்கள் எப்படி உங்கள் மனதை திறக்கின்றன
Speaker:
Lisa Bu
Description:

நீங்கள் சிறு வயது முதல் கண்ட கனவு நினைவாகாமல் இருந்தால் என்னவாகும்? லிசா பு அமெரிக்காவில் தன்னுடைய புது வாழ்க்கைக்கு மாறிய பிறகு, அவர்கள் புத்தகங்கள் பக்கம் சென்று தன்னுடைய மனதை வெளிப்படுத்தி தனக்கென்று புது பாதையை உருவாக்கினார்கள். அவர்கள் புத்தகங்களை படிக்கும் தனது தனித்தன்மை கொண்ட அணுகுமுறையை, புத்தகங்களின் மந்திரம் பற்றிய தன்னுடைய அழகான பேச்சின் மூலம் பகிர்ந்து அளிக்கிறார்.

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
06:16
Dimitra Papageorgiou edited Tamil subtitles for How books can open your mind
Dimitra Papageorgiou edited Tamil subtitles for How books can open your mind
Dimitra Papageorgiou approved Tamil subtitles for How books can open your mind
Vijaya Sankar N accepted Tamil subtitles for How books can open your mind
Vijaya Sankar N edited Tamil subtitles for How books can open your mind
RAJENDRAN RATHINASABAPATHY edited Tamil subtitles for How books can open your mind
RAJENDRAN RATHINASABAPATHY edited Tamil subtitles for How books can open your mind
RAJENDRAN RATHINASABAPATHY edited Tamil subtitles for How books can open your mind
Show all

Tamil subtitles

Revisions