Return to Video

எப்படி பயன்தராத கல்வி கற்றல் முறையை மாற்றுவது?....பணத்தேவையில்லாமல்

  • 0:01 - 0:03
    நம் அனைவருக்கும் அவரவர்
    பாகுபாடுகள் இ௫கின்றன.
  • 0:03 - 0:06
    உதாரணத்திற்கு, நம்மில் சிலர்
  • 0:06 - 0:09
    பயன்பட தவறிய அரசு அமைப்புகளை
    மாற்ற முயல்வது மிகவும் கடினம் என்றும்
  • 0:10 - 0:12
    மேலும், அரசு அமைப்புகள்
  • 0:12 - 0:15
    தொண்மையான வழக்கங்களை
    கொண்டவை என்றும்,
  • 0:15 - 0:18
    ஒருவேளை தலைவர்கள் அதிகாரத்துவம்
    மிக்கவர்களாக இருப்பதனால்
  • 0:18 - 0:19
    மாற்றம் நிகழவில்லை எனலாம்.
  • 0:20 - 0:23
    இன்று, அந்த கோட்பாடை சவால் செய்கிறேன்.
  • 0:24 - 0:28
    இன்று உங்களுக்கு ஒரு மிகப்பெரிய
    அரசு அமைப்பு
  • 0:28 - 0:31
    எப்படி தன்னை சீர்த்திருத்த வழியில்
    செலுத்தியதும் அல்லாமல்,
  • 0:31 - 0:35
    பிரமிக்கதக்க முடிவுகளையும் மூன்று
    வருடத்திற்குள் காட்டியுள்ளது
  • 0:35 - 0:36
    என்பதை பார்க்கலாம்.
  • 0:37 - 0:41
    இது இந்தியாவின் அரசு பள்ளியிலுள்ள
    ஒரு வகுப்பறை
  • 0:41 - 0:43
    இதுபோல் பத்து லட்சம் பள்ளிகள்
    இந்தியாவில் உள்ளன .
  • 0:44 - 0:47
    வாழ்க்கை முழுவதும் இந்தியாவில்
    வசித்துவந்த எனக்குமே
  • 0:47 - 0:50
    இந்த பள்ளிகளை பார்க்கையில்
    நெஞ்சு பொறுப்பதில்லை.
  • 0:51 - 0:53
    பதினொரு வயது முடியும் முன்னராக
  • 0:53 - 0:57
    இந்த குழந்தைகளில் ஐம்பது சதவிகிதத்தினர்
    கல்வியில் பின்தங்கி மீண்டெழும்
  • 0:57 - 0:59
    நம்பிக்கையை இழந்துவிடுகின்றனர்.
  • 1:00 - 1:02
    11 வயதினருக்கு எளிய கூட்டல் கணக்கு
    தெரிவதில்லை,
  • 1:02 - 1:05
    இலக்கணப்பிழைல்லாமல் ஒரு வாக்கியம்
    அமைக்க தெரிவதில்லை,
  • 1:06 - 1:09
    நாம் இவற்றை ஒரு எட்டு வயது
    மாணவர் பண்ண இயலும்
  • 1:09 - 1:10
    என்று எதிர்பார்க்கிறோம்.
  • 1:11 - 1:13
    குழந்தைகள் 13 அல்லது 14 வயதில்
    பள்ளிக்கல்வியை
  • 1:13 - 1:15
    கைவிட முனைகின்றனர்.
  • 1:16 - 1:20
    இந்தியாவில் அரசு பள்ளிகள் இலவச
    கல்வி மட்டுமல்லாது
  • 1:20 - 1:23
    இலவச பாடபுத்தகங்கள் ,பணிபுத்தகங்கள் ,உணவு
    சில நேரங்களில்,
  • 1:23 - 1:25
    பண உதவித்தொகையும்
    வழங்குகின்றன.
  • 1:26 - 1:29
    இருந்தாலும் பெற்றோர்களில் நாற்பது
    சதவிகிதத்தினர் இன்று
  • 1:29 - 1:32
    அவர் பிள்ளைகளை அரசு பள்ளிகளை விடுத்து
  • 1:32 - 1:35
    பணம் செலவழித்து தனியார்
    பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
  • 1:35 - 1:39
    இந்தியாவுடன் ஒப்பீடுகையில் வசதி மிகுந்த
    அமெரிக்காவில்,
  • 1:39 - 1:41
    இது வெறும்
    பத்து சதவிகிதம் மட்டுமே.
  • 1:41 - 1:46
    அது பயனற்று கிடைக்கும் இந்திய அரசு
    கல்வித்துறை பற்றிய மிகப்பெரிய கூற்று
  • 1:47 - 1:52
    இதை பின்னணியாகக்கொண்டு 2013ஆம் ஆண்டு
    முற்றிலும் திறம்மிக்க
  • 1:52 - 1:56
    சுரினா ராஜன் என்ற பெண்மணி என்னை அழைத்தார்
  • 1:56 - 2:00
    அப்பொழுது ஹரியானா மாநிலத்தின்
    பள்ளி கல்வித்துறை
  • 2:00 - 2:02
    இலாகாவின் தலைமை
    பொறுப்பை வகித்துவந்தார்
  • 2:02 - 2:05
    அதனால், அவர் என்னிடம்
    "நான் இந்த பொறுப்பில்
  • 2:05 - 2:07
    கடந்த இரண்டு வருடங்களில்
  • 2:07 - 2:10
    எண்ணற்ற முறைகளை சோதித்தது பார்த்தில்,
    எதுவும் பயன் தரவில்லை
  • 2:10 - 2:11
    உங்களால் உதவ இயலுமா?"
  • 2:13 - 2:16
    ஹரியாணாவை பற்றி சிறிது விவரிகின்றேன்.
  • 2:16 - 2:19
    ஹரியாணா மாநிலம் மூன்று
    கோடி மக்களை கொண்டுள்ளது.
  • 2:20 - 2:23
    அங்கு பதினைந்தாயிரம் அரசு பள்ளிகள் உள்ளன
    மேலும் 20 லட்சத்திற்கும்
  • 2:23 - 2:26
    அதிகமான குழந்தைகள்,
    அப்பள்ளிகளில் பயிலுகிறார்கள்
  • 2:26 - 2:29
    அதாவது,அந்த ஒரு தொலைபேசி
    அழைப்பின் அடிப்படையில்
  • 2:29 - 2:31
    பெரு அல்லது கனடா அளவிலான பெரிய
  • 2:31 - 2:35
    மாநிலம் மற்றும் அமைபிற்கு உதவ
    வாக்குறுதி அளித்தேன் .
  • 2:37 - 2:40
    இந்த திட்டத்தை ஆரம்பிக்கையில் ,
    எனக்கு இரண்டு வலிமிகு விஷயங்கள் தெரிந்தன
  • 2:40 - 2:43
    ஒன்று,இதற்கு முன் இது போல்
    நான் எதுவும் செய்தது இல்லை என்பது.
  • 2:43 - 2:48
    இரண்டு,முயற்சி செய்த பலர் பெரும்
    வெற்றியை பெறவில்லை என்பது.
  • 2:48 - 2:51
    நானும் என் சக ஊழியர்களும் பார்த்தவரையில்
    இந்தியா மற்றும்
  • 2:51 - 2:52
    உலகத்தின் எந்த மூலையிலும்
  • 2:52 - 2:54
    இதே போன்ற
    மற்றோரு எடுத்துக்காட்டினை
  • 2:54 - 2:57
    வைத்து ஹரியாணாவில் செயல்படுத்த
    முடியவில்லை.எங்கள் லட்சிய
  • 2:57 - 3:00
    பாதையை நாங்கள் மட்டுமே
    உருவாக்கிட வேண்டும்
  • 3:01 - 3:04
    என்பது புரிந்தது.
    இந்த பயணத்தை தொடங்கியதிலிருந்தே
  • 3:04 - 3:07
    எல்லா விதமான கருத்துக்களும் வந்து
    குவிய ஆரம்பித்தன.
  • 3:07 - 3:10
    ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையை
    மாற்றலாம் என்றும்,
  • 3:10 - 3:12
    புதிய பள்ளிமுதல்வர்களை தேர்வுசெய்து
    பயிற்றுவிக்கலாம்
  • 3:12 - 3:15
    மேலும் வெளிநாட்டு கல்விச்சுற்றுலா
    அனுப்பலாம்,
  • 3:15 - 3:17
    வகுப்பறைகளில் தொழில்நுட்பத்தை நுழைக்கலாம் என்றும்
  • 3:17 - 3:20
    சகஊழியர்கள் கூறினார்கள். முதல் வாரத்தின் இறுதியில்,
  • 3:20 - 3:22
    50 அற்புதமான, சரியான
    யோசனைகள் இருந்தன.
  • 3:22 - 3:27
    நம்மால் இந்த ஐம்பது யோசனைகளையும்
    செயல்படுத்த முடியாது.
  • 3:27 - 3:29
    ஆகையால் நான் கூறினேன்"பொறுங்கள்,
  • 3:29 - 3:32
    முதலில் நாம் அடையவிருக்கும் இலக்கினை
    முடிவு செய்யலாம் "
  • 3:32 - 3:35
    மிகுந்த இழுபறி வாதத்திற்கு பின்னர்.
  • 3:35 - 3:39
    ஹரியாணாவின் இலக்கு என்னவென்றால்
    "2020ஆம் ஆண்டிற்குள்,
  • 3:39 - 3:43
    எண்பது சதவிகித குழந்தைகள் அவர்களின்
    தகுதிப்படி அறிவுள்ளவர்களாக இருத்தல் "
  • 3:44 - 3:46
    இங்கு,இலக்கின் நுணுக்கங்கள் முக்கியமல்ல
  • 3:46 - 3:49
    ஆனால் பிரத்தியேக இலக்கே முக்கியம்.
  • 3:50 - 3:53
    ஏன்னெனில் ,எங்களிடம் வீசப்பட்ட
    யோசனைகள்
  • 3:53 - 3:54
    அனைத்தையும் ஆராய்ந்து எதை
  • 3:54 - 3:57
    செயல்படுத்த முடியும் என்று
    சொல்வதற்கு ஏதுவாய்
  • 3:57 - 4:01
    இருந்தது.இந்த யோசனை இலக்கை
    அடையவல்லதா ? எனில் வைத்துக்கொள்வோம் .
  • 4:01 - 4:04
    உறுதியாக இல்லையெனில் தள்ளி வைத்துவிடுவோம்
  • 4:04 - 4:09
    பிரத்தியேக குறிக்கோள் நம் முன் இருப்பது
  • 4:09 - 4:12
    நம்மை கவனத்துடனும் கூர்மையுடனும்
    இருக்க செய்கிறது
  • 4:12 - 4:14
    நம் லட்சியப்பாதையில்.
  • 4:14 - 4:16
    கடந்து வந்த இரண்டரை வருடங்களை
    பார்க்கையில்,
  • 4:16 - 4:18
    எங்களுக்கு மிகவும் நம்பிக்கை அளித்தது.
  • 4:19 - 4:21
    ஒரு குறிக்கோள் இருந்தது,
  • 4:21 - 4:24
    இப்பொழுது என்னென்ன பிரச்னை என்று
    நாங்கள் கண்டறிய வேண்டும்.
  • 4:25 - 4:28
    நாங்கள் பள்ளிகள் பற்றி அறியும் முன்னரே
    இங்கு கல்வித்தரம்
  • 4:28 - 4:30
    மிகக்குறைவு என்று பலர் கூறினார்கள்.
  • 4:30 - 4:34
    ஏன்னெனில் ஆசிரியர்கள் சோம்பேறித்தனமாக
    பள்ளி வருவதில்லை,
  • 4:34 - 4:37
    அல்லது அவர்களுக்கு பாடம் நடத்த
    தெரியவில்லை.
  • 4:37 - 4:42
    ஆனால் நாங்கள் பள்ளிகளை பற்றி முற்றிலும்
    மாறுபட்ட நிலையை அங்கு கண்டோம்.
  • 4:42 - 4:45
    பெரும்பாலான நேரங்களில் ஆசிரியர்கள்
    பள்ளிகளில் இருந்தனர்.
  • 4:46 - 4:47
    அவர்களின் உரையாடலை வைத்து
  • 4:47 - 4:51
    தொடக்கநிலை வகுப்புகளை எடுக்க
    தகுதியுடையவர்கள் என்று புரிந்தது.
  • 4:52 - 4:54
    அனால்,அவர்கள் பாடம் நடத்தவில்லை.
  • 4:55 - 4:56
    நான் பள்ளி சென்ற பொழுது
  • 4:56 - 4:59
    வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள்
    கட்டுமானப்பணியை
  • 4:59 - 5:01
    மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தனர்.
  • 5:02 - 5:03
    மற்றோரு பள்ளியை பார்வையிட்ட
  • 5:03 - 5:06
    பொழுது,இரண்டு ஆசிரியர்கள் பள்ளி மாணவனின்
    ஊக்கத்தொகையை
  • 5:06 - 5:09
    செலுத்த பக்கத்திலுள்ள வங்கிக்கு
    சென்றிருந்தனர் .
  • 5:09 - 5:14
    மதியவேளையில்,பெரும்பாலான
    ஆசிரியர்கள் அவ்வர்களின் நேரத்தை
  • 5:14 - 5:18
    உணவு சமைப்பதற்கும்,மாணவர்களுக்கு
    பரிமாறுவதற்கும் செலவிட்டனர்.
  • 5:19 - 5:20
    என்ன நடக்கிறது? ஏன் பாடம்
  • 5:20 - 5:23
    நடத்தவில்லை" என்று கேட்டபொழுது,
  • 5:23 - 5:25
    இதைத்தான் எங்களிடம் இருந்து
  • 5:26 - 5:29
    எதிர்பார்க்கிறார்கள். மேற்பார்வையாலரின் ஆய்வில்,
  • 5:29 - 5:31
    இதையே சரிபார்க்கிறார்கள்.
    கழிவறைகள் சுத்தமாக
  • 5:31 - 5:34
    உள்ளனவா, உணவு பரிமாறப்பட்டதா
    என்பதையே பரிசோதிக்கின்றனர்
  • 5:34 - 5:37
    பள்ளி மேலாளரின் தலைமை அலுவலகம்
    சந்திப்பில், இதைப்பற்றி தான்
  • 5:37 - 5:39
    கலந்துறையாடலில் பேசுகிறார்கள்.
  • 5:40 - 5:45
    ஏன் என்று பார்த்தோமேயானால் ,
    கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில்
  • 5:45 - 5:48
    போதிய பள்ளிகள் அமைப்பது, பள்ளிகளில்
    பிள்ளைகளை சேர்ப்பது, பள்ளிகளுக்கான
  • 5:48 - 5:51
    வழித்தடங்கள் அமைப்பது, பள்ளிகளுக்கு
    மாணவர்களை வரவழைப்பது
  • 5:51 - 5:55
    போன்றவை இந்தியாவின் மிகப்பெரிய சவாலாக
    இருந்தது.ஆதலால் அரசு இந்த சவாலை
  • 5:55 - 5:56
    சமாளிக்க,நிறைய செயற்திட்டங்களை
    வகுத்து
  • 5:57 - 6:01
    அதை ஆசிரியர்கள் மூலம்
    செயல்படுத்தினார்கள் .
  • 6:01 - 6:03
    வெளிப்படையாக அல்லாமல் மறைமுகமாக.
  • 6:05 - 6:10
    இப்போதைய தேவையோ,ஆசிரியர்களை
    பயிற்றுவித்தலோ ,அவர்களின் வருகையை
  • 6:10 - 6:12
    சரிபார்ப்பதோ இல்லை,பாடங்களை
  • 6:12 - 6:15
    ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் சென்று
    கற்பிக்க வேண்டும் என்பதே.
  • 6:16 - 6:18
    இதுதான் முக்கியம் என்று
    ஆசிரியர்களிடத்தில் கூறவேண்டும்
  • 6:18 - 6:22
    தரமான கல்வியை தருவதற்கு,நாம் ஆசிரியர்களை
    ஆய்வு செய்வதும்,மேம்படுத்துவதும்
  • 6:22 - 6:23
    பரிசளிப்பதும் வேண்டும்.
  • 6:23 - 6:25
    மற்றவைகளுக்காக அல்ல.
  • 6:26 - 6:28
    நாங்கள் இங்கு பயிற்றுவிக்கும் கல்விமுறையை
  • 6:29 - 6:34
    சற்று ஆழமாக சென்று பார்த்ததில், சில
    முக்கிய மூல காரணங்கள்,
  • 6:34 - 6:38
    இங்குள்ளவர்கள் நடக்கும் விதத்தை பாதித்தது
    அதனை சரி செய்தால் மட்டுமே
  • 6:38 - 6:42
    இங்கு பலவித மாற்றங்களை
    கொண்டுவரலாம்
  • 6:42 - 6:44
    என்பதை புரிந்துகொண்டோம்.
  • 6:44 - 6:46
    நாங்கள் அவர்களை பயிற்றுவிக்கலாம்
    தொழில்நுட்பத்தை புகுத்தலாம்
  • 6:46 - 6:48
    ஆனால் அமைப்பு முறை மாறாது.
  • 6:48 - 6:52
    இதுபோன்ற வெளிப்படை அல்லாத பிரச்சனைகளை சரி செய்வதே இந்த செயல்முறை
  • 6:52 - 6:53
    திட்டத்தின் முக்கிய அம்சமாக மாறிற்று.
  • 6:55 - 6:58
    அவ்விதமாய் குறிக்கோள் இருந்தது
    பிரெச்சனைகள் இருந்தன.
  • 6:58 - 7:00
    இப்பொழுது அதற்கான தீர்வுகளை
    கண்டுபிடிக்க வேண்டும்.
  • 7:01 - 7:03
    மற்றோரு முறை சக்கரைத்தை கண்டுபிடிக்க
    முற்படாமல்
  • 7:03 - 7:06
    நாங்கள் இதற்கும் ஏற்கனவே கண்டிடிக்கப்பட்ட
    தீர்வுகளை ஆராய
  • 7:06 - 7:11
    முற்பட்டோம்.சிறிய அளவிலான அழகான
    சோதனை முயற்சிகள் நாடு முழுவதும்,
  • 7:11 - 7:14
    உலகம் முவதும் நடத்தப்படுவதை கண்டோம்.
  • 7:14 - 7:18
    அரசு சாரா ,நற்பணி குழு போன்ற குழுமங்கள்
    சிறிய அளவில் செய்தன.
  • 7:18 - 7:22
    அவையாவும் பெரியளவில் அல்லாமல் சிறிய
    அளவில் இருந்தன.
  • 7:22 - 7:26
    அணைத்து சோதனைகளும் 50,100 அல்லது
    500 பள்ளிகளுக்கு வரையறுக்கபட்டது.
  • 7:26 - 7:29
    நாங்களோ 15000 பள்ளிகளுக்கான தீர்வை
    எதிர்நோக்கி இருந்தோம்.
  • 7:29 - 7:31
    தீர்வுகள் ஏன் சிறிய அளவில் மட்டுமே
  • 7:31 - 7:34
    வேலைசெய்தன என்று ஆராய்ந்ததில்,
  • 7:35 - 7:38
    ஒரு அரசு சாரா நிறுவனம் இந்த
    பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்போது
  • 7:38 - 7:40
    அவர்களுடைய நிபுணத்துவம் மட்டுமல்லாது ,
  • 7:40 - 7:43
    கூடுதல் வளங்களையும் கொண்டுவருகிறார்கள்.
  • 7:43 - 7:45
    கூடுதல் பணம்,கூடுதல் மக்கள்
  • 7:45 - 7:46
    மற்றும் தொழில்நுட்பம்,
  • 7:46 - 7:48
    ஆகியவற்றை
    கொண்டுவரலாம்.
  • 7:48 - 7:52
    அவர்கள் செயல்படும் 50,100 பள்ளிகளில்
    அவர்கள் கொண்டுவரும் கூடுதல் வளங்கள்
  • 7:52 - 7:55
    கண்டிப்பாக மாற்றத்தை தருகின்றன.
  • 7:55 - 7:58
    இப்பொழுது இந்த அரசு சாரா நிறுவனத்தின்
    தலைவர்
  • 7:58 - 8:01
    பள்ளிக்கல்வி தலைமை அலுவலகம் சென்று,
    15000 பள்ளிகளுக்கு
  • 8:01 - 8:04
    இந்த தீர்வை செயற்படுத்தலாம் என்று
    கூறும்போது, எங்கே இருந்து அவர்
  • 8:04 - 8:08
    இதற்காகும் பணத்தை கொண்டுவரப்போகிறார்?
  • 8:08 - 8:10
    அதுவும் 15000 பள்ளிகளுக்கு?
  • 8:10 - 8:12
    அவரிடம் இதற்கான கூடுதல் பணம் இல்லை.
  • 8:12 - 8:14
    கூடுதல் வளங்கள் இல்லை.
  • 8:14 - 8:16
    ஆதலால் பெரியளவில் செயல்படுத்த முடியாமல் போகிறது.
  • 8:17 - 8:20
    இந்த முயற்சியை தொடங்குமுன்
    எதை பெரியளவில் கொண்டுபோக முடியுமோ
  • 8:20 - 8:23
    எதை 15000 பள்ளிகளில் செயல்படுத்த முடியுமோ,
    அதை செய்வது
  • 8:23 - 8:26
    சாலச்சிறந்தது என்றொரு கோட்பாடு இருந்தது.
  • 8:26 - 8:30
    அதுமட்டுமல்லாமல், குறிப்பிட்ட வரவு செலவு
    திட்டத்தில் வேலை செய்ய வேண்டும்
  • 8:30 - 8:33
    மற்றும்,வளங்கள் மாநிலத்திலேயே இருத்தல்
    வேண்டும்.
  • 8:34 - 8:35
    சொல்வது செய்வதை காட்டினும் எளிது.
  • 8:35 - 8:37
    (சிரிப்பொலி)
  • 8:37 - 8:39
    இந்த நேரத்தில் தான் என் குழுவினர் என்னை
  • 8:39 - 8:41
    கடிந்துகொண்டார்கள்.
  • 8:41 - 8:46
    அலுவலகத்திலும், சிற்றுண்டிச்சாலையிலும்
    சில நேரங்களில் மதுபான கடையிலும்
  • 8:46 - 8:47
    அதிக நேரம் செலவிட்டு,
  • 8:47 - 8:49
    மண்டையை பிய்த்துக்கொண்டு
    வினவினோம்.
  • 8:49 - 8:52
    "எப்படி, எங்கே ?
    இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது
  • 8:52 - 8:56
    கடைசியில், நாங்கள் பலவித பிரச்சனைகளுக்கு
    தீர்வுகள் கண்டோம்.
  • 8:56 - 8:58
    ஒரு எடுத்துக்காட்டுடன் கூறுகிறேன்.
  • 8:58 - 9:00
    பயனுள்ள கற்றல் சூழ்நிலையில்,
    அனைவரும்
  • 9:00 - 9:03
    விவாதிக்கக்கூடிய விஷயங்களில் ஒன்று
    செய்முறை பயிற்சி.
  • 9:03 - 9:06
    பாடப்புத்தகங்களில் இருந்து மனப்பாடம்
    செய்தல் கூடாது,
  • 9:06 - 9:07
    செய்முறை வழிகளை
  • 9:07 - 9:09
    கொண்டு கற்றலே அதிக பயனுள்ளது.
  • 9:09 - 9:12
    அடிப்படையில், என்னவென்றால், மாணவர்களிடம்
    மணிகள்,
  • 9:12 - 9:15
    கற்றல் தண்டுகள், அபாகஸ் போன்றவற்றை
    கொடுத்து கற்பித்தல்.
  • 9:15 - 9:18
    ஆனால் எங்களிடம் அதை 15000 பள்ளிகளுக்கும்
    20 லட்சம்
  • 9:18 - 9:20
    மாணவர்களுக்கும் கொடுக்க பணத்தொகை இல்லை.
  • 9:20 - 9:22
    எங்களுக்கு மற்றோரு தீர்வு வேண்டியிருந்தது.
  • 9:22 - 9:24
    வேறு யோசிக்க முடியவில்லை.
  • 9:24 - 9:27
    ஒரு நாள் எங்கள் குழுவில் ஒருவர்
    பள்ளிசென்று பார்க்கையில்,
  • 9:27 - 9:32
    ஒரு ஆசிரியர் தோட்டத்தில் இருந்து
    குச்சிகளையும், கற்களையும்
  • 9:32 - 9:33
    எடுத்து வகுப்பறையில் மாணவர்களுக்கு
  • 9:33 - 9:35
    கொடுத்தார்.
  • 9:36 - 9:39
    அந்த நொடி எங்களுக்கு பெரிய
    கண்திறப்பாக இருந்தது.
  • 9:40 - 9:42
    இன்று ஹரியானாவில், பாடப்புத்தகங்களில்
    என்ன நடக்கிறது என்றால்
  • 9:43 - 9:45
    ஒவ்வொரு கருத்துப்படிவத்திற்கும் ஒரு
    சின்ன பேட்டி இருக்கும்
  • 9:45 - 9:48
    ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க
    வழிமுறைகள் வழங்குவதோடு
  • 9:48 - 9:52
    "இந்த கருத்தை கற்பிக்க, இந்த செய்முறையை
    நீங்கள் செய்யலாம் " என்றிருக்கும் .
  • 9:52 - 9:55
    இதன் மூலம் இந்த செய்முறையை செய்ய
    உடனடியாக இந்த சூழலில் கிடைக்கும்
  • 9:55 - 9:58
    பொருட்களை, தோட்டத்திலிருந்தோ ,
    வகுப்பறையிலிருந்தோ எடுத்து,
  • 9:58 - 10:01
    அதனை பாடம் நடத்த உதவும் கருவிகளாக
  • 10:01 - 10:04
    குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.
  • 10:04 - 10:07
    மேலும், ஹரியாணா முழுவதிலும் ஆசிரியர்கள்
  • 10:07 - 10:10
    பலவிதமான யுக்திகளை பயன்படுத்தி
    மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள்
  • 10:11 - 10:14
    இந்த வழியில் நாங்கள் வகுத்த தீர்வை
  • 10:14 - 10:16
    உண்மையில் செயல்படுத்த முடிந்தது,
  • 10:16 - 10:19
    15000 பள்ளிகளிலும்,முழுவதுமாக,
    முதல் நாள் துடங்கி.
  • 10:20 - 10:22
    கடைசியாக,
  • 10:23 - 10:26
    இதை எப்படி 15000 பள்ளிகள் முழுவதிலும்,
    1 லட்சம் ஆசிரியர்களிடத்தும்
  • 10:26 - 10:28
    செயற்படுத்த முடிந்தது?
  • 10:28 - 10:30
    இந்த இலாகா ஒரு சுவாரசியமான
    நடைமுறையை
  • 10:30 - 10:32
    பயன்படுத்தினார்கள்.
  • 10:32 - 10:34
    அதை நான், "நம்பிக்கை சங்கிலி"
    என்று கூற விரும்புகிறேன்.
  • 10:36 - 10:39
    தலைமையகத்திலிருந்து ஒரு கடிதம்
    எழுதி
  • 10:39 - 10:40
    அடுத்த நிலையான மாவட்ட
  • 10:40 - 10:42
    அலுவலகத்திற்கு அனுப்புவார்கள்.
  • 10:42 - 10:45
    ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும்,ஒரு
    அதிகாரி அதனை பிரித்து
  • 10:45 - 10:49
    படித்து,
  • 10:49 - 10:51
    மேலும் அடுத்த நிலையான
  • 10:51 - 10:53
    தொகுதி அலுவலங்களுக்கு அனுப்புவார்கள்.
  • 10:53 - 10:57
    என்று நம்பினார்கள்.தொகுதி அலுவலகத்தில்
  • 10:57 - 10:58
    வேறொருவர் கடிதத்தை பெற்று
  • 10:58 - 11:02
    பிரித்து,படித்து, இதேபோல 15000
    தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்ப எண்ணினர் .
  • 11:02 - 11:05
    தலைமை ஆசிரியர்கள் அனைவரும் இதனை பெற்று,
  • 11:05 - 11:08
    அதிலுள்ளதை புரிந்து
  • 11:08 - 11:10
    செயல்படுத்த துவங்குவார்கள் என நம்பினர்
  • 11:10 - 11:11
    கொஞ்சம் கேலிக்குரியதாக தோன்றியது.
  • 11:13 - 11:15
    இதற்கு தொழில்நுட்பமே விடை என்பதை
    அறிந்த நாங்கள்,
  • 11:15 - 11:17
    பெரும்பாண்மையான பள்ளிகளில் கணினியோ,
    மின்னஞ்சல்
  • 11:17 - 11:19
    வசதியோ இல்லை என்பதையும் அறிந்திருந்தோம்
  • 11:20 - 11:24
    ஆனால் ஆசிரியர்களிடத்தில் ஸ்மார்ட்போன்ஸ்
    இருந்தன.
  • 11:24 - 11:28
    அவர்கள் தொடர்ந்து குறுந்செய்தி,முகநூல்
    மற்றும் வாட்ஸாப்ப்யை உபயோகிக்கின்றனர்.
  • 11:29 - 11:31
    இப்பொழுது ஹரியானாவில் என்ன நடக்கிறது
    என்றால்
  • 11:31 - 11:36
    பள்ளி முதல்வல்களும்,ஆசிரியர்களும்,
    நூற்றுக்கணக்கான வாட்ஸாப்ப் குழுமங்களாக
  • 11:36 - 11:38
    பிரிக்கப்பட்டுள்ளனர்.ஏதாவது செய்தி
    பரிமாற்றம் செய்ய
  • 11:38 - 11:41
    இந்த வாட்ஸாப்ப் குழுமத்தில் பதிவு செய்து
  • 11:41 - 11:44
    விடுகின்றனர்.
    அது காட்டுத்தீ போல் பரவுகிறது.
  • 11:44 - 11:47
    நீங்கள் உடனுக்குடன் யார் செய்தியை
    பெற்று, படித்தார்கள்
  • 11:47 - 11:48
    என்பதையும் சரிபார்க்கலாம்
  • 11:48 - 11:52
    ஆசிரியர்கள் கணப்பொழுதில்,விளக்கங்கள்
    வினவலாம்.
  • 11:52 - 11:53
    இதில் சுவாரஸ்யம் என்னவென்றால்,
  • 11:53 - 11:57
    தலைமை அலுவலகத்திலிருந்து
    மட்டும் விடைகள் வருவதில்லை,
  • 11:57 - 11:59
    மாநிலத்தின் மற்றோரு பகுதியில் இருக்கும்
    ஆசிரியர்கலும்
  • 11:59 - 12:02
    விடையளிக்க முன்வருகிறார்கள்.
  • 12:02 - 12:05
    அனைவரும், அனைவரையும் சக ஊழியராக
    பாவித்து
  • 12:05 - 12:06
    இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • 12:08 - 12:10
    இன்று நீங்கள் ஹரியானாவில்
    வித்தியாசமான பள்ளிகளை
  • 12:10 - 12:12
    பார்க்க நேரிடும்.
  • 12:12 - 12:14
    ஆசிரியர்கள் மீண்டும் வகுப்பறைக்குள்
    இருக்கிறார்கள்,
  • 12:14 - 12:15
    பாடம் நடத்துகிறார்கள்.
  • 12:15 - 12:17
    அடிக்கடி புதுமையான யுக்திகளை
    கொண்டு.
  • 12:18 - 12:21
    மேற்பார்வையாளர் பள்ளிகளில் ஆய்வு
    மேற்கொள்ளும்போது
  • 12:21 - 12:25
    கழிவறைகள் கட்டப்பெற்றனவா என்பதனை
    மட்டும் பார்க்காமல்
  • 12:25 - 12:27
    தரமான கல்வி கற்பிக்க படுகிறதா என்பதனையும்
  • 12:28 - 12:31
    பார்க்கின்றனர்.காலாண்டுக்கு ஒரு முறை
    மாநிலத்தில் அனைத்து
  • 12:31 - 12:33
    மாணவர்களும் கற்றல் பயனை கொண்டு
  • 12:33 - 12:36
    சோதிக்கப்படுகிறார்கள்.நன்கு தேர்ச்சி
    பெரும் பள்ளிகளுக்கு
  • 12:36 - 12:39
    பரிசு வழங்கப்படுகிறது.சரியாக தேர்ச்சி
    பெறாத பள்ளிகள்
  • 12:39 - 12:41
    கடினமான உரையாடல்களை சந்திக்க
    நேர்கிறார்கள்.
  • 12:42 - 12:44
    அதுமட்டுமல்லாமல்,கூடுதல் உதவி
    பெறுகிறார்கள்
  • 12:44 - 12:46
    எதிர்காலத்தில் நன்கு தேர்ச்சியடைய.
  • 12:47 - 12:49
    கல்வியை பொறுத்தமட்டில் உடனடியாக
  • 12:49 - 12:51
    முன்னேற்ற முடிவுகள் தெரிவது
    மிகவும் கடினம்.
  • 12:52 - 12:55
    அதுவும் முறைப்படுத்தப்பட்ட ,பெரியளவிலான
    மாற்றம் பற்றி பேசும்பொழுது,
  • 12:55 - 12:58
    7 மற்றும் 10 ஆண்டுகள் காலவரை
    ஆகும் என எண்ணினர்.
  • 12:58 - 12:59
    ஆனால், ஹரியானாவில் இல்லை.
  • 13:00 - 13:04
    கடந்த ஒரு வருடத்தில்,மூன்று தனித்தனி
    ஆய்வுகள்
  • 13:04 - 13:07
    மாணவர்களின் பயனுள்ள கற்றல்
    முடிவுகளை ஆராய்ந்தபோது
  • 13:07 - 13:09
    அடிப்படையான ஒன்றை சுட்டிக்காட்டின,
  • 13:09 - 13:11
    ஏதோ விந்தையான ஒன்று ஹரியானாவில்
    நடக்கிறது.
  • 13:12 - 13:15
    குழந்தைகளின் கற்றல் அளவு சரிவதை
    நிறுத்தி
  • 13:15 - 13:16
    முன்னேற்றப்பாதையில் செல்லகிறது.
  • 13:16 - 13:20
    இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் ஒன்று,
    ஹரியானா
  • 13:20 - 13:21
    முன்னேற்றத்தை காண்பிக்கிறது,
  • 13:21 - 13:25
    நிச்சயமாக ,வேகமான முன்னேற்ற
    சவிகிதத்தையும் கூட.இவை
  • 13:26 - 13:27
    ஆரம்பநிலை அறிகுறிகள் தான்,
  • 13:27 - 13:29
    இன்னும் வெகுதூரம் போக
  • 13:29 - 13:31
    வேண்டியுள்ளது,ஆனால் இது எதிர்காலத்திற்கு
    நிறைய
  • 13:33 - 13:34
    நம்பிக்கை கொடுத்துள்ளது.நான்
  • 13:34 - 13:36
    சமீபத்தில் பள்ளிக்கு சென்று திரும்பிய
  • 13:36 - 13:38
    பொழுது,பார்வதி என்ற,
  • 13:38 - 13:39
    பெண்மணியை சந்தித்தேன்.
  • 13:39 - 13:40
    அவர்,அங்கு படிக்கும் மாணவரின்
  • 13:40 - 13:41
    தாய்.அவர் என்னை பார்த்து சிரித்தார்.
  • 13:42 - 13:45
    "நான், ஏன், என்னவாயிற்று ?"
    என்று வினவியபோது,
  • 13:45 - 13:48
    அவர் கூறினார், "என்ன நடக்கிறது என்று
    தெரியவில்லை ஆனால்,
  • 13:48 - 13:51
    என் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்பது
    புரிகிறது.
  • 13:51 - 13:52
    குதூகலமாக இருக்கிறார்கள்,
  • 13:52 - 13:55
    தற்போதைக்கு தனியார் பள்ளியை தேடி
    அனுப்பும் பணியை
  • 13:55 - 13:56
    நிறுத்தியுள்ளேன்."
  • 13:56 - 13:58
    அவ்விதமாய், நான் தொடங்கிய திரும்ப சென்று
  • 14:00 - 14:01
    பார்த்ததில், அரசு அமைப்புகள் மாறுமா?
  • 14:02 - 14:04
    நிச்சயமயாக, நம்புகிறேன்.
  • 14:04 - 14:06
    சரியான சுண்டிகளை கொடுத்தால், அவர்கள்,
  • 14:06 - 14:07
    மலைகளையும் புரட்டிபோடுவார்கள்.
  • 14:07 - 14:08
    நன்றி.
  • 14:08 - 14:11
    (கரகோஷம்)
Title:
எப்படி பயன்தராத கல்வி கற்றல் முறையை மாற்றுவது?....பணத்தேவையில்லாமல்
Speaker:
சீமா பன்சால்
Description:

சீமா பன்சால், இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் 15000 பள்ளிகளில், பொது கல்வித்துறையை சீர்திருத்த லட்சிய இலக்கை வைத்தார். 2020 ஆம் ஆண்டிற்குள், 80 சதவிகித மாணவர்கள் தகுதிப்படி அறிவை கொண்டிருப்பார்கள். இந்த லட்சியத்தினை கூடுதல் வளங்கள் இல்லாமல் செய்து முடித்து, சீர்திருத்தம் கொண்டுவரவே அவர் எண்ணுகிறார். பன்சால் மற்றும் அவரது குழுவினர், நேர்பட, புது யுக்திகளான குறுந்செய்தி, குழு பகிர்தல் போன்றவற்றின் மூலம் வெற்றி காண்கின்றனர். மேலும், ஏற்கனவே, ஹரியானாவில் மாணவர்கள் கற்கும் மற்றும் ஈடுபாட்டு அளவில் முன்னேற்றத்தை அளந்துள்ளனர்.

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
14:28

Tamil subtitles

Revisions