Return to Video

Level 4 division

  • 0:01 - 0:06
    நான்காம் நிலை வகுத்தலுக்கான விளக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.
  • 0:06 - 0:10
    மூன்றாம் நிலை வகுத்தலை விட நான்காம் நிலை வகுத்தலை கடினமாக்குவது எது எனில்
  • 0:10 - 0:15
    ஓரிலக்க எண்ணால் வகுப்பதற்கு பதிலாக பல இலக்க எண்ணால் வகுப்பது ஆகும்.
  • 0:15 - 0:18
    இப்பொழுது நாம் ஒரு பல இலக்க எண்ணை ஒரு இரண்டிலக்க எண்ணால் வகுக்கப் போகிறோம்.
  • 0:18 - 0:22
    நாம் சில பயிற்சிக் கணக்குகளிலிருந்து தொடங்குவோம்.
  • 0:22 - 0:26
    ஒப்பீட்டளவில் எளிதான எடுத்துக்காட்டுகளிலிருந்து நாம் தொடங்குவோம்.
  • 0:26 - 0:27
    நீங்கள் பார்க்கப்போகும் நான்காம் நிலை கணக்குகள்
  • 0:27 - 0:28
    உண்மையிலேயே இதை விட சற்று கடினமானவை ஆகும்.
  • 0:28 - 0:40
    ஆனால் ஆறாயிரத்து இருநூற்று ஐம்பது வகுத்தல் இருபத்தைந்து என்பது என்னிடம் உள்ளது என வைத்துக்கொள்வோம்.
  • 0:40 - 0:47
    இதைப் பற்றி சிந்திப்பதற்கான மிகச்சிறந்த வழி நீங்கள் சொல்வது, சரி, என்னிடம் இருபத்து-ஐந்து உள்ளது.
  • 0:47 - 0:49
    இருபத்து-ஐந்தால் ஆறை வகுக்க முடியுமா?
  • 0:49 - 0:49
    முடியாது.
  • 0:49 - 0:53
    தெளிவாக, ஆறு என்பது இருபத்து-ஐந்தை விடச் சிறியதாகும், எனவே இருபத்து-ஐந்தால் ஆறை வகுக்க முடியாது.
  • 0:53 - 0:57
    பின்பு உங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்ளுங்கள், எனவே இருபத்து-ஐந்தால் ஆறை வகுக்க முடியாது என்றால்,
  • 0:57 - 0:59
    இருபத்து-ஐந்தால் அறுபத்து-இரண்டை வகுக்க முடியுமா?
  • 0:59 - 1:00
    நிச்சயமாக.
  • 1:00 - 1:04
    அறுபத்து-இரண்டு என்பது இருபத்து-ஐந்தை விடப் பெரியதாகும், எனவே இருபத்து-ஐந்தால் அறுபத்து-இரண்டை வகுக்க முடியும்.
  • 1:04 - 1:05
    நாம் அதைப்பற்றி சிந்திப்போம்.
  • 1:05 - 1:07
    இருபத்து-ஐந்து பெருக்கல் ஒன்று சமம் இருபத்து-ஐந்து.
  • 1:07 - 1:11
    இருபத்து-ஐந்து பெருக்கல் இரண்டு சமம் ஐம்பது.
  • 1:11 - 1:13
    எனவே, அது அறுபத்து-இரண்டில் குறைந்தபட்சம் இரண்டு முறை செல்கின்றது.
  • 1:13 - 1:16
    மேலும், இருபத்து-ஐந்து பெருக்கல் மூன்று சமம் எழுபத்து-ஐந்து.
  • 1:16 - 1:17
    அது மிகவும் அதிகமாக இருக்கின்றது.
  • 1:17 - 1:21
    எனவே அறுபத்து-இரண்டில் குறைந்தது இரண்டு இருபத்து-ஐந்து உள்ளது.
  • 1:21 - 1:25
    இதைக் கண்டுபிடிப்பதற்கு எந்த விதமான இயந்திரத்தனமான வழியும் இல்லை.
  • 1:25 - 1:27
    நீங்கள் அதைப்பற்றி சிந்திக்க வேண்டும்,
  • 1:27 - 1:28
    சரி, அறுபத்து-இரண்டில் இருபத்து-ஐந்து எத்தனை முறை செல்கின்றது?
  • 1:28 - 1:29
    சில சமயங்களில் உங்களுக்கு தவறான விடை கிடைக்கக்கூடும்.
  • 1:29 - 1:31
    சில சமயங்களில் நீங்கள் இங்கே ஒரு எண்ணை எழுதுவீர்கள்.
  • 1:31 - 1:33
    எனக்குத் தெரியவில்லை எனில், நான் இங்கு மூன்றை எழுதியிருப்பேன்,
  • 1:33 - 1:34
    பின்பு, நான் மூன்று பெருக்கல் இருபத்து-ஐந்து என நான் சொல்லியிருப்பேன்
  • 1:34 - 1:36
    இங்கு எழுபத்து-ஐந்து என நான் பெற்றிருப்பேன்.
  • 1:36 - 1:37
    பின்பு, அது அந்த எண்ணை விடப் பெரியதாக இருந்திருக்கும்.
  • 1:37 - 1:40
    எனவே, நான் திரும்பவும் சென்று அதை இரண்டு என மாற்றியிருப்பேன்.
  • 1:40 - 1:44
    அதே போன்று, நான் அங்கு ஒன்று என எழுதியிருந்தால், ஒன்று பெருக்கல் இருபத்து-ஐந்து என நான் செய்திருப்பேன்,
  • 1:44 - 1:46
    நான் அதைக் கழிக்கும்போது,
  • 1:46 - 1:48
    எனக்குக் கிடைத்த வேறுபாடு இருபத்து-ஐந்தை விட அதிகமாக இருந்திருக்கும்.
  • 1:48 - 1:50
    பின்பு, ஒன்று என்பது மிகவும் சிறியது என்பது எனக்குத் தெரிந்திருக்கும்.
  • 1:50 - 1:52
    நான் அதை இரண்டு என அதிகரித்திருக்க வேண்டும்.
  • 1:52 - 1:53
    நான் உங்களை அதிகம் குழப்பவில்லை என நினைக்கிறேன்.
  • 1:53 - 1:56
    நீங்கள் ஒரு சிறுவனைப் போன்று இருப்பதால், நான் உங்களை அதிகமாக பதட்டமடையச் செய்ய விரும்பவில்லை,
  • 1:56 - 2:00
    ஒவ்வொரு முறை படியை நான் விளக்கும்போதும் அது இதைப் போன்று தெரிகின்றது --
  • 2:00 - 2:01
    அந்த முறையின் வகைக்கு எதிராக
  • 2:01 - 2:03
    அந்த எண் என்ன என்பதை நான் ஊகிக்க வேண்டும்.
  • 2:03 - 2:05
    அது உண்மை. ஒவ்வொருவரும் அதைச் செய்ய வேண்டும்.
  • 2:05 - 2:09
    எனவே எப்படியாவது, இருபத்து-ஐந்தானது அறுபத்து இரண்டில் இரண்டு முறை செல்கின்றது.
  • 2:09 - 2:10
    இப்பொழுது இரண்டு பெருக்கல் இருபத்து-ஐந்து என்பதை நாம் பெருக்குவோம்.
  • 2:10 - 2:14
    நல்லது, இரண்டு பெருக்கல் ஐந்து சமம் பத்து.
  • 2:14 - 2:19
    பின்பு இரண்டு பெருக்கல் இரண்டு கூட்டல் ஒன்று சமம் ஐந்து.
  • 2:19 - 2:22
    இருபத்து-ஐந்து பெருக்கல் இரண்டு சமம் ஐம்பது என்பது நமக்குத் தெரியும்.
  • 2:22 - 2:23
    பின்பு நாம் கழிக்கிறோம்.
  • 2:23 - 2:25
    இரண்டு கழித்தல் பூச்சியம் சமம் இரண்டு.
  • 2:25 - 2:28
    ஆறு கழித்தல் ஐந்து சமம் ஒன்று.
  • 2:28 - 2:31
    இப்பொழுது நாம் ஐந்தை கீழே இறக்குகிறோம்.
  • 2:31 - 2:32
    மீதமுள்ள செயல்கள்
  • 2:32 - 2:36
    மூன்றாம் நிலை வகுத்தல் கணக்கினைப் போன்று மிகவும் எளிமையானவை ஆகும்.
  • 2:36 - 2:41
    இப்பொழுது நாம் நமக்குள்ளே கேட்டுக்கொள்வோம், நூற்று இருபத்து-ஐந்தில் இருபத்து-ஐந்து எத்தனை முறை செல்கின்றது?
  • 2:41 - 2:44
    நான் சிந்திக்கும் வழியில், இருபத்து-ஐந்து --
  • 2:44 - 2:45
    அது நூறில் சுமார் நான்கு முறை செல்கின்றது --
  • 2:45 - 2:48
    எனவே, அது நூற்று இருபத்து-ஐந்தில் மேலும் ஒரு முறை செல்லும்.
  • 2:48 - 2:50
    அது அதில் ஐந்து முறைகள் செல்லும்.
  • 2:50 - 2:51
    உங்களுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை எனில், நீங்கள் நான்கை முயற்சி செய்யலாம்.
  • 2:51 - 2:53
    பின்பு, உங்களுக்கு அதிகமாக மீதி கிடைப்பதை நீங்கள் காண்பீர்கள்.
  • 2:53 - 2:58
    அல்லது, நீங்கள் ஆறை முயற்சி செய்தால், உண்மையில் நீங்கள் பெறுவது--
  • 2:58 - 3:00
    ஆறு பெருக்கல் இருபத்து-ஐந்து என்பது நூற்று இருபத்து-ஐந்து என்பதை விடப் பெரிய எண் ஆகும்.
  • 3:00 - 3:02
    எனவே நீங்கள் ஆறை உபயோகப்படுத்த முடியாது.
  • 3:02 - 3:07
    இருபத்து-ஐந்தானது நூற்று இருபத்து-ஐந்தில் ஐந்து முறை செல்கின்றது என நாம் கூறினால்,
  • 3:07 - 3:14
    நாம் பெருக்கினால், ஐந்து பெருக்கல் ஐந்து சமம் இருபத்து-ஐந்து.
  • 3:14 - 3:17
    ஐந்து பெருக்கல் இரண்டு சமம் பத்து கூட்டல் இரண்டு.
  • 3:17 - 3:18
    நூற்று இருபத்து-ஐந்து.
  • 3:18 - 3:19
    எனவே அது சரியாக வகுபடுகின்றது.
  • 3:19 - 3:22
    எனவே நூற்று இருபத்து-ஐந்து கழித்தல் நூற்று இருபத்து-ஐந்து என்பது தெளிவாக பூச்சியம் ஆகும்.
  • 3:22 - 3:25
    பின்பு நாம் இந்த பூச்சியத்தை கீழே இறக்குகிறோம்.
  • 3:25 - 3:28
    மேலும், பூச்சியத்தில் இருபத்து-ஐந்து, பூச்சியம் முறை செல்கின்றது.
  • 3:28 - 3:29
    பூச்சியம் பெருக்கல் இருபத்தைந்து சமம் பூச்சியம்.
  • 3:29 - 3:31
    மீதி பூச்சியம் ஆகும்.
  • 3:31 - 3:40
    எனவே, இருபத்து-ஐந்தானது ஆறாயிரத்து இருநூற்று ஐம்பதில் மிகச் சரியாக இருநூற்று ஐம்பது முறை செல்வதை நாம் காண்கிறோம். .
  • 3:40 - 3:46
    நாம் மற்றொரு கணக்கைச் செய்வோம்.
  • 3:46 - 3:51
    என்னிடம் -- நான் பிடித்தமான ஒரு எண்ணை எடுத்துக்கொள்கிறேன்.
  • 3:51 - 3:55
    என்னிடம் பதினைந்து இருக்கின்றது எனக் கொள்வோம்,
  • 3:55 - 4:06
    மேலும், அது இரண்டாயிரத்து இருநூற்று அறுபத்து-ஐந்தில் எத்தனை முறை செல்கின்றது என நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
  • 4:06 - 4:07
    இதற்கு முன்பு நாம் செய்ததைப் போன்றே இப்பொழுதும் செய்வோம்.
  • 4:07 - 4:10
    சரி, பதினைந்தால் இரண்டை வகுக்க முடியுமா?.
  • 4:10 - 4:11
    முடியாது.
  • 4:11 - 4:13
    எனவே, பதினைந்தால் இருபத்து-இரண்டை வகுக்க முடியுமா?
  • 4:13 - 4:13
    நிச்சயமாக.
  • 4:13 - 4:16
    இருபத்து-இரண்டில் பதினைந்து ஒரு முறை செல்கின்றது.
  • 4:16 - 4:18
    இருபத்து-இரண்டுக்கு மேல் நாம் ஒன்று என எழுதுவதை கவனியுங்கள்.
  • 4:18 - 4:21
    அது இரண்டை வகுப்பதாக இருந்தால், ஒன்று என்பதை நாம் இங்கே எழுதியிருப்போம்.
  • 4:21 - 4:23
    ஆனால், இருபத்து-இரண்டில் பதினைந்து ஒரு முறை செல்கின்றது.
  • 4:23 - 4:28
    ஒன்று பெருக்கல் பதினைந்து சமம் பதினைந்து. சரியா?
  • 4:28 - 4:33
    இருபத்து-இரண்டு கழித்தல் பதினைந்து—மீதமுள்ள அனைத்துக்கும் நாம் செய்ய முடியும் – ஒன்று, பன்னிரண்டு.
  • 4:33 - 4:36
    பன்னிரண்டு கழித்தல் ஐந்து சமம் ஏழு.
  • 4:36 - 4:38
    ஒன்று கழித்தல் ஒன்று சமம் பூச்சியம்.
  • 4:38 - 4:40
    இருபத்து-இரண்டு கழித்தல் பதினைந்து சமம் ஏழு.
  • 4:40 - 4:43
    ஆறை கீழே கொண்டுவரவும்.
  • 4:43 - 4:47
    சரி, இப்பொழுது எழுபத்து-ஆறில் பதினைந்து எத்தனை முறை செல்கின்றது?
  • 4:47 - 4:50
    மீண்டும், அதைச் செய்வதற்கு எளிமையான இயந்திரத்தனமான வழி எதுவும் இல்லை.
  • 4:50 - 4:53
    நீங்கள் அதை கண்ணால் பார்த்து மதிப்பிட முடியும்.
  • 4:53 - 4:56
    நன்று, பதினைந்து பெருக்கல் இரண்டு சமம் முப்பது.
  • 4:56 - 4:58
    பதினைந்து பெருக்கல் நான்கு சமம் அறுபது.
  • 4:58 - 5:02
    பதினைந்து பெருக்கல் ஐந்து சமம் எழுபத்து-ஐந்து.
  • 5:02 - 5:08
    மிகவும் நெருங்கிவிட்டோம், எனவே பதினைந்து ஆனது எழுபத்து-ஐந்தில் ஐந்து முறை செல்கின்றது என நாம் கூற முடியும்.
  • 5:08 - 5:12
    எனவே, ஐந்து பெருக்கல் ஐந்து என்பது மீண்டும், ஏற்கனவே நான் செய்தது என்னுடைய நினைவில் உள்ளது,
  • 5:12 - 5:14
    ஆனால் நான் அதை மீண்டும் செய்கிறேன்.
  • 5:14 - 5:15
    ஐந்து பெருக்கல் ஒன்று சமம் ஐந்து.
  • 5:15 - 5:18
    கூட்டல் ஏழு.
  • 5:18 - 5:21
    ஓ, மன்னிக்கவும்.
  • 5:21 - 5:26
    ஐந்து பெருக்கல் ஐந்து சமம் இருபத்து-ஐந்து.
  • 5:26 - 5:27
    ஐந்து பெருக்கல் ஒன்று சமம் ஐந்து.
  • 5:27 - 5:30
    கூட்டல் இரண்டு சமம் ஏழு.
  • 5:30 - 5:32
    இப்பொழுது நாம் கழிப்போம்.
  • 5:32 - 5:35
    எழுபத்து-ஆறு கழித்தல் எழுபத்து-ஐந்து என்பது தெளிவாக ஒன்று ஆகும்.
  • 5:35 - 5:38
    அந்த ஐந்தை கீழே இறக்கவும்.
  • 5:38 - 5:42
    நல்லது, பதினைந்து ஆனது பதினைந்தில் மிகச் சரியாக ஒரு முறை செல்கின்றது.
  • 5:42 - 5:48
    ஒன்று பெருக்கல் பதினைந்து சமம் பதினைந்து.
  • 5:48 - 5:50
    அதைக் கழித்தால், மீதி நமக்கு பூச்சியம் எனக் கிடைக்கின்றது.
  • 5:50 - 5:57
    எனவே, பதினைந்து ஆனது இரண்டாயிரத்து இருநூற்று அறுபத்து-ஐந்தில் மிகச் சரியாக நூற்று ஐம்பத்து-ஒரு முறை செல்கின்றது.
  • 5:57 - 6:00
    இங்கு நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றியும்,
  • 6:00 - 6:04
    இங்கே ஓரிலக்க எண் இருக்கும்போது உள்ளதை விட இது ஏன் சற்று கடினமாக உள்ளது என்பதையும் நினைத்துப் பாருங்கள்.
  • 6:04 - 6:06
    இதைப் பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்க விரும்பினீர்களா,
  • 6:06 - 6:10
    நல்லது, இந்த இரண்டிலக்க எண் இந்தப் பெரிய எண்ணில் எத்தனை முறை செல்கின்றது?
  • 6:10 - 6:15
    மேலும், உங்களுக்கு இரண்டிலக்க பெருக்கல் வாய்பாடு தெரியாது என்பதால் -- மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும் --
  • 6:15 - 6:16
    நீங்கள் சற்று ஊகித்து இதைச் செய்ய வேண்டும்.
  • 6:16 - 6:18
    சில சமயங்களில் நீங்கள் இந்த முதலாவது இலக்கத்தைப் பார்க்கலாம்
  • 6:18 - 6:21
    இங்கே உள்ள முதலாவது இலக்கத்தைப் பார்த்து ஒரு தோராய மதிப்பீட்டை மேற்கொள்ளுங்கள்.
  • 6:21 - 6:22
    ஆனால் சில சமயங்களில் இது முயன்று தவறிக் கற்றலாக இருக்கும்.
  • 6:22 - 6:24
    நீங்கள் முயற்சி செய்வீர்கள், மேலும் நீங்கள் அதைப் பெருக்கும்போது,
  • 6:24 - 6:26
    முதலாவது முயற்சியில் உங்களுக்கு தவறான விடை கிடைக்கலாம்.
  • 6:26 - 6:28
    நாம் மற்றொரு கணக்கைச் செய்வோம்.
  • 6:28 - 6:29
    உண்மையில், எண்களை நான் தற்போக்கான முறையில் எடுக்கப் போகிறேன்.
  • 6:29 - 6:31
    எனவே, அதை நினைவில் வைத்துக்கொள்வது எளிமையானதாக இருக்காது.
  • 6:31 - 6:32
    ஆனால், உங்களுக்கு கருத்து புரிந்திருக்கும் என நான் நினைக்கிறேன்.
  • 6:32 - 6:34
    இப்பொழுது நான் தசம எண்களை உங்களுக்குக் கற்பிக்கவில்லை,
  • 6:34 - 6:37
    எனவே இங்கே மீதி இருந்தால் அதை நான் விட்டுவிடுகிறேன்.
  • 6:37 - 6:50
    ஐந்தாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து-எட்டு வகுத்தல் அறுபத்து-ஏழு என்பது என்னிடம் இருப்பதாக கொள்வோம்.
  • 6:50 - 6:52
    இந்த எண்களை நான் வெறுமனே என்னுடைய நினைவிலிருந்து தற்போக்காக தேர்ந்தெடுத்தேன்,
  • 6:52 - 6:57
    இந்த இரண்டிலக்க எண்களில் ஏதேனும் ஒன்று பெரிய எண்ணில் எத்தனை முறை செல்கின்றது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு
  • 6:57 - 7:00
    சில நேரங்களில் நான் சிறிது ஊகிக்கவும் செய்ய வேண்டும் என்பதை நான் உங்களுக்குக் காண்பிப்பேன்.
  • 7:00 - 7:04
    அறுபத்து-ஏழு, ஐந்தில் பூச்சியம் முறை செல்கின்றது.
  • 7:04 - 7:07
    அறுபத்து-ஏழு, ஐம்பத்து-ஒன்பதில் பூச்சியம் முறை செல்கின்றது.
  • 7:07 - 7:13
    அறுபத்து-ஏழு, ஐநூற்று தொண்ணூற்று-ஏழில் வகுபடுகின்றது -- நாம் பார்க்கலாம்.
  • 7:13 - 7:20
    அறுபத்து-ஏழு என்பது கிட்டத்தட்ட எழுபது ஆகும், மேலும் ஐநூற்று தொண்ணூற்று-ஏழு என்பது கிட்டத்தட்ட அறுநூறு ஆகும்.
  • 7:20 - 7:28
    அது எழுபதால் வகுபட்டால் -- எழுபது பெருக்கல் ஒன்பது சமம் அறுநூற்று முப்பது. சரியா?
  • 7:28 - 7:30
    ஏனெனில் ஏழு பெருக்கல் ஒன்பது சமம் அறுபத்து-மூன்று.
  • 7:30 - 7:33
    நான் கண் பார்வையால் தோராயமாக கணக்கிடப்போகிறேன்.
  • 7:33 - 7:35
    அது அதில் எட்டு முறை செல்கின்றது என நான் கூறப்போகிறேன்.
  • 7:35 - 7:39
    அது தவறாகவும் இருக்கலாம்.
  • 7:39 - 7:40
    நீங்கள் எப்பொழுதும் அதை சரிபார்த்துக் கொள்ளவேண்டும்,
  • 7:40 - 7:43
    ஆனால், முக்கியமாக உண்மையிலேயே நாம் இந்தப் படியை பரிசோதிக்கப் போகிறோம்.
  • 7:43 - 7:48
    எட்டு பெருக்கல் ஏழு - அது ஐம்பத்து-ஆறு ஆகும்.
  • 7:48 - 7:51
    பின்பு எட்டு பெருக்கல் ஆறு சமம் நாற்பத்து-எட்டு.
  • 7:51 - 7:57
    கூட்டல் இரண்டு சமம் ஐம்பத்து மூன்று.
  • 7:57 - 7:59
    ஏழு கழித்தல் ஆறு சமம் ஒன்று.
  • 7:59 - 8:02
    ஒன்பது கழித்தல் மூன்று சமம் ஆறு.
  • 8:02 - 8:04
    ஐந்து கழித்தல் ஐந்து சமம் பூச்சியம்.
  • 8:04 - 8:05
    அறுபத்து-ஒன்று.
  • 8:05 - 8:06
    நல்லது. நான் அதை சரியாக கண்டுபிடித்துவிட்டேன்.
  • 8:06 - 8:12
    ஏனெனில், இதைவிடப் பெரிதான ஒரு எண் இங்கே எனக்கு இருந்தால் -- அதாவது அறுபத்து-ஏழு அல்லது அதைவிடப் பெரிதாக,
  • 8:12 - 8:15
    இங்கே இருக்கும் இந்த எண் அந்த அளவுக்குப் பெரிதாக இல்லை என்பதை இது குறிக்கின்றது.
  • 8:15 - 8:17
    ஆனால் இங்கு, என்னிடம் ஒரு மிகை எண் உள்ளது,
  • 8:17 - 8:21
    ஏனெனில் ஐநூற்று முப்பத்து-ஆறு என்பது ஐநூற்று தொண்ணூற்று-ஏழை விட சிறியது ஆகும்.
  • 8:21 - 8:24
    இது அறுபத்து-ஏழை விடச் சிறியது ஆகும், எனவே நான் அந்தப் படியை சரியாகச் செய்திருக்கிறேன்.
  • 8:24 - 8:28
    இப்பொழுது நான் இந்த எட்டை கீழே இறக்குகிறேன்.
  • 8:28 - 8:31
    இப்பொழுது, இது இந்தச் சமயத்தில் சற்று குழப்புவதாக இருக்கக்கூடும்.
  • 8:31 - 8:36
    மீண்டும், நம்மிடம் கிட்டத்தட்ட எழுபது இருக்கின்றது, மேலும் இங்கு நம்மிடம் கிட்டத்தட்ட அறுநூற்று முப்பது இருக்கின்றது.
  • 8:36 - 8:38
    அநேகமாக அது அதற்குள் ஒன்பது முறை செல்லும்.
  • 8:38 - 8:42
    நன்று, நாம் முயற்சி செய்து, அது சரியாக இருக்குமா எனப் பார்போம்.
  • 8:42 - 8:49
    ஒன்பது பெருக்கல் ஏழு சமம் அறுபத்து-மூன்று.
  • 8:49 - 8:52
    ஒன்பது பெருக்கல் ஆறு சமம் ஐம்பத்து-நான்கு.
  • 8:52 - 8:54
    கூட்டல் ஆறு சமம் அறுபது.
  • 8:54 - 8:55
    நன்று!
  • 8:55 - 8:56
    எனவே, அது உண்மையில் ஒன்பது முறை செல்கின்றது.
  • 8:56 - 8:59
    ஏனெனில் அறுநூற்று மூன்று என்பது அறுநூற்று பதினெட்டு என்பதை விடச் சிறியது ஆகும்.
  • 8:59 - 9:02
    பதினெட்டு கழித்தல் மூன்று சமம் ஐந்து.
  • 9:02 - 9:05
    ஒன்று கழித்தல் பூச்சியம் சமம் ஒன்று.
  • 9:05 - 9:08
    ஆறு கழித்தல் ஆறு சமம் பூச்சியம்.
  • 9:08 - 9:13
    நமக்கு மீதி பதினைந்து கிடைக்கின்றது, இது அறுபத்து-ஏழை விடச் சிறியது ஆகும்.
  • 9:13 - 9:15
    நான் உங்களுக்கு தசம எண்களைப் பற்றி இப்பொழுது கற்பிக்கப் போவதில்லை,
  • 9:15 - 9:17
    எனவே அந்த மீதியை நாம் விட்டுவிடலாம்.
  • 9:17 - 9:24
    எனவே, அறுபத்து-ஏழு ஆனது ஐந்தாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து-எட்டில் எண்பத்து-ஒன்பது முறை செல்கின்றது என நாம் கூற முடியும்.
  • 9:24 - 9:25
    அது எண்பத்து-ஒன்பது முறை செல்லும்போது,
  • 9:25 - 9:29
    உங்களுக்கு பதினைந்து மீதியாக கிடைக்கின்றது.
  • 9:29 - 9:34
    இப்பொழுது நீங்கள் சில நான்காம் நிலை வகுத்தல் கணக்குகளை முயற்சி செய்வதற்கு நம்பிக்கையுடன் தயாராக இருப்பீர்கள்.
  • 9:34 - 9:35
    மகிழ்ச்சியாக இருங்கள்!
Title:
Level 4 division
Description:

Dividing a two digit number into a larger number

more » « less
Video Language:
English
Duration:
09:35
Kumar Raju edited Tamil subtitles for Level 4 division
Kumar Raju edited Tamil subtitles for Level 4 division
Kumar Raju edited Tamil subtitles for Level 4 division
Kumar Raju edited Tamil subtitles for Level 4 division

Tamil subtitles

Revisions