Return to Video

நம்மில் சிலருக்கு ஏன் ஒரு விஷயத்தில் மட்டுமே உண்மையான ஆர்வம் இல்லை

  • 0:01 - 0:03
    உங்களிடத்தில்
    "நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்?"
  • 0:03 - 0:06
    என யாரேனும் கேள்வி கேட்டிருந்தால்
    கைகளை உயர்த்துங்கள்.
  • 0:07 - 0:08
    இப்போது யூகித்து சொல்லுங்கள்,
  • 0:08 - 0:12
    எவ்வளவு வயதாக இருக்கும்போது
    இக்கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டது?
  • 0:12 - 0:13
    விரல்களைக்
    காட்டினால் போதும்
  • 0:14 - 0:19
    மூன்று. ஐந்து. மூன்று. ஐந்து.
    ஐந்து. சரி.
  • 0:19 - 0:23
    "நீங்கள் வளரும்போது
    என்னவாக விரும்புகிறீர்கள்?"
  • 0:23 - 0:25
    இக்கேள்வி உங்களுக்கு
    கவலை ஏற்படுத்தவில்லை
  • 0:25 - 0:28
    என்பவர்கள்
    கையை உயர்த்தவும்
  • 0:28 - 0:30
    (சிரிப்பொலி)
  • 0:30 - 0:32
    எந்த கவலையாயினும்
  • 0:33 - 0:36
    என்னால் ஒருபோதும் இந்த கேள்விக்கு
    பதிலளிக்க முடியவில்லை
  • 0:36 - 0:38
    "நீங்கள் வளரும்போது
    என்னவாக விரும்புகிறீர்கள்?"
  • 0:38 - 0:42
    பிரச்சினை, எனக்கு ஆர்வம் இல்லை
    என்பதில்லை
  • 0:42 - 0:44
    அதிகமானவற்றில்
    ஆர்வம் இருந்ததே
  • 0:44 - 0:48
    உயர்நிலைப் பள்ளியில், எனக்கு ஆங்கிலம்,
    கணிதம், கலை பிடித்திருந்தது.
  • 0:48 - 0:53
    வலைத்தளம் அமைத்தேன், வித்தியாச பங்க்
    இசைக்குழுவில் கிட்டார் வாசித்தேன்
  • 0:53 - 0:55
    எங்கள் இசைக்குழு
    பற்றி அறிந்திருபீர்கள்.
  • 0:55 - 0:57
    (சிரிப்பொலி)
  • 0:57 - 0:59
    பள்ளிக்குப் பின்னும்
    இது தொடர்ந்தது,
  • 0:59 - 1:04
    ஒரு கட்டத்தில், இவ்வடிவத்தை நான்
    கவனிக்க தொடங்கினேன்
  • 1:04 - 1:06
    நான் ஒரு விஷயத்தில்
    ஆர்வமாக இருப்பேன்
  • 1:06 - 1:09
    அதில் முழுகி,
    எல்லாவற்றையும் உட்கொள்வேன்,
  • 1:09 - 1:13
    அது எதுவாக இருந்தாலும், நான் அதில்
    நன்றாக செயல்படுவேன்
  • 1:13 - 1:18
    பின்னர் ஒரு கட்டத்தில்
    நான் சலிப்படைந்து விடுவேன்
  • 1:18 - 1:21
    பெரும்பாலும் என் நேரம், ஆற்றல்,
  • 1:21 - 1:24
    சில நேரங்களில்
    பணமும் அர்ப்பணித்துள்ளதால்
  • 1:24 - 1:26
    பொதுவாக நான் அதை தொடர
    முயற்சி செய்வேன்
  • 1:26 - 1:29
    ஆனால் இறுதியில்
    இந்த சலிப்பு உணர்வு,
  • 1:29 - 1:33
    இனி இது சவாலானது அல்ல
    என்ற உணர்வு கிடைத்ததும்,
  • 1:33 - 1:35
    அதில் ஆர்வம்
    அதிகம் இருக்காது.
  • 1:36 - 1:37
    அதனால் அதை
    விட்டு விடுவேன்.
  • 1:38 - 1:41
    அதே வேளையில் வேறு எதிலாவது,
    ஆர்வம் வந்து விடும்
  • 1:41 - 1:44
    அதுவும் முற்றிலும்
    தொடர்பில்லாத ஒன்றாக இருக்கும்
  • 1:44 - 1:48
    அதில் மூழ்கி, "ஆம்! நான்
    இதை தான் விரும்புகிறேன்" என்பேன்
  • 1:48 - 1:53
    பின்னர்
    மீண்டும் சலிப்படைந்து
  • 1:53 - 1:56
    இறுதியில்,
    நான் அதை விடுவேன்.
  • 1:57 - 2:00
    மீண்டும் புதிய, முற்றிலும் மாறுபட்ட
    ஒன்றை கண்டுபிடிப்பேன்
  • 2:00 - 2:02
    அதில் மூழ்குவேன்.
  • 2:03 - 2:07
    இம்முறை இரண்டு
    காரணங்களுக்காக
  • 2:07 - 2:08
    எனக்கு கவலையை தந்தது,
  • 2:08 - 2:11
    முதலாவது, ஒன்றை எப்படி
    தொழிலாக்க போகிறேன் என்று
  • 2:11 - 2:14
    எனக்கு உறுதியாக தெரியவில்லை
  • 2:14 - 2:17
    ஒன்றை எடுத்து, இது தான் இறுதி
    என்று நினைத்து
  • 2:17 - 2:19
    மற்ற உணர்வுகள்
    அனைத்தையும் மறுப்பேன்
  • 2:19 - 2:23
    ஆனால் சலிப்படைந்து
    விடுவேன்
  • 2:24 - 2:26
    மற்றொரு காரணம்
    தனிப்பட்ட முறையில்
  • 2:26 - 2:28
    இது எனக்கு
    மிகவும் கவலை தந்தது
  • 2:28 - 2:31
    எதோடும் பொருந்த முடியாமல்
    போவதற்கு
  • 2:31 - 2:35
    என்னிடன் ஏதோ தவறு இருக்குமோ
    என நான் கவலைப்பட்டேன்
  • 2:36 - 2:38
    அர்ப்பணிப்புக்கு பயப்படுகிறேனோ
    என கவலைப்பட்டேன்,
  • 2:38 - 2:42
    என் சொந்த வெற்றிக்கு பயப்பட்டு
    சிதறடிக்கிறேனோ,
  • 2:42 - 2:43
    சுய நாசம் செய்கிறேனோ
    என வருந்தினேன்,
  • 2:45 - 2:49
    என் கதைக்கும், உணர்வுகளுக்கு,
    உங்களால் தொடர்புபடுத்த முடிந்தால்
  • 2:49 - 2:51
    உங்களை ஒரு கேள்வி
    கேட்க விரும்புகிறேன்
  • 2:51 - 2:54
    எப்போதோ நான்
    என்னிடமே கேட்டிருக்கலாம்
  • 2:55 - 3:00
    பல விஷயங்களைச் செய்வது தவறு அல்லது அசாதாரணமாது என
  • 3:00 - 3:02
    எங்கே கற்றுக்கொண்டீர்கள்
  • 3:04 - 3:05
    அதை நான் உங்களுக்கு சொல்கிறேன்:
  • 3:06 - 3:08
    கலாச்சாரத்திலிருந்து
    கற்றுக்கொண்டீர்கள்.
  • 3:10 - 3:14
    முதலில் "நீங்கள் என்னவாக
    விரும்புகிறீர்கள்?"
  • 3:14 - 3:15
    என ஐந்து வயதிலேயே
    கேட்கப்படுகிறது
  • 3:15 - 3:19
    உண்மையில் உங்கள் பதிலை
    யாரும் பொருட்படுத்துவதில்லை
  • 3:19 - 3:20
    (சிரிப்பொலி)
  • 3:20 - 3:23
    குழந்தைளின் அழகான பதில்களைப் பெற
    முன்வைக்கப்படும்
  • 3:23 - 3:25
    ஒரு தீங்கற்ற கேள்வியாக
    கருதப்படுகிறது,
  • 3:25 - 3:29
    அவர்களும் "விண்வெளி வீரராக"
    "நடன கலைஞராக விரும்புகிறேன்,"
  • 3:29 - 3:31
    "கடல் கொள்ளையனாக விரும்புகிறேன்."
    என்பர்
  • 3:31 - 3:33
    ஹாலோவீன்
    உடையும் கிடைக்கும்
  • 3:33 - 3:34
    (சிரிப்பொலி)
  • 3:34 - 3:39
    ஆனால் இந்த கேள்வி வயதாக ஆக
    மீண்டும் மீண்டும் கேட்கப்படுகிறது
  • 3:39 - 3:42
    பல்வேறு வடிவங்களில் - உதாரணமாக,
    உயர்நிலைப் பள்ளி மாணவர்களை
  • 3:42 - 3:45
    கல்லூரியில் என்ன பாடம்
    படிக்க போகிறார்கள்
  • 3:45 - 3:47
    மற்றும் ஒரு கட்டத்தில்,
  • 3:47 - 3:49
    "நீங்கள் என்னவாக
    விரும்புகிறீர்கள்?"
  • 3:49 - 3:52
    என்ற செல்லமான கேள்வி
  • 3:52 - 3:55
    இரவில் நம்மை
    தூங்க விடாது
  • 3:55 - 3:56
    ஏன்?
  • 3:57 - 4:02
    இந்த கேள்வி குழந்தைகளை
    கனவு காண ஊக்கமளிக்கிறது
  • 4:03 - 4:06
    ஆனால் அவர்கள் கனவு காணும்
    அனைத்தையும் பெற தூண்டுவதில்லை
  • 4:06 - 4:08
    உண்மையில், இது
    நேர்மாறாக இருக்கிறது,
  • 4:08 - 4:11
    ஏனெனில் நீங்கள் என்னவாக
    விரும்புகிறீர்கள் கேட்கும்போது
  • 4:11 - 4:14
    20 வெவ்வேறு விஷயங்களுடன்
    பதிலளிக்க முடியும்.
  • 4:14 - 4:17
    ஆனால் அக்கறையுள்ள பெரியவர்கள்
    சிரித்து விட்டு
  • 4:17 - 4:21
    "ஒரே நேரத்தில் வயலின் தயாரிப்பாளர்
    மற்றும் உளவியலாளர் ஆக முடியாது"
  • 4:21 - 4:23
    ஒன்றை தேர்வு செய்ய சொல்வர்
  • 4:24 - 4:26
    இது டாக்டர் பாப் சில்ட்ஸ் -
  • 4:26 - 4:29
    (சிரிப்பொலி)
  • 4:29 - 4:32
    அவர் ஒரு லூதியர் மற்றும்
    மனநல மருத்துவர்.
  • 4:33 - 4:37
    இது ஆமி என்ஜி, ஒரு பத்திரிகை ஆசிரியர்
    விளக்கப்படம் தயாரிப்பவர், தொழில்முனைவோர்,
  • 4:37 - 4:39
    ஆசிரியர் மற்றும் படைப்பு இயக்குனர்.
  • 4:39 - 4:42
    ஆனால் பெரும்பாலும் குழந்தைகள்
    இவர்களை கேள்விப்படுவதில்லை
  • 4:42 - 4:44
    அவர்கள் கேட்பதெல்லாம்
  • 4:44 - 4:46
    அவர்கள் தேர்வு
    செய்ய வேண்டும்.
  • 4:47 - 4:49
    ஆனால் இது
    அதை விட அதிகம்.
  • 4:49 - 4:52
    நமது கலாச்சாரம் குறுகிய கவனம்
    செலுத்தும் வாழ்க்கையில்
  • 4:52 - 4:55
    மிகவும் காதல் கொண்டது.
  • 4:55 - 4:59
    விதி அல்லது நம் உண்மையான
    ஆர்வத்தின் யோசனை,
  • 4:59 - 5:02
    இந்த பூமியில் நம் காலத்தில்,
    நாம் ஒவ்வொருவருக்கும்
  • 5:02 - 5:05
    ஒரு பெரிய திறமை இருப்பதை நாம் கண்டுபிடித்து,
  • 5:05 - 5:07
    அதற்காக நம் வாழ்க்கையை
  • 5:07 - 5:10
    அர்ப்பணிக்க வேண்டும்.
  • 5:11 - 5:14
    ஆனால் நீங்கள் அத்தகையவர் இல்லையெனில்?
  • 5:15 - 5:18
    நிறைய வித்தியாசமாக பாடங்களில்
    ஆர்வமாக இருந்தால்,
  • 5:18 - 5:20
    நிறைய விஷயங்கள்
    செய்ய விரும்பினால்?
  • 5:21 - 5:25
    அத்தகையவருக்கு இந்த கட்டமைப்பில் இடமில்லை
  • 5:26 - 5:28
    எனவே நீங்கள்
    தனிமையை உணரலாம்.
  • 5:28 - 5:31
    உங்களுக்கு ஒரு நோக்கம் இல்லை
    என்று உணரலாம்
  • 5:31 - 5:34
    உங்களிடம் ஏதோ தவறு இருக்கிறது
    எனவும் உணரலாம்
  • 5:35 - 5:36
    உங்களிடம் எந்த தவறும் இல்லை.
  • 5:37 - 5:41
    நீங்கள் ஒரு பன்முகத்தாளர்.
  • 5:41 - 5:43
    (சிரிப்பொலி)
  • 5:43 - 5:50
    (கைத்தட்டல்)
  • 5:50 - 5:55
    அதாவது, பல ஆர்வங்கள் மற்றும்
    ஆக்கபூர்வ நோக்கங்கள் கொண்டவர்
  • 5:56 - 5:58
    வாய் நிறைய சொல்லலாம்
  • 5:58 - 6:01
    மூன்று பகுதிகளாக
    அதை உடைத்தால், புரியும்
  • 6:01 - 6:05
    பன்முக, ஆற்றல், ஆளர்.
  • 6:05 - 6:08
    அதே கருத்தை குறிக்கும்
    மற்ற சொற்களையும் பயன்படுத்தலாம்
  • 6:08 - 6:11
    பாலிமத், மறுமலர்ச்சி நபர்
    போன்ற சொற்கள்
  • 6:11 - 6:13
    உண்மையில், மறுமலர்ச்சி காலத்தில்,
  • 6:13 - 6:17
    பன்துறை வல்லவராக இருந்தால் தான்
    நீங்கள் சிறந்தவர்
  • 6:17 - 6:20
    பார்பரா ஷெர் நம்மை
    "ஸ்கேனர்கள்" என்று குறிப்பிடுகிறார்.
  • 6:20 - 6:23
    விரும்பும் வார்த்தை அல்லது
    சொந்தமாக கூட ஒரு வார்த்தை கூறலாம்
  • 6:23 - 6:27
    ஒரு சமூகமாக, ஒரு அடையாளத்திற்குள்
    நாம் இருக்க முடியாது.
  • 6:27 - 6:29
    நீங்களூம் அதைப் பொருத்தமாகக் காண்பீர்கள்
  • 6:29 - 6:31
    (சிரிப்பொலி)
  • 6:33 - 6:35
    உங்கள் பன்முக ஆற்றலை
  • 6:35 - 6:39
    கடக்க வேண்டிய வரம்பு அல்லது
    துன்பமாக காண்பது எளிது
  • 6:39 - 6:42
    மக்களுடன் பேசும் போது,
  • 6:42 - 6:44
    வலைத்தளத்தில் இவற்றை பற்றி எழுதும்போதும்
  • 6:44 - 6:49
    நான் கற்றது, இந்த வழியில்
    பெரும் பலங்கள் உள்ளது
  • 6:50 - 6:52
    இதோ மூன்று
  • 6:52 - 6:55
    பன்முகத்தாளரின் சூப்பர் சக்திகள்.
  • 6:55 - 6:59
    முதலாவது: யோசனை தொகுப்பு.
  • 6:59 - 7:01
    அதாவது, இரண்டு அல்லது அதற்கு
    மேலான புலங்களை இணைத்து,
  • 7:01 - 7:04
    அதன் சந்திப்பில்.
    புதிய ஒன்றை உருவாக்குகிறது
  • 7:06 - 7:09
    ஷா ஹ்வாங், ரேச்சல் பின்க்ஸ்
    தங்களின் பகிரப்பட்ட
  • 7:09 - 7:14
    வரைபடம், தரவு காட்சிப்படுத்தல்,
    பயணம், கணிதம், வடிவமைப்பு
  • 7:14 - 7:16
    நலன்களிலிருந்து மெஷுவை
    நிறுவினர்.
  • 7:17 - 7:23
    மெஷு இடம் சார்ந்த
    நகைகள் உருவாக்கும் நிறுவனம்
  • 7:23 - 7:26
    ஷாவும் ரேச்சலும் தங்கள் திறன்
    மற்றும் அனுபவ கலவையால்
  • 7:26 - 7:32
    இந்த தனித்துவமான
    யோசனையுடன் வந்தார்கள்
  • 7:33 - 7:36
    புதுமைகள் இணைப்பில்
    நிகழ்கின்றன.
  • 7:37 - 7:39
    புதிய யோசனைகள்
    அங்கிருந்து தான் வருகின்றன
  • 7:40 - 7:43
    மற்றும் பந்முகத்தாளர்கள்
    அவர்களின் அனைத்து
  • 7:43 - 7:46
    பின்னணி அனுபவத்தால் இந்த
    சந்திப்பை அணுகுகின்றனர்
  • 7:48 - 7:51
    இரண்டாவது சூப்பர் பவர்
  • 7:51 - 7:53
    விரைவான கற்றல்.
  • 7:53 - 7:56
    பன்முகத்தாளராக நாம்
    ஆர்வம் கொண்டவற்றில்
  • 7:56 - 7:58
    கடுமையாக உழைக்கிறோம்.
  • 7:58 - 8:01
    நாங்கள் எல்லாவற்றையும் ஆழ்ந்து கவனிக்கிறோம்
  • 8:01 - 8:03
    நாங்கள் கடந்த காலத்தில் பல முறை,
  • 8:03 - 8:06
    தொடக்கநிலையாளர்களாக
    இருக்கப் பழகிவிட்டதால்,
  • 8:06 - 8:09
    புதிய விஷயங்களை முயற்சிக்க
    அதிகம் பயப்படுவதில்லை
  • 8:09 - 8:12
    சௌகரிய மண்டலத்திலிருந்து
    வெளியேற தயங்குவதில்லை
  • 8:12 - 8:16
    மேலும் பல திறன்கள்
    துறைகளுக்கேற்ப மாற்றக்கூடியவை,
  • 8:16 - 8:20
    நாம் கற்ற ஒவ்வொரு புதிய
    பகுதியையும் பயன்படுத்துவதால்
  • 8:20 - 8:22
    எதையும் புதிதாக ஆரம்பிக்க
    வேண்டியதில்லை
  • 8:23 - 8:27
    நோரா டன் ஒரு முழுநேர பயணி
    மற்றும் ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர்.
  • 8:27 - 8:31
    குழந்தை கச்சேரி பியானோ
    கலைஞராக, நம்பமுடியாத
  • 8:31 - 8:33
    ஒரு தசை நினைவகத்தை
    உருவாக்குகிறார்.
  • 8:33 - 8:36
    இப்போது, ​​அவளறிந்த
    வேகமான தட்டச்சாளர் அவள்.
  • 8:36 - 8:37
    (சிரிப்பொலி)
  • 8:37 - 8:41
    எழுத்தாளராகும் முன்,
    நோரா ஒரு நிதித் திட்டமிடுபவர்.
  • 8:41 - 8:43
    அதனால் தனது பயிற்சியைத் தொடங்கும்போது,
  • 8:43 - 8:45
    சிறந்த விற்பனைத்திறனை
    கற்றார்
  • 8:45 - 8:49
    அது இப்போது எடிட்டர்களுக்கு
    கடிதம் எழுத உதவுகிறது.
  • 8:50 - 8:54
    நீங்கள் தொடராவிடினும்
    ஈர்க்கப்பட்ட ஒன்றைச் செய்ய
  • 8:54 - 8:55
    செலவிட்ட நேரம்
    என்றுமே வீணல்ல.
  • 8:55 - 8:59
    நீங்கள் கற்ற அந்த அறிவைப்
    எதிர்பார்த்திராத வகையில்
  • 8:59 - 9:01
    முற்றிலும் வேறுபட்ட
    துறையில் பயன்படுத்தலாம்
  • 9:03 - 9:05
    மூன்றாவது சூப்பர் பவர்
  • 9:05 - 9:07
    தகவமைப்பு
  • 9:07 - 9:11
    அதாவது, ஒரு குறிப்பிட்ட
    சூழ்நிலைக்கு தகுந்தவாறு
  • 9:11 - 9:13
    மாற்றிக்கொள்ளும் திறன்
  • 9:14 - 9:19
    அபே கஜுடோ, வீடியோ இயக்குநர்,
    வலை வடிவமைப்பாளர்,
  • 9:19 - 9:23
    ஒரு கிக்ஸ்டார்ட்டர் ஆலோசகர்,
    ஒரு ஆசிரியர்,
  • 9:23 - 9:25
    சில நேரங்களில், ஜேம்ஸ் பாண்ட்
    ஆகவும் இருக்கிறார்
  • 9:25 - 9:27
    (சிரிப்பொலி)
  • 9:27 - 9:30
    அவர் நல்ல வேலை செய்வதால்
    அவர் மதிப்புமிக்கவர்.
  • 9:30 - 9:33
    வாடிக்கையாளர் தேவைக்கேற்ப
    பல்வேறு வேடங்களில் ஏற்பதால்
  • 9:33 - 9:35
    அவர் இன்னும் மதிப்புமிக்கவர்
  • 9:36 - 9:39
    21 ஆம் நூற்றாண்டில்.
    ஃபாஸ்ட் கம்பெனி இதழ்
  • 9:39 - 9:42
    தகவமைப்பு பிழைக்க
    மிக முக்கியமான திறமையாக
  • 9:42 - 9:44
    அடையாளம் கண்டுள்ளது.
  • 9:45 - 9:48
    பொருளாதாரம் மிக விரைவாக
    கணிக்க முடியாததாக மாறுகிறது
  • 9:48 - 9:52
    மக்களின் தேவைகளைப்
    முன்னிலைப்படுத்தும்
  • 9:52 - 9:56
    தனிநபர்கள் என்று நிறுவனங்கள்
    உண்மையில் செழிக்கப் போகிறது.
  • 9:58 - 10:02
    யோசனை தொகுப்பு, விரைவான கற்றல்
    மற்றும் தகவமைப்பு:
  • 10:02 - 10:06
    பன்முகத்தாளர்களின்
    மூன்று அதீத திறன்கள்
  • 10:06 - 10:10
    கவனத்தை குறைக்க அழுத்தினால்
    அவர்கள் இழக்க நேரிடும்
  • 10:13 - 10:18
    ஒரு சமூகமாக,
    பன்முகத்தாளர்களை ஊக்குவிப்பதில்
  • 10:18 - 10:19
    எங்களுக்கு
    பேரார்வம் உள்ளது
  • 10:20 - 10:24
    உலகில் பல பரிமாணங்களில்
    சிக்கலான பிரச்சினைகள் உள்ளன
  • 10:24 - 10:28
    அவற்றைச் சமாளிக்க ஆக்கப்பூர்வ
    சிந்தனையாளர்கள் தேவை,
  • 10:30 - 10:34
    உங்கள் இதயத்தில், நீங்கள்
    ஒரு நிபுணர் என்று வைத்து கொள்ளுங்கள்
  • 10:34 - 10:39
    குழந்தை நரம்பியல் அறுவை
    சிகிச்சை நிபுணராக பிறந்தீர்கள்
  • 10:40 - 10:43
    கவலைப்பட வேண்டாம் - உங்களிடமும்
    தவறு எதுவும் இல்லை.
  • 10:43 - 10:44
    (சிரிப்பொலி)
  • 10:44 - 10:47
    உண்மையில், சில சிறந்த அணிகள்
    ஒரு நிபுணரையும்,
  • 10:47 - 10:49
    ஒரு பன்முகத்தளரையும்
    கொண்டதே
  • 10:49 - 10:53
    நிபுணர் ஆழமாக சென்று
    யோசனைகளை செயல்படுத்தலாம்
  • 10:53 - 10:56
    பன்முகத்தாளர் திட்டத்திற்கு
    அறிவின் அகலம் கொண்டு வருகிறார்
  • 10:56 - 10:58
    இது ஒரு அழகான கூட்டு.
  • 10:59 - 11:02
    ஆனால் நாம் அனைவரும் நம்
    இயற்கையான ஆற்றலுக்கு ஏற்ப
  • 11:02 - 11:04
    நம் வாழ்க்கை மற்றும் தொழிலை
    வடிவமைக்க வேண்டும்
  • 11:04 - 11:09
    மற்றும் துரதிர்ஷ்டவசமாக,
    பன்முகத்தாளர்கள் பெரும்பாலும்
  • 11:09 - 11:12
    சிறப்பு சகாக்களைப்
    போல ஊக்குவிக்கப்படுகின்றனர்
  • 11:13 - 11:15
    எனவே
  • 11:15 - 11:18
    நீங்கள் இந்த பேச்சிலிருந்து
    எடுத்து செல்ல வேண்டியது,
  • 11:18 - 11:21
    இதுதான் என்று நான் நம்புகிறேன்:
  • 11:21 - 11:25
    உங்கள் உள்ளாற்றலை
    தழுவுங்கள்
  • 11:26 - 11:28
    நீங்கள் இதயத்தில்
    நிபுணராக இருந்தால்,
  • 11:28 - 11:30
    எல்லா வகையிலும்,
    நிபுணத்துவம் பெறுங்கள்
  • 11:30 - 11:32
    அதில் தான் சிறந்த வேலையை
    செய்வீர்கள்.
  • 11:33 - 11:36
    ஆனால் அறையில் உள்ள
    பன்முகத்தாளர்களுக்கு
  • 11:36 - 11:38
    அதாவது கடைசி 12 நிமிடங்களில்
    உணர்ந்த
  • 11:38 - 11:40
    நீங்கள் உட்பட
  • 11:40 - 11:42
    (சிரிப்பொலி)
  • 11:42 - 11:44
    உங்களிடம் நான் சொல்கிறேன்
  • 11:44 - 11:46
    உங்கள் உள்ளுணர்வுகளைத்
    தழுவுங்கள்.
  • 11:47 - 11:50
    ஆழத்தில் இருக்கும் உங்கள்
    ஆர்வத்தைப் பின்பற்றுங்கள்
  • 11:51 - 11:53
    உங்கள் இணைப்புகளை
    ஆராயுங்கள்.
  • 11:54 - 11:59
    எங்கள் உள்ளூணர்வை தழுவுதல்
    மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி
  • 12:00 - 12:03
    மற்றும் மிக முக்கியமாக -
  • 12:03 - 12:07
    பன்முகத்தாளர்களே,
    உலகிற்கு நாம் தேவை.
  • 12:08 - 12:09
    நன்றி.
  • 12:09 - 12:12
    (கைத்தட்டல்)
Title:
நம்மில் சிலருக்கு ஏன் ஒரு விஷயத்தில் மட்டுமே உண்மையான ஆர்வம் இல்லை
Speaker:
எமிலி வாப்னிக
Description:

நீங்கள் வளரும்போது என்னவாக இருக்க விரும்புகிறீர்கள்? சரி, உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு காரியத்தை மட்டுமே செய்ய விரும்புவில்லையெனில், நீங்கள் தனியாக இல்லை. இந்த ஒளிரும் பேச்சில், எழுத்தாளரும் கலைஞருமான எமிலி வாப்னிக், ஒரு வாழ்நாளில் பலவிதமான ஆர்வங்களையும் வேலைகளையும் கொண்ட, "பன்முகத்தாளர்கள்" என்பவர்களை பற்றி விவரிக்கிறார் -நீங்கள் அவர்களில் ஒருவரா?

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
12:26

Tamil subtitles

Revisions