Return to Video

நான் நானாக இருக்க எனக்கு ஆடிஸம் எப்படி சுதந்திரமளித்தது

  • 0:01 - 0:02
    நான் பலரிடம் இதைச் சொன்னதில்லை,
  • 0:02 - 0:05
    ஆனால் என் தலைக்குள்
  • 0:05 - 0:07
    ஆயிரக் கணக்கான உலகங்கள்
  • 0:07 - 0:09
    அனைத்தும் ஒரே நேரத்தில் ஓடுகின்றன.
  • 0:09 - 0:12
    எனக்கு "ஆடிஸம்" இருக்கிறது.
  • 0:12 - 0:14
    எல்லா ஆடிஸத்தையும்
  • 0:14 - 0:17
    மக்கள் ஒரே மாதிரி விவரிக்கிறார்கள்.
  • 0:17 - 0:20
    ஆனால் உண்மையில் அவை பலதரப்பட்டவை.
  • 0:20 - 0:22
    உதாரணத்திற்கு என் தம்பி இருக்கிறான்,
  • 0:22 - 0:23
    அவனுக்கு கடுமையான ஆடிஸம்.
  • 0:23 - 0:26
    அவனால் பேசக்கூட முடியாது.
  • 0:26 - 0:28
    ஆனால் எனக்கு பேசுவது பிடிக்கும்.
  • 0:28 - 0:31
    மக்கள் அடிக்கடி ஆடிஸத்தை , கணக்கு மற்றும்
  • 0:31 - 0:34
    விஞ்ஞானத்தோடு மட்டும் இணைக்கிறார்கள்.
  • 0:34 - 0:36
    ஆனால் நானறிந்த பல ஆடிஸம் நபர்கள்
  • 0:36 - 0:38
    ஆக்கபூர்வமாக இருக்கிறார்கள்.
  • 0:38 - 0:41
    ஆனால் அதுவும் ஒரு வகை தான்
  • 0:41 - 0:43
    ஒரே மாதிரி இருக்கும் விஷயங்கள்
  • 0:43 - 0:46
    சில நேரங்களில் தவறாகவும் இருக்கலாம்.
  • 0:46 - 0:48
    உதாரணத்திற்கு பலர் ஆடிஸம் என்றவுடன்
  • 0:48 - 0:53
    "ரெய்ன் மேன்" பற்றி நினைக்கிறார்கள்.
  • 0:53 - 0:54
    ஒரு பொதுவான எண்ணம் நிலவுகிறது,
  • 0:54 - 0:57
    எல்லா ஆடிஸம் நபரும் டஸ்டின் ஹாஃப்மேன் என்று.
  • 0:57 - 1:00
    அது உண்மையில்லை.
  • 1:00 - 1:03
    இது ஆடிஸம் பற்றி மட்டுமல்ல
  • 1:03 - 1:05
    LGBTQ மக்கள் பற்றியும் இப்படித் தான்,
  • 1:05 - 1:08
    பெண்கள் , POC மக்கள் பற்றியும் இப்படியே.
  • 1:08 - 1:10
    இயல்பிலிருந்து மாறுபட்டால் மக்களுக்கு பயம்
  • 1:10 - 1:13
    எல்லாவற்றிற்கும் ஒரு சிறிய பெட்டி
  • 1:13 - 1:16
    குறிப்பிட்ட தலைப்புகளுடன் அடைக்கிறார்கள்.
  • 1:16 - 1:17
    இது நிஜமாக
  • 1:17 - 1:20
    என் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.
  • 1:20 - 1:23
    ஆடிஸம் நபர்கள் யாரென்று கூகுள் செய்தேன்
  • 1:23 - 1:25
    உடனே தேர்ந்தெடுக்க ஒரு பட்டியல்
  • 1:25 - 1:27
    ஆலோசனைகள் வந்தன.
  • 1:27 - 1:28
    கூகுள் செய்தேன் "ஆடிஸம் நபர்கள் ..."
  • 1:28 - 1:32
    முதலில் வந்தது "அரக்கர்கள்."
  • 1:32 - 1:34
    ஆடிஸம் பற்றி நினைக்கும்போது
  • 1:34 - 1:36
    மக்கள் முதலில் நினைப்பது அது தான்.
  • 1:36 - 1:38
    அவர்களுக்குத் தெரியும்.
  • 1:38 - 1:41
    (சிரிப்பு)
  • 1:45 - 1:47
    என்னால் செய்ய முடிந்த ஒன்று-
  • 1:47 - 1:50
    அது உண்மையில் என் ஊனமல்ல, திறமை-
  • 1:50 - 1:53
    சிறந்த உயிர்ப்புள்ள கற்பனைகள்.
  • 1:53 - 1:55
    சற்று உங்களுக்கு விளக்குகிறேன்.
  • 1:55 - 1:57
    அதாவது நான் பெரும்பாலும் இரண்டு உலகங்களில் நடப்பதுபோல.
  • 1:57 - 2:00
    நம் எல்லோருக்கும் தெரிந்த உலகம் ஒன்று,
  • 2:00 - 2:02
    மற்றொன்று என் மனதில் உள்ள உலகம்,
  • 2:02 - 2:05
    உண்மை உலகத்தை விட,
  • 2:05 - 2:07
    அனேகமாக என் மன உலகமே எனக்கு நிஜம்.
  • 2:07 - 2:11
    என் மனதை கட்டவிழத்து விடுவது எனக்கு சுலபம்.
  • 2:11 - 2:13
    ஏனெனில் அதைப் போட சிறிய பெட்டி வேண்டாம்.
  • 2:13 - 2:16
    ஆடிஸம் நபராய் இருப்பதின் தனிச் சிறப்பு
  • 2:16 - 2:18
    உங்களுக்கு அந்த உந்துதல் இல்லை.
  • 2:18 - 2:20
    என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்கள்,
  • 2:20 - 2:23
    அதற்கு வழி தேடி அதைச் செய்கிறீர்கள்
  • 2:23 - 2:25
    என்னை ஒரு பெட்டிக்குள் அடக்க முயன்றால்,
  • 2:25 - 2:27
    நான் இங்கு இருந்திருக்க மாட்டேன்; என்னுடைய
  • 2:27 - 2:30
    சாதனைகளில் பாதி இருந்திருக்காது.
  • 2:30 - 2:31
    பிரச்சினைகள் இல்லாமலில்லை,
  • 2:31 - 2:34
    ஆடிஸம் ஒரு பிரச்சினைதான்,
  • 2:34 - 2:36
    அதிகமான கற்பனைகளும் பிரச்சினை தான்,
  • 2:36 - 2:38
    பொதுவாக பள்ளி ஒரு பிரச்சினையாக இருக்கும்,
  • 2:38 - 2:42
    நான் என் ஆசிரியரிடம் விளக்க வேண்டும்
  • 2:42 - 2:45
    ஒவ்வொரு நாளும்
  • 2:45 - 2:48
    உங்களுடைய பாடம் ரொம்ப சோர்வு தருகிறது
  • 2:48 - 2:51
    அதனால் நான் ரகசியமாக சரணடைகிறேன்
  • 2:51 - 2:55
    உங்கள் பாடமில்லாத என் மன உலகில் என்று
  • 2:55 - 2:58
    பிரச்சினைப் பட்டியலில் மேலும் ஒன்றாக சேருகிறது.
  • 2:58 - 3:00
    (சிரிப்பு)
  • 3:00 - 3:05
    என் கற்பனை என்னை ஆட்கொள்ளும்போது
  • 3:05 - 3:07
    என் உடல் வேறொரு வாழ்க்கையை எடுக்கிறது.
  • 3:07 - 3:09
    என் உள் உலகம் மிக சுவாரசியமாக ஆகும்போது,
  • 3:09 - 3:11
    நான் ஓடிப் போயே ஆக வேண்டும்
  • 3:11 - 3:13
    முன்னும் பின்னும் ஆட வேண்டும்
  • 3:13 - 3:15
    சில சமயம் கூக்குரலிட வெண்டும்.
  • 3:15 - 3:17
    அது எனக்கு அவ்வளவு சக்தி தருகிறது
  • 3:17 - 3:20
    என் சக்திக்கெல்லாம் ஒரு வடிகால் வேண்டுமே.
  • 3:20 - 3:22
    குழந்தைக் காலம் முதல் இதைச் செய்கிறேன்.
  • 3:22 - 3:23
    சின்னஞ்சிறு சிறுமியாக இருந்த போதும்,
  • 3:23 - 3:26
    என் பெற்றோர்கள் இதை அழகென்று நினைத்தார்கள்
  • 3:26 - 3:28
    ஆனால் நான் பள்ளிக்குச் சென்றபோது,
  • 3:28 - 3:30
    அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
  • 3:30 - 3:33
    ஒரு வேளை மக்களுக்கு அல்ஜிப்ரா பாடத்தின் போது கத்தும் பெண்ணுடன்
  • 3:33 - 3:35
    நண்பர்களாக இருக்க பிடிக்கவில்லை போலும்.
  • 3:35 - 3:37
    ஆனால் இப்பொழுது அது அவ்வளவாக நடப்பதில்லை
  • 3:37 - 3:40
    மக்களுக்கு ஆடிஸம் பெண்ணைப்
  • 3:40 - 3:43
    பிடிக்காமலிருக்கலாம் .
  • 3:43 - 3:47
    தங்களிடமிருந்து வேறுபட்டவர்களை
  • 3:49 - 3:52
    இயல்பாக இல்லாதவர்களை
  • 3:52 - 3:54
    என்னை அது பாதிக்கவில்லை, ஏனெனில்
  • 3:54 - 3:57
    அது கோதுமையை பதரிலிருந்து நீக்குகிறது
  • 3:57 - 3:59
    நல்லவர்களை என்னால் அறிய முடிகிறது
  • 3:59 - 4:02
    அவர்களை என் நண்பர்களாக்கிக் கொள்ளலாம்
  • 4:02 - 4:05
    சிந்தியுங்கள்! எது இயல்பானது?
  • 4:05 - 4:07
    அதன் பொருள் என்ன?
  • 4:07 - 4:10
    உங்களுக்கு கிடைக்கும் சிறந்த பாராட்டு
  • 4:10 - 4:12
    "வாவ், நீ உண்மையாகவே இயல்பாக இருக்கிறாய்."
  • 4:12 - 4:14
    (சிரிப்பு)
  • 4:14 - 4:17
    பாராட்டு எப்படி இருக்க வேண்டும்,
  • 4:17 - 4:18
    "நீ அசாதாரணமானவன்" அல்லது
  • 4:18 - 4:20
    "நீ புதியதாக சிந்திக்கிறாய்"
  • 4:20 - 4:22
    "நீ ஆச்சரியப்படுத்துகிறாய்"
  • 4:22 - 4:24
    மக்கள் உண்மையிலேயே இதை விரும்பினால்
  • 4:24 - 4:26
    ஏன் இயல்பாக இருக்க விரும்புகிறார்கள் ?
  • 4:26 - 4:31
    தம் தனி ஒளியை ஏன் அச்சில் ஊற்றுகிறார்கள்?
  • 4:31 - 4:36
    வகைகள் இருப்பதை ஒத்துக் கொள்ள முடியவில்லை
  • 4:36 - 4:40
    இயல்பாக இருக்க கட்டாயப்படுத்துகிறார்கள்
  • 4:40 - 4:43
    LGBTQ / ஆடிஸம் மக்களுக்கு தனி முகாம்
  • 4:43 - 4:46
    இப்படி அவர்களை இயல்பாக்க முயலுகிறார்கள்
  • 4:46 - 4:51
    இந்த யுகத்தில் இப்படியா? பயமாக இருக்கிறது
  • 4:51 - 4:55
    என் ஆடிஸமும் கற்பனையும் விலை மதிப்பற்றது
  • 4:55 - 4:57
    எனக்கு ஆடிஸம் இருப்பதால் , பீ பீ ஸீ க்கு
  • 4:57 - 5:00
    டாகுமென்டரிகள் செய்து கொடுத்திருக்கிறேன்
  • 5:00 - 5:03
    ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன்
  • 5:03 - 5:05
    நான் - இதைச் செய்வது அற்புதமல்லவா-
  • 5:05 - 5:08
    நான் சாதித்தவைகளில் சிறந்தது
  • 5:08 - 5:11
    அப்படி நான் நினைக்கிறேன் -
  • 5:11 - 5:12
    தொடர்பு கொள்ள வழி கண்டு பிடித்தது
  • 5:12 - 5:14
    என் சின்னத் தம்பியோடும் தங்கையோடும்
  • 5:14 - 5:18
    அவர்களால் பேச முடியாது - முன்பே சொன்னேனே
  • 5:18 - 5:21
    பேச முடியாதவர்களை மக்கள் ஒதுக்குகிறார்கள்
  • 5:21 - 5:23
    மிக மோசம் . என் தம்பியும் தங்ககையும்
  • 5:23 - 5:26
    எனக்கு கிடைத்த சிறந்த உடன் பிறப்புகள்
  • 5:26 - 5:28
    அவர்களை நான் மிகவும் நேசிக்கிறேன்
  • 5:28 - 5:32
    வேறு எதையும் விட அவர்கள் எனக்கு முக்கியம்
  • 5:32 - 5:35
    கடைசியாக உங்களிடம் ஒரு கேள்வி
  • 5:35 - 5:38
    ஒருவர் மனது புரியாவிட்டால் அவர்களுக்கு
  • 5:38 - 5:40
    ஆடிஸம் இருந்தாலும் இல்லையானாலும்
  • 5:40 - 5:43
    இயல்பிலிருந்து மாறுபட்டதை தண்டிக்காமல்
  • 5:43 - 5:45
    அதன் சிறப்பை ஏன் கொண்டாடக் கூடாது?
  • 5:45 - 5:49
    அவர் கற்பனைகளை ஏன் பாராட்டக் கூடாது?
  • 5:49 - 5:50
    நன்றி.
  • 5:50 - 5:55
    (கை தட்டல்)
Title:
நான் நானாக இருக்க எனக்கு ஆடிஸம் எப்படி சுதந்திரமளித்தது
Speaker:
ரோஸி கிங்க்
Description:

விளக்கம்
(AUTISM)ஆடிஸமுள்ள , துணிவும் துடிப்பும் கொண்ட 16 வயதான ரோஸி கிங்க் கூறுகிறாள்: " வகைகளில் பல இருப்பது மக்களுக்கு மிகுந்த பயமளிப்பதால் அவர்கள் எல்லாவற்றையும் ஒரு சிறிய பெட்டியில் போட்டுக் குறியிட முயலுகிறார்கள்". அவள் கேட்கிறாள்:ஏன் எல்லோரும் இயல்பாக இருக்க வேண்டுமென்று அவ்வளவு கவலைப் படுகிறார்கள்? ஒவ்வொரு குழந்தைக்கும் , பெற்றோர்களுக்கும் , ஆசிரியருக்கும் , மற்றவர்களுக்கும் தனித்துவத்தைக் கொண்டாட அறைகூவல் விடுக்கிறாள்.மனிதனின் பல்வகைத் திறைமைகளுக்கு ஒரு சக்தி வாய்ந்த பிரகடனம்.

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
06:08

Tamil subtitles

Revisions