இந்த இரண்டு பின்னங்களின் பகுதி எண்ணையும் மீச்சிறு பொது பகுதியாக மாற்ற வேண்டும். எனவே, இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண்ணின் மீச்சிறு பொதுமடங்கை கண்டுப்பிடித்து நாம் அதை கொண்டு இவ்விரண்டு பின்னங்களையும் மாற்றவேண்டும்.. நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னங்களின் LCM-ஐ கண்டுப்பிடிப்போம், 8 & 6 -ன் LCD LCM = LCD ஆகும். இதை கண்டுப்பிடிக்க நாம் கீழ்க் கண்ட முறையில் அணுகவேண்டும் 8,6 -ன் மடங்குகளை வரிசைப்படுத்தி பார்த்தால் நாம் இவ்விரண்டு எண்களின் LCM-ஐ கண்டறியலாம் 6 -ன் மடங்குகள் - 6,12,18,24,30... 8 -ன் மடங்குகள் - 8, 16, 24, 32.. இவ்விரண்டு எண்களின் பொது மடங்கு 24. இது தான் இவ்விரண்டு எண்களின் சிறிய பொது மடங்கு இதற்கு வேறு பொது மடங்குகள் உள்ளது - 48, 72... ஆனால், நாம் கண்டறியவேண்டியது சிறிய பொது மடங்கு. எனவே, அது 24. LCM -ஐ கண்டுபிடிக்க வேறு வழிகள் உள்ளன. இந்த எண்ணின் பகாக்காரணியை கண்டறிய வேண்டும். 6 - 2x3. எனவே, 6-ன் LCM -ல் ஒரு 2 மற்றும் ஒரு 3 இருக்க வேண்டும். 8 -ன் பகாக்காரணிகள், 2x2x2 ஆகும். 8 ஆல் வகுபட வேண்டும் என்றால், அதில் மூன்று 2 கள் இருக்க வேண்டும். 6 ஆல் வகுபட வேண்டுமென்றால், அதன் பகாக்காரணிகளில் 2 மற்றும் 3 இருக்க வேண்டும். 8 ஆல் வகுபட மூன்று 2 கள் இருக்க வேண்டும். நம்மிடம் ஒரு 2 உள்ளது, இரண்டு 2 தேவை. எனவே, இது 6 மற்றும் 8 ஆல் வகுபடும். எனவே, 2x2x2x3 = 24. இது 8 & 6 -ன் LCM. அதாவது இதன் LCD, 24. எனவே, நாம் இரண்டு பின்னங்களின் பகுதியையும் 24 ஆக மாற்றவேண்டும். முதலில் 2/8 ஐ எடுத்துகொள்ளலாம். இதன் பகுதி எண்ணை 24 ஆக மாற்றவேண்டும் என்றால் நாம் அதை 3-ஆல் பெருக்க வேண்டும் பகுதி எண்ணை பெருக்கினால், தொகுதி எண்ணையும் பெருக்கவேண்டும். ஆகையால் தொகுதி எண்; 2x3 = 6 ஆக மாறிவிடும் 2/8 = 6/24 ஆகும் 2/8 x 3/3 = 6/24 இதேபோல் நாம் 5/6 என்ற பின்னத்தின் பகுதி எண்ணை 24 ஆக மாற்ற வேண்டும் இதன் பகுதி எண்ணை 24 ஆக மாற்றவேண்டும் என்றால் நாம் இதை 4-ஆல் பெருக்கவேண்டும் இதன் தொகுதி எண்ணையும் பெருக்க வேண்டும்; 5x4 = 20 5/6 = 20/24 நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண்ணை ஒன்றாக மாற்றிவிட்டோம்