ஜனலி என்பவள் ஓட்டப்பந்தய பயிற்சி பெறுகிறாள் தினமும் அந்த பந்தயதடம் ஒரு அளவீட்டால் குறிக்கப்படுகிறது.. கடந்த நாட்களுக்கான அளவீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன... சனிக்கிழமை: 3.89 மைல்கள், ஞாயிற்றுகிழமை : 5.1 மைல்கள் திங்கள் : 10.21 மைல்கள், செவ்வாய் : 3.35 மைல்கள். 4 நாட்களுக்கான மொத்த தூரத்தையும் தோராயமாக மற்றும் துல்லியமாக கணக்கிடுக முதலில் இந்த எண்களை முழுமையாக்கலாம் 3.89-ஐ 4 என்று எழுதலாம் ஏனெனில் பத்துகள் இடத்தில் உள்ள 8, 5-ஐ விட பெரியது எனவே 4 மைல்கள் என எடுக்கலாம் அடுத்து 5.1-ஐ எடுக்கலாம், 1, 5-ஐ விட குறைவாக உள்ளது எனவே 5 என எடுக்கலாம் 10.21- ஐ 10 என எடுக்கலாம் ஏனெனில் 2 5-ஐ விட குறைவாக உள்ளது 3.35 ஐ 3 என எடுக்கலாம்,ஏனெனில் 3 5-ஐ விட குறைவாக உள்ளது ஆக 3 மைல்கள் ஆகும் இப்பொழுது இதை கூட்டலாம்...4 + 5 = 9 9 + 10 = 19 19 + 3 = 22 ஆக இதை தோராயமாக கணக்கிட்டால் 22 மைல்கள் என்று வருகிறது இப்பொழுது இதன் துல்லியமான தூரத்தை கண்டுபிடிக்கலாம் தசம எண்களை கூட்டும்பொழுது புள்ளிகளை நேராக வைத்து கூட்ட வேண்டும் இப்பொழுது கூட்டலாம் முதலில் நூறாவது இடத்தில் இருந்து தொடங்கலாம் 9 + 1 = 10 10 + 5 = 15 மீதி 1 1 + 8 = 9 9 + 1 = 10 10 + 2 = 12 12 + 3 = 15 5 மீதி 1 1 + 3 = 4 4 + 5 = 9 9 + 0 = 9 9 + 3 = 12 2 மீதி 1 1 + 1 = 2 22.55 தசம புள்ளி இங்கு உள்ளது. ஆக இதன் துல்லியமான தூரம் 22.55 மைல்கள் ஆகும் நமது தோராயமான தூரம் 22 மைல்கள் ஆகும் ஆக இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மதிப்பு தான்