WEBVTT 00:00:00.000 --> 00:00:02.000 இதோ ஒரு அற்புதமான கதை: 00:00:02.000 --> 00:00:04.000 நாற்பது வருடங்களுக்கு முன் இந்தக் கதை தொடங்கியது, 00:00:04.000 --> 00:00:07.000 என் அம்மாவும் அப்பாவும் கனடா வந்த போது. 00:00:07.000 --> 00:00:09.000 என்னுடைய அம்மா கென்யாவில் உள்ள நைரோபியை விட்டு வந்தார். 00:00:09.000 --> 00:00:12.000 என்னுடைய அப்பா இந்தியாவில் உள்ள அம்ரிட்ஸர் அருகே உள்ள, ஒரு குக்கிராமத்தை விட்டு வந்தார். 00:00:12.000 --> 00:00:15.000 1960-களின் பிற்பகுதியில், இங்கு வந்தடைந்தனர். 00:00:15.000 --> 00:00:18.000 டொரோண்டோவிலிருந்து ஒரு மணி நேரம் கிழக்கேயுள்ள, அவ்வளவு பாதுகாப்பு இல்லாத ஓர் புறநகரில் தங்கினர். 00:00:18.000 --> 00:00:20.000 அவர்கள் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கினர். 00:00:20.000 --> 00:00:22.000 அவர்கள் தங்களின் முதல் பல் மருத்துவரை சந்தித்தனர், 00:00:22.000 --> 00:00:24.000 அவர்கள் தங்களின் முதல் ஹம்பர்கரை உண்டனர், 00:00:24.000 --> 00:00:26.000 மற்றும் அவர்கள் தங்களின் முதல் குழந்தைகளைப் பெற்றனர். 00:00:26.000 --> 00:00:28.000 என்னுடைய தங்கையும், நானும் 00:00:28.000 --> 00:00:30.000 இங்கு தான் வளர்ந்தோம். 00:00:30.000 --> 00:00:33.000 எங்களுடைய குழந்தைப் பருவம், அமைதியாகவும் சந்தோஷமாகவும் கழிந்தது. 00:00:33.000 --> 00:00:35.000 எங்களுக்கு என்று ஒரு நெருக்கமான குடும்பம், 00:00:35.000 --> 00:00:37.000 நல்ல நண்பர்கள் மற்றும் ஒரு அமைதியான தெரு இருந்தது. 00:00:37.000 --> 00:00:39.000 நாங்கள் வளரும் போது, தாராளமாக எடுத்துக்கொண்டோம் 00:00:39.000 --> 00:00:41.000 பலவற்றை; அவை எங்களின் பெற்றோர்களால் தாளாரமாக எடுத்துக்கொள்ள முடியாதவை. 00:00:41.000 --> 00:00:43.000 நாங்கள் வளரும் போது -- 00:00:43.000 --> 00:00:45.000 மின்சாரம் தடையின்றி எப்பொழுதும் இருந்தது 00:00:45.000 --> 00:00:47.000 எங்கள் வீடுகளில். 00:00:47.000 --> 00:00:49.000 தெரு எதிரே பள்ளிகளும் 00:00:49.000 --> 00:00:51.000 நடக்கும் தூரத்தில் மருத்துவமனைகளும் 00:00:51.000 --> 00:00:53.000 வீட்டின் கொல்லைப்புறத்தில் அழகிய பூக்களும் இருந்தன. 00:00:53.000 --> 00:00:55.000 நாங்கள் வளர்ந்தோம், பெரியவர்கள் ஆனோம். 00:00:55.000 --> 00:00:57.000 நான் மேல்நிலை பள்ளிக்கு சென்றேன். 00:00:57.000 --> 00:00:59.000 நான் பட்டதாரியானேன். 00:00:59.000 --> 00:01:01.000 வீட்டிலிருந்து வெளியேறி, ஒரு வேலை வாங்கிக் கொண்டேன். 00:01:01.000 --> 00:01:04.000 ஒரு பெண்ணை சந்தித்தேன், வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன் -- 00:01:04.000 --> 00:01:07.000 எனக்கு தெரியும், இது ஒரு கெட்ட தொடர்கதை போல, ஒரு கேட் ஸ்டீவென்ஸின் பாடல் போல தோன்றுகிறது என்று. NOTE Paragraph 00:01:07.000 --> 00:01:09.000 (சிரிப்பு) NOTE Paragraph 00:01:09.000 --> 00:01:11.000 ஆனால் வாழ்க்கை நன்றாக தான் இருந்தது. 00:01:11.000 --> 00:01:13.000 வாழ்க்கை மிகவும் நன்றாக இருந்தது. 00:01:13.000 --> 00:01:16.000 2006 ஒரு சிறந்த வருடமாக இருந்தது. 00:01:16.000 --> 00:01:19.000 திராட்சை மதுவுக்கு பெயர் போன ஆண்டாரியோவில், நீல வானுக்கு கீழே , ஜூலை மாதத்தில் 00:01:19.000 --> 00:01:21.000 எனக்கு திருமணம் நடந்தது, 00:01:21.000 --> 00:01:24.000 150 உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் மத்தியில். 00:01:25.000 --> 00:01:28.000 2007 ஒரு சிறந்த வருடமாக இருந்தது. 00:01:28.000 --> 00:01:30.000 நான் பட்டதாரியானேன் பின்னர், 00:01:30.000 --> 00:01:33.000 என்னுடைய நெருங்கிய நண்பர்கள் இருவருடன், சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். 00:01:33.000 --> 00:01:36.000 இதோ, நானும் என் நண்பன், கிரிஸ் இருக்கும் ஒரு புகைப்படம். 00:01:36.000 --> 00:01:38.000 பசிபிக் மகாசமுத்திரத்தின் கரையில் எடுக்கப்பட்டது. 00:01:38.000 --> 00:01:40.000 கடல்நாய்களை பார்த்தோம், எங்களின் காரின் ஜன்னல் வழியே. 00:01:40.000 --> 00:01:42.000 நிறுத்திவிட்டு, விரைந்து ஒரு புகைப்படம் எடுத்தோம். 00:01:42.000 --> 00:01:45.000 ஆனால், எங்களின் பெரிய தலைகள், அவைகளை மறைத்துவிட்டது. 00:01:45.000 --> 00:01:47.000 (சிரிப்பு) 00:01:47.000 --> 00:01:49.000 அதனால் நீங்கள் அவைகளை பார்க்க இயலாது. 00:01:49.000 --> 00:01:51.000 ஆனால் அது மிகவும் அழகாக இருந்தது, 00:01:51.000 --> 00:01:53.000 நம்புங்கள்! NOTE Paragraph 00:01:53.000 --> 00:01:55.000 (சிரிப்பு) NOTE Paragraph 00:01:55.000 --> 00:01:58.000 2008 மற்றும் 2009 கொஞ்சம் கடினமாக இருந்தது. 00:01:58.000 --> 00:02:00.000 நான் அறிவேன், அவ்வருடங்கள் நிறைய மக்களுக்கு கடினமாக தான் இருந்தது 00:02:00.000 --> 00:02:02.000 எனக்கு மட்டும் அல்ல. 00:02:02.000 --> 00:02:04.000 முதலில், அந்த செய்தி மிகவும் கனமாக இருந்தது. 00:02:04.000 --> 00:02:07.000 இப்போவும் கனமாக தான் உள்ளது, ஆனால் இதை விட கனமாக இருந்தது அப்போது. 00:02:07.000 --> 00:02:10.000 செய்தித்தாள் புரட்டிய போது, தொலைக்காட்சி பார்த்த போது, 00:02:10.000 --> 00:02:12.000 நீங்கள் பார்த்தது; உருகிக்கொண்டிருந்த பனிக்கட்டிகள், 00:02:12.000 --> 00:02:14.000 உலகம் சுற்றிலும் நடந்து கொண்டிருந்த போர்கள், 00:02:14.000 --> 00:02:17.000 பூகம்பங்கள், சூறாவளிகள் 00:02:17.000 --> 00:02:20.000 மற்றும் நிலைகுலையும் நிலைமையில் இருந்த ஒரு பொருளாதாரம். 00:02:20.000 --> 00:02:23.000 இறுதியில் அந்த பொருளாதாரம் இடிந்தே விழுந்தது. 00:02:23.000 --> 00:02:25.000 அதனால், நம் மக்கள் பல பேர் வீடுகளை இழந்தோம், 00:02:25.000 --> 00:02:27.000 நம் வேலைகளை இழந்தோம், 00:02:27.000 --> 00:02:29.000 நம் ஓய்வூதியங்களை இழந்தோம், 00:02:29.000 --> 00:02:31.000 நம் வயிற்றுப் பிழைப்பை இழந்தோம். 00:02:31.000 --> 00:02:34.000 2008 , 2009 எனக்கு மிகவும் கடினமான வருடங்களாக இருந்தன, மற்றொரு காரணத்துக்காக. 00:02:34.000 --> 00:02:37.000 அந்நேரம், என் தனிப்பட்ட வாழ்க்கையில், நிறைய பிரச்சனைகளைச் சந்தித்தேன். 00:02:38.000 --> 00:02:41.000 என் திருமண வாழ்க்கை சீராகச் செல்லவில்லை, 00:02:41.000 --> 00:02:45.000 எங்களுக்குள் இருந்த விரிசல்கள் விரிந்துக் கொண்டேயிருந்தது. 00:02:45.000 --> 00:02:47.000 ஒரு நாள், என் மனைவி, வீட்டுக்கு வந்தாள் வேலையிலிருந்து. 00:02:47.000 --> 00:02:50.000 தைரியம் வரவழைத்து, அழுகை உடன், 00:02:50.000 --> 00:02:53.000 என்னிடம் ஒரு நேர்மையான உரையாடல் கொண்டாள். 00:02:53.000 --> 00:02:56.000 "நான் உன்னை விரும்பவில்லை", என்று அவள் சொன்னாள். 00:02:56.000 --> 00:03:00.000 நான் கேட்டதில், என்னை மிகவும் வேதனைப்படுத்திய விஷயங்களில், இதுவும் ஒன்று. 00:03:00.000 --> 00:03:03.000 நான் கேட்டதில், என் மனதை மிகவும் வருத்தியது, இது தான். 00:03:03.000 --> 00:03:05.000 ஆனால், ஒரு மாதம் கழித்து, 00:03:05.000 --> 00:03:08.000 அதை விட துயரமான விஷயம் ஒன்றை நான் சந்தித்தேன். NOTE Paragraph 00:03:08.000 --> 00:03:10.000 என் நண்பன் கிரிஸ், என்னுடைய புகைப்படத்தில் நான் காட்டியவன், 00:03:10.000 --> 00:03:12.000 கொஞ்சம் காலமாக, மன நோயுடன் போராடிக்கொண்டிருந்தான். 00:03:12.000 --> 00:03:14.000 உங்களில் உள்ளவர்கள், 00:03:14.000 --> 00:03:16.000 மன நோயால், உங்களின் வாழ்க்கையில் எவரும் ஒரு வகையில், பாதிக்கப்படிருந்தால், 00:03:16.000 --> 00:03:19.000 அது மிகவும் கடினமான சவால் என்று நீங்கள் அறிவீர்கள். 00:03:19.000 --> 00:03:21.000 நான் அவனிடம் இரவு 10.30 மணியளவில் தொலைபேசியில் பேசினேன், 00:03:21.000 --> 00:03:23.000 ஞாயிறுக்கிழமையன்று. 00:03:23.000 --> 00:03:26.000 நாங்கள் அன்று மாலை பார்த்த ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிப் பற்றிப் பேசினோம். 00:03:26.000 --> 00:03:29.000 திங்களன்று காலையில், அவன் மறைந்துவிட்டான் என்று தெரிய வந்தது. 00:03:29.000 --> 00:03:32.000 அவன் தன் உயிரையே எடுத்துக்கொண்டான். எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. 00:03:33.000 --> 00:03:36.000 அந்த நேரம் மிகவும் கனமாக இருந்தது. NOTE Paragraph 00:03:36.000 --> 00:03:38.000 என்னை சுற்றி கறுப்பு மேகங்கள் சுழன்று கொண்டிருந்தது. 00:03:38.000 --> 00:03:41.000 எனக்கு மிக மிக கடினமாக இருந்தது, 00:03:41.000 --> 00:03:43.000 ஏதேனும், நல்லவற்றை சிந்திக்க. 00:03:43.000 --> 00:03:46.000 நான் எனக்கே சொல்லிக்கொண்டேன், எனக்கு ஒரு வழி வேண்டும், 00:03:46.000 --> 00:03:49.000 எப்படியாவது நல்லதையே சிந்திக்க ஒரு வழி வேண்டும் என்று. 00:03:49.000 --> 00:03:51.000 ஓர் இரவு, வேலை முடித்து விட்டு வீடு திரும்பினேன். 00:03:51.000 --> 00:03:53.000 என்னுடைய கணினி முன் அமர்ந்தேன். 00:03:53.000 --> 00:03:55.000 ஒரு சிறிய இணையதளம் ஒன்றை ஆரம்பித்தேன். 00:03:55.000 --> 00:03:58.000 1000awesomethings.com என்று பெயரிட்டேன். 00:03:59.000 --> 00:04:01.000 நான் எனக்கே ஞாபகப்படுத்திக்கொண்டேன், 00:04:01.000 --> 00:04:03.000 சாதாரண, எங்கும் உள்ள, சின்ன சின்ன சந்தோஷங்களை, நாம் விரும்பும் சந்தோஷங்களை. 00:04:03.000 --> 00:04:05.000 ஆனால் அதை பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை -- 00:04:05.000 --> 00:04:07.000 உணவகங்களில் மேசைப் பணியாளர் 00:04:07.000 --> 00:04:09.000 நாம் கேட்காமலேயே, நமக்கு உணவு பரிமாறும் போது, 00:04:09.000 --> 00:04:11.000 முதலாவது பந்தியில் அமர, நம்மை 00:04:11.000 --> 00:04:13.000 ஒரு திருமண நிகழ்ச்சில் அழைக்கும் போது, 00:04:13.000 --> 00:04:15.000 சலவை உலர்த்தியிலிருந்து வந்த சுத்தமான இதமான உள்ளாடை அணியும் போது, 00:04:15.000 --> 00:04:17.000 அல்லது காய்கறிக் கடையில், பணம் செலுத்தும் இடத்தில், ஒரு புதிய வரிசை திறக்கும் போது 00:04:17.000 --> 00:04:19.000 நீங்கள் முதலாவதாக வரிசையில் இருந்தால் -- 00:04:19.000 --> 00:04:22.000 இல்லையென்றால் நீங்கள் வேறு வரிசையில் கடைசியாக இருந்தபோதும், சடார் என்று முன் வரிசையில் வந்து நின்றால்! NOTE Paragraph 00:04:22.000 --> 00:04:25.000 (சிரிப்பு) NOTE Paragraph 00:04:25.000 --> 00:04:27.000 காலப்போக்கில், 00:04:27.000 --> 00:04:30.000 நான் என்னையே ஒரு நல்ல மனநிலையில் ஆட்படுத்திக்கொண்டேன். 00:04:30.000 --> 00:04:33.000 50,000 வலைப்பதிவுகள் 00:04:33.000 --> 00:04:36.000 ஒரு நாளில் தொடங்கப்படுகின்றன. 00:04:36.000 --> 00:04:39.000 என்னுடைய வலைப்பதிவு, அந்த 50,000 வலைப்பதிவுகள் ஒன்று. 00:04:39.000 --> 00:04:42.000 என்னுடைய அம்மா தவிர வேறு யாரும், அதை படித்ததில்லை. 00:04:42.000 --> 00:04:44.000 ஆனால் என்னுடைய வலைப்பதிவின் வருகை கணக்கு, வானைத் தொட்டது, 00:04:44.000 --> 00:04:46.000 ஒரு 100 சதகிவிதம் உயர்ந்தது, 00:04:46.000 --> 00:04:48.000 என்னுடைய அம்மா என் அப்பாவிடம் காட்டியபோது. 00:04:48.000 --> 00:04:50.000 (சிரிப்பு) 00:04:50.000 --> 00:04:52.000 அதுக்கு பிறகு, நான் உற்சாகம் ஆனேன், 00:04:52.000 --> 00:04:54.000 பத்துகணக்கில் மக்கள் வருகை தந்தபோது. 00:04:54.000 --> 00:04:57.000 மிகவும் உற்சாகமாக தொடங்கினேன், டசன் கணக்கில் மக்கள் வருகை தந்த போது, 00:04:57.000 --> 00:05:00.000 பின்னர் நுற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில், 00:05:00.000 --> 00:05:02.000 கோடிக்கணக்கில் மக்கள் வருகை தந்த போது. 00:05:02.000 --> 00:05:04.000 அது மிக மிக பெரிதாக உருவாகத் தொடங்கியது. 00:05:04.000 --> 00:05:06.000 அப்போது, எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, 00:05:06.000 --> 00:05:08.000 மறுமுனையில் பேசிய குரல் என்னிடம் கூறியது, 00:05:08.000 --> 00:05:12.000 "நீங்கள் உலகின் மிகச் சிறந்த வலைப்பதிவு விருது பெற்றிருக்கிறீர்கள்." 00:05:12.000 --> 00:05:14.000 நானோ, இது போலித்தனமாக உள்ளதே என்று நினைத்தேன். 00:05:14.000 --> 00:05:17.000 (சிரிப்பு) 00:05:17.000 --> 00:05:22.000 (கைத்தட்டல்) 00:05:22.000 --> 00:05:25.000 எந்த ஆப்ரிக்கா நாட்டுக்கு என்னுடைய எல்லா பணத்தையும், அனுப்ப வேண்டும்? 00:05:25.000 --> 00:05:28.000 (சிரிப்பு) 00:05:28.000 --> 00:05:30.000 ஆனால், ஒரு விமானத்தில் சென்று, 00:05:30.000 --> 00:05:32.000 செங்கம்பளத்தில், நடக்க நேரிட்டது 00:05:32.000 --> 00:05:35.000 சாரா சில்வேர்மன் மற்றும் ஜிம்மி பால்லோன் மற்றும் மார்த்தா ஸ்டேவர்டின் மத்தியில். 00:05:35.000 --> 00:05:38.000 நான் மேடை ஏறி, சிறந்த வலைப்பதிவுக்கான வேப்பி விருதைப் பெற்றேன். 00:05:38.000 --> 00:05:40.000 அந்தத் திகைப்பும், 00:05:40.000 --> 00:05:42.000 அந்த நிகழ்ச்சி தந்த பேராச்சரியமும் 00:05:42.000 --> 00:05:45.000 சற்று மங்கி போனது, நான் டொரோண்டோ திரும்பி, 00:05:45.000 --> 00:05:47.000 என்னுடைய மின்னஞ்சல் பார்த்த போது, 00:05:47.000 --> 00:05:49.000 10 இலக்கியக் கழகத்தை சார்ந்த முகவர்கள், எனக்காக காத்திருந்தன, 00:05:49.000 --> 00:05:52.000 என்னுடைய வலைப்பதிவை ஒரு புத்தகமாக்க. 00:05:52.000 --> 00:05:54.000 ஒரு வருடம் பின்னே, 00:05:54.000 --> 00:05:56.000 "தி புக் ஒப் ஆவ்சொம்" வெளிவந்தது 00:05:56.000 --> 00:05:58.000 தொடர்ந்து 20 வாரங்களுக்கு, சிறந்த விற்பனையாகும் புத்தகங்களின் பட்டியலில் முதன் இடத்தை பிடித்தது. NOTE Paragraph 00:05:58.000 --> 00:06:06.000 (கைத்தட்டல்) NOTE Paragraph 00:06:06.000 --> 00:06:08.000 சரி, நான் உங்களிடம் முன்று விடயங்களை இன்று பேச விரும்பினேன். 00:06:08.000 --> 00:06:10.000 நான் உங்களிடம் அற்புதமான கதையை சொல்லப் போவதாக சொல்லியிருந்தேன், 00:06:10.000 --> 00:06:12.000 மற்றும் அற்புதத்தின் மூன்று அம்சங்களை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். 00:06:12.000 --> 00:06:14.000 இந்த உரை நிறைவடையும் முன்பு ஒரு நிறைவான எண்ணத்துடன் உங்களை விட்டுச் செல்ல விரும்புகிறேன். 00:06:14.000 --> 00:06:16.000 சரி, நாம் அந்த மூன்று அம்சங்களைப் பற்றிப் பேசுவோம். 00:06:16.000 --> 00:06:18.000 கடந்த சில வருடங்களாக, 00:06:18.000 --> 00:06:20.000 எனக்கு சிந்திக்க, உண்மையாக சிந்திக்க, நேரம் கிடைக்கவில்லை. 00:06:20.000 --> 00:06:23.000 ஆனால், சமீப காலமாக, ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது எனக்கு. ஒரு படி பின்னே சென்று 00:06:23.000 --> 00:06:26.000 நான் எனக்கே சவால் விட: கடந்த சில வருடங்களில், எவை 00:06:26.000 --> 00:06:28.000 என்னுடைய இணையத்தளத்தை மட்டும் அல்லாமல் 00:06:28.000 --> 00:06:30.000 என்னையும் வளர உதவி செய்தன? 00:06:30.000 --> 00:06:32.000 எனக்கு தனிப்பட்ட முறையில், அவைகளை தொகுத்துள்ளேன், 00:06:32.000 --> 00:06:34.000 மூன்று அம்சங்களாக. 00:06:34.000 --> 00:06:37.000 அவை மனப்பாங்கு, விழிப்புணர்வு 00:06:37.000 --> 00:06:39.000 மற்றும் நம்பகத்தன்மை. 00:06:39.000 --> 00:06:42.000 ஒவ்வொன்றைப் பற்றியும் சுருக்கமாகப் பேசப் போகிறேன். NOTE Paragraph 00:06:43.000 --> 00:06:45.000 முதலில், மனப்பாங்கு: 00:06:45.000 --> 00:06:47.000 நாம் அனைவரும் தொண்டை அடைக்கும் துன்பங்களை எதிர்கொண்டுள்ளோம். 00:06:47.000 --> 00:06:49.000 நாம் அனைவரும் காயங்களை எதிர்கொண்டுள்ளோம். 00:06:49.000 --> 00:06:52.000 யாராலும் எதிர்காலத்தை கணிக்க முடியாது, ஆனால் நாம் அனைவரும் ஒன்றை அறிவோம். 00:06:52.000 --> 00:06:55.000 எதுவும் நாம் நினைத்தது போல நடக்காது. 00:06:55.000 --> 00:06:57.000 நாம் பெரும் வெற்றியைச் சந்தித்து இருக்கிறோம். 00:06:57.000 --> 00:06:59.000 முக்கியமான நாட்களை, பெருமை கொண்ட கணங்களை பார்த்திருக்கிறோம். 00:06:59.000 --> 00:07:01.000 பட்டதாரியான போது உதிர்த்த புன்னகை. 00:07:01.000 --> 00:07:03.000 கல்யாணங்களில் அப்பாவும் மகளும் ஆடிய நடனம். 00:07:03.000 --> 00:07:06.000 பிரசவ அறையில், செழிப்பான குழந்தைகள் வீரிட்டு அழுத சத்தம். 00:07:06.000 --> 00:07:08.000 ஆனால் இந்த சந்தோஷங்களின் இடையில், 00:07:08.000 --> 00:07:11.000 நாம் சில துன்பங்களும் காயங்களும் பெற்றிருப்போம். 00:07:11.000 --> 00:07:14.000 அது சோகமானது. அதனை பற்றி பேசுவது இனிமையானதல்ல. 00:07:14.000 --> 00:07:17.000 உங்களின் கணவர் உங்களை விட்டு போகலாம். 00:07:17.000 --> 00:07:19.000 உங்களின் காதலி உங்களை ஏமாற்றிவிடலாம். 00:07:19.000 --> 00:07:22.000 உங்களின் தலை வலி, தாங்கள் நினைத்ததை விட ஆபத்தாக இருக்கலாம். 00:07:22.000 --> 00:07:26.000 இல்லையென்றால், தங்களின் நாய் தெருவில் ஒரு வாகனம் இடித்து இறந்துவிடலாம். 00:07:26.000 --> 00:07:28.000 இது ஒரு சந்தோஷமான எண்ணம் கிடையாது. 00:07:28.000 --> 00:07:31.000 ஆனால் தங்களின் குழந்தைகள் ரௌடி கும்பலிடம் சேர்ந்து விடலாம். 00:07:31.000 --> 00:07:33.000 தப்பான நேரங்களில் மாட்டிக்கொள்ளலாம். 00:07:33.000 --> 00:07:35.000 தங்களின் அம்மாவுக்கு புற்று நோய் வரலாம். 00:07:35.000 --> 00:07:37.000 தங்களின் அப்பா எப்போதும் எரிச்சலுடன் இருக்கலாம். 00:07:37.000 --> 00:07:39.000 வாழ்க்கை, சில தருணங்களில் 00:07:39.000 --> 00:07:41.000 உங்களை ஒரு பாழ்கிணற்றில் தள்ளிவிடும். 00:07:41.000 --> 00:07:43.000 உங்களின் வயிறு பிரட்டும். உங்களின் இதயத்தில் ஓட்டைகள் உண்டாகும். 00:07:43.000 --> 00:07:45.000 அந்த கெட்ட செய்தி நம்மை தாக்கிய பிறகு, 00:07:45.000 --> 00:07:48.000 வலி நம்மில் ஊறிவிட்ட பிறகு, 00:07:48.000 --> 00:07:50.000 நான் உணர்கிறேன், நீங்கள் இதை உணருவீர்கள் என்று 00:07:50.000 --> 00:07:52.000 உங்களுக்கு இரு வழிகள் மட்டும் இருப்பது போல. 00:07:52.000 --> 00:07:54.000 ஒன்று, நீங்கள் அதில் தத்தி தடுமாறி, வீழ்ந்து, 00:07:54.000 --> 00:07:56.000 என்றென்றைக்கும் என மூழ்கிப் போவது. 00:07:56.000 --> 00:07:58.000 இரண்டாவது வழி, நீங்கள் வருத்தப்பட்ட பிறகு, 00:07:58.000 --> 00:08:00.000 எதிர்காலத்தை நீங்கள் எதிர்கொள்வது, 00:08:00.000 --> 00:08:02.000 ஒரு புதிய, நிதானமான பார்வையுடன். 00:08:02.000 --> 00:08:05.000 இரண்டாவது வழியை தேர்ந்தெடுப்பது, ஒரு சிறந்த மனப்பாங்கைக் குறிக்கும். 00:08:05.000 --> 00:08:07.000 எவ்வளவு கடினமாக இருப்பினும் தேர்ந்தெடுக்க வேண்டும், 00:08:07.000 --> 00:08:09.000 எவ்வளவு வலி நம்மை தாக்கினாலும், 00:08:09.000 --> 00:08:11.000 முன்னே செல்ல, அதை கடந்து செல்ல முனைய வேண்டும். 00:08:11.000 --> 00:08:13.000 குழந்தை எடுக்கும் சிறு காலடிகள் போல, நடக்க வேண்டும் எதிர்காலத்தை நோக்கி. NOTE Paragraph 00:08:16.000 --> 00:08:19.000 இரண்டாவது அம்சம், விழிப்புணர்வு. 00:08:20.000 --> 00:08:23.000 நான் மூன்று வயது சிறுவர்களுடன் பொழுதைக் களிக்க விரும்புவேன். 00:08:23.000 --> 00:08:25.000 அவர்கள், உலகைப் பார்க்கும் முறை, எனக்கும் மிகவும் பிடிக்கும், 00:08:25.000 --> 00:08:27.000 ஏனென்றால், அவர்கள் உலகத்தை முதன் முறையாக பார்க்கின்றனர். 00:08:27.000 --> 00:08:30.000 அவர்கள் ஒரு பூச்சி நடைப்பாதையில் செல்வதை முறைத்து முறைத்து பார்க்கும் விதம் எனக்குப் பிடிக்கும். 00:08:30.000 --> 00:08:32.000 வாயை திறந்துக் கொன்டு அவர்கள் வேடிக்கை பார்க்கும் விதம் எனக்கு பிடிக்கும், 00:08:32.000 --> 00:08:34.000 அவர்கள் தங்களின் முதல் பேஸ்பால் விளையாட்டைப் பார்க்கும் போது. 00:08:34.000 --> 00:08:36.000 பரந்து விரிந்த கண்களுடன், கையுறை அணிந்து கொன்டு, 00:08:36.000 --> 00:08:38.000 மட்டை பந்தை அடிக்கும் சத்தத்தையும், கடலை உண்ணும் சத்தத்தையும், 00:08:38.000 --> 00:08:40.000 ஹாட்டாக்சின் வாசனையும் அவர்கள் கவனிப்பார்கள். 00:08:40.000 --> 00:08:43.000 கொல்லைப்புறத்தில், அவர்கள் மணிக்கணக்காக பூக்கள் பறிக்கும் விதம் எனக்கு பிடிக்கும். 00:08:43.000 --> 00:08:45.000 அவற்றை கொன்டு, அழகிய மலர்கொத்து செய்து, 00:08:45.000 --> 00:08:47.000 அதை 'நன்றி நவிலுதல்' விருந்துக்கான அலங்காரங்களில் வைப்பார்கள். 00:08:47.000 --> 00:08:49.000 அவர்கள் உலகத்தை பார்க்கும் விதம் எனக்கு பிடிக்கும். 00:08:49.000 --> 00:08:51.000 ஏனென்றால், அவர்கள் உலகத்தை பார்க்கின்றனர் 00:08:51.000 --> 00:08:53.000 முதன் முறையாக. 00:08:54.000 --> 00:08:56.000 விழிப்புணர்வு கொள்வது என்பது, 00:08:56.000 --> 00:08:59.000 உங்களின் உள்ளே உள்ள மூன்று வயது சிறுவனை தழுவிக்கொள்வது என்பதாகும். 00:08:59.000 --> 00:09:01.000 ஏனென்றால், நீங்கள் அனைவரும் மூன்று வயது குழந்தைகளாக இருந்திருப்பீர்கள். 00:09:01.000 --> 00:09:03.000 அந்த மூன்று வயது சிறுவன் இன்னும் தங்களின் ஒரு பகுதியாக உள்ளான். 00:09:03.000 --> 00:09:05.000 அந்த மூன்று வயது சிறுமி இன்னும் தங்களின் ஒரு பகுதியாக உள்ளாள். 00:09:05.000 --> 00:09:07.000 அவர்கள் உள்ளே உள்ளனர். 00:09:07.000 --> 00:09:10.000 விழிப்புணர்வுடன் இருப்பது என்பது, ஞாபகம் கொள்வது ஆகும். 00:09:10.000 --> 00:09:12.000 நீங்கள் பார்க்கும் அனைத்தும், நீங்கள் பார்த்திருக்கிரீர்கள் 00:09:12.000 --> 00:09:14.000 ஒரு முறை, முதல் தடவையாக, என்று ஞாபகம் கொள்வது. 00:09:14.000 --> 00:09:17.000 தருணங்கள் இருக்கின்றன. நீங்கள் முதன் முறையாக 00:09:17.000 --> 00:09:19.000 வேலையிலிருந்து வீடு செல்லும் வழியில், பச்சை விளக்குகள் மட்டும் எரிய தடையின்றி சென்ற போது. 00:09:19.000 --> 00:09:22.000 நீங்கள் முதன் முறையாக, இனிப்பகம் உள்ளே நடந்து சென்று, 00:09:22.000 --> 00:09:24.000 அந்த வாசனையை நுகர்ந்த போது. 00:09:24.000 --> 00:09:27.000 இல்லை என்றால், எதிர்பாரா விதமாக தங்களின் பழைய சட்டைப்பையிலிருந்து, ஒரு இருபது ரூபாய் எடுத்து, 00:09:27.000 --> 00:09:30.000 "அட, இங்கே காசு இருக்கிறதே!" என்று சொன்ன போது. NOTE Paragraph 00:09:31.000 --> 00:09:34.000 மூன்றாவது அம்சம், நம்பகத்தன்மையாகும். 00:09:34.000 --> 00:09:37.000 இதற்கு விரைவாக, ஒரு சின்ன கதையை சொல்ல போகிறேன். 00:09:38.000 --> 00:09:40.000 நாம் 1932 க்கு செல்லலாம். 00:09:40.000 --> 00:09:43.000 ஜோர்ஜியாவில் ஒரு கடலைப் பண்ணையில், 00:09:43.000 --> 00:09:46.000 ரூஸ்வெல்ட் க்ரியர், என்ற பெயர் கொண்ட ஒரு பையன் பிறந்தான். 00:09:47.000 --> 00:09:50.000 ரூஸ்வெல்ட் க்ரியர் அல்லது ரோசே க்ரியர் என்று அழைக்கப்பட்ட அவன், 00:09:50.000 --> 00:09:52.000 வளர்ந்து, பெரியவனான் 00:09:52.000 --> 00:09:56.000 ஒரு 150 கீலோகிராம் எடை கொண்ட ஆறு அடி ஐந்தங்குல உயரமுடைய விளையாட்டு வீரனாய். 00:09:56.000 --> 00:09:59.000 புகைப்படத்தில், 76 எண் கொண்ட சட்டையை அணிந்துருப்பவர் அவர். 00:09:59.000 --> 00:10:02.000 அவர், "பயமுறுத்தும் நால்வர்" உடன் நின்றுக்கொண்டிருக்கிறார். 00:10:02.000 --> 00:10:04.000 1960 களில், லாஸ் ஏன்ஜல்ஸ் ராம்ஸ் அணியை சேர்ந்த, இந்த நான்கு பேரை, 00:10:04.000 --> 00:10:06.000 எதிர்த்து விளையாட தயங்குவார்கள். 00:10:06.000 --> 00:10:09.000 இவர்கள் ஆக்ரோஷமான கால்பந்து வீரர்கள். அவர்களுக்கு பிடித்ததை செய்தவர்கள். 00:10:09.000 --> 00:10:11.000 அதாவது, பிறரின் மண்டையை உடைப்பது. 00:10:11.000 --> 00:10:13.000 இல்லையென்றால், தோள்பட்டையை பிரித்து எடுப்பது, கால்பந்து களத்தில். 00:10:13.000 --> 00:10:15.000 ஆனால், ரோசே க்ரியருக்கு 00:10:15.000 --> 00:10:17.000 மற்றொன்று பேரார்வம் இருந்தது. 00:10:17.000 --> 00:10:20.000 அவர் தனது, ஆழ்ந்த உண்மையான சுயமாக இருந்த போது, 00:10:20.000 --> 00:10:23.000 அவர் பூத்தையல் செய்வதை விரும்பினார். (சிரிப்பு) 00:10:24.000 --> 00:10:26.000 அவருக்கு பின்னல் வேலை மிகவும் பிடித்து இருந்தது. 00:10:26.000 --> 00:10:28.000 அது அவருக்கு நிதானமும், அமைதியும் அளித்ததாக கூறினார். 00:10:28.000 --> 00:10:31.000 அது அவரின் விமானத்தில் பறக்கும் பயத்தை போக்கியது என்றும், பெண்களை சந்திக்க உதவியதும் என்றும், 00:10:31.000 --> 00:10:33.000 அவர் கூறினார். 00:10:34.000 --> 00:10:36.000 அவருக்கு பின்னுவது, மிகவும் பிடித்து இருந்தது, அவர் என்.எப்.எல் அணியிலிருந்து ஓய்வு பெற்றபின், 00:10:36.000 --> 00:10:38.000 அவர் அதற்கான சங்கங்களில் சேர்ந்தார். 00:10:38.000 --> 00:10:40.000 அவர் ஒரு புத்தகத்தையும் எழுதினார். 00:10:40.000 --> 00:10:42.000 அதன் பெயர் "ரோசே கிரியரின், ஆண்களுக்கான தையல் புத்தகம்". 00:10:42.000 --> 00:10:44.000 (சிரிப்பு) 00:10:44.000 --> 00:10:47.000 (கைத்தட்டல்) 00:10:47.000 --> 00:10:49.000 அந்த புத்தகத்தின் அட்டை, பிரமாதமாக இருந்தது. 00:10:49.000 --> 00:10:52.000 நீங்கள் கவனித்தீர்கள் என்றால், அவர் தனது முகத்தையே பூத்தையல் செய்துக்கொண்டிருக்கிறார். NOTE Paragraph 00:10:52.000 --> 00:10:54.000 (சிரிப்பு) NOTE Paragraph 00:10:54.000 --> 00:10:57.000 இந்த கதையில் எனக்கு பிடித்தது என்னவென்றால், 00:10:57.000 --> 00:10:59.000 ரோசே கிரியர், 00:10:59.000 --> 00:11:01.000 உண்மையாகவே ஒரு நம்பகத்தனமான மனிதர். 00:11:01.000 --> 00:11:03.000 இது தான் நம்பகத்தன்மை என்பது. 00:11:03.000 --> 00:11:06.000 நீங்கள் நீங்களாக இருந்து, நீங்கள் அதை இயல்பாக கொள்வது. 00:11:06.000 --> 00:11:08.000 நீங்கள் உண்மையாக நம்பகத்தன்மையுடன் இருந்தால், 00:11:08.000 --> 00:11:10.000 நீங்கள் உங்களின் இதயம் சொல்வதை கேட்பீர்கள். 00:11:10.000 --> 00:11:12.000 உங்களை இடங்களுக்கு நீங்களே கொண்டு செல்வீர்கள் மற்றும் 00:11:12.000 --> 00:11:14.000 சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள் மற்றும் உரையாடல்கள் கொள்வீர்கள், 00:11:14.000 --> 00:11:16.000 உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், நீங்கள் விரும்பும் வகையில். 00:11:16.000 --> 00:11:18.000 நீங்கள் பேச விரும்பும் மக்களை சந்திப்பீர்கள். 00:11:18.000 --> 00:11:20.000 நீங்கள் கனவு கண்ட இடங்களுக்கு செல்வீர்கள். 00:11:20.000 --> 00:11:22.000 உங்கள் இதயம் சொல்வதை பின்பற்றுவீர்கள் 00:11:22.000 --> 00:11:25.000 மன நிறைவுடன். 00:11:25.000 --> 00:11:28.000 இவை தான் அற்புதத்தின் மூன்று அம்சங்கள். NOTE Paragraph 00:11:28.000 --> 00:11:30.000 இந்த உரை நிறைவடையும் முன்பு, நான் உங்களை மீண்டும் அழைத்து செல்ல விரும்புகிறேன், 00:11:30.000 --> 00:11:33.000 என் பெற்றோர் கனடா வந்த காலத்திற்கு. 00:11:33.000 --> 00:11:35.000 எனக்கு தெரியவில்லை, எப்படி அவர்கள் உணர்ந்தார்கள் என்று, 00:11:35.000 --> 00:11:38.000 அவர்களின் இருபதுகளில் ஒரு புதிய நாட்டிற்கு வந்த போது. 00:11:38.000 --> 00:11:40.000 எனக்கு தெரியவில்லை, ஏனென்றால் நான் அதைச் செய்ததில்லை. 00:11:40.000 --> 00:11:43.000 ஆனால், என்னால் கற்பனை செய்ய முடிகிறது. அதைச் செய்ய ஒரு சிறந்த மனப்பாங்கு தேவைப்படும். 00:11:43.000 --> 00:11:46.000 என்னால் கற்பனை செய்ய முடிகிறது. உங்களைச் சுற்றியுள்ள விஷயங்களைப் பற்றி நீங்கள் அறிய வேண்டும், 00:11:46.000 --> 00:11:48.000 சின்னச் சின்ன அதிசயங்களைக் கண்டு மகிழ வேண்டும், 00:11:48.000 --> 00:11:51.000 உங்களின் புதிய உலகத்தை நீங்கள் பார்க்கும் போது. 00:11:51.000 --> 00:11:53.000 நீங்கள் நம்பகத்தன்மை உடையவராக இருக்க வேண்டும். 00:11:53.000 --> 00:11:55.000 நீங்கள், உங்களுக்கு உண்மையானவராக இருக்க வேண்டும், 00:11:55.000 --> 00:11:58.000 இதை அனைத்தையும் அனுபவிக்க. NOTE Paragraph 00:11:59.000 --> 00:12:01.000 என்னுடைய TEDTalk யில் ஒரு இடைவேளை 00:12:01.000 --> 00:12:03.000 விட விரும்புகிறேன், இப்போது 10 விநாடிகளுக்கு. 00:12:03.000 --> 00:12:05.000 ஏனென்றால், உங்களின் வாழ்க்கையில், இது போன்ற வாய்ப்புகள் கிடைப்பதில்லை, இதைச் செய்வதற்கு. 00:12:05.000 --> 00:12:07.000 என்னுடைய தாய் தந்தை, முதல் வரிசையில் அமர்ந்துள்ளனர். 00:12:07.000 --> 00:12:09.000 அவர்களை, எழுந்து நிற்கும்படி, கேட்டுக் கொள்கிறேன். 00:12:09.000 --> 00:12:11.000 அவர்களுக்கு என் நன்றிகளை, நான் அர்ப்பணிக்கிறேன்! NOTE Paragraph 00:12:11.000 --> 00:12:30.000 (கைத்தட்டல்) NOTE Paragraph 00:12:30.000 --> 00:12:33.000 நான் வளரும் போது, என்னுடைய அப்பா எனக்கு ஒரு கதை சொல்ல விரும்புவார். 00:12:33.000 --> 00:12:35.000 கனடாவில், அவர் வந்து இறங்கிய முதல் நாளின் கதை. 00:12:35.000 --> 00:12:38.000 அது ஒரு சிறப்பான கதை, ஏனென்றால் 00:12:38.000 --> 00:12:41.000 அவர் விமானத்தில் டொரோண்டோ விமான நிலையத்தை வந்து அடைந்த போது, 00:12:41.000 --> 00:12:43.000 அவரை வரவேத்தது, ஒரு லாப-நோக்கமற்ற குழு. 00:12:43.000 --> 00:12:45.000 அக்குழு, நிச்சயமாக, இந்த அறையில் உள்ள யாரோ ஒருத்தரால் நடத்தப்படுகிறது, என்று நான் நம்புகிறேன். 00:12:45.000 --> 00:12:47.000 (சிரிப்பு) 00:12:47.000 --> 00:12:50.000 இந்த லாப-நோக்கமற்ற குழு, ஒரு பெரிய வரவேற்பு விருந்து தந்தார்கள், 00:12:50.000 --> 00:12:53.000 கனடாவிற்கு புதிதாக குடியேறுபவர்களுக்கு. 00:12:53.000 --> 00:12:56.000 என் அப்பா சொன்னார், அவர் விமானத்தைவிட்டு இறங்கி, இந்த விருந்துக்கு சென்றார். 00:12:56.000 --> 00:12:58.000 அங்கு, வகை வகையான உணவு இருந்தது. 00:12:58.000 --> 00:13:01.000 ரொட்டி இருந்தது. சின்ன சின்ன, சிறிய வெங்காய ஊறுகாய்கள் இருந்தன. 00:13:01.000 --> 00:13:03.000 ஆலிவ்கள் இருந்தன. சின்ன வெள்ளை வெங்காயங்கள் இருந்தன. 00:13:03.000 --> 00:13:05.000 சுற்றிவைக்கப்பட்ட, வான்கோழி குளிர் வெட்டுக்கள் இருந்தன. 00:13:05.000 --> 00:13:07.000 சுற்றிவைக்கப்பட்ட, பன்றிக் கறி மற்றும் மாட்டிறைச்சி, குளிர் வெட்டுக்கள் இருந்தன. 00:13:07.000 --> 00:13:09.000 சிறிய பாலாடைக்கட்டிகள் இருந்தன. 00:13:09.000 --> 00:13:12.000 சூரை மீன் கொண்ட அடுக்கு ரொட்டிகள், முட்டை அடுக்கு ரொட்டிகள் மற்றும் 00:13:12.000 --> 00:13:14.000 நன்னீர் மீன் கொண்ட அடுக்கு ரொட்டிகள் ஆகியவை இருந்தன. 00:13:14.000 --> 00:13:16.000 லாசக்னியா மற்றும் காசெரோல்கள் இருந்தன. 00:13:16.000 --> 00:13:19.000 பிரௌனி இருந்தன. வெண்ணெயால் ஆன புளிப்பு பண்டங்கள் இருந்தன. 00:13:19.000 --> 00:13:22.000 மற்றும் பழக் கேக்குகள் இருந்தன. இன்னும் பல பல பண்டங்கள் இருந்தன. 00:13:22.000 --> 00:13:24.000 என்னுடைய அப்பா இந்த கதை சொல்லும் போது, அவர் சொல்லுவார், 00:13:24.000 --> 00:13:28.000 "இதில் அதிசயமான விஷயம் என்னவென்றால், நான் இவற்றில் ரொட்டியைத் தவிர வேறு எதையும் பார்த்ததே இல்லை," 00:13:28.000 --> 00:13:30.000 (சிரிப்பு) 00:13:30.000 --> 00:13:32.000 இதில் எது மாமிச உணவு, எது சைவ உணவு என்று தெரியவில்லை எனக்கு. 00:13:32.000 --> 00:13:34.000 நான் ஆளிவ்களை உண்டேன், பதார்த்தத்துடன். 00:13:34.000 --> 00:13:37.000 (சிரிப்பு) 00:13:37.000 --> 00:13:40.000 இவ்ளோ பொருள்கள் இங்கு கிடைக்கும் என்று என்னால் நம்ப முடியவில்லை!" NOTE Paragraph 00:13:40.000 --> 00:13:42.000 (சிரிப்பு) NOTE Paragraph 00:13:42.000 --> 00:13:44.000 நான் ஐந்து வயது இருக்கும் போது, 00:13:44.000 --> 00:13:46.000 என்னுடைய அப்பா என்னை காய்கறி வாங்குவதற்கு கூட்டிச் செல்வார். 00:13:46.000 --> 00:13:48.000 அங்கு அவர் வியப்புடன், 00:13:48.000 --> 00:13:51.000 பழங்கள் மற்றும் காய்கறிகள் மேல் ஒட்டப்பட்டுள்ள சிறிய தாள்களை பார்ப்பார். 00:13:51.000 --> 00:13:54.000 அவர் சொல்லுவார், "பார், உன்னால் நம்ப முடிகிறதா, இந்த மாம்பழம் மெக்ஸிகோ இருந்து வருகிறது? 00:13:54.000 --> 00:13:57.000 இந்த ஆப்பிள் பழம், தென் ஆப்ரிக்காவிலிருந்து வந்துள்ளது. 00:13:57.000 --> 00:14:00.000 இந்த பேரிச்சம்பழம், மொரோக்கோ இருந்து வந்துள்ளது?" 00:14:00.000 --> 00:14:03.000 பின்னர் அவர் கேட்பார், "மொரோக்கோ எங்கே உள்ளது என்று உனக்குத் தெரியுமா?" 00:14:03.000 --> 00:14:06.000 அதற்கு நான் சொல்லுவேன், "எனக்கு ஐந்து வயது ஆகிறது. நான் எங்கே இருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை 00:14:06.000 --> 00:14:09.000 இது அ அண்டு பி கடையா?" 00:14:09.000 --> 00:14:12.000 அவர் பதில் அளிப்பார், "எனக்கும் மொரோக்கோ எங்கே உள்ளது என்று தெரியவில்லை, ஆனால் நாம் அதை கண்டு அறிவோம்!" 00:14:12.000 --> 00:14:14.000 அந்த பேரிச்சம்பழம் வாங்கிக் கொண்டு, வீடு திரும்புவோம். 00:14:14.000 --> 00:14:16.000 தேசப்படப் புத்தகத்தை அலமாரியிலிருந்து எடுத்து, 00:14:16.000 --> 00:14:19.000 அந்த மர்ம தேசம் எங்கே உள்ளது என்று நாங்கள் பக்கங்களை திருப்பிப் பாப்போம். 00:14:19.000 --> 00:14:21.000 அதை செய்யும் போது, அப்பா சொல்லுவார், 00:14:21.000 --> 00:14:23.000 "உன்னால் நம்ப முடிகிறதா, யாரோ ஒருவர் அங்கே ஒரு மரம் ஏறி, 00:14:23.000 --> 00:14:25.000 இந்த பழத்தை பறித்து, ஒரு வாகனத்தில் அதை எடுத்துக் கொண்டு , 00:14:25.000 --> 00:14:28.000 துறைமுகத்துக்கு ஓட்டிச் சென்றுள்ளார். 00:14:28.000 --> 00:14:30.000 பின்னர் அது ஒரு கப்பலில், இவ்வளவு தூரம், 00:14:30.000 --> 00:14:32.000 அட்லாண்டிக் மகாசமுத்திரத்தைக் கடந்து, 00:14:32.000 --> 00:14:34.000 இங்கு வந்து அடைந்துள்ளது. பின்னர், ஒரு வாகனத்தில் ஏற்றி 00:14:34.000 --> 00:14:37.000 நம் வீட்டு அருகிலுள்ள, இந்த சின்ன காய்கறி கடையை வந்து அடைந்து, 00:14:37.000 --> 00:14:40.000 25 சதத்திற்கு நம்மிடம் விலை போனது?" 00:14:40.000 --> 00:14:42.000 நான் சொல்லுவேன், "என்னால் இதை நம்ப முடியவில்லை." 00:14:42.000 --> 00:14:44.000 அவர் சொல்லுவார், "என்னால் கூட இதை நம்ப முடியவில்லை. 00:14:44.000 --> 00:14:47.000 எவ்வளவு அற்புதமாக உள்ளது. நம்மைச் சந்தோஷப்படுத்த எத்தனையோ விஷயங்கள் உள்ளன!" NOTE Paragraph 00:14:47.000 --> 00:14:49.000 நான் கொஞ்சம் நிறுத்தி யோசிக்கும் போது, அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்று எனக்கு புரிகிறது. 00:14:49.000 --> 00:14:51.000 எத்தனையோ விஷயங்கள் நம்மை சந்தோஷப்படுத்துகின்றன. 00:14:51.000 --> 00:14:54.000 இனங்களில், நம்முடைய இனம் தான் 00:14:54.000 --> 00:14:57.000 இந்த உயிர் அளிக்கும் பாறையின் மீது, 00:14:57.000 --> 00:15:00.000 இந்த பிரபஞ்சத்தில், நாம் அறிந்த அளவிற்கு, 00:15:00.000 --> 00:15:02.000 அனுபவிக்கும் திறனை கொண்டுள்ளது. 00:15:02.000 --> 00:15:04.000 இவை அனைத்தையும் அனுபவிக்கும் திறனை கொண்டுள்ளது. 00:15:04.000 --> 00:15:07.000 நாம் மட்டும் தான், விவசாயம் மற்றும் கட்டிடக்கலை அறிந்தவர்கள். 00:15:07.000 --> 00:15:10.000 நாம் மட்டும் தான், நகை மற்றும் ஜனநாயகத்தை உருவாக்கியவர்கள். 00:15:10.000 --> 00:15:13.000 நம்மிடம் விமானங்கள் உள்ளன. நெடுஞ்சாலைகள் உள்ளன. 00:15:13.000 --> 00:15:15.000 ஜாதிடம் மற்றும் உட்புற வடுவமைப்புக் கலை அறிந்தவர்கள். 00:15:15.000 --> 00:15:18.000 நம்மிடம் ஃபேஷன் வார இதழ்கள், விளையாட்டு பொம்மைகள் உள்ளன. 00:15:18.000 --> 00:15:20.000 நீங்கள் ஒரு பேய் படத்தை, ராட்ஷசகர்களுடன் பார்க்கலாம். 00:15:20.000 --> 00:15:23.000 ஒரு கச்சேரிக்கு சென்று, வீணை வாசிப்பதை ரசிக்கலாம். 00:15:23.000 --> 00:15:25.000 நாம் புத்தகங்கள், விருந்துகள், வானொலி பெட்டிகள், 00:15:25.000 --> 00:15:27.000 மணமகள்கள் மற்றும் கேளிக்கை சவாரிகள் என்பனவற்றைக் கொண்டுள்ளோம். 00:15:27.000 --> 00:15:29.000 நாம் சுத்தமான படுக்கையில் படுக்கலாம். 00:15:29.000 --> 00:15:31.000 படங்கள் பார்க்க செல்லலாம். நல்ல இருக்கையில் அமர்ந்துக் கொண்டு படங்களைப் பார்க்கலாம். 00:15:31.000 --> 00:15:34.000 நாம் இனிப்பகம் சென்று, அங்குள்ள வாசனையில் தொலைந்து போகலாம், மழையில் நனைந்து கொண்டே நடந்து செல்லலாம், 00:15:34.000 --> 00:15:37.000 பிளாஸ்டிக் பைகளை உடைக்கலாம், வேலை செய்யும் போது யாரும் அறியாமல் உறங்கலாம். NOTE Paragraph 00:15:37.000 --> 00:15:39.000 நாம் இவை அனைத்தையும் கொண்டுள்ளோம், 00:15:39.000 --> 00:15:42.000 ஆனால் 100 வருடங்கள் தான் உள்ளன இவை அனைத்தையும் ரசித்து மகிழ. 00:15:43.000 --> 00:15:45.000 அது தான் சோகமான விஷயம் ஆகும். 00:15:47.000 --> 00:15:50.000 காய்கறி கடையில் வேலை செய்யும் காசாளர், 00:15:50.000 --> 00:15:53.000 உங்களின் தொழிற்சாலையில் உள்ள மேலதிகாரி, 00:15:53.000 --> 00:15:56.000 உங்களை நெடுஞ்சாலையில் பின் தொடர்ந்து வருபவர், 00:15:56.000 --> 00:15:59.000 உங்களை இரவு உணவு அறுந்தும் போது தொலைபேசியில் அழைக்கும் விற்பனையாளர் 00:15:59.000 --> 00:16:01.000 உங்களுக்கு சொல்லி தந்த ஒவ்வொரு வாத்தியாரும், 00:16:01.000 --> 00:16:04.000 காலையில் உங்கள் பக்கத்தில் எழுந்த ஒவ்வொருத்தரும், 00:16:04.000 --> 00:16:06.000 ஒவ்வொரு நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசியல்வாதியும், 00:16:06.000 --> 00:16:08.000 ஒவ்வொரு படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகரும், 00:16:08.000 --> 00:16:11.000 உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும், நீங்கள் அன்புகொள்ளும் ஒவ்வொருவரும், 00:16:11.000 --> 00:16:14.000 இந்த அறையில் உள்ள ஒவ்வொருவரும், நீங்களும் 00:16:14.000 --> 00:16:17.000 இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு பிறகு இறந்து போயிருப்பீர்கள். 00:16:17.000 --> 00:16:20.000 வாழ்க்கை அற்புதமானது. ஆனால் சிறிய காலம் தான் உள்ளது 00:16:20.000 --> 00:16:22.000 அதை அனுபவித்து ரசித்து மகிழ. 00:16:22.000 --> 00:16:24.000 நம் வாழ்க்கையை அழகுபடுத்துவது, அந்த சின்னச் சின்ன தருணங்கள். 00:16:24.000 --> 00:16:26.000 அந்த தருணம் தான், இந்த கணம். 00:16:26.000 --> 00:16:29.000 அந்த தருணங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. 00:16:29.000 --> 00:16:32.000 அந்த கணங்கள் மிக மிக மிக வேகமாக பறந்து சென்றுக் கொண்டு இருக்கின்றன. NOTE Paragraph 00:16:34.000 --> 00:16:38.000 நீங்கள் இப்பொழுது இக்கணம், இருக்கும் இளமையுடன் என்றும் இருக்க போவதில்லை. 00:16:39.000 --> 00:16:42.000 அதனால் தான் நான் நம்புகிறேன், நீங்கள் உங்கள் வாழ்க்கையை 00:16:42.000 --> 00:16:44.000 ஒரு சிறந்த மனப்பாங்குடன் வாழ வேண்டும். 00:16:44.000 --> 00:16:46.000 கடந்து முன்னே செல்ல முனைய வேண்டும், 00:16:46.000 --> 00:16:48.000 நம் வாழ்க்கையில் நாம் அடி வாங்கும் போது. 00:16:48.000 --> 00:16:51.000 நம்மை சுற்றியுள்ள உலகத்தை பற்றி நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 00:16:51.000 --> 00:16:53.000 உங்களில் உள்ள மூன்று வயது சிறுவனைத் தழுவிக்கொண்டு, 00:16:53.000 --> 00:16:56.000 நம் வாழ்க்கையை இனிதாக்கும் அந்த சின்ன சின்ன சந்தோஷங்களை பார்த்து அனுபவிக்க வேண்டும். 00:16:56.000 --> 00:16:58.000 உங்களுக்கு நீங்களே உண்மையானவராக இருக்க வேண்டும். 00:16:58.000 --> 00:17:00.000 நீங்கள் நீங்களாகவிருந்து, நீங்கள் அதை இயல்பாகக் கொள்ள வேண்டும். 00:17:00.000 --> 00:17:03.000 உங்களின் இதயம் உங்களை வழிகாட்ட அனுமதிக்க வேண்டும். உங்களை திருப்திப்படுத்தும் அனுபவங்களை நீங்கள் செய்ய வேண்டும். 00:17:03.000 --> 00:17:05.000 அப்போது, நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ்வீர்கள். 00:17:05.000 --> 00:17:07.000 ஒரு திருப்திகரமான, செழிப்பான வாழ்க்கையை வாழ்வீர்கள். 00:17:07.000 --> 00:17:09.000 அதுவோர் அற்புதமான வாழ்க்கையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். NOTE Paragraph 00:17:09.000 --> 00:17:11.000 நன்றி!