இங்கே நாம் ஒரு மகிழ்ச்சிகரமான நாளில் சவாரி செய்யும் வேடிக்கை நண்பர் பிலிப்புவை காண்கிறோம். பிலிப்பு அவனுடைய ட்விட்டரை நேசிக்கிறான். அச்சச்சோ, ஆனால் ஒரு பிரச்சனை! பிலிப்பு ஒரு சுயவிவரப்படத்தை பதிவேற்ற மறந்துவிட்டார், ஆகையால் மக்கள் அவனுடைய ட்விட்டர் கணக்கை எப்பொழுது பார்த்தாலும் ஒரு சிறிய தனிமையான முட்டையையே பார்க்கிறார்கள். ஆனால் சுயவிவரத்தை திருத்துவது மிக எளிது. ME டேப்பிலிருந்து " Edit Profile " என்பதை சொடுக்கினாலே போதும் அந்த முட்டையை அகற்ற அவனுடைய கணினி கேமராவை கொண்டு ஒரு புகைப்படம் எடுப்பதிலிருந்து தொடங்குவோம். மடிக்கணினியை பார்த்து சிரி! அது சரியாக தெரியும் வரை நாம் அதனுடைய அளவு மற்றும் நிலையை மாற்றலாம். பிரமாதம்! அடுத்து, ஒரு தலைப்பு புகைப்படத்தை நாம் சேர்க்கலாம். நாம் மற்றொன்றை பதிவேற்றலாம் அல்லது (இதுவே நலமானது) நீங்கள் ஒரு கோப்பையை இழுத்து சரியாக தலைப்பு பகுதியில் போடலாம்! நீங்கள் இதனை உங்கள் சுயவிவரப்படத்திற்கும் செய்யலாம். இது நலமானது என்று கண்டதும், "Apply" என்பதை சொடுக்கவும் அப்படியே இங்கே உங்கள் சுயவிவர புலத்தை, உங்கள் இருப்பிடத்தை, மற்றும் வலைத்தள விவரங்களை பூர்த்தி செய்யலாம் ஆகையால் மக்கள் உங்களை பற்றி அதிகம் தெரிந்து கொள்வார்கள். "Save changes" என்பதை சொடுக்கவும். அவ்வளவு தான் நீங்கள் முடித்துவிட்டீர்கள்! நீங்கள் SETTINGSக்கு சென்று DESIGN பட்டியை சொடுக்கினால் நீங்கள் ஒரு பின்புல புகைப்படத்தை மாற்றலாம் அல்லது பதிவேற்றலாம். நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஒரு கோப்பையை தேர்வு செய்து பின்னர் உங்கள் மாற்றங்களை சேமிக்கவும். ஆவ்வ் சந்தோஷம்! நீங்கள் பிரயாணத்தில் இருந்தீர்களானால் இந்த மாற்றங்களை ட்விட்டரின் அதிகாரபூர்வமான செயலிகளினால் ME டேப்பில் செய்யலாம். SETTINGS பல்லிணை தட்டி... "Edit Profile" என்பதை தேர்வு செய்யவும் இப்பொழுது நீங்கள் எப்பொழுதெல்லாம் நினைக்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் உங்கள் சுயவிவர மற்றும் தலைப்பு புகைப்படங்களை மாற்றிகொள்ளலாம். இந்த வசதிகளை உங்களுக்கு வழங்கியது எங்களது பொறியாளர்களும் வடிவமைப்பாளர்களுமே உங்கள் சுயவிவரத்தை கச்சிதமாக அமைப்பதை அறிந்துகொண்டீர்கள் என்று நம்புகிறோம்! மற்றும் இங்கே ட்விட்டரில் உள்ள அனைவரின் சார்பாகவும்: "மகிழ்ச்சியான கீச்சுதல்"