பின்னங்களின் வகுத்தல் பற்றி காண்போம் இப்பொழுது தொடங்கலாம் பின்னங்களை எப்படி வகுப்பது என்பதை நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன். இது பின்னப் பெருக்கலை விட கடினமானது அல்ல.. 1/2 ÷ 1/2 = ? பின்ன வகுத்தலில் எந்த எண்ணால் வகுக்கிறோமோ அந்த எண்ணின் பெருக்கல் தலைகீழியால் பெருக்கலாம்... 1/2 ÷ 1/2 = 1/2 * 2/1 இரண்டாவது எண்ணை தலைகீழாக எழுதி உள்ளோம் 1/2 * 2/1 = 2/2 2/2 = 1 ஒரு எண்ணை அதே எண்ணால் வகுத்தால் விடை 1 வரும்.. 5/5 = 1 100/100 = 1 இது மாறாது இதை எப்பொழும் செய்யலாம் 2 * 1/2 = 1 ? இதை பற்றி நான் தெளிவாக சொல்கிறேன் 12 ÷ 4 = ? 12 * 1/4 = ? 12/1 * 1/4 = 12/4 = 3 இது புதிய முறை அல்ல ஏற்கனவே நாம் பார்த்த பின்ன வகுத்தல் முறை தான் .. நாம் ஒரு எண்ணை எந்த எண்ணால் வகுக்கிறோமோ அந்த எண்ணை தலைகீழாக போட்டு பெருக்க வேண்டும்.. A இன் பெருக்கல் தலைகீழி 1/A ஆகும்.. 2/3 இன் பெருக்கல் தலைகீழி 3/2 5 இன் பெருக்கல் தலைகீழி 1/5 இப்பொழுது சில கணக்குகளை போடலாம் 2/3 ÷ 5/6 = ? 2/3 * 6/5 = ? 2/3 * 6/5 = 12/15 பகுதி மற்றும் தொகுதி எண்களை 3-ஆல் வகுத்தால் 4/5 கிடைக்கும்.. 7/8 ÷ 1/4 = ? 7/8 * 4/1 = ? 1/4 ஆல் வகுப்பது என்பது 4/1 ஆல் பெருக்குவது ஆகும்.. 8 / 4 = 2 4 / 4 = 1 7/8 * 4/1 = 7/2 இதை கலப்பு எண்ணாக கூட எழுதலாம் இது ஒரு தகாபின்னம் ஆகும்.. தகாபின்னத்தில் பகுதி எண் சிறியதாக இருக்கும் தொகுதி எண் பெரியதாக இருக்கும்.. 7-ஐ 2-ஆல் வகுத்தால் ஈவு 3 மற்றும் மீதி 1 வரும்..3 1/2 மேலும் சில கணக்குகளை போடலாம் -2/3 ÷ 5/2 = ? -2/3 * 2/5 = ? -2/3 * 2/5 = -4/15 3/2 ÷ 1/6 = ? 3/2 * 6/1 = ? 18 / 2 = 9 மேலும் சில கணக்குகளை போடலாம் புரியவில்லை எனில் மேலே போட்டுள்ள அனைத்து கணக்குகளையும் ஒரு முறை பார்த்து கொள்ளுங்கள் -5/7 ÷ 10/3 = ? -5/7 * 3/10 -5 * 3 = ? -5 * 3= -15 7 * 10 = 70 -15/70. தொகுதி மற்றும் பகுதி எண்களை 5-ஆல் வகுக்க வேண்டும். -3 /14 மேலும் சில கணக்குகளை பார்க்கலாம் 1/2 ÷ -3 = ? பின்னத்தை முழு எண்ணால் பெருக்கினால் என்ன வரும்? முழு எண்ணை பின்னமாக எழுதலாம் 1/2 ÷ -3/1 -3/1 இன் பெருக்கல் தலைகீழி -1/3 1/2 * -1/3 = -1/6 மேலும் சில கணக்குகளை பார்க்கலாம் -3 ÷ 1/2 = ? -3/1 ÷ 1/2 = ? 3/1 * 2/1 = ? 3/1 * 2/1 = 6/1 = 6 இது எப்படி வருகிறது என்பதை காணலாம் 2 ÷ 1/3 2/1 * 3/1 2/1 * 3/1 = 6 2 மற்றும் 1/3-ஐ எப்படி தொடர்புப்படுத்துவது? என்னிடம் இரண்டு பிட்சா உள்ளது இரண்டு பிட்சாவையும் 3 பிரிவுகளாக பிரிக்க போகிறேன்.. நான் இதை பிரித்து விட்டேன் இரண்டிலும் மொத்தம் எத்தனை பிரிவுகள் உள்ளது? 1, 2, 3, 4, 5, 6. மொத்தம் பிரிவுகள் உள்ளது மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம் -7/2 ÷ -4/9 -7/2 * -9/4 = ? -4/9 இன் தலைகீழியால் பெருக்கி இருக்கிறேன்.. -7 * -9 = 63 ; 2 * 4 = 8 -7/2 * -9/4 = 63 / 8 இதை போல சில கணக்குகளை செய்து பாருங்கள்