0:00:00.000,0:00:02.000 பல நேரங்களில் 0:00:02.000,0:00:05.000 உலகெங்கிலும் பல இடங்களில் நான் உரையாற்ற செல்லும் போது, 0:00:05.000,0:00:07.000 மக்கள் என்னிடம் பல கேள்விகளைக் கேட்கின்றனர். 0:00:07.000,0:00:09.000 அவை என் சவால்களைப் பற்றியும், 0:00:09.000,0:00:12.000 என் தருணங்கள் பற்றியும், 0:00:12.000,0:00:14.000 என் துயரங்கள் சிலவற்றையும் பற்றியதே. 0:00:14.000,0:00:17.000 1998: 0:00:17.000,0:00:19.000 தனி ஒரு ஆளாக, நான்கு குழந்தைகளுக்கு அன்னையாக, 0:00:19.000,0:00:23.000 நான் நான்காவது குழந்தையைப் பெற்றெடுத்த மூன்றே மாதங்களில் 0:00:23.000,0:00:26.000 உதவி ஆராய்ச்சியாளராக 0:00:26.000,0:00:30.000 வேலைக்குச் சென்றேன். 0:00:30.000,0:00:33.000 வடக்கு லிபேரியாவுக்குச் சென்றேன். 0:00:33.000,0:00:36.000 வேலை செய்யும் இடத்தில் அந்த 0:00:36.000,0:00:39.000 கிராமத்தில் தங்க இடவசதி செய்து தரப்பட்டது. 0:00:39.000,0:00:42.000 அந்த இடத்தை நான் ஒரு பெண்மனியுடனும், 0:00:42.000,0:00:44.000 அவரது மகளுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது. 0:00:44.000,0:00:47.000 அவரது மகள் தான் 0:00:47.000,0:00:49.000 அந்த ஒட்டு மொத்த கிராமத்திலேயே 0:00:49.000,0:00:51.000 9 -ம் வகுப்பு வரை படித்த 0:00:51.000,0:00:53.000 ஒரே பெண். 0:00:53.000,0:00:56.000 அவள் கிராமத்தில் ஒரு ஏளனச் சின்னமாக பார்க்கப்பட்டாள். 0:00:56.000,0:00:59.000 அந்த ஊர்ப் பெண்மணிகள், அவளது அம்மாவிடம் 0:00:59.000,0:01:01.000 "நீயும் உன் பெண்ணும் 0:01:01.000,0:01:04.000 ஏழ்மையிலேயே இறந்து போவீர்கள்" என்று கூறினார்கள். 0:01:04.000,0:01:07.000 அந்த கிராமத்தில் இரண்டு வாரங்கள் வேலை செய்த பின்பு 0:01:07.000,0:01:09.000 நான் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. 0:01:09.000,0:01:13.000 அவள் தாய் என்னிடம் மண்டியிட்டுக் கேட்டாள், 0:01:13.000,0:01:17.000 "லேமா, என் பெண்ணையும் உடன் அழைத்துச் செல்லுங்கள் 0:01:17.000,0:01:19.000 நான் அவளை ஒரு 0:01:19.000,0:01:22.000 செவிலியாகப் பார்க்க விரும்புகிறேன்." என்று. 0:01:22.000,0:01:26.000 ஏழ்மையில் நானும் என் பெற்றோரும் ஒரே வீட்டில் தங்கியிருக்கும் நிலையில் 0:01:26.000,0:01:29.000 நான் அதைச் செய்ய இயலவில்லை. 0:01:29.000,0:01:31.000 என் கண்களில் கண்ணீருடன், 0:01:31.000,0:01:34.000 நான் "இயலாது" என்று கூறினேன். 0:01:34.000,0:01:36.000 இரண்டு மாதங்கள் கழித்து, 0:01:36.000,0:01:38.000 இன்னுமொரு கிராமத்திற்கு 0:01:38.000,0:01:40.000 அதே ஆராய்ச்சியின் பேரில் சென்றேன். 0:01:40.000,0:01:44.000 அந்த கிராம மக்கள் என்னை கிராம தலைமை நிர்வாகியுடன் தங்கச் சொன்னார்கள். 0:01:44.000,0:01:47.000 தலைமை நிர்வாகியான அந்த பெண்மணிக்கு ஒரு சிறிய மகள் இருந்தாள். 0:01:47.000,0:01:49.000 என்னை போல் நிறமுடையவள். 0:01:49.000,0:01:51.000 மிகவும் அழுக்கான மேனி. 0:01:51.000,0:01:53.000 நாள் முழுவதும் அவள் 0:01:53.000,0:01:55.000 ஒரு உள்ளாடையை மட்டுமே அணிந்து சுற்றித் திரிந்து கொண்டிருந்தாள். 0:01:55.000,0:01:58.000 நான் "இவள் யார்?" என்று கேட்டதற்கு 0:01:58.000,0:02:00.000 "இது வேய்" என்று அவர் சொன்னார். 0:02:00.000,0:02:03.000 அந்த பெயரின் பொருள் பன்றி என்பதாகும். 0:02:03.000,0:02:06.000 அந்தப் பெண்ணின் அம்மா இவளை பிரசிவிக்கும் போது இறந்து போனாள். 0:02:06.000,0:02:09.000 இவளின் தந்தை யார் என்பது யாருக்கும் தெரியாது." 0:02:09.000,0:02:12.000 இரண்டு வாரங்களுக்கு அவள் என் கூட்டாளியானாள். 0:02:12.000,0:02:14.000 என்னுடன் உறங்கினாள். 0:02:14.000,0:02:16.000 நான் அவளுக்கு பழைய ஆடைகளைக் கொண்டு வந்து கொடுத்தேன். 0:02:16.000,0:02:18.000 அவள் விளையாட முதல் பொம்மையைக் கொடுத்தேன். 0:02:18.000,0:02:21.000 புறப்படுவதற்கு முதல் நாள் இரவு, 0:02:21.000,0:02:23.000 அவள் என் அறைக்கு வந்து 0:02:23.000,0:02:25.000 என்னிடம் "லேமா, என்னை இங்கு விட்டுச் செல்லாதீர்கள். 0:02:25.000,0:02:27.000 நான் உங்களுடன் வர விரும்புகிறேன். 0:02:27.000,0:02:29.000 நான் பள்ளி செல்ல விரும்புகிறேன்" என்று கூறினாள். 0:02:29.000,0:02:32.000 பணமில்லாத, ஏழையான, 0:02:32.000,0:02:34.000 பெற்றோருடன் வசிக்கும் நான் 0:02:34.000,0:02:36.000 மீண்டும் கூறினேன் "என்னால் இயலாது" என்று. 0:02:36.000,0:02:38.000 இரண்டு மாதங்கள் கழித்து, 0:02:38.000,0:02:41.000 அந்த இரண்டு கிராம மக்களும் மற்றொரு போருக்கு உள்ளானார்கள். 0:02:41.000,0:02:45.000 இந்த நாள் வரை அந்த இரண்டு பெண் குழந்தைகளும் 0:02:45.000,0:02:47.000 எங்கே இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. 0:02:47.000,0:02:51.000 2004-ல் 0:02:51.000,0:02:54.000 எங்கள் சீர்திருத்தப் பணியில் தீவிரமாக இருக்கும் போது, 0:02:54.000,0:02:56.000 லிபேரியாவின் மகளிர் பாலின மேம்பாட்டு அமைச்சர் என்னை அழைத்து 0:02:56.000,0:02:59.000 "லேமா, என்னிடம் 9 வயது சிறுமி இருக்கிறாள். 0:02:59.000,0:03:01.000 அவளை நீ உன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும். 0:03:01.000,0:03:03.000 ஏனெனில், இங்கு பாதுகாப்பு விடுதி ஏதும் இல்லை" என்றார். 0:03:03.000,0:03:05.000 அந்த சிறுமியின் கதை இதுதான்: 0:03:05.000,0:03:07.000 அந்த சிறுமி தன் அம்மா வழி தாத்தாவினால் 0:03:07.000,0:03:09.000 ஒவ்வொரு நாளும் 6 மாதங்களாக 0:03:09.000,0:03:11.000 பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டாள். 0:03:11.000,0:03:14.000 அவள் என்னிடம் வந்த போது 0:03:14.000,0:03:16.000 மிகவும் வெளிறிப் போய், உடல் வீங்கி இருந்தாள். 0:03:16.000,0:03:19.000 தினமும் இரவு வேலையிலிருந்து வந்து வெறும் தரையில் படுத்திருப்பேன். 0:03:19.000,0:03:21.000 அவளும் என்னருகில் படுத்திருப்பாள். ஒரு முறை என்னிடம், 0:03:21.000,0:03:24.000 "அத்தை, நான் நலமாக விரும்புகிறேன். 0:03:24.000,0:03:27.000 பள்ளிக்கு செல்ல விரும்புகிறேன்." என்றாள். 0:03:27.000,0:03:29.000 2010: 0:03:29.000,0:03:32.000 ஒரு இளம் பெண்மணி ஜனாதிபதி சிர்லீஃப் 0:03:32.000,0:03:34.000 முன்னிலையில் சத்திய வாக்குமூலம் அளித்தாள். 0:03:34.000,0:03:37.000 அவள் தன்னுடன் பிறந்தவர்களுடன் போரில் தன் 0:03:37.000,0:03:40.000 பெற்றோர்கள் கொல்லப்படும் போது எப்படி வாழ்ந்தார்கள் என்று கூறினள். 0:03:40.000,0:03:43.000 அவளுக்கு வயது 19 . கல்லூரிக்குச் செல்வதே அவள் கனவு. 0:03:43.000,0:03:45.000 உடன்பிறந்தவர்களைப் பேணுவதற்காகவே அக்கனவு. 0:03:45.000,0:03:47.000 அவள் மிகச் சிறந்த விளையாட்டு வீராங்கனை. 0:03:47.000,0:03:49.000 அதனால் அவள் படிப்பதற்கு 0:03:49.000,0:03:51.000 உதவித்தொகை கிடைத்தது. 0:03:51.000,0:03:53.000 அவளுக்கு முழுமையான உதவித்தொகை கிடைத்தது. 0:03:53.000,0:03:55.000 பள்ளிக்குச் செல்ல வேண்டும், 0:03:55.000,0:03:57.000 படித்த பெண்ணாக வர வேண்டுமென்ற 0:03:57.000,0:03:59.000 அவள் கனவு பலித்தது. 0:03:59.000,0:04:02.000 முதல் நாள் அவள் பள்ளிக்குச் சென்றபோது 0:04:02.000,0:04:04.000 விளையாட்டுத் துறை இயக்குனர், யாரால் 0:04:04.000,0:04:06.000 பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்ததோ, 0:04:06.000,0:04:08.000 அவர் இந்தப் பெண்ணை வகுப்பறையிலிருந்து அழைத்தார். 0:04:08.000,0:04:10.000 அடுத்த 4 வருடங்கள் 0:04:10.000,0:04:12.000 அவள் விதி 0:04:12.000,0:04:15.000 அவர் செய்த உதவிக்கு இது நன்றிக்கடனாக, 0:04:15.000,0:04:18.000 அவருடன் உடலுறவு வைத்துக்கொள்வதே. 0:04:18.000,0:04:22.000 உலகெங்கிலும், நாம் பல கொள்கைகளை, 0:04:22.000,0:04:24.000 பல தொண்டு நிறுவனங்களை, 0:04:24.000,0:04:26.000 பல தலைவர்களைக் கொண்டிருக்கிறோம். 0:04:26.000,0:04:28.000 பல உயரிய மனிதர்கள் செயல் திட்டங்களை வகுத்துள்ளனர். 0:04:28.000,0:04:31.000 நம் குழந்தைகளை பயத்திலிருந்தும், 0:04:31.000,0:04:33.000 பாலின தொந்தரவிலிருந்தும் காப்பாற்றுவதற்காக. 0:04:33.000,0:04:37.000 ஐ.நா. குழந்தைகள் உரிமைகள் குறித்த உடன்படிக்கையை உருவாக்கியது. 0:04:37.000,0:04:41.000 அமெரிக்கா போன்ற நாடுகளில் எந்த குழந்தையும் புறக்கணிக்கப் படுவதில்லை. 0:04:41.000,0:04:44.000 மற்ற நாடுகள் வேறுவிதமான கொள்கைகளை வகுத்துள்ளன. 0:04:44.000,0:04:46.000 ஐ.நா.வின் Millennium Development எனப்படும் கொள்கையின் மூன்று முக்கிய சாரம் 0:04:46.000,0:04:50.000 பெண்களை மையமாகக் கொண்டதாகும். 0:04:50.000,0:04:52.000 மாபெரும் மனிதர்களால் வகுக்கப்பட்ட இக்கொள்கைகள் யாவும் 0:04:52.000,0:04:54.000 இளம் பிள்ளைகள் இவ்வுலகில் எவ்வாறு அறியப் படவேண்டும் 0:04:54.000,0:04:57.000 என்று நாம் விரும்புவதை இலக்காகக் கொண்டுள்ளது. 0:04:57.000,0:04:59.000 இவை தோல்வியில் முடிந்ததாகவே நான் கருதுகிறேன். 0:04:59.000,0:05:02.000 உதாரணத்திற்கு லிபேரியாவில், 0:05:02.000,0:05:04.000 பதின்வயது மகப்பேறு 0:05:04.000,0:05:08.000 10 பெண்களுக்கு 3 என்ற விகிதத்தில் உள்ளது. 0:05:08.000,0:05:11.000 பதின்வயது விபச்சாரம் இதைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. 0:05:11.000,0:05:13.000 ஒரு சமூகத்தில் எங்களுக்கு சொன்னதாவது, 0:05:13.000,0:05:15.000 நீங்கள் காலையில் எழுந்திருக்கும் போது 0:05:15.000,0:05:19.000 கருத்தடை உறைகளை ஏதோ மெல்லும் கோந்தைப் போல சுலபமாக பார்க்க இயலும் என்பதாகும். 0:05:19.000,0:05:22.000 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் $1-க்கும் குறைவான பணத்திற்காக 0:05:22.000,0:05:26.000 விபச்சாரத்தில் உட்படுத்தப்படுகிறார்கள். 0:05:26.000,0:05:29.000 இது வருத்தத்திற்குரியது. மனவலிமையை குன்றச் செய்கிறது. 0:05:29.000,0:05:31.000 ஒருவர் என்னிடம் TEDTalk - ல் நான் உரையாற்றுவதற்கு 0:05:31.000,0:05:33.000 சில நாட்களுக்கு முன்னால் கேட்டார், 0:05:33.000,0:05:35.000 "நம்பிக்கை எங்கே உள்ளது?" என்று. 0:05:35.000,0:05:38.000 பல வருடங்களுக்கு முன்னால் என் நண்பர்கள் சிலர், 0:05:38.000,0:05:40.000 தலைமுறை இடைவெளியை நீக்க வேண்டுமென முடிவுசெய்தனர். 0:05:40.000,0:05:42.000 நம் தலைமுறைக்கும் 0:05:42.000,0:05:44.000 இளம் பெண்களின் தலைமுறைக்கும் 0:05:44.000,0:05:46.000 இனிமேலும் நீங்கள் லிபேரியக் குடியரசின் சார்பில் 0:05:46.000,0:05:49.000 இரண்டு நோபல் பரிசு பெற்றவர் என்று சொல்லிக் கொண்டிருப்பது சரியல்ல. 0:05:49.000,0:05:52.000 ஏனெனில் நம் பெண் பிள்ளைகள் இன்னும் 0:05:52.000,0:05:55.000 நம்பிக்கை இல்லாமல், வெளிப்படையான எதிர்காலம் இல்லாமல் இருக்கிறார்கள். 0:05:55.000,0:05:57.000 நாங்கள் இளம் மகளிர் புனரமைப்பு இயக்கம் 0:05:57.000,0:06:00.000 என்கிற ஒரு வெளியை உருவாக்கியுள்ளோம். 0:06:00.000,0:06:03.000 நாங்கள் கிராமப்புற பகுதிகளுக்குச் சென்று 0:06:03.000,0:06:06.000 அவர்கள் பேசுவதற்கு இது போன்ற, 0:06:06.000,0:06:09.000 ஒரு வெளியை உருவாகுகிறோம். 0:06:09.000,0:06:11.000 அந்த பெண்கள் அமர்ந்து பேசும்போது, 0:06:11.000,0:06:14.000 அவர்கள் அறிவாற்றல் வெளிப்படுகிறது. 0:06:14.000,0:06:17.000 அவர்கள் உணர்ச்சி வெளிப்படுகிறது. 0:06:17.000,0:06:19.000 அவர்கள் செயலாற்றல் வெளிப்படுகிறது. 0:06:19.000,0:06:21.000 அவர்கள் ஈடுபாடு வெளிப்படுகிறது. 0:06:21.000,0:06:23.000 அவர்களில் ஒளிந்துள்ள தலைவர் வெளிப்படுகிறார்கள். 0:06:23.000,0:06:26.000 நாங்கள் 300 -க்கும் மேற்ப்பட்ட பெண்களுடன் பணியாற்றி இருக்கிறோம். 0:06:26.000,0:06:28.000 சில பெண்கள் இங்கே வரும் போது 0:06:28.000,0:06:30.000 அச்சத்துடன் இருந்தார்கள். 0:06:30.000,0:06:33.000 ஆனால் துணிச்சலாக இந்த இளம் தாய்மார்கள், 0:06:33.000,0:06:36.000 வெளி உலகிற்கு வந்து தன்னைப்போலுள்ள 0:06:36.000,0:06:39.000 மற்றவர்களுக்காகப் போராடுகிறார்கள். 0:06:39.000,0:06:41.000 நான் சந்தித்த இளம் பெண்களில் ஒருத்தி, 0:06:41.000,0:06:43.000 நான்கு குழந்தைகளுக்கு தாயான அவள், 0:06:43.000,0:06:45.000 பள்ளிக்கு செல்வதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்காதவள். 0:06:45.000,0:06:48.000 அனால் பள்ளிக்கல்வியை வெற்றிகரமாக முடித்துவிட்டாள். 0:06:48.000,0:06:50.000 கல்லூரிக்குச் செல்வதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்காதவள். 0:06:50.000,0:06:52.000 கல்லூரியில் படிக்க விண்ணப்பித்திருக்கிறாள். 0:06:52.000,0:06:54.000 ஒரு நாள் அவள் என்னிடம், 0:06:54.000,0:06:56.000 "நான் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு 0:06:56.000,0:06:58.000 என் பிள்ளைகளைக் காப்பாற்றுவதே என் விருப்பம்" என்றாள். 0:06:58.000,0:07:00.000 அவள் பள்ளிக் கல்வியைத் தொடர பணம் இல்லாத 0:07:00.000,0:07:02.000 நிலையில் இருக்கிறாள். 0:07:02.000,0:07:05.000 அவள் தண்ணீர், குளிர் பானம் மற்றும் கைத்தொலைபேசிக்கான 0:07:05.000,0:07:09.000 மருசெறிவு அட்டைகளை விற்பனை செய்கிறாள். 0:07:09.000,0:07:11.000 நீங்கள் நினைப்பீர்கள் அவள் அந்தப் பணத்தை 0:07:11.000,0:07:14.000 அவள் படிப்பிற்காக செலவளிப்பாள் என்று. 0:07:14.000,0:07:16.000 அவள் பெயர் ஜுவானிடா. 0:07:16.000,0:07:18.000 அவள் அந்தப் பணத்தை 0:07:18.000,0:07:21.000 அவள் சமூகத்தைச் சார்ந்த ஆதரவற்ற இளம் தாய்க்கு கொடுத்து 0:07:21.000,0:07:23.000 அவளை பள்ளிக்கு அனுப்புகிறாள். 0:07:23.000,0:07:25.000 அவள் "லேமா, என் விருப்பம் 0:07:25.000,0:07:27.000 கல்வி அறிவு பெறுவதே. 0:07:27.000,0:07:29.000 அது என்னால் இயலாவிட்டலும், 0:07:29.000,0:07:32.000 என் சகோதரி ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில் 0:07:32.000,0:07:34.000 என் விருப்பம் பூர்த்தி அடைவதாக நான் எண்ணுகிறேன். 0:07:34.000,0:07:36.000 நான் மேலான வாழ்க்கை வாழ விரும்புகிறேன். 0:07:36.000,0:07:38.000 என் குழந்தைகளுக்கு உணவு வேண்டுமென விரும்புகிறேன். 0:07:38.000,0:07:43.000 பள்ளிகளில் நடக்கும் பாலியல் வன்முறை மற்றும் சுரண்டல் முடிவுக்கு வர விரும்புகிறேன்." என்றாள். 0:07:43.000,0:07:45.000 ஆப்பிரிக்க பெண்களின் கனவு இது தான். 0:07:45.000,0:07:47.000 பல ஆண்டுகளுக்கு முன்பு, 0:07:47.000,0:07:49.000 ஒரு ஆப்பிரிக்க பெண்மணியின் 0:07:49.000,0:07:51.000 மகன் 0:07:51.000,0:07:54.000 கேக் சாப்பிட வேண்டுமென விரும்பினான். 0:07:54.000,0:07:57.000 ஏனெனில் அவன் மிகவும் பசித்திருந்தான். 0:07:57.000,0:08:00.000 கோவம், நிராசை 0:08:00.000,0:08:02.000 மற்றும் எரிச்சல் வந்தது அவளுக்கு 0:08:02.000,0:08:05.000 அந்த சுமுதாயத்தை எண்ணி, 0:08:05.000,0:08:07.000 அந்த பிள்ளைகளின் நிலைமையை எண்ணி, 0:08:07.000,0:08:09.000 அந்த இளம் பெண் ஒரு இயக்கத்தைத் தொடங்கினாள், 0:08:09.000,0:08:11.000 சாதாரண பெண்களைக் கொண்டு துவங்கப்பட்ட அந்த இயக்கம், 0:08:11.000,0:08:13.000 இவை அனைத்தையும் தடுத்து நிறுத்தி 0:08:13.000,0:08:15.000 அமைதியை உருவாகும் முயற்சியே அது. 0:08:15.000,0:08:17.000 நான் அதை நிறைவேற்றுவேன். 0:08:17.000,0:08:19.000 இது இன்னுமொறு ஆப்பிரிக்க பெண்ணின் விருப்பமாகும். 0:08:19.000,0:08:21.000 நான் அந்த இரு பெண்களின் விருப்பத்தை நிறைவேற்ற தவறிவிட்டேன். 0:08:21.000,0:08:23.000 நான் இந்த முயற்சியிலும் தோல்வியடைந்து விட்டேன். 0:08:23.000,0:08:26.000 இந்த இரண்டு நினைவுகளை மட்டுமே இந்த ஆப்பிரிக்க பெண்ணின் மனதில் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தாள் .. 0:08:26.000,0:08:29.000 நான் தோற்றுவிட்டேன். நான் தோற்றுவிட்டேன். நான் தோற்றுவிட்டேன். 0:08:29.000,0:08:33.000 ஆகையால் நான் இதை செய்தே தீருவேன். 0:08:33.000,0:08:35.000 அந்தப் பெண் வெளியே வந்தாள். 0:08:35.000,0:08:38.000 கொடும் சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடினாள். 0:08:38.000,0:08:41.000 பயமின்றிப் பேசினாள். 0:08:41.000,0:08:45.000 கேக் சாப்பிடவேண்டுமென்ற விருப்பம் மட்டுமல்லாது 0:08:45.000,0:08:47.000 அமைதி வர வேண்டுமென்ற அவள் விருப்பமும் நிறைவேறியது. 0:08:47.000,0:08:49.000 அந்த இளம் பெண் 0:08:49.000,0:08:51.000 பள்ளிக்குச் செல்ல வேண்டுமெனவும் விரும்பினாள். 0:08:51.000,0:08:53.000 பள்ளிக்குச் சென்றாள். 0:08:53.000,0:08:55.000 மற்ற பல நல்ல நிகழ்வுகள் நடக்க வேண்டுமென விரும்பினாள். 0:08:55.000,0:08:57.000 அவை யாவும் நிகழ்ந்தன. 0:08:57.000,0:09:01.000 இன்று அந்த இளம் பெண்மணி நான்தான். 0:09:01.000,0:09:03.000 நோபல் பரிசு பெற்றவள். 0:09:03.000,0:09:05.000 நான் இப்பொழுது ஒரு பயணத்தில் இருக்கிறேன். 0:09:05.000,0:09:07.000 என்னால் இயன்ற அளவுக்கு 0:09:07.000,0:09:09.000 அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வதே ஆகும். 0:09:09.000,0:09:11.000 இளம் ஆப்பிரிக்க பெண்களின் -- 0:09:11.000,0:09:13.000 படிக்க வேண்டும் என்ற விருப்பமே அது. 0:09:13.000,0:09:15.000 நாங்கள் ஒரு அடித்தளத்தை உருவாக்கியுள்ளோம். 0:09:15.000,0:09:17.000 நாங்கள் திறமைவாய்ந்த கிராமப்புற பெண்களுக்கு 0:09:17.000,0:09:20.000 கல்வி கற்க நான்கு வருட இலவச உதவித்தொகை வழங்குகிறோம். 0:09:20.000,0:09:23.000 நான் உங்களிடம் கேட்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. 0:09:23.000,0:09:25.000 நான் U.S-ல் பல இடங்களுக்குச் சென்றுள்ளேன். 0:09:25.000,0:09:27.000 எனக்குத் தெரியும் இந்த நாட்டுப் பெண்களுக்கும் 0:09:27.000,0:09:29.000 விருப்பங்கள் பல இருக்கின்றன. 0:09:29.000,0:09:32.000 பிஃரான்க்ஸ்-ல் மேலான வாழ்க்கை வாழ வேண்டும், 0:09:32.000,0:09:34.000 மேம்பட்ட வாழ்க்கையை லாஸ் ஏன்ஜெல்ஸ்-ன் 0:09:34.000,0:09:36.000 பரபரப்பான நகரத்தில் வாழ வேண்டும், 0:09:36.000,0:09:39.000 டெக்சாசி-ல் மேலான வாழ்க்கை வாழ வேண்டும், 0:09:39.000,0:09:42.000 நியூயார்க்-ல் மேலான வாழ்க்கை வாழ வேண்டும், 0:09:42.000,0:09:44.000 மேலும் நியூஜெர்சி-ல் 0:09:44.000,0:09:46.000 மேலான வாழ்க்கை வாழ வேண்டும் என்று. 0:09:46.000,0:09:48.000 நீங்கள் அனைவரும் என்னுடன் பயனிப்பீர்களா? 0:09:48.000,0:09:51.000 அந்த பெண்களுக்கு உதவுவதற்கு, 0:09:51.000,0:09:54.000 அவள் ஆப்பிரிக்க பெண்ணாகவோ, அமெரிக்க பெண்ணாகவோ 0:09:54.000,0:09:56.000 அல்லது ஜப்பானிய பெண்ணாகவோ இருக்கலாம், 0:09:56.000,0:09:58.000 அவள் விருப்பத்தை பூர்த்தி செய்ய, 0:09:58.000,0:10:00.000 அவள் கனவை நனவாக்க, 0:10:00.000,0:10:02.000 அவள் இலட்சியத்தை அடைய உதவி செய்வீர்களா? 0:10:02.000,0:10:04.000 ஆகையால் இந்த 0:10:04.000,0:10:07.000 அனைத்து கண்டுபிடிப்பாளர்களையும், புதுமை செய்பவர்களையும் 0:10:07.000,0:10:09.000 நான் சந்தித்து பேசியதிலிருந்து 0:10:09.000,0:10:11.000 இந்த ஓரிரு நாட்களில் நமக்கு தெரியவந்தது என்னவெனில் 0:10:11.000,0:10:14.000 அவர்களும் நம்மைப் போலவே 0:10:14.000,0:10:16.000 உலகின் பல்வேறு இடங்களில் 0:10:16.000,0:10:18.000 இருந்து கொண்டு அவர்கள் நம்மைக் கேட்பது, 0:10:18.000,0:10:20.000 ஒரு வெளியை உருவாக்குவது பற்றியே. 0:10:20.000,0:10:22.000 அது அவர்களுக்குள் ஒளிந்திருக்கும், 0:10:22.000,0:10:24.000 அறிவாற்றலை வெளிப்படுத்தும், 0:10:24.000,0:10:26.000 உணர்சிகளை வெளிப்படுத்தும் 0:10:26.000,0:10:29.000 மற்ற எல்லா திறமைகளையும் வெளிப்படுத்தும். 0:10:29.000,0:10:32.000 நாம் அனைவரும் ஒன்றாக பயணிப்போம். நாம் அனைவரும் ஒன்றாக பயணிப்போம். 0:10:32.000,0:10:34.000 நன்றி 0:10:34.000,0:10:57.000 (கரகோஷம்) 0:10:57.000,0:10:59.000 கிரிஸ் ஆண்டர்சன்: மிக்க நன்றி. 0:10:59.000,0:11:01.000 தற்பொழுது லிபேரியாவில், 0:11:01.000,0:11:03.000 நீங்கள் பார்க்கும் 0:11:03.000,0:11:06.000 உங்களை வருத்தும் பிரச்சனை எது? 0:11:06.000,0:11:08.000 LG: என்னைத் தலைமை ஏற்று 0:11:08.000,0:11:11.000 லிபேரியா மறுபுனரமைப்பு இயக்கத்தை நடத்த வேண்டுமென கேட்டுக் கொண்டனர். 0:11:11.000,0:11:13.000 என் பணியின் ஒரு பகுதியாக, 0:11:13.000,0:11:16.000 இது போன்ற சுற்றுப் பயணங்களை 0:11:16.000,0:11:18.000 நான் பல கிராமங்களிலும், நகரங்களிலும் மேற்கொள்கிறேன் -- 0:11:18.000,0:11:22.000 13 , 15 மணி நேரம் புழுதி மண்ணில் பயணிக்கிறேன் -- 0:11:22.000,0:11:25.000 நான் சென்ற எந்த ஒரு பகுதியிலாவது 0:11:25.000,0:11:29.000 ஒரு புத்திசாலிப் பெண்ணைப் பார்த்ததில்லை. 0:11:29.000,0:11:31.000 ஆனால் துயரமானது என்னவெனில், 0:11:31.000,0:11:34.000 பிரகாசமான எதிர்காலத்திர்கான தோற்றமும் 0:11:34.000,0:11:36.000 அதைப் பற்றிய கனவும் இன்னும் 0:11:36.000,0:11:38.000 கனவாகவே உள்ளது. 0:11:38.000,0:11:40.000 ஏனெனில் அங்கு பல தீய செயல்கள் நடக்கின்றன. 0:11:40.000,0:11:43.000 நான் சொன்னதைப் போல பதின்வயது மகப்பேறு என்ற கொள்ளை நோய் உள்ளது. 0:11:43.000,0:11:45.000 என்னை வருத்தும் பிரச்சனை என்னவென்றால், 0:11:45.000,0:11:49.000 நானும் அது போன்றதொரு இடத்தில் இருந்தவள் தான். 0:11:49.000,0:11:52.000 தற்செயலாகத்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். 0:11:52.000,0:11:54.000 நான் மட்டும் இந்த இடத்தில் இருக்க 0:11:54.000,0:11:56.000 எனக்கு விருப்பமில்லை. 0:11:56.000,0:11:58.000 அந்த பெண்கள் அனைவரும் இங்கே வருவதற்கான 0:11:58.000,0:12:00.000 வழிமுறைகளை நான் காண விழைகிறேன். 0:12:00.000,0:12:03.000 இன்னும் 20 ஆண்டுகள் கழித்து பின்னோக்கிப் பார்த்தல் 0:12:03.000,0:12:05.000 இன்னும் ஒரு லிபேரியப் பெண், 0:12:05.000,0:12:08.000 கானானிய நாட்டுப் பெண், நைஜீரியப் பெண், எதியோப்பியப் பெண் 0:12:08.000,0:12:11.000 TED மேடையில் நின்று பேசுவதைக் காண விரும்புகிறேன். 0:12:11.000,0:12:13.000 ஒரு வேளை அவர்கள் கூறலாம், 0:12:13.000,0:12:15.000 "நோபல் பரிசு பெற்ற இவரால் தான் 0:12:15.000,0:12:17.000 நான் இன்று இங்கிருக்கிறேன்" என்று. 0:12:17.000,0:12:19.000 நான் மிகவும் வருந்துகிறேன். 0:12:19.000,0:12:22.000 ஒரு நம்பிக்கை இல்லாமல் வாழும் அவர்களைக் கண்டு. 0:12:22.000,0:12:25.000 ஆனால் நான் ஒன்றும் அவநம்பிக்கை உடையவள் அல்ல 0:12:25.000,0:12:27.000 ஏனெனில் அவர்களுக்கு ஊக்கமளித்து வெளிக்கொணர 0:12:27.000,0:12:29.000 நிறைய நேரம் தேவை இல்லை என்பதை நான் உணர்வேன். 0:12:29.000,0:12:31.000 CA: இந்த வருடம் நிகழ்ந்த 0:12:31.000,0:12:33.000 நம்பிக்கை கொடுப்பதாக உள்ள ஒரு 0:12:33.000,0:12:35.000 நிகழ்வை நீங்கள் கண்டீர்களா? 0:12:35.000,0:12:38.000 LG: நான் பார்த்த நம்பிக்கை கொடுக்கும் நிகழ்வுகள் பலவற்றை நான் கூற இயலும். 0:12:38.000,0:12:40.000 ஆனால் கடந்த வருடம், 0:12:40.000,0:12:42.000 ஜனாதிபதி சிர்லீஃப் - ன் சொந்த கிராமத்தில் 0:12:42.000,0:12:44.000 நாங்கள் இம்மாதிரியான பெண்களுடன் வேலை செய்துகொண்டிருந்தோம். 0:12:44.000,0:12:46.000 25 பெண்களை கூட நாங்கள் 0:12:46.000,0:12:48.000 பள்ளிக்கூடத்தில் பார்க்கவில்லை. 0:12:48.000,0:12:51.000 அவர்கள் அனைவரும் தங்கச் சுரங்கத்தில், 0:12:51.000,0:12:53.000 விபாச்சரத்திலும் 0:12:53.000,0:12:55.000 மற்ற செயல்களிலும் ஈடுபடுத்தப் பட்டிருந்தார்கள். 0:12:55.000,0:12:57.000 அவர்களில் 50 பேரை மீட்டு 0:12:57.000,0:12:59.000 அவர்களுடன் பணியாற்றினோம். 0:12:59.000,0:13:02.000 அது தேர்தல் நேரமாக இருந்தது. 0:13:02.000,0:13:04.000 இந்தப் பகுதியில் தான் பெண்கள் 0:13:04.000,0:13:06.000 ஒரு போதும் 0:13:06.000,0:13:09.000 ஆண்களுக்கு இணையாக அமர்ந்து பேசியதில்லை. 0:13:09.000,0:13:12.000 இந்தப் பெண்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு அமைப்பை உருவாகினார்கள். 0:13:12.000,0:13:14.000 அவர்கள் ஒரு பிரச்சாரத்தைத் துவக்கினார்கள் 0:13:14.000,0:13:16.000 வாக்களிக்கும் உரிமை கோரி. 0:13:16.000,0:13:18.000 இந்தப் பகுதி பிற்படுத்தப்பட்ட கிராமம் ஆகும். 0:13:18.000,0:13:20.000 அவர்கள் பயன்படுத்திய தாரக மந்திரம் என்வென்றால்: 0:13:20.000,0:13:22.000 "அழகான பெண்களும் வாக்களிக்கலாம்." 0:13:22.000,0:13:24.000 அவர்களால் மற்ற இளம் பெண்களை ஒன்று திரட்ட முடிந்தது. 0:13:24.000,0:13:27.000 அவர்கள் அதை மட்டும் செய்யவில்லை. 0:13:27.000,0:13:29.000 மேலும் அவர்கள் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களைப் 0:13:29.000,0:13:31.000 பார்த்து "நீங்கள் 0:13:31.000,0:13:33.000 வெற்றி பெற்றால் இந்தப் பகுதிப் பெண்களுக்கு 0:13:33.000,0:13:35.000 என்ன செய்வீர்கள்?" என்று கேட்டனர். 0:13:35.000,0:13:37.000 வேட்பாளர்களில் ஒருவரான 0:13:37.000,0:13:40.000 ஏற்கனவே சட்டசபை உறுப்பினரான அவர் -- 0:13:40.000,0:13:42.000 லிபேரியாவில் மிகவும் வலிமையுள்ள பாலியல் சட்டங்களை, 0:13:42.000,0:13:45.000 சட்டசபையில் போராடி 0:13:45.000,0:13:47.000 நீக்கப் போவதாகக் கூறினார். 0:13:47.000,0:13:49.000 ஏனெனில் அவை இதனை காட்டுமிராண்டிதனம் என்றார். 0:13:49.000,0:13:53.000 கற்பழிப்பு காட்டுமிராண்டிதனம் இல்லையாம். அதற்கெதிரான சட்டமே காட்டுமிராண்டிதனமானது என்கிறார். 0:13:53.000,0:13:55.000 அந்தப் பெண்கள் அவரிடம் விடாமல் கேள்வி கேட்டதனால் 0:13:55.000,0:13:57.000 அவர் அந்தப் பெண்களை ஒரு எதிரியைப் போல் பார்க்கலானார். 0:13:57.000,0:13:59.000 அந்தப் பெண்கள் அவரிடம் 0:13:59.000,0:14:01.000 "உங்களை விரட்டவே நாங்கள் வாக்களிப்போம்" என்றனர். 0:14:01.000,0:14:03.000 அவர் விரட்டப்பட்டும் விட்டார். 0:14:03.000,0:14:09.000 (கரகோஷம்) 0:14:09.000,0:14:12.000 CA : லேமா, நன்றி. TED -ற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 0:14:12.000,0:14:14.000 LG : உங்களை வரவேற்கிறேன். (CA : நன்றி) 0:14:14.000,0:14:18.000 (கரகோஷம்)