நாம் இப்பொழுது அலகுகளை பற்றி பார்க்கப் போகிறோம். இப்பொழுது தொடங்கலாம். நான் இப்பொழுது, 0.05 கிலோமீட்டர் பயணம் செய்கிறேன். கிலோ - மீட்டர். - நான் 0.05 கிலோமீட்டர் பயணம் செய்தால், எத்தனை செண்டிமீட்டர் பயணம் செய்திருப்பேன்? எனவே, செண்டிமீட்டர் -ஐ கண்டறிய வேண்டும். தொடங்குவதற்கு முன்னர், செண்டி மற்றும் கிலோ என்றால் என்று பார்க்க வேண்டும். இதை நினைவில் வைப்பது நல்லது, தேவைப்பட்டால், இதை ஒரு தாளில் எழுதி வைக்கலாம். கிலோ என்றால், 1000, ஹெக்டா என்றால் 100, டெக்கா என்றால் 10. ஒரு டெகேட் என்றால் 10 ஆண்டுகள். வார்த்தை ஏதும் இல்லையெனில் 1 ஆகும். முன்னர் ஏதும் வார்த்தை இல்லை எனில். முன்சேர் வார்த்தை இல்லை என்றால் 1 ஆகும். டெசி (தசமம்) என்றால் 0.1 அல்லது 1/10. செண்டி என்றால், செண்டி என்றால், 0.01 அல்லது 1/100. மில்லி என்றால், 0.001 அதாவது 1/1000. இதை எப்படி நினைவு கொள்ள வேண்டுமென்றால், செண்டிபீட் (பூரான்) -க்கு 100 கால்கள். மில்லிபீட் என்றால், 1000 கால்கள், ஏனெனில், மில்லிபீட் என்றால், பீட் என்றால் கால் ஆகும். எனவே, நாம் கணக்கை பார்க்கலாம். நம்மிடம் 0.05 கிலோமீட்டர் உள்ளது, அது எத்தனை செண்டிமீட்டர்? பொதுவாக இது போன்ற கணக்குகளுக்கு, மீட்டரில் மாற்றுவது நல்லது, ஏனெனில், அது தான் சுலபமானது. இதை கீ.மீ. என்று சுருக்கி எழுதிக்கொள்ளலாம். இதனை செ.மீ. என்று சுருக்கலாம். எனவே, இது 0.05 கீ.மீ. இதை மீட்டர் ஆக மாற்ற வேண்டும், அது 0.05 ஐ விட அதிகம் இருக்குமா அல்லது குறைவாக இருக்குமா? கிலோமீட்டர் என்பது நீண்ட தூரம், எனவே, மீட்டர்-க்கு மாற்றினால், இது பெரிய எண்ணாக இருக்கும். இதனை 1000 ஆல் பெருக்கினால் மீட்டர் கிடைக்கும். இதன் விடை என்ன? 0.05 பெருக்கல் 1000 என்றால் 50 ஆகும். 0.05 x 1000. அலகுகள், கிலோமீட்டர் பெருக்கல் மீட்டர் -ன் கீழ் கிலோமீட்டர். கிலோமீட்டர் நீங்கி விடும். உங்களுக்கு இது நன்கு பழகி விட்டால், இதை எண்களை போல் சுலபமாக கையாளலாம். பகுதியிலும், தொகுதியிலும் ஒரே அலகு இருந்தால், அது நீங்கி விடும், அதாவது பெருக்கும் பொழுது. எனவே, கிலோமீட்டர் x மீட்டர் வகுத்தல் கிலோமீட்டர், விடை 50 மீட்டர் ஆகும். விடையை சரி பார்ப்பது நல்லது. இது போன்ற கணக்குகளை செய்யும் பொழுது, உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும், கிலோமீட்டரை மீட்டராக மாற்றினால், 1000 -ஐ உபயோகிக்க வேண்டும். ஏனெனில், 1 கீ.மீ = 1000 மீ. 1000 ஆல் பெருக்க வேண்டுமா அல்லது வகுக்க வேண்டுமா என்று குழப்பம் அடையலாம். எனவே, எப்பொழுதும், கிலோமீட்டரை மீட்டராக மாற்றினால், 1 கீ.மீ. என்றால் 1000 மீ. எனவே, 1000 ஆல் பெருக்க வேண்டும். நமக்கு பெரிய எண் கிடைக்கும். ஆகையால், 0.05 ஐ 1000 ஆல் பெருக்கினோம், 50 கிடைத்தது. நமது கணக்கை முடிக்கலாம். 0.05 கீ.மீ. என்றால் 50 மீ. ஆகும். இன்னும் முடியவில்லை. இப்பொழுது 50 மீட்டரை செண்டிமீட்டராக மாற்ற வேண்டும். அதே போல தான். 50 மீட்டர் பெருக்கல், 1 மீட்டர் என்றால் எத்தனை செண்டிமீட்டர்? 100 ஆகும். இப்பொழுது 100 ஆல் பெருக்க வேண்டுமா? அல்லது வகுக்க வேண்டுமா? இதுவும் அதே போன்று தான், பெரிய அலகை சிறிய அலகாக மாற்றுகிறோம், எனவே, ஒரு பெரிய அலகு என்பது பல சிறிய அலகுகளாகும். எனவே, இதனை பெருக்க வேண்டும். ஒரு மீட்டருக்கு 100 செண்டிமீட்டர்கள் இருக்கும். எனவே, இது சரியானது. ஒரு மீட்டருக்கு 100 செண்டிமீட்டர் இருக்கும். எனவே, 50 மீட்டர் x 100 செண்டிமீட்டர் கீழ் மீட்டர், 50 பெருக்கல் 100 என்பது 5000 ஆகும், மீட்டர் நீங்கி விடும். நமக்கு செண்டிமீட்டர் கிடைக்கும். எனவே, 0.05 மீட்டர் என்பது 5000 செண்டிமீட்டர் ஆகும். மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம். அப்பொழுது தான் உங்களுக்கு, தெளிவாக புரியும். இதை சற்று கற்பனை செய்து பாருங்கள், இல்லையெனில் இது சற்று குழப்பமாக இருக்கும். அதாவது, இதனை பெருக்குவதா அல்லது கழிப்பதா என்பது. என்னிடம், 422 டெசிகிராம் (தசமகிராம்) உள்ளது. கிராம் என்றால் எடையை குறிக்கும். ஒரு கிராம் என்பது மிக சிறிய அளவு. இதனை மெட்ரிக் அளவுகோளில் தான் கணக்கிடுவார்கள். இதனை மில்லிகிராமாக மாற்ற வேண்டும். தொடங்குவதற்கு, சரி பார்க்க வேண்டும். பெரிய அலகிலிருந்து சிறிய அலகிற்கு மாற்றுகிறோமா? அல்லது சிறியதிலிருந்து பெரியதிற்கு மாற்றுகிறோமா? டெசிகிராம் என்றால் ஒரு கிராமில் 1/10 ஆகும். எனவே, நாம் ஒரு கிராமில் 1/1000 மாக மாற்றுகிறோம். இதற்கு, இரண்டு வழிகள் உள்ளன. இதை கிராமிற்கு மாற்றி பிறகு மற்ற அலகிற்கு மாற்றுவது. இது சுலபமானது. அல்லது ஒரு மில்லிகிராமில் எத்தனை டெசிகிராம் உள்ளது? மில்லிகிராம் என்றால் 100 மடங்கு சிறியது. 1/10 அல் 1/1000 ஆக்க அளவை 100 முறை குறைக்க வேண்டும். அதாவது, 422 டெசிகிராம் பெருக்கல் 100 மில்லிகிராம் கீழ் ஒரு டெசிகிராம். டெசிகிராம் நீங்கி விடும். பிறகு 422 x 100, அதாவது 42,200 மில்லிகிராம். இதனை வேறொரு வழியில், அதாவது போன கணக்கின் வழியில் செய்யலாம். 422 டெசிகிராம், இதனை கிராம் ஆக மாற்ற வேண்டும். 422 டெ.கி. எனலாம். இது சற்று புதுமையான அலகு. ஒரு கிராமில் எத்தனை டெசிகிராம் உள்ளது? இதனை கிராமாக மாற்றினால், 422 குறைந்து விடும். 1 டெசிகிராம் எத்தனை கிராமிற்கு சமம்? 1 டெசிகிராம் என்பது, இல்லை 1 கிராம் என்பது எத்தனை டெசிகிராமாகும். 1 கிராம் என்பது 10 டெசிகிராம். இது சரி. ஏனெனில், பகுதியில் டெசிகிராம் இருக்கிறது, இங்கு தொகுதியில் இருக்கிறது. அவை நீங்கி விடும். 422 வகுத்தல் 10 என்பது 42.2 கிராம் ஆகும். இப்பொழுது கிராமை மில்லிகிராமாக மாற்ற வேண்டும். இது சற்று சுலபமானது. 1 கிராம் என்பது 1000 மில்லிகிராம். இதனை பெருக்க வேண்டும். கிராம் நீங்கி விடும். பிறகு, 42,200 மில்லிகிராம். 42.2 x 1000 இது உங்களை குழப்பமடைய செய்யாது என்று நம்புகிறேன். இதில் முக்கியமானது, சற்று கற்பனை செய்து பார்க்க வேண்டும், அதாவது, நமது எண் தொடங்கிய எண்ணை விட பெரியாதா அல்லது சிறியதா என்று. நீங்கள் இதில் நன்கு தயாராகி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். -