கொடுக்கப்பட்டுள்ள கலப்பு எண்களை கூட்டி பின் எளிதாக்க வேண்டும். இங்கு 3 கலப்பு எண்கள் உள்ளது. 3 1/2 + 11 2/5 + 4 3/15. இந்த 3.1/12 வை 3 + 1/12 + 11+ 2/5 என எழுதலாம். அதேபோல, 3 + 1/12 + 11 + 2/5 + 4 + 3/15 என எழுதலாம். கலப்பு எண் 3.1/12 என்பதை 3 + 1/12 அல்லது 1/12 + 3 எனவும் எழுதலாம். எண்களை கூட்டும்பொழுது எந்த வரிசையில் வேண்டுமானாலும் கூட்டலாம். முழு எண்கள் முழுவதையும் கூட்டலாம். நம்மிடம் முழு எண்கள், 3+11+4 உள்ளது பிறகு பின்னங்கள் 1/12 + 2/5+ 3/15 உள்ளது. இந்த நீல நிறத்தில் உள்ள பகுதி எளிதானது. நாம் இந்த எண்களை கூடுகிறோம் அவ்வளவுதான். 3 + 11 = 14 14 + 4 = 18 3+11+4=18 பின்னங்களை கூட்டுவதை சிறிது கவனமாக செய்யவேண்டும், ஏனெனில் இதன் பகுதி எண்கள் வெவ்வேறாக இருப்பதால் நாம் பகுதி எண்ணை சமமாக்கி அதன்பின் கூட்டவேண்டும் இந்த பின்னங்களின் பகுதி எண்களை சமமாக மாற்ற வேண்டும் என்றால் நாம் 12, 5 மற்றும் 15-ன் LCM ஐ கண்டறிய வேண்டும். நாம் இதை கண்டறிய வேண்டும். நாம் இப்பின்னங்களின் பெருக்குகளை பார்க்க வேண்டும். நாம் இவைகளின் பெருக்குகளை கண்டறிந்து பிறகு, எந்த எண் 5 மற்றும் 15 ஐ வகுக்கிறது என்று கண்டறிய வேண்டும். அல்லது பகா காரணிகளை கண்டறிந்து அதன் பிறகு அதில் மீச்சிறு பொது மடங்கை கண்டறியவேண்டும் நான் என்ன கூறுகிறேன் என்று காண்பிக்கிறேன். 12 -ன் பகாக்காரணிகள் என்ன 12 இன் பகா காரணிகள் = 2 x 2 x 3 எனவே இவை தான் 12-ன் பகா காரணிகள். இப்பொழுது, 5-ன் பகா காரணிகள் என்ன. 5 என்பது 1x5.... 1 பகா எண். இது தான் 5-ன் பகா காரணிகள். இது வெறும் 5 தான். 1 -ஐ கருத்தில் எடுத்துக்கொள்ளகூடாது. எனவே, இது 5. பிறகு 15, 5-ன் பகா காரணிகளில் நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால், 5 ஒரு பகா எண். இதை, 5 ஐ விட பெரிய எண் ஏதும் வகுக்க முடியாது. எனவே, இது வெறும் 5 தான். இப்பொழுது 15-ன் பகா காரணிகளை கண்டறியலாம். 15 என்பது 3 பெருக்கல் 5, இவை இரண்டுமே பகா எண்கள் தான். எனவே, நமக்கு இரண்டு 2 மற்றும் ஒரு 1 இருக்க வேண்டும். இப்பொழுது 12 ஐ பார்க்கலாம். எனவே, இதன் பகுதிகளில், இரண்டு 2 மற்றும் 1 இருக்க வேண்டும். இதை எழுதிக் கொள்கிறேன். எனவே, இதில் 2x2x3 இருக்க வேண்டும். - பிறகு, அதில், 5 இருக்க வேண்டும். எனவே, இது 5-ன் பொது மடங்கு ஆகும். 5 ஒரு பகா காரணி. எனவே, இதில் 5 இருக்க வேண்டும். இதில் 5 இல்லை. பிறகு, இதில் 3 மற்றும் 5 இருக்க வேண்டும். நம்மிடம் 5 உள்ளது. நம்மிடம் ஒரு 3 உள்ளது பிறகு ஒரு 5 உள்ளது இந்த எண்கள் அனைத்திலும் வகுபடும். ஏனெனில், இதில், 12 உள்ளது, 5 உள்ளது, 15 உள்ளது. இது என்ன எண்? 2 பெருக்கல் 2 என்பது 4. 4 பெருக்கல் 3 என்பது 12. 12 பெருக்கல் 5 என்பது 60. LCM ( 12, 5, 15 ) = 2X2X3X5 அதாவது 60. 2X2X3X5 = 60 ஆகும். எனவே, நமது பொது பகுதி 60 ஆகும் இப்பின்னங்களின் பொது பகுதி எண் - 60 இவை அனைத்தும் 60-ன் மேல் இருக்கும். 12-ஐ 60 ஆக்க இதன் பகுதி எண்ணை 5-ஆல் பெருக்க வேண்டும், பிறகு தொகுதி எண்ணையும் 5-ஆல் பெருக்கவேண்டும் 5/60 = 1/12 5-ஐ 60 ஆக்க இதன் பகுதியை, 12 ஆல் பெருக்க வேண்டும், பிறகு, இதன் தொகுதியையும் பெருக்க வேண்டும். 12 பெருக்கல் 2, என்பது 24 ஆகும். 15-ஐ 60 ஆக்க, இதனை 4 ஆல் பெருக்க வேண்டும். பிறகு, அதன் தொகுதியையும் பெருக்க வேண்டும். 4 பெருக்கல் 3 என்பது 12 ஆகும். இப்பொழுது இதன் பகுதி எண்கள் சமமாக இருக்கிறது. எனவே, இதை கூட்டலாம். ஆகையால் இது. 18 + 60-ன் மேல், 5 + 24 = 29, 29 + 12, 29+10 = 39 39+2 =41. எனவே, இது 41 ஆகும். இந்த 41 மற்றும் 60 -இற்கு பொதுவான காரணிகள் கிடையாது. 41 ஒரு பகா எண். எனவே, இதன் இறுதி விடை, 18 41/60.