2, 1 விண்கலம் எழுகின்றது... இறுதியாக தரையிலிருந்து விண்கலம் எழுகிறது வாசிங்டன் டி.சியில் அமைந்துள்ள நாசா தலைமையகத்தின் சமூக ஊடக மேலாளர் என்ற முறையில் நான்தான் நாசாவின் எல்லா சமூக ஊடக கணக்குகளையும் நிர்வகித்து வருகின்றேன், முக்கியமாக @nasa டிவிட்டர் கணக்கு எங்களைப் பின்தொடருபவர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்கின்றோம் அவர்களிடம் விண்வெளி விந்தைகளைப்பற்றியும் விண்வெளி ஆராய்ச்சி பற்றிய செய்திகளையும் பரிமாறிக்கொள்கிறோம் எங்களிடம் 110 டிவிட்டர் கணக்குகளும் 20 டிவிட் செய்யும் விண்வெளி வீரர்களும் உள்ளனர் எங்களைப் பின்பற்றுபவர்கள் வெறுமனே பின்பற்றாமல் தெரிந்து கொள்ளும் தகவல்களை பிறருடன் பகிர்ந்து கொண்டு அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் நாசாவுடனான அவர்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் ஒவ்வொரு நாளும் சிறப்பு படத்தினை நாங்கள் டிவிட் செய்கிறோம் இதனை அனைவரும் விரும்பி பார்கின்றனர் எங்களிடம் மிகச்சிறந்த காணொளிகள் உள்ளன, விண்கலத்தினை ஏவுகின்ற விண்கலம் இறங்குகின்ற காணொளிகளும் உள்ளன உங்களின் ஆர்வம் எதுவாக இருந்தாலும், உங்களுக்குப் பிடித்த காணொளிகள் கண்டிப்பாக டிவிட்டரில் இருக்கும் என நான் உறுதி கூற முடியும் உங்களைப்போன்று ஆர்வம் உள்ள குழுக்களுடனும் நீங்கள் இணையலாம் எந்த வகை சிந்தனையாக இருந்தாலும் சிக்கல் இல்லை அதற்கான டிவிட்டர் குழு உள்ளது ஒரு கருத்தைப்பற்றி உரையாடுவார்கள் நீங்களும் அவர்களோடு இணைந்து கொள்ளலாம்