1 00:00:00,730 --> 00:00:03,457 இந்த காணொளியில் நான் உங்களுக்கு 2 00:00:03,457 --> 00:00:04,768 எதிர்மறை எண்கள் குறித்து விளக்கப்போகிறேன் 3 00:00:04,768 --> 00:00:07,564 மேலும் அவற்றை எப்படி கூட்டுவது மற்றும் கழிப்பது என்றும் காணலாம். 4 00:00:07,564 --> 00:00:09,326 நீங்கள் முதலில் அவற்றை எதிர்கொள்ளும் பொழுது, 5 00:00:09,326 --> 00:00:11,612 அவை ஆழமாகவும் புதிராகவும் தோன்றும். 6 00:00:11,612 --> 00:00:14,769 நாம் முதலில் எண்ணும் பொழுது, நேர்மறை எண்களை எண்ண போகிறோம். 7 00:00:14,769 --> 00:00:17,346 எதிர்மறை எண்கள் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? 8 00:00:17,346 --> 00:00:20,835 நாம் அதை பற்றி சிந்திக்கும் பொழுது, 9 00:00:20,835 --> 00:00:22,905 உங்கள் தினசரி வாழ்வில் அதனை உணர்ந்து இருப்பீர்கள். 10 00:00:22,905 --> 00:00:25,195 நான் சில எடுத்துக்காட்டுகள் தருகிறேன். 11 00:00:25,195 --> 00:00:26,412 அதற்கு முன்னர், எதிர்மறை எண்கள் என்றால் 12 00:00:26,412 --> 00:00:30,674 என்று ஒரு பொது விளக்கம் அளிக்கிறேன். 13 00:00:30,674 --> 00:00:34,839 இது பூஜ்யத்தை விட குறைவானது. 14 00:00:34,839 --> 00:00:37,191 அது உங்களுக்கு விசித்திரமாகவும் தெளிவில்லாமலும் தோன்றலாம். 15 00:00:37,191 --> 00:00:39,851 நாம் இதனை ஓரிரு உதாரணத்துடன் யோசித்து பார்போம். 16 00:00:39,851 --> 00:00:45,251 நாம் வெப்பத்தை அளவிட முயன்றால் 17 00:00:45,251 --> 00:00:47,114 (அது செல்சிஸ் அல்லது பாரேன்ஹெய்ட்டில் இருக்கும்.) 18 00:00:47,114 --> 00:00:49,881 ஆனால் நாம் செல்சிஸ் -ல் அளப்பதாக வைத்து கொள்வோம். 19 00:00:49,881 --> 00:00:51,878 நான் ஒரு சிறிய அளவுகோளை வரைகிறேன், 20 00:00:51,878 --> 00:00:53,707 அதில் வெப்பத்தை அளக்கலாம். 21 00:00:53,707 --> 00:00:57,099 எனவே இது 0° செல்சிஸ், 22 00:00:57,099 --> 00:01:02,909 அது 1° செல்சியஸ் , 2°, 3° என எடுத்து கொள்வோம்.. 23 00:01:02,924 --> 00:01:05,817 இது சற்று குளிரான நாள் எனலாம். 24 00:01:05,817 --> 00:01:10,296 இப்போது 3° செல்சியஸ் என்று எடுத்து கொள்வோம்.. 25 00:01:10,296 --> 00:01:12,004 வெப்ப முன்னறிவிப்பு செய்பவர் யாராவது, 26 00:01:12,004 --> 00:01:16,976 மறுநாள் குளிர் 4° மேலும் அதிகமாக குளிரும் என்று கூறுகிறார். 27 00:01:16,976 --> 00:01:21,502 எனவே அது எவ்வளவு குளிராக இருக்கும்? அதன் அளவை எப்படி குறிப்பது? 28 00:01:21,502 --> 00:01:25,126 அது 1° மட்டும் குறையும் என்றால் 2° ஆக இருக்கும். 29 00:01:25,126 --> 00:01:26,874 ஆனால் அது மேலும் 4° குளிரும் என்று நமக்கு தெரியும். 30 00:01:26,874 --> 00:01:32,068 மேலும் 2° குளிரும் என்றால், நாம் அதனை 1° என குறிக்கலாம். 31 00:01:32,068 --> 00:01:35,311 அது 3° மேலும் குளிர்ந்தால், நாம் 0° என்று குறிக்கலாம். 32 00:01:35,311 --> 00:01:38,453 ஆனால் 3° மட்டும் குறையவில்லை. அது 4° என்பதால் 33 00:01:38,453 --> 00:01:43,965 0 வை விடவும் மேலும் ஒரு எண் கீழே போக வேண்டும். 34 00:01:43,965 --> 00:01:50,416 அந்த 0 விலும் குறைந்த 1 என்பதை எதிர்மறை 1° என்று கூறுகிறோம். 35 00:01:50,416 --> 00:01:52,907 இதை நீங்கள் எண் கோட்டில் பார்க்கலாம். 36 00:01:52,907 --> 00:01:57,029 நாம் வலது பக்கம் எண்ணிக்கொண்டே நேர்மறை யாக வருவதை காணலாம். 37 00:01:57,029 --> 00:02:04,207 ஆனால் 0 -க்கு இடது புறம் நகர்ந்து கொண்டே போனால் நமக்கு -1, -2, -3. கிடைக்கும். 38 00:02:04,207 --> 00:02:07,301 மேலும், நாம் எவ்வளவு அதிகமாக எண்ணுகிறோமோ 39 00:02:07,301 --> 00:02:09,948 அவ்வளவு பெரிய எதிர்மறை எண் கிடைக்கும். 40 00:02:09,948 --> 00:02:15,372 ஆனால் ஒன்றை நான் தெளிவாக இங்கு கூறுகிறேன், -3 என்பது -1 விட குறைவானது. 41 00:02:15,372 --> 00:02:19,488 -3° உள்ள வெப்பம் -1° விட குறைவானது. 42 00:02:19,488 --> 00:02:23,329 அது குளிரானது. அங்குள்ள வெப்பம் குறைவு. 43 00:02:23,329 --> 00:02:39,824 எனவே -100 என்பது -1 விட மிகவும் குறைந்தது 44 00:02:39,824 --> 00:02:41,913 நீங்கள் 100 மற்றும் 1 ஐ பார்ப்பீர்கள், 45 00:02:41,913 --> 00:02:45,094 1 ஐ விட 100 பெரிய எண் என்று உங்களுக்கு தோன்றலாம். 46 00:02:45,094 --> 00:02:46,272 ஆனால் நீங்கள் யோசித்து பார்த்தால், 47 00:02:46,272 --> 00:02:48,849 -100 என்றால் அது குறைகிறது என்று அர்த்தம். 48 00:02:48,849 --> 00:02:52,304 -100: 100° அளவு வெப்பம் குறைந்து உள்ளது 49 00:02:52,304 --> 00:02:55,737 எனவே -1° விட -100-ல் அதிக அளவு வெப்பம் குறையும். 50 00:02:55,737 --> 00:02:57,493 நான் வேறு ஒரு உதாரணம் தருகிறேன். 51 00:02:57,493 --> 00:03:11,264 என் வங்கி கணக்கில் என்னிடம் $10 பணம் இருப்பதாக எண்ணலாம். 52 00:03:11,264 --> 00:03:13,114 நான் வெளியே போவதாக வைத்துக்கொள்வோம், 53 00:03:13,114 --> 00:03:14,949 (ஏனென்றால் என்னிடம் $10 இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது), 54 00:03:14,949 --> 00:03:21,426 நான் சென்று $30 செலவு செய்கிறேன் என்று வைத்துகொள்வோம் 55 00:03:21,426 --> 00:03:22,735 ஒரு வாதத்திற்கு என்னுடைய வங்கி மிகவும் 56 00:03:22,735 --> 00:03:24,275 தாராளமான வங்கி என்று வைத்து கொள்வோம், 57 00:03:24,275 --> 00:03:26,861 என் கணக்கில் இருப்பதைவிட அதிகம் செலவழிக்க அனுமதி அளிக்கும் 58 00:03:26,861 --> 00:03:28,354 (உண்மையில் அப்படி சில வங்கிகள் உள்ளன) 59 00:03:28,354 --> 00:03:30,422 எனவே நான் $30 செலவு செய்கிறேன். 60 00:03:30,422 --> 00:03:32,907 இப்பொழுது என் வங்கி கணக்கு எப்படி காட்சியளிக்கும்? 61 00:03:32,907 --> 00:03:35,564 நான் ஒரு எண் கோடு வரைகிறேன். 62 00:03:35,564 --> 00:03:37,839 ஏற்கனவே உங்கள் உள்ளுணர்வு , 63 00:03:37,839 --> 00:03:43,284 நான் வங்கிக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்த்தி இருக்கும். 64 00:03:43,284 --> 00:03:47,130 நாளை என் வங்கி கணக்கு எப்படி இருக்கும்? 65 00:03:47,130 --> 00:03:51,642 எனவே உடனடியாக நீங்கள் கூறலாம், "என்னிடம் $10 இருந்தது $30 செலவானால் , 66 00:03:51,642 --> 00:03:54,219 அதிகமுள்ள $20 எங்கிருந்தாவது வரவேண்டும்" 67 00:03:54,219 --> 00:03:56,489 அது வங்கியிலிருந்து வந்து இருக்கும். 68 00:03:56,489 --> 00:03:59,119 எனவே நான் வங்கிக்கு $20 கடன்பட்டு இருக்கிறேன். 69 00:03:59,119 --> 00:04:00,789 எனவே வங்கியில், என் கணக்கில், 70 00:04:00,789 --> 00:04:07,199 எவ்வளவு பணமுள்ளது என்பதனை நான் $10 - $30 = - $20 என்று கூறலாம். 71 00:04:07,199 --> 00:04:13,345 எனவே நான் வங்கியில் என்னிடம் -$20 உள்ளது என்று சொன்னால், 72 00:04:13,345 --> 00:04:18,075 நான் வங்கிக்கு $20 தர வேண்டும் என்று பொருள். 73 00:04:18,075 --> 00:04:19,357 என்னிடம் எந்த பணமும் இல்லை என்று அர்த்தம். 74 00:04:19,357 --> 00:04:20,946 என்னிடம் ஏதும் இல்லை, மேலும் நான் தர வேண்டும். 75 00:04:20,946 --> 00:04:22,535 இது நேர்மாறாக இருக்கிறது. 76 00:04:22,535 --> 00:04:25,589 இங்கு என்னிடம் செலவு செய்ய பணம் உள்ளது 77 00:04:25,589 --> 00:04:29,228 என்னிடம் $10 வங்கி கணக்கில் உள்ளது, 78 00:04:29,228 --> 00:04:31,817 நான் அந்த $10 செலவு செய்ய போகிறேன். 79 00:04:31,817 --> 00:04:33,390 இப்பொழுது, நான் வங்கிக்கு பணம் தர வேண்டும். 80 00:04:33,390 --> 00:04:34,963 நான் நேர்மாறான வழியில் சென்றுள்ளேன். 81 00:04:34,963 --> 00:04:36,778 இந்த எண் வரிசையை பயன்படுத்தினால், 82 00:04:36,778 --> 00:04:38,593 இது சற்று தெளிவாகும். 83 00:04:38,593 --> 00:04:39,832 எனவே, இது 0. 84 00:04:39,832 --> 00:04:43,347 நான் $10 -லிருந்து தொடங்கினேன். 85 00:04:43,347 --> 00:04:47,417 நான் $30 செலவு செய்கிறேன் என்றால், 30 இடங்கள் இடது புறம் செல்ல வேண்டும். 86 00:04:47,417 --> 00:04:49,848 இடது புறம் 10 இடங்கள் நகர்ந்தால், 87 00:04:49,848 --> 00:04:52,804 $10 செலவு செய்தால், $0 ஆகும், 88 00:04:52,804 --> 00:04:56,829 மேலும் $10 செலவு செய்தால், -$10 ஆகும். 89 00:04:56,829 --> 00:05:02,208 மேலும் $10 செலவு செய்தால், -$20 ஆகும். 90 00:05:02,208 --> 00:05:04,483 இதில், ஒவ்வொரு தொலைவிலும், $10 செலவு செய்கிறேன். 91 00:05:04,483 --> 00:05:06,759 அடுத்த $10-க்கு, -$10 ஆகும். 92 00:05:06,759 --> 00:05:09,754 அடுத்த $10-க்கு, -$20 ஆகும். 93 00:05:09,754 --> 00:05:13,144 இங்கு உள்ள மொத்த தூரம் நான் செலவழித்தது, 94 00:05:13,144 --> 00:05:17,270 நான் $30 செலவு செய்கிறேன். 95 00:05:17,270 --> 00:05:20,398 எனவே, நாம் செலவு செய்தாலோ அல்லது கழித்தாலோ 96 00:05:20,398 --> 00:05:23,327 அல்லது குளிரானாலோ, இடது புறம் செல்ல வேண்டும். 97 00:05:23,327 --> 00:05:24,803 எண்கள் சிறியதாகும். 98 00:05:24,803 --> 00:05:27,229 0 -க்கு கீழே சென்றால், 99 00:05:27,229 --> 00:05:31,604 -1, -2 .... ஏன் -1.5, -1.6 எனவும் செல்லும். 100 00:05:31,604 --> 00:05:34,948 அதிக எதிர்மம் என்றால், அதிகமாக இழப்போம். 101 00:05:34,948 --> 00:05:37,268 கூட்டினால், நமது எண், 102 00:05:37,268 --> 00:05:41,389 எண் வரிசையில் வலது புறம் செல்லும். 103 00:05:41,389 --> 00:05:43,058 இதை தள்ளி வைத்து விட்டு, 104 00:05:43,058 --> 00:05:46,082 மேலும் சில கணக்குகளை பார்க்கலாம். 105 00:05:46,082 --> 00:05:52,317 இதன் பொருள் என்ன, 106 00:05:52,317 --> 00:05:56,474 இங்கு 3 - 4 என்று உள்ளது. 107 00:05:56,474 --> 00:05:57,710 மீண்டும், 108 00:05:57,710 --> 00:06:00,193 இது அந்த வெப்ப கணக்கு போன்று தான். 109 00:06:00,193 --> 00:06:01,944 நம் 3-ல் தொடங்கி, 4 ஐ கழிக்கிறோம். 110 00:06:01,944 --> 00:06:03,695 எனவே, நாம் இடது புறம் 4 இடம் நகர்கிறோம். 111 00:06:03,695 --> 00:06:05,854 நாம் 1, 2, 3, 4... 112 00:06:05,854 --> 00:06:10,417 இது -1 ஆகும். 113 00:06:10,417 --> 00:06:11,767 இவ்வாறு செய்வதன் மூலம், 114 00:06:11,767 --> 00:06:13,934 எதிர்மறை எண்கள் குறித்து நாம் புரிந்து கொள்ளலாம். 115 00:06:13,934 --> 00:06:15,843 நீங்கள் இந்த எண்ணை கற்பனை செய்து கொள்ளுங்கள் 116 00:06:15,843 --> 00:06:17,752 கூட்டுகிரோமா அல்லது கழிக்கிறோமா 117 00:06:17,752 --> 00:06:19,961 என்பதற்கு ஏற்றார் போல நகர்த்த வேண்டும். 118 00:06:19,961 --> 00:06:21,236 மேலும் சிலவற்றை பார்க்கலாம். 119 00:06:21,236 --> 00:06:27,848 2 - 8 உள்ளது. 120 00:06:27,848 --> 00:06:30,552 பின்னர் வரும் காலத்தில், இதை பற்றி பல்வேறு வழிகளில் சிந்திக்கலாம். 121 00:06:30,552 --> 00:06:33,612 மீண்டும், எண் வரிசை உள்ளது. 122 00:06:33,612 --> 00:06:35,083 நிம்மிடம் 0 உள்ளது. 123 00:06:35,083 --> 00:06:38,729 நாம், 124 00:06:38,729 --> 00:06:42,032 இங்கு 0 உள்ளது, நாம் 1...2.. 125 00:06:42,032 --> 00:06:43,891 நாம் 8 ஐ கழிக்கிறேன், 126 00:06:43,891 --> 00:06:47,043 அப்படியென்றால், இடது புறம் 8 இடம் நகர்கிறோம். 127 00:06:47,043 --> 00:06:50,993 நாம் இடது பக்கம் ஒன்று, இரண்டு இடம் நகர்கிறோம். 128 00:06:50,993 --> 00:06:53,036 0 -விலிருந்து 2 இடம் நகர்கிறோம். 129 00:06:53,036 --> 00:06:55,080 நாம் இன்னும் எத்தனை இடங்கள் நகர வேண்டும்? 130 00:06:55,080 --> 00:06:56,961 நாம் ஏற்கனவே, 2 இடங்கள் நகர்ந்து விட்டோம். 131 00:06:56,961 --> 00:06:59,010 நாம் 8-க்கு செல்ல, இன்னும் 6 இடம் நகர வேண்டும். 132 00:06:59,010 --> 00:07:07,396 நாம் இடது பக்கத்தில் 1-2-3-4-5-6 இடங்கள் நகர வேண்டும். 133 00:07:07,396 --> 00:07:09,106 இது எங்கு இருக்கும். 134 00:07:09,106 --> 00:07:10,074 நாம் 0 -வில் இருக்கிறோம். 135 00:07:10,074 --> 00:07:18,706 இது -1, -2, -3, -4, -5, -6 136 00:07:18,706 --> 00:07:24,310 எனவே, 2-8 என்பது -6 ஆகும். 137 00:07:24,310 --> 00:07:26,540 2-2 என்பது 0 ஆகும். 138 00:07:26,540 --> 00:07:29,633 8 ஐ கழிக்கும் பொழுது, மேலும் 6 இடங்கள் நகர வேண்டும். 139 00:07:29,633 --> 00:07:33,366 -6 என்றால், 0 விற்கு கீழ் 6. 140 00:07:33,366 --> 00:07:34,994 மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம். 141 00:07:34,994 --> 00:07:36,562 இது சற்று சுலபமான கணக்கு 142 00:07:36,562 --> 00:07:38,807 உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன். 143 00:07:38,807 --> 00:07:43,976 இப்பொழுது, 144 00:07:43,976 --> 00:07:47,870 -4 -2 என்பதை எடுக்கலாம். 145 00:07:47,870 --> 00:07:49,439 நாம் எதிர்ம எண்ணில் தொடங்குகிறோம். 146 00:07:49,439 --> 00:07:51,009 பிறகு இதில் கழிக்கிறோம். 147 00:07:51,009 --> 00:07:56,808 குழப்பமாக இருந்தால் எண் கோட்டை நினைவில் கொள்ளுங்கள். 148 00:07:56,838 --> 00:07:59,680 இங்கு உள்ளது 0. 149 00:07:59,680 --> 00:08:07,015 இது -1, -2, -3, -4, இங்கு தான் தொடங்குகிறோம். 150 00:08:07,015 --> 00:08:09,279 இப்பொழுது -4 -ல் 2 ஐ கழிக்கிறோம். 151 00:08:09,279 --> 00:08:11,543 இடது பக்கம் இரு இடங்கள் நகர வேண்டும். 152 00:08:11,543 --> 00:08:15,387 எனவே, 1 ஐ கழித்தால் -5 ஆகும். 153 00:08:15,387 --> 00:08:21,723 மேலும் 1 ஐ கழித்தால் -6 ஆகும். 154 00:08:21,723 --> 00:08:23,332 எனவே, இது -6. 155 00:08:23,332 --> 00:08:24,748 மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம். 156 00:08:24,748 --> 00:08:30,266 நம்மிடம் -3 உள்ளது 157 00:08:30,266 --> 00:08:34,261 இதை கழிப்பதற்கு பதில் 2 ஐ கூட்டலாம். 158 00:08:34,261 --> 00:08:36,562 எண் கோட்டில் எங்கு வைக்க வேண்டும். 159 00:08:36,562 --> 00:08:39,389 நாம் -3 -ல் தொடங்குகிறோம், இதில் 2 ஐ கூட்டுகிறோம். 160 00:08:39,389 --> 00:08:42,217 எனவே, நாம் வலது பக்கம் செல்ல வேண்டும். 161 00:08:42,217 --> 00:08:44,750 1 ஐ கூட்டினால் இது -2 ஆகும். 162 00:08:44,750 --> 00:08:46,760 மேலும் ஒரு ஒன்றை கூட்டினால், 163 00:08:46,760 --> 00:08:47,969 இது -1 ஆகும். 164 00:08:47,969 --> 00:08:49,394 எனவே, வலது பக்கம் இரண்டு இடம் நகர்ந்தால், 165 00:08:49,394 --> 00:08:54,395 -3 + 2 என்பது -1 ஆகும். 166 00:08:54,395 --> 00:08:55,957 இதை நீங்களே சரி பார்க்கலாம். 167 00:08:55,957 --> 00:08:59,934 இது கூட்டல் மற்றும் கழித்தலுடன் ஒத்துப்போகிறது. 168 00:08:59,934 --> 00:09:05,399 -1 -ல் இருந்து 2 ஐ கழித்தால், -3 ஆகும். 169 00:09:05,399 --> 00:09:07,506 இது நேர்மாறாக செல்கிறது, 170 00:09:07,506 --> 00:09:09,637 -3 +2 என்பது இங்கு வரும். 171 00:09:09,637 --> 00:09:11,229 இதில் இரண்டை கழித்தால், 172 00:09:11,229 --> 00:09:12,514 இது மீண்டும் -3 ஆகும். 173 00:09:12,514 --> 00:09:13,429 என்னவாகிறது என்று பாருங்கள், 174 00:09:13,429 --> 00:09:17,634 -1 -ல் தொடங்கினால், 175 00:09:17,634 --> 00:09:20,469 இதில் 2 ஐ கழித்தால், இடது பக்கம் நகர வேண்டும். 176 00:09:20,469 --> 00:09:22,106 -3 கிடைக்கும். 177 00:09:22,106 --> 00:09:25,322 இதன் மூலம் உங்களுக்கு 178 00:09:25,322 --> 00:09:29,028 எதிர்மறை எண்களின் கூட்டல் கழித்தல் புரிந்திருக்கும். 179 00:09:29,028 --> 00:09:31,337 அடுத்த பகுதியில் மேலும் பல எடுத்துக்காட்டுகளை பார்க்கலாம். 180 00:09:31,337 --> 00:09:32,475 அதில் எதிர்மறை எண்களை கழித்தல் 181 00:09:32,475 --> 00:09:35,337 என்றால் என்ன என்று பார்க்கலாம்.