இந்த கணக்கை செய்யவேண்டும்: -1[(-7) + 2(3 + 2)] - (5)² -1[(-7) + 2(3 + 2)] - (5)² இந்த கணக்கை செய்வதற்கு கணக்கு வரிசை தெரியவேண்டும். முதலில் அடைப்பு குறியீடுகள். அடைப்பு குறியீடுகள். அடைப்பு குறியீடுகள்- Parentheses. பிறகு, அடுக்கேற்றம்- Exponents. இந்த கணக்கில் அடுக்கேற்றம் இருக்கிறது. அடுத்து, பெருக்கல்.. பெருக்கலும் வகுத்தலும். கடைசியில், கூட்டலும் கழித்தலும். இந்த கணக்கை செய்யலாம். முதலில் அடைப்பு குறியீடுகள். இந்த அடைப்பு குறியீடுகளில் 3 + 2 என்ற கனக்கிருக்கிறது; இது 5. அடுத்ததாக இந்த அடுகேற்றத்தை செய்வோம். 5² என்ற கணக்கு இருக்கிறது. இதை கழிக்க வேண்டும். கழித்தலுக்கு முன் அடுகேற்றத்தை செய்வோம். 5² என்றால் 25. இந்த கணக்கை திருப்பி எழுதலாம். இந்த கணக்கு.. -1[(-7) + 2(5)] - 25 -1[(-7) + 2(5)] - 25 -1[(-7) + 2(5)] - 25 -1[(-7) + 2(5)] - 25 அடுத்தது பெருக்கலை செய்வோம். நீங்கள் நினைக்கலாம் அடைப்பு குறியீடுகளை முதல் செய்ய வேண்டாமா? ஆனால் இந்த அடைப்பு குறியீடுகளில் ஒரே ஒரு எண் தான் இருக்கிறது அது ஒரு கணக்கில்லை. அதனால் இதை இப்படியே விடலாம். இந்த கணக்கை முதல் செய்வோம். -1ஆல் பெருக்குவதற்கு முன்னால் இந்த கணக்கை செய்யலாம். முதலில் பெருக்கல். இங்கே 2 பெருக்கல் 5 இருக்கிறது. 2 பெருக்கல் 5 என்றால் 10. மறுபடியும் கணக்கை எழுதலாம். நீங்கள் இதை செய்யவேண்டாம், ஆனால் செய்தால் கணக்கு இன்னும் எளிமையாகும். இந்த கணக்கு.. -1[(-7) + 10] - 25. இந்த கணக்கு எளிமையானது. முதலில் அடைப்பு குறியீடுகள்: -7 + 10. ஒரு எண் கோட்டை எழுதி -7 என்ற எண்ணில் தொடங்கி இந்த கோட்டின் அளவு -7... 10 என்ற எண்ணை கூட்ட வேண்டும். 10ஐ கூட்டலாம். வலது பக்கம் 10 செல்லவேண்டும். வலது பக்கம் 7 சென்றால் 0க்கு வருவோம். இன்னும் 3 சென்றால்.. 7, 8, 9, 10. 3 என்ற எண் கிடைக்கும். இன்னொரு விதம் கணக்கை செய்தால் இந்த கணக்கை ஒரு கழித்தலாக செய்ய முடியும். 10 கூட்டல் எதிர்மறை 7 என்றால் 10 கழித்தல் 7 தான். 10 7ஐ விட பெரிது. அதனால் விடை ஒரு நேர்மறை எண். 10 கழித்தல் 7 என்றால் 3. இந்த கணக்கை மறுபடியும் எழுதுவோம். ஒன்று தெரிந்துகொள்ளுங்கள்: ஒன்று தெரிந்துகொள்ளுங்கள்: [ ] ( ) இவை இரண்டும் அடைப்பு குறியீடுகள் தான். படிப்தற்கு எளிமையாக இருக்கவேண்டும் என்று இரண்டு விதமாகவும் அடைப்பு குறியீடுகளை எழுதலாம். இந்த கணக்கு.. -1(3) - 25 -1(3) - 25 கூட்டலும் கழித்தலும் செய்வதற்கு முன்னால் பெருக்களை செய்யவேண்டும். -1 பெருக்கல் 3.. -1 பெருக்கல் 3 என்றால் -3. கழித்தல் 25. -3 கழித்தல் 25 என்றால் -3 கூட்டல் -25 தான். எதிர்மறை 3இலிருந்து எண் கோட்டில் இடது பக்கம் 25 செல்லவேண்டும். இந்த கணக்கை செய்ய 3 கூட்டல் 25 என்ற கணக்கை செய்து அதை எதிர்மறையாக மாற்றலாம். 3 + 25 என்றால் 28; -3 - 25 என்றால் -28. இது எதிர்மறை 28. கணக்கு முடிந்தது!