எண் கூட்டல் என்றால் என்ன? என்பதை இந்த காணொளியில் பார்க்கப் போகிறோம். முதலில், 1ஐ வைத்து ஆரம்பிக்கலாம். 1 + 1. 1 + 1 எதற்கு சமமாகும்? இதை நாம், நம்மிடம் ஒரு பொருள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அது இந்த ஊதா வட்டம். அந்த பொருளை நான் இந்த ஊதா வட்டத்தை வைத்து ஒப்பிடுகிறேன். நாம் இதுடன் இன்னொரு பொருளை சேர்த்துக் கொள்வோம். அதற்கு, நாம் இன்னொரு வட்டத்தை நீலத்தில் வரைந்துக் கொள்வோம். அதை நான் இங்கு வரைகிறேன். எனவே, இது 1 கூட்டல் 1. அல்லது 1 + 1. இப்போது நம்மிடம் எத்தனை வட்டங்கள் இருக்கின்றன ? எங்க சொல்லுங்கள் பார்ப்போம்....? ம்ம்ம்ம் சரியா சொன்னீங்க .... நம்மிடம் இப்பொழுது, இரண்டு வட்டங்கள் உள்ளன. எனவே, 1 + 1 = 2. இது உங்களுக்கு புரிந்து இருக்கும் என நினக்கிறேன். சரி, நாம் இப்பொழுது இன்னும் பெரிய எண்களை கூட்டலாம். 2 + 3 எதோ ஒரு எண்ணுக்கு சமமாகுகிறது. அந்த எண்ணை நான் கேள்வி குறி வைத்து ஒப்பிடுகிறேன். இந்த கேள்வி குறி எந்த எண்ணுக்கு சமமாகும்? நீங்கள், தேவையானால் காணொளியை சற்று நேரம் நிறுத்தி வைத்து விட்டு, கற்றுகொள்ளுங்கள். இதனை நீங்கள், என்னிடம் இரண்டு பொருள்கள் இருக்கின்றன மற்றும் இவையுடன் நான் மூன்று பொருள்களை சேர்த்தல் என்னிடம் மொத்தம் எத்தனை பொருள்கள் இருக்கும்... ? எங் எங்க இதையும் நீங்களே சொல்லுங்க பார்க்கலாம்... சரி, நம்மிடம் இரு பொருள்கள் உள்ளன. இவற்றை நான் இரண்டு ஊதா வட்டங்களாக ஒப்பிடுகிறேன். நம்மிடம் இரண்டு ஊதா வட்டங்கள் உள்ளன. இவற்றை உடன் நாம் இன்னும் மூன்று சேர்க்கலாம் இந்த மூன்ற வட்டங்களை நான், நீளத்தில் வரைகிறேன். 1, 2, 3 வட்டங்கள். நம்மிடம் மொத்தம் எத்தனை வட்டங்கள் உள்ளன? நாம் இவற்றை எல்லாம் எண்ணலாம். நம்மிடம் 1.. 2... 3... 4... 5... மொத்தம் 5 வட்டங்கள் உள்ளன. எனவே, இரண்டு பொருள்களுடன் மூன்று பொருள்களை சேர்த்தால் ஐந்து பொருள்கள் இருக்கும். எனவே, கேள்வி குறி 5க்கு சமமாகும். நான் கேள்வி குறியை அழித்து, 5ஐ எழுதுகிறேன். எனவே, 2 + 3 = 5. என்ன இப்போது உங்களுக்கு கூட்டல் கணக்கு மிகவும் எளிதாக புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். இங்கு நாம் சிறிய எண்களை கொண்டு கணக்குகளை போட்டு பார்த்தோம். இதேப் போன்று, பெரிய எண்களை கொண்டு நீங்களே கூட்டல் கணக்குகளை செய்து பாருங்கள். நாம் மீண்டும் அடுத்த காணொளியில் சந்திக்கலாம்.