0:00:00.938,0:00:04.559 எதிர்ம மற்றும் நேர்ம எண்களை எவ்வாறு பெருக்க வேண்டுமென்று நமக்கு தெரியும். 0:00:04.559,0:00:06.649 இப்பொழுது அதை எவ்வாறு வகுக்கலாம் என்று பார்ப்போம். 0:00:06.649,0:00:08.562 நீங்கள் பார்க்க போவதும் 0:00:08.562,0:00:10.632 அதே போன்ற முறை தான். 0:00:10.632,0:00:12.164 இரு எண்களும் நேர்ம எண்களாக 0:00:12.164,0:00:15.455 இருந்தால் விடை நேர்மமாக இருக்கும். 0:00:15.455,0:00:18.890 ஒரு எண் எதிர்மமாக இருந்தால், விடை எதிர்மம். 0:00:18.890,0:00:22.542 இரண்டுமே எதிர்மம் என்றால், விடை நேர்மம். 0:00:22.542,0:00:26.359 காணொளியை இடை நிறுத்தம் செய்து உங்களுக்கும் 0:00:26.359,0:00:29.473 இதே விடை வருகிறதா என்று முயற்சியுங்கள். 0:00:29.473,0:00:32.840 8 வகுத்தல் எதிர்ம 2. 0:00:32.840,0:00:35.957 8 வகுத்தல் 2 என்றால், 0:00:35.957,0:00:40.326 இது நேர்ம 4 ஆகும். ஆனால், இரண்டில் ஒரு எண் 0:00:40.326,0:00:45.425 எதிர்மமாக இருக்கிறது, எனவே, இதன் விடை எதிர்மம் ஆகும். 0:00:45.425,0:00:49.556 8 வகுத்தல் -2 என்பது -4 ஆகும். 0:00:49.556,0:00:53.425 அடுத்தது, -16 வகுத்தல் 4 0:00:53.425,0:00:54.423 இப்பொழுது கவனமாக பாருங்கள். 0:00:54.423,0:00:59.727 நேர்ம 16 வகுத்தல் நேர்ம 4 என்றால், இது 4 ஆகும். 0:00:59.727,0:01:02.675 ஆனால், இதில் ஒரு எண் எதிர்மம் ஆகும். 0:01:02.675,0:01:05.121 இரண்டில் சரியாக ஒரு எண் எதிர்மம், 0:01:05.121,0:01:09.104 எனவே, நமது விடையும் எதிர்மத்தில் இருக்கும். 0:01:09.104,0:01:12.174 இப்பொழுது எதிர்ம 30 வகுத்தல் எதிர்ம 5 ஆகும். 0:01:12.174,0:01:17.285 30 வகுத்தல் 5 என்றால், 6 ஆகும். 0:01:17.285,0:01:20.573 எதிர்மம் வகுத்தல் எதிர்மம் என்றால் 0:01:20.573,0:01:25.631 எதிர்மங்கள் நீங்கி விடை நேர்மத்தில் கிடைக்கும். 0:01:25.631,0:01:27.332 தேவைப்பட்டால், இங்கு + என்று எழுதலாம். 0:01:27.332,0:01:30.448 இது + 6 ஆகும். 0:01:30.448,0:01:34.065 எதிர்மம் வகுத்தல் எதிர்மம் என்பதன் 0:01:34.065,0:01:37.063 விடை நேர்மம் ஆகும். 0:01:37.063,0:01:39.035 18 வகுத்தல் 2 0:01:39.035,0:01:40.612 இது சற்று குழப்பமான கேள்வி. 0:01:40.612,0:01:43.934 எதிர்ம எண்களை பற்றி பார்ப்பதற்கு முன்னர் இது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். 0:01:43.934,0:01:47.067 நேர்மம் வகுத்தல் நேர்மம், 0:01:47.067,0:01:49.035 இதன் விடை நேர்மம் தான், 0:01:49.035,0:01:52.918 எனவே, இதன் விடை + 9 ஆகும். 0:01:52.918,0:01:55.769 இப்பொழுது சுவாரஸ்யமான கேள்விகளை பார்க்கலாம். 0:01:55.769,0:01:57.967 இது சற்று கடினமான கணக்கு. 0:01:57.967,0:02:01.464 இதில் பெருக்கல் மற்றும் வகுத்தல் உள்ளது. 0:02:01.464,0:02:03.698 இங்கு எழுதியிருப்பது போல, 0:02:03.698,0:02:06.030 முதலில் தொகுதியை பெருக்க வேண்டும். 0:02:06.030,0:02:07.794 இந்த புள்ளி எதை குறிக்கிறது என்றால், 0:02:07.794,0:02:10.164 இது மேலும் ஒரு பெருக்கல் குறி ஆகும். 0:02:10.164,0:02:12.381 இதை "x" என்றும் எழுதலாம். 0:02:12.381,0:02:15.628 இயற்கணிதத்தில் இந்த புள்ளியை தான் அதிகமாக பார்ப்பீர்கள். 0:02:15.628,0:02:17.358 x என்பது வேறு ஒரு அமைப்பு ஆகும். 0:02:17.358,0:02:23.383 இதனை "x" உடன் குழப்ப வேண்டாம், 0:02:23.383,0:02:25.584 அது இயற்கணிதத்தில் வருவது. 0:02:25.584,0:02:27.927 அதனால் தான் நான் புள்ளியை உபயோகிக்கிறேன். 0:02:27.927,0:02:31.093 -7 பெருக்கல் 3 0:02:31.093,0:02:33.447 இது தொகுதியில் உள்ளது, இதன் விடையை 0:02:33.447,0:02:35.597 -1 உடன் வகுக்க வேண்டும். 0:02:35.597,0:02:37.640 எனவே, இந்த தொகுதி, -7 x 3 என்பது, 0:02:37.640,0:02:41.437 7 x 3 என்றால், 21 ஆகும். 0:02:41.437,0:02:45.303 ஆனால், இதில் ஒன்று எதிர்மம் என்பதால், 0:02:45.303,0:02:47.078 இது -21 ஆகும், 0:02:47.078,0:02:49.732 எனவே, இது -21 வகுத்தல் -1 ஆகும் 0:02:49.732,0:02:51.894 -21 வகுத்தல் -1, 0:02:51.894,0:02:54.944 எதிர்மங்கள் நீங்கி விடும், இது நேர்மம் ஆகும். 0:02:54.944,0:02:57.920 இது நேர்ம 21 ஆகும். 0:02:57.920,0:02:59.510 இது அனைத்தையும் எழுதிக்கொள்கிறேன், 0:02:59.510,0:03:03.266 நேர்மம் வகுத்தல் எதிர்மம் என்றால், 0:03:03.266,0:03:07.425 விடை எதிர்மம் ஆகும். 0:03:07.425,0:03:11.407 எதிர்மம் வகுத்தல் நேர்மம் என்றால், 0:03:11.407,0:03:15.121 விடை எதிர்மம் ஆகும். 0:03:15.121,0:03:18.020 எதிர்மம் வகுத்தல் நேர்மம் என்றால், 0:03:18.020,0:03:20.454 அதன் விடை நேர்மம் ஆகும். 0:03:20.454,0:03:24.954 பிறகு, நேர்மம் வகுத்தல் நேர்மம் என்றால், 0:03:24.954,0:03:27.770 இதன் விடை நேர்மம் தான். 0:03:27.770,0:03:29.359 இப்பொழுது, இறுதியாக ஒன்று, 0:03:29.359,0:03:30.589 இது அனைத்தும் பெருக்கல் தான், 0:03:30.589,0:03:31.989 இது சுவாரஸ்யமானது, 0:03:31.989,0:03:34.539 நாம் 3 எண்களை பெருக்குகிறோம், 0:03:34.539,0:03:37.116 நாம் இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் செல்லலாம் 0:03:37.116,0:03:39.405 பிறகு, முதலில் எதிர்ம 2 பெருக்கல் 0:03:39.405,0:03:41.089 -2 x -7 0:03:41.089,0:03:42.627 -2 பெருக்கல் -7 0:03:42.627,0:03:44.043 இவை இரண்டும் எதிர்மங்கள் தான், 0:03:44.043,0:03:45.094 எதிர்மங்கள் நீங்கி விடும், 0:03:45.094,0:03:46.844 இந்த பகுதி, 0:03:46.844,0:03:49.539 இது 14 ஆகும். 0:03:49.539,0:03:51.408 நாம் இப்பொழுது நேர்ம 14 ஐ 0:03:51.408,0:03:55.207 எதிர்ம 1 உடன் பெருக்குகிறோம். 0:03:55.207,0:03:57.908 நேர்மம் பெருக்கல் எதிர்மம் ஆகும். 0:03:57.908,0:03:59.590 இதில் ஒன்று எதிர்ம எண். 0:03:59.590,0:04:01.470 எனவே, இதன் விடை எதிர்மத்தில் இருக்கும். 0:04:01.470,0:04:05.020 இதன் விடை -14 ஆகும். 0:04:05.020,0:04:06.087 மேலும் சிலவற்றை பார்க்கலாம். 0:04:06.087,0:04:08.655 இது சற்று குழப்பமான கணக்கு. 0:04:08.655,0:04:12.070 0 வகுத்தல் -5 0:04:12.070,0:04:14.252 0 வகுத்தல் -5 என்றால் என்ன. 0:04:14.252,0:04:16.503 இது 0/-5 ஆகும். 0:04:16.503,0:04:19.219 0 வை எந்த எண்ணால் வகுத்தாலும் 0:04:19.219,0:04:22.355 அதன் விடை 0 தான். 0:04:22.355,0:04:25.035 இது மாறாக இருந்தால் என்ன செய்வது? 0:04:25.035,0:04:27.371 அதாவது, -5 வகுத்தல் 0, 0:04:27.371,0:04:29.837 நமக்கு ஒரு எண்ணை 0 ஆல் வகுத்தால் என்னவாகும் என்று தெரியாது. 0:04:29.837,0:04:31.522 இதை நாம் இன்னும் வரையறுக்க வில்லை. 0:04:31.522,0:04:35.254 இது போன்ற கூற்றுகளை நாம் 0:04:35.254,0:04:38.301 வரையறுக்காதது என்று கூறுவோம். 0:04:38.301,0:04:43.213 நாம் ஒரு எண்ணை 0 ஆல் வகுத்தால் என்னவென்று வரையறுக்கவில்லை. 0:04:43.213,0:04:46.347 இதேபோன்று, 0 வகுத்தல் 0 0:04:46.347,0:04:50.431 என்றாலும், வரையறுக்காதது தான்.