1 00:00:00,854 --> 00:00:06,403 முதன் முறையாக நான் பிரார்த்தனை செய்த போது கண்ணாடியால் கட்டிய தேவாலயத்தி லிருந்தேன் 2 00:00:06,403 --> 00:00:09,793 கூடியவர் அனைவரும் எழுந்து நின்ற பின்னும் வெகு நேரம் மண்டியிட்டிருந்தேன் 3 00:00:09,793 --> 00:00:11,703 கைகளிரண்டையும் புனித நீரில் அமிழ்த்தி 4 00:00:11,703 --> 00:00:13,553 திரித்துவத்தை என் இதயத்தில் வரைந்து 5 00:00:13,553 --> 00:00:16,379 என் சிறியவுடல் கேள்விக் குறி போல் வளைந்து 6 00:00:16,379 --> 00:00:18,669 மரவிருக்கை முழுவதிலுமாய்ப் படர்ந்து 7 00:00:18,669 --> 00:00:21,339 ஏசுவிடம் என் இக்கட்டைத் தீர்க்க வேண்டினேன் 8 00:00:21,339 --> 00:00:23,465 பிரார்த்தனைக்கு அவர் செவி மடுக்காததால் 9 00:00:23,465 --> 00:00:26,141 அமைதியை நாடினேன் அது என் பாவம்தனை எரிக்குமென நம்பி 10 00:00:26,141 --> 00:00:27,631 வாயிலூறும் எச்சிலில் நாவில் 11 00:00:27,631 --> 00:00:29,461 சர்க்கரையாய் கரைந்து போகுமென நம்பி 12 00:00:29,461 --> 00:00:31,376 தங்கிய கசப்பாய் தாழ்வுணர்ச்சியே நின்றது 13 00:00:31,376 --> 00:00:34,940 என்னுள் தூய்மையைப் புகுத்தும் முயற்சியாய் 14 00:00:34,940 --> 00:00:37,860 எடுத்துரைத்தாள் அன்னை என் அற்புதத்தை 15 00:00:37,860 --> 00:00:40,860 வளரலாம் எதுவானாலும் விருப்பப்படியென்றாள் 16 00:00:40,860 --> 00:00:43,066 ஆக நான் நிச்சயித்தேன் 17 00:00:43,066 --> 00:00:44,227 ஒரு ஆணாக வாழலாமென 18 00:00:44,227 --> 00:00:45,217 அற்புதமோ அற்புதம் 19 00:00:45,217 --> 00:00:47,007 பற்களில்லா சிரிப்போடு பலரோடு நான் ஆடி 20 00:00:47,007 --> 00:00:48,847 தெருவில் விளையாடி தேய்த்தேன் முட்டிகளை 21 00:00:48,847 --> 00:00:51,277 இலக்கோடு ஆடினேன் கண்ணாமூச்சி 22 00:00:51,277 --> 00:00:52,204 அதாகவே மாறினேன் 23 00:00:52,204 --> 00:00:54,629 மற்ற குழைந்தைகளால் ஆடமுடிடாத ஆட்டத்தில் எனக்கு வெற்றி 24 00:00:54,629 --> 00:00:56,809 உடற்கூற்றின் அதிசயம் நானன்றோ 25 00:00:56,809 --> 00:00:58,622 பதிலளிக்கப்படாத கேள்வி நானன்றோ 26 00:00:58,622 --> 00:01:02,918 தடுமாறும் ஆணுக்கும் தவிக்கும் பெண்ணிற்கும் இடையில் ஊசலாடும் ஈன ஜென்ம மன்றோ 27 00:01:02,918 --> 00:01:07,655 அகவைகள் பன்னிரெண்டு ஆனவுடனேயே ஆணாய் இருப்பது அழகாய்த் தெரியவில்லை 28 00:01:07,655 --> 00:01:13,297 என் முட்டிகளில் சிற்றாடை காணாமல் அத்தையும் சித்தியும் அங்கலாய்த்தனர் 29 00:01:13,297 --> 00:01:17,546 என் மனோபாவம் ஒரு தடையாய் இருக்கும் எனக்கொரு கணவனைப் பெற்றுத் தர என்றனர். 30 00:01:17,546 --> 00:01:21,168 என் வாழ்வின் நோக்கம் எதிர்பால் திருமணம் எனக்கென குழந்தைகள் சுமப்பதே என்றனர் 31 00:01:21,168 --> 00:01:24,999 அவர்களின் ஏசல்களை விழுங்கி நின்றேன் அதேபோல் ஏற்றேன் அவதூறுகளையும் தான் 32 00:01:24,999 --> 00:01:27,716 இயல்பு தானே என் கூட்டிலேயே நான் முடங்கிக் கிடந்தது. 33 00:01:27,716 --> 00:01:30,432 என் பள்ளியின் சிறுவர்கள் அதை என் அனுமதியின்றி திறந்தனர் 34 00:01:30,432 --> 00:01:32,894 என்னை அழைத்த பெயர் எனக்கு விளங்கவில்லை 35 00:01:32,894 --> 00:01:34,124 நானொரு லெஸ்பியன் என்றனர் 36 00:01:34,124 --> 00:01:36,700 ஆயினென் ஆண்மை பெண்மையை மீறியது பார்பியை விட நானொரு கென் 37 00:01:36,700 --> 00:01:38,903 என் உடலை நான் வெறுக்கவும் இல்லை 38 00:01:38,903 --> 00:01:41,023 அதன் போக்கில் விட்டுவிடும் அளவிற்கு அன்பு 39 00:01:41,023 --> 00:01:42,409 அது நான் வீற்றிருக்கும் வீடு 40 00:01:42,409 --> 00:01:44,239 வீட்டில் சில ஓட்டைகள் இருந்தால் 41 00:01:44,239 --> 00:01:45,223 வெளியேறுவதில்லை நாம் 42 00:01:45,223 --> 00:01:49,015 உள்ளே சுகமாய் ஓய்வெடுப்பதற்கு உகந்த சில மாற்றங்கள் செய்வீரன்றோ 43 00:01:49,015 --> 00:01:51,376 உற்ற விருந்தை உபசரிக்கும் அளவிற்கு 44 00:01:51,376 --> 00:01:55,234 உள்ளே நிற்க வலிமையான தரைகள் அமைப்பீரன்றோ 45 00:01:55,904 --> 00:02:00,919 என் அன்னை எண்ணுகிறாள் நான் மறையும் பெயரை ஏற்றுக் கொண்டேனென்று 46 00:02:00,919 --> 00:02:03,939 மியா ஹால் , லீலா ஆல்கார்ன் , ப்ளேக் ப்ராக்கிங்க்டன் போன்றோர் 47 00:02:03,939 --> 00:02:06,489 விட்டுச் சென்ற எதிரொலிகளை எண்ணி 48 00:02:06,489 --> 00:02:08,700 ஓசையின்றி நான் மரிப்பேன் என்பதே அவள் அச்சம் 49 00:02:08,700 --> 00:02:11,763 பஸ் நிலையங்களில் என்னைப் "வெட்கக் கேடு" என விவாதிப்பரே என்று 50 00:02:11,763 --> 00:02:14,409 நான் எனக்கே சமாதி சமைத்துக் கொண்டேன் என புலம்புகிறாள் 51 00:02:14,409 --> 00:02:16,035 நடமாடும் சவப்பெட்டி என்றழைக்கிறாள் 52 00:02:16,035 --> 00:02:19,239 செய்தித் தலைப்புகள் என்னைக் காட்சிப் பொருளாக்கி விட்டன 53 00:02:19,239 --> 00:02:22,995 "ப்ரூஸ் ஜென்னர்" இன்று எல்லோர் உதட்டிலும் எனக்கோ இவ்வுடலில் வாழும் கொடுமை 54 00:02:22,995 --> 00:02:26,541 சமத்துவம் பறைசாற்றும் பக்கங்களின்அடியில் ஒரு நட்சத்திரக் குறி 55 00:02:26,541 --> 00:02:29,637 எங்களை எவரும் மனிதர்களாய் எண்ணுவதில்லை 56 00:02:29,637 --> 00:02:31,795 ஏனெனில் நாங்கள் ஆவி புகுந்தவர்கள் 57 00:02:31,795 --> 00:02:34,494 என் பாலியல் உணர்வு ஒரு சூழ்ச்சியென்று மக்களின் எண்ணம் 58 00:02:34,494 --> 00:02:36,351 ஒரு வக்கிரத்தின் அடையாளம் 59 00:02:36,351 --> 00:02:38,394 அவர்களே அறியாமல் அவர்களை ஆட்டுவிக்கும் மாயம் 60 00:02:38,394 --> 00:02:41,088 அவர்களின் கண்களுக்கும் கைகளுக்கும் என் உடல் ஒரு விருந்து 61 00:02:41,088 --> 00:02:43,387 என் வக்கிரத்தை கண்டு களித்த பின் 62 00:02:43,387 --> 00:02:46,387 விரும்பாத பாகங்களை வெளியே தள்ள்ளுவர் வாந்தியெடுப்பது போல் 63 00:02:46,387 --> 00:02:50,747 என்னைத் திரும்பவும் மறைப்பலமாரியில் மாட்டுவர் மற்ற எலும்புக் கூடுகளுடன் 64 00:02:50,747 --> 00:02:53,162 நானே இங்கு ஈர்க்கும் காட்சிப் பொருள் 65 00:02:53,162 --> 00:02:56,241 மக்களை சவப்பெட்டிக்குள் நுழைப்பது எவ்வளவு சுலபம் என்று புரிகிறதா, 66 00:02:56,241 --> 00:02:58,811 கல்லறையில் அவர்களின் பெயர்களில் பிழைகள் 67 00:02:58,811 --> 00:03:01,266 சிறவர்களின் சீர்குலைவு இவர்களுக்கு புரியாத விஷயம். 68 00:03:01,266 --> 00:03:03,657 உயர்நிலைப் பள்ளி கூடங்களில் மறைந்து போகிறார்கள் 69 00:03:03,657 --> 00:03:06,559 மற்றொரு சாய்வுக் குறியாக மாறி விடுவோமோ என்ற அச்சம். 70 00:03:06,559 --> 00:03:10,437 வகுப்பறை அரட்டைகள் இறுதித் தீர்ப்பு நாளக.விடுமோ என்ற அச்சம் 71 00:03:10,437 --> 00:03:16,172 ஆயின் பெற்றோர்களை விட மாற்றுப் பாலினரை உலகம் இப்பொழுது ஒத்துக் கொள்கிறது 72 00:03:17,062 --> 00:03:18,807 இன்னும் எவ்வளவு நாளாகுமோ 73 00:03:18,807 --> 00:03:22,487 மாற்றுப் பாலினரின் தற்கொலைக் கடிதங்கள் மறைந்து தொலைவதற்கு 74 00:03:22,487 --> 00:03:26,110 எங்கள் உடல்கள் பாவத்தின் சின்னமல்ல என்று உணர்வதற்கு 75 00:03:26,110 --> 00:03:28,153 எங்கள் உடலை நாங்கள் நேசிக்கத் தொடங்கு முன் 76 00:03:28,153 --> 00:03:32,077 கடவுள் கருணையில்லாமல் இந்த உடைப்பைத் தரவில்லை 77 00:03:32,077 --> 00:03:35,653 அவர் கால்களைக் கழுவிய பழரசம் எங்கள் ரத்தமல்ல 78 00:03:35,653 --> 00:03:39,521 என் பிரார்த்தனைகள் இப்பொழுது என்னெஞ்சை அடைக்கிறது 79 00:03:40,041 --> 00:03:43,175 ஒரு கால் முடிவாக என் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டனவோ 80 00:03:43,175 --> 00:03:45,428 இல்லையென்றாலும் எனக்கு கவலையில்லை 81 00:03:45,428 --> 00:03:50,139 ஒரு கால் கடவுள் என் பிரார்த்தனைகளுக்கு செவி மடுத்து விட்டாரோ? 82 00:03:50,139 --> 00:03:51,604 உங்களுக்கு என் நன்றி 83 00:03:51,604 --> 00:03:53,708 (கரகோஷம்)