0:00:00.854,0:00:06.403 முதன் முறையாக நான் பிரார்த்தனை செய்த போது [br]கண்ணாடியால் கட்டிய தேவாலயத்தி லிருந்தேன் 0:00:06.403,0:00:09.793 கூடியவர் அனைவரும் எழுந்து நின்ற பின்னும்[br]வெகு நேரம் மண்டியிட்டிருந்தேன் 0:00:09.793,0:00:11.703 கைகளிரண்டையும் புனித நீரில் அமிழ்த்தி 0:00:11.703,0:00:13.553 திரித்துவத்தை என் இதயத்தில் வரைந்து 0:00:13.553,0:00:16.379 என் சிறியவுடல் கேள்விக் குறி போல் வளைந்து 0:00:16.379,0:00:18.669 மரவிருக்கை முழுவதிலுமாய்ப் படர்ந்து 0:00:18.669,0:00:21.339 ஏசுவிடம் என் இக்கட்டைத் தீர்க்க வேண்டினேன் 0:00:21.339,0:00:23.465 பிரார்த்தனைக்கு அவர் செவி மடுக்காததால் 0:00:23.465,0:00:26.141 அமைதியை நாடினேன் [br]அது என் பாவம்தனை எரிக்குமென நம்பி 0:00:26.141,0:00:27.631 வாயிலூறும் எச்சிலில் நாவில் [br] 0:00:27.631,0:00:29.461 சர்க்கரையாய் கரைந்து போகுமென நம்பி 0:00:29.461,0:00:31.376 தங்கிய கசப்பாய் தாழ்வுணர்ச்சியே நின்றது 0:00:31.376,0:00:34.940 என்னுள் தூய்மையைப் புகுத்தும் முயற்சியாய் 0:00:34.940,0:00:37.860 எடுத்துரைத்தாள் அன்னை என் அற்புதத்தை 0:00:37.860,0:00:40.860 வளரலாம் எதுவானாலும் விருப்பப்படியென்றாள் 0:00:40.860,0:00:43.066 ஆக நான் நிச்சயித்தேன் 0:00:43.066,0:00:44.227 ஒரு ஆணாக வாழலாமென 0:00:44.227,0:00:45.217 அற்புதமோ அற்புதம் 0:00:45.217,0:00:47.007 பற்களில்லா சிரிப்போடு பலரோடு நான் ஆடி 0:00:47.007,0:00:48.847 தெருவில் விளையாடி தேய்த்தேன் முட்டிகளை[br] 0:00:48.847,0:00:51.277 இலக்கோடு ஆடினேன் கண்ணாமூச்சி 0:00:51.277,0:00:52.204 அதாகவே மாறினேன் 0:00:52.204,0:00:54.629 மற்ற குழைந்தைகளால் ஆடமுடிடாத[br]ஆட்டத்தில் எனக்கு வெற்றி 0:00:54.629,0:00:56.809 உடற்கூற்றின் அதிசயம் நானன்றோ 0:00:56.809,0:00:58.622 பதிலளிக்கப்படாத கேள்வி நானன்றோ 0:00:58.622,0:01:02.918 தடுமாறும் ஆணுக்கும் தவிக்கும் பெண்ணிற்கும்[br]இடையில் ஊசலாடும் ஈன ஜென்ம மன்றோ 0:01:02.918,0:01:07.655 அகவைகள் பன்னிரெண்டு ஆனவுடனேயே[br]ஆணாய் இருப்பது அழகாய்த் தெரியவில்லை 0:01:07.655,0:01:13.297 என் முட்டிகளில் சிற்றாடை காணாமல்[br]அத்தையும் சித்தியும் அங்கலாய்த்தனர் 0:01:13.297,0:01:17.546 என் மனோபாவம் ஒரு தடையாய் இருக்கும்[br]எனக்கொரு கணவனைப் பெற்றுத் தர என்றனர். 0:01:17.546,0:01:21.168 என் வாழ்வின் நோக்கம் எதிர்பால் திருமணம்[br]எனக்கென குழந்தைகள் சுமப்பதே என்றனர் 0:01:21.168,0:01:24.999 அவர்களின் ஏசல்களை விழுங்கி நின்றேன்[br]அதேபோல் ஏற்றேன் அவதூறுகளையும் தான் 0:01:24.999,0:01:27.716 இயல்பு தானே [br]என் கூட்டிலேயே நான் முடங்கிக் கிடந்தது. 0:01:27.716,0:01:30.432 என் பள்ளியின் சிறுவர்கள் அதை[br]என் அனுமதியின்றி திறந்தனர்[br] 0:01:30.432,0:01:32.894 என்னை அழைத்த பெயர் [br]எனக்கு விளங்கவில்லை 0:01:32.894,0:01:34.124 நானொரு லெஸ்பியன் என்றனர் 0:01:34.124,0:01:36.700 ஆயினென் ஆண்மை பெண்மையை மீறியது[br]பார்பியை விட நானொரு கென் 0:01:36.700,0:01:38.903 என் உடலை நான் வெறுக்கவும் இல்லை 0:01:38.903,0:01:41.023 அதன் போக்கில் விட்டுவிடும் அளவிற்கு அன்பு[br] 0:01:41.023,0:01:42.409 அது நான் வீற்றிருக்கும் வீடு 0:01:42.409,0:01:44.239 வீட்டில் சில ஓட்டைகள் இருந்தால் 0:01:44.239,0:01:45.223 வெளியேறுவதில்லை நாம் 0:01:45.223,0:01:49.015 உள்ளே சுகமாய் ஓய்வெடுப்பதற்கு [br]உகந்த சில மாற்றங்கள் செய்வீரன்றோ[br] 0:01:49.015,0:01:51.376 உற்ற விருந்தை உபசரிக்கும் அளவிற்கு 0:01:51.376,0:01:55.234 உள்ளே நிற்க வலிமையான தரைகள் [br]அமைப்பீரன்றோ 0:01:55.904,0:02:00.919 என் அன்னை எண்ணுகிறாள் நான் [br]மறையும் பெயரை ஏற்றுக் கொண்டேனென்று 0:02:00.919,0:02:03.939 மியா ஹால் , லீலா ஆல்கார்ன் , ப்ளேக் [br]ப்ராக்கிங்க்டன் போன்றோர் 0:02:03.939,0:02:06.489 விட்டுச் சென்ற எதிரொலிகளை எண்ணி 0:02:06.489,0:02:08.700 ஓசையின்றி நான் மரிப்பேன் [br]என்பதே அவள் அச்சம் 0:02:08.700,0:02:11.763 பஸ் நிலையங்களில் என்னைப் [br]"வெட்கக் கேடு" என விவாதிப்பரே என்று 0:02:11.763,0:02:14.409 நான் எனக்கே சமாதி சமைத்துக் கொண்டேன்[br]என புலம்புகிறாள் 0:02:14.409,0:02:16.035 நடமாடும் சவப்பெட்டி என்றழைக்கிறாள் 0:02:16.035,0:02:19.239 செய்தித் தலைப்புகள் என்னைக்[br]காட்சிப் பொருளாக்கி விட்டன 0:02:19.239,0:02:22.995 "ப்ரூஸ் ஜென்னர்" இன்று எல்லோர் உதட்டிலும்[br]எனக்கோ இவ்வுடலில் வாழும் கொடுமை 0:02:22.995,0:02:26.541 சமத்துவம் பறைசாற்றும் [br]பக்கங்களின்அடியில் ஒரு நட்சத்திரக் குறி 0:02:26.541,0:02:29.637 எங்களை எவரும் [br]மனிதர்களாய் எண்ணுவதில்லை 0:02:29.637,0:02:31.795 ஏனெனில் நாங்கள் ஆவி புகுந்தவர்கள் 0:02:31.795,0:02:34.494 என் பாலியல் உணர்வு [br]ஒரு சூழ்ச்சியென்று மக்களின் எண்ணம் 0:02:34.494,0:02:36.351 ஒரு வக்கிரத்தின் அடையாளம் 0:02:36.351,0:02:38.394 அவர்களே அறியாமல் அவர்களை[br]ஆட்டுவிக்கும் மாயம் 0:02:38.394,0:02:41.088 அவர்களின் கண்களுக்கும் கைகளுக்கும்[br]என் உடல் ஒரு விருந்து 0:02:41.088,0:02:43.387 என் வக்கிரத்தை கண்டு களித்த பின் 0:02:43.387,0:02:46.387 விரும்பாத பாகங்களை வெளியே தள்ள்ளுவர்[br]வாந்தியெடுப்பது போல் 0:02:46.387,0:02:50.747 என்னைத் திரும்பவும் மறைப்பலமாரியில்[br]மாட்டுவர் மற்ற எலும்புக் கூடுகளுடன் 0:02:50.747,0:02:53.162 நானே இங்கு ஈர்க்கும் காட்சிப் பொருள் 0:02:53.162,0:02:56.241 மக்களை சவப்பெட்டிக்குள் நுழைப்பது [br]எவ்வளவு சுலபம் என்று புரிகிறதா, 0:02:56.241,0:02:58.811 கல்லறையில் அவர்களின் பெயர்களில் பிழைகள் 0:02:58.811,0:03:01.266 சிறவர்களின் சீர்குலைவு இவர்களுக்கு[br]புரியாத விஷயம். 0:03:01.266,0:03:03.657 உயர்நிலைப் பள்ளி கூடங்களில் [br]மறைந்து போகிறார்கள் 0:03:03.657,0:03:06.559 மற்றொரு சாய்வுக் குறியாக [br]மாறி விடுவோமோ என்ற அச்சம். 0:03:06.559,0:03:10.437 வகுப்பறை அரட்டைகள்[br]இறுதித் தீர்ப்பு நாளக.விடுமோ என்ற அச்சம் 0:03:10.437,0:03:16.172 ஆயின் பெற்றோர்களை விட மாற்றுப் பாலினரை[br]உலகம் இப்பொழுது ஒத்துக் கொள்கிறது 0:03:17.062,0:03:18.807 இன்னும் எவ்வளவு நாளாகுமோ 0:03:18.807,0:03:22.487 மாற்றுப் பாலினரின் தற்கொலைக் கடிதங்கள்[br]மறைந்து தொலைவதற்கு 0:03:22.487,0:03:26.110 எங்கள் உடல்கள் பாவத்தின் சின்னமல்ல [br]என்று உணர்வதற்கு 0:03:26.110,0:03:28.153 எங்கள் உடலை நாங்கள் நேசிக்கத் தொடங்கு முன் 0:03:28.153,0:03:32.077 கடவுள் கருணையில்லாமல் [br]இந்த உடைப்பைத் தரவில்லை 0:03:32.077,0:03:35.653 அவர் கால்களைக் கழுவிய பழரசம்[br]எங்கள் ரத்தமல்ல 0:03:35.653,0:03:39.521 என் பிரார்த்தனைகள் [br]இப்பொழுது என்னெஞ்சை அடைக்கிறது 0:03:40.041,0:03:43.175 ஒரு கால் முடிவாக என் பிரச்சினைகள்[br]தீர்க்கப்பட்டு விட்டனவோ 0:03:43.175,0:03:45.428 இல்லையென்றாலும் எனக்கு கவலையில்லை 0:03:45.428,0:03:50.139 ஒரு கால் கடவுள் என் பிரார்த்தனைகளுக்கு[br]செவி மடுத்து விட்டாரோ? 0:03:50.139,0:03:51.604 உங்களுக்கு என் நன்றி 0:03:51.604,0:03:53.708 (கரகோஷம்)