New: enable viewer-created translations and captions on your YouTube channel!
Showing Revision 2, created 07/03/2012 by Retired user .
None
அடிப்படைக் கூட்டல் விளக்கக் காட்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு தெரிகின்றது :
"சால், எனக்கு கூட்டல் மிகவும் அடிப்படை ஆகத் தெரியவில்லை"
அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
naan ninaikkuren
இந்த விளக்கக் காட்சியின் முடிவில்
அல்லது, ஓரிரு வாரங்களில் இது மிகவும் அடிப்படை ஆக தெரியும் என்று நான் நம்புகிறேன்.
எனவே, நாம்
சில கூட்டல் கணக்குகளைப் பார்க்க ஆரம்பிக்கலாம்.
சரி, நான் ஒரு பழம் பெருமை வாய்ந்த ஒன்றுடன் ஆரம்பிக்கிறேன்.
1 + 1
இதை எப்படி செய்வது என்று உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்று நினைகிறேன்.
ஆனால்,
இது உங்களுக்கு மனப் பாடமாகத் தெரியவில்லை,
அல்லது, இதில் நீங்கள் தேர்ச்சி பெற்றவர் இல்லை என்றால், நான் உங்களுக்கு ஒரு வழி சொல்லித் தருகிறேன்,
சரி, என்னிடம்
ஒரு
(அவகாடோ என்று வைத்து கொள்வோம்)
அவகாடோ இருந்து,
அதன் பிறகு நீங்கள் எனக்கு இன்னும் ஒரு அவகாடோ கொடுத்தால்,
என்னிடம் எத்தனை அவகாடோக்கள் இருக்கும் ?
என்னிடம் 1 ... 2 அவகாடோக்கள் இருக்கும்.
எனவே, 1 + 1 = 2 .
இப்பொழுது, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு தெரிகின்றது :
"அது மிகவும் எளிதாக இருந்தது."
எனவே, சற்று கடினமான ஒன்று கொடுக்கிறேன்.
எனக்கு அவகாடோக்கள் பிடிக்கும். எனவே, அதையே வைத்துக் கொள்வோம்.
3 + 4 என்ன ?
ஹ்ம்ம்.. இது சற்று கடினமான கணக்கு என்று நான் நினைக்கிறேன்.
சரி, நாம் அவகாடோக்களையே வைத்துக் கொள்வோம்.
உங்களுக்கு அவகாடோ என்றால் என்னவென்று தெரியாது என்றால்,
உண்மையிலேயே, அது ஒரு மிகவும் சுவையான பழம்.
மற்றும், அது எல்லா பழங்களையும் விட அதிக கொழுப்புச் சத்து உள்ளது.
நீங்கள் இதை சாப்பிட்டு இருந்தால் கூட,
அநேகமாக, இது ஒரு பழம் என்று நினைத்து இருந்திருக்க மாட்டீர்கள்.
சரி, நான் இபபொழுது 3 அவகாடோக்கள் வைத்திருப்பதாக வைத்துக் கொள்வோம்.
1, 2, 3. சரியா? 1, 2, 3.
இபபொழுது, நீங்கள் எனக்கு மேலும் 4 அவகாடோக்கள் கொடுப்பதாக வைத்துக் கொள்வோம்.
இவைதான் நீங்கள் எனக்கு கொடுக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியும்படி,
இந்த 4 - ஐயும் நான் மஞ்சள் நிறத்தில் வைத்துக் கொள்கிறேன்,
1
2
3
4
இப்பொழுது, மொத்தம் எத்தனை அவகாடோக்கள் என்னிடம் உள்ளன ?
மொத்தம் 1, 2, 3, 4, 5, 6, 7 அவகாடோக்கள்.
எனவே, 3 + 4 = 7.
நான் உங்களுக்கு இப்பொழுது
மற்றும் ஒரு வழிமுறையை அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்.
இது எண் வரிசை எனப்படும்.
உண்மையில், நான் மறக்கும் பொழுது, அல்லது எனக்கு மனப்பாடமாகத் தெரியவில்லை என்றால்,
இப்படித்தான் நான் என் மனதில் செய்கிறேன் என்று நான் நினைகிறேன்.
எனவே, எண் வரிசையில்,
எனக்கு வேண்டிய அதிகபட்ச எண் இருக்கும்வரை,
எல்லா எண்களையும் வரிசையாக எழுதிக் கொள்கிறேன்.
முதல் எண் 0 என்பதுவும், அதற்கு மதிப்பு ஒன்றும் இல்லை என்பதுவும்
அனேகமாக உங்களுக்கு தெரிந்து இருக்கும்.
இல்லை உங்களுக்கு தெரியாமலும் இருந்திருக்கலாம்; இப்பொழுது உங்களுக்கு தெரிந்து விட்டது.
பிறகு,
1 (ஒன்று)
2 (இரண்டு)
3 (மூன்று)
4 (நான்கு)
5 (ஐந்து)
6 (ஆறு)
7 (ஏழு)
8 (எட்டு)
9 (ஒன்பது)
10 (பத்து)
அப்படியே செல்கிறது,
11 (பதினொன்று)
நாம் 3+4 -ஐ கணக்கிடப் போவதால், 3-இல் ஆரம்பிப்போம்.
இங்கே 3 இருக்கிறது.
அதனுடன் நாம் 4-ஐ கூட்டப் போகிறோம்.
எனவே, நாம் செய்யப் போவது எல்லாம், எண் வரிசையில் மேலே செல்லப் போகிறோம்,
அல்லது, வலப் புறம் மேலும் ௪ செல்லப் போகிறோம்.
எனவே, 1 ... 2 ... 3 ... 4 என செல்கிறோம்.
நன்றாக கவனித்தீர்கள் என்றால்,
நாம் செய்தது எல்லாம், ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று அதிக படுத்திக் கொணடே சென்றோம்.
கடைசியில் ஏழில் வந்து நின்றோம்.
அதுதான் நம்முடைய விடை.
நாம் இன்னும் சில கணக்குகளை செய்யலாம்.
நான் உங்களிடம்,
8 + 1 என்ன என்று கேட்டால் ?
ஹ்ம்ம்.. 8 + 1
சரி, உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்..
8 + 1 என்பது, அடுத்த எண் (8- க்கு பிறகு)
ஆனால், எண் வரிசையை பார்த்தீர்கள் என்றால், நீங்கள் 8-இல் ஆரம்பிக்கிறீர்கள்,
பிறகு 1 கூட்டுகிறீர்கள்.
8 + 1 = 9.
இப்பொழுது, சற்று கடினமான கணக்குகளை செய்வோம்.
ஆரம்பத்தில்,
இது உங்களை சிறிது பயமுறுத்துவதாக இருந்தால்,
நீங்கள் வட்டங்கள் வரையலாம்,
அல்லது, எண் வரிசை செய்யலாம்,
காலப்போக்கில், பயிற்சி செய்ய செய்ய,
உங்களுக்கே மனப்பாடம் ஆகி,
இந்த கணக்குகளை அரை நொடியிலேயே செய்து முடித்து விடலாம்.
பயிற்சி செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால் நிச்சயமாக உங்களால் முடியும்.
இப்பொழுது,
நான் மீண்டும் எண் வரிசை வரைய வேண்டும் என்று வைத்து கொள்வோம்.
என்னிடம் உண்மையிலேயே, கோடு போடும் டூல் இருக்கிறது;
எனவே, உங்களுக்கு நான் இதுவரை கொடுத்து கொண்டிருப்பது போல்,
அந்த அசிங்கமான கோடுகளை கொடுத்து கொண்டு இருக்கக் கூடாது.
இதை பாருங்கள். எவ்வளவு அழகாக இருக்கிறது.
சரி, இப்பொழுது பார்க்கலாம்.
ஓ, ஓ, இதை பாருங்கள்.
சரி, எனவே, இது ஒரு அழகான கோடு.
பிற்பாடு, இதை அழிப்பதற்கு நான் மிகவும் மன வேதனை படப் போகிறேன்.
இப்பொழுது நான் எண் வரிசை வரைகிறேன்.
0
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
எனவே, ஒரு கடினமான கணக்கு செய்வோம்.
ennathu
இதை இப்பொழுது நான் வேறு ஒரு நிறத்தில் செய்ய போகிறேன்.
5 + 6 என்ன ?
உங்களுக்கு வேண்டும் என்றால், இந்த ஒளி காட்சியை தற்காலிகமாக நிறுத்தி விட்டு இதை முயற்சி செய்து பார்க்கலாம்.
உங்களுக்கு ஏற்கனவே இதற்கான விடை தெரிந்து இருக்கலாம்.
நான் ஏன் இதை ஒரு கடினமான கணக்கு என்று சொல்கிறேன் என்றால்,
இதற்கான விடை,
உங்கள் இரு கைகளில் உள்ள விரல்களின் எண்ணிக்கையை விட அதிகம்.
எனவே, இதை உங்கள் விரல்களை வைத்து செய்ய முடியாது.
சரி, இப்பொழுது இந்த கணக்கை செய்ய ஆரம்பிக்கலாம்.
என்னுடைய தொலைபேசி ஒலிக்கிறது.
ஆனால், அதை நான் புறக்கணிக்கப் போகிறேன்.
ஏன் என்றால், அதை விட நீங்கள் மிகவும் முக்கியம்.
சரி, 5 -இல் ஆரம்பிப்போம்.
எனவே, 5-இல் ஆரம்பிக்கிறோம்.
பிறகு, அதனுடன் 6-ஐ கூட்டப் போகிறோம்.
எனவே : 1
2
3
4
5
6
11-இல் இருக்கிறோம்.
எனவே 5+6 = 11
இப்பொழுது நான் உங்களை ஒரு கேள்வி கேட்க போகிறேன்.
6 + 5 என்ன ?
ஹ..
சரி, நாம் இப்பொழுது அதை பார்க்க போகிறோம், சரியா ?
இந்த இரண்டு எண்களையும் இட மாற்றம்
செய்தால் அதே விடை வருமா ?
சரி, அதையும் முயற்சி செய்து பார்த்து விடலாம்.
குழப்பம் வராமல் இருப்பதற்காக,
அதை நான் வேறு ஒரு நிறத்தில் முயற்சி செய்து பார்க்க போகிறேன்.
எனவே, நாம் 6-இல் ஆரம்பிக்கலாம்.
சரியா ? தற்பொழுது மஞ்சள் நிறத்தை தவிர்த்து விட்டு, 5-ஐ அதனுடன் கூட்டலாம்.
1 ... 2 ... 3 ... 4 ... 5.
ஆஹ்..நாம் அதே இடத்திற்கு வருகிறோம்.
இதையே, நீங்கள் இன்னும் சில கணக்குகளுக்கு
முயற்சி செய்து பாருங்கள்.
எந்த வரிசையில் செய்தாலும்,
5+ 6 அல்லது 6 + 5,
இரண்டுக்குமே விடை ஒன்றுதான் என்பதை பார்ப்பீர்கள்.
அது அறிவு பூர்வமாகவும் உள்ளது.
என்னிடம் 5 அவகாடோக்கள் இருந்து, நீங்கள் எனக்கு 6 அவகாடோக்கள் கொடுத்தால்,
என்னிடம் 11 இருக்கப் போகிறது.
என்னிடம் 6 அவகாடோக்கள் இருந்து, நீங்கள் எனக்கு 5 அவகாடோக்கள் கொடுத்தால்,
அப்பொழுதும் என்னிடம் 11-தான் இருக்கப் போகிறது.
இந்த எண் வரிசை
மிகவும் அழகாக இருப்பதால்,
இதை பயன்படுத்தி நான் இன்னும் சில கணக்குகளை செய்ய விரும்புகிறேன்.
இருந்தாலும், இதை பயன் படுத்தும்போது,
இதன் மேல், நான் இன்னும் நிறைய எழுதுவேன் என்பதால்,
இது நிச்சயம் உங்களை குழப்பம் அடைய வைக்கும்.ஆனால்,
பார்ப்போம். இந்த முறை நான் வெள்ளை நிறம் பயன் படுத்த போகிறேன்.
8 + 7 என்ன ?
உங்களால் இதை இன்னும் வாசிக்க முடியும் என்றால், 8 இங்கே இருக்கிறது.
சரியா ? நாம் இப்பொழுது 7-ஐ அதனுடன் கூட்டப் போகிறோம்.
1 ... 2 ... 3 ... 4 ... 5 ... 6 ... 7.
நாம் 15-ஐ அடைகிறோம்.
8 + 7 = 15.
எனவே, இது உங்களுக்கு ஒரு வழி கொடுக்கிறது என்று நம்புகிறேன்.
ஓ, இது போன்ற கன்னக்குகளை எப்படி செய்வது ?
அதை விட,
இன்னும் சிறிது நேரத்தில் நீங்கள் பெருக்கல் கணக்கு வேறு கற்றுக் கொள்ளப் போகிறீர்கள்.
நீங்கள் கணித பாடம் கற்று கொள்ள ஆரம்பிக்கும்போது,
இந்த மாதிரி கணக்குகளுக்கு
அதிக பயிற்சி தேவை படுகிறது.
மேலும், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு, நீங்கள் இதை மனப்பாடம் செய்யவும் ஆரம்பிக்க வேண்டும்.
ஆனால், பிற்காலத்தில், நீங்கள் திரும்பி பார்க்கும்பொழுது,
இந்த ஒளி காட்சியை பார்க்கும்பொழுது நீங்கள் எப்படி உணர்கிறீகள் என்பதை
நீங்கள் நினைவு படுத்தி பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
பிறகு, இன்னும் சில, மூண்டு ஆண்டுகள் போல, கழித்து, இந்த ஒளி காட்சியை நீங்கள் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன்.
அப்பொழுது, இந்த ஒளி காட்சியை இப்பொழுது நீங்கள் பார்க்கும்பொழுது எப்படி உணர்ந்தீர்கள் என்று நினைவு படுத்தி பார்த்து கொள்ளுங்கள்.
அப்பொழுது, ' ஓ, இது மிகவும் எளிதாக இருந்தது !' என்று கூறப் போகிறீர்கள்.
ஏன் என்றால், நீங்கள் மிகவும் வேகமாக கற்றுக் கொள்ளப் போகிறீர்கள்.
எப்படியோ, உங்களுக்கு கருத்து புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இங்குள்ள பயிற்சிகளில்,
எந்த கணக்குக்காவது
உங்களுக்கு விடை தெரியவில்லை என்றால்,
'ஹிண்ட்ஸ்'( Hints) -ஐ அழுத்துங்கள்.அது வட்டங்கள் வரையும்.
பிறகு, நீங்கள் அந்த வட்டங்களை எண்ணலாம்.
அல்லது,
கணக்கை சரியாக செய்ய,
நீங்களாகவே முயற்சி செய்ய வேண்டும் என்றால்,
நீங்களாகவே வட்டங்கள் வரையலாம்,
அல்லது இந்த விளக்கக் காட்சியில் நாம் செய்தது போல்,
எண் வரிசை வரையலாம்.
கூட்டல் கணக்குகளை செய்ய நீங்கள் தயாராக ஆகியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
நன்றாக செய்யுங்கள் !