-
நாம் இப்பொழுது அலகுகளை பற்றி பார்க்கப் போகிறோம்.
-
இப்பொழுது தொடங்கலாம்.
-
நான் இப்பொழுது,
-
0.05 கிலோமீட்டர் பயணம் செய்கிறேன்.
-
கிலோ - மீட்டர்.
-
-
-
நான் 0.05 கிலோமீட்டர் பயணம் செய்தால்,
-
எத்தனை செண்டிமீட்டர் பயணம் செய்திருப்பேன்?
-
எனவே, செண்டிமீட்டர் -ஐ கண்டறிய வேண்டும்.
-
தொடங்குவதற்கு முன்னர்,
-
செண்டி மற்றும் கிலோ என்றால் என்று பார்க்க வேண்டும்.
-
இதை நினைவில் வைப்பது நல்லது,
-
தேவைப்பட்டால், இதை ஒரு தாளில்
-
எழுதி வைக்கலாம்.
-
கிலோ என்றால், 1000, ஹெக்டா என்றால் 100, டெக்கா என்றால் 10.
-
ஒரு டெகேட் என்றால் 10 ஆண்டுகள்.
-
வார்த்தை ஏதும் இல்லையெனில் 1 ஆகும்.
-
முன்னர் ஏதும் வார்த்தை இல்லை எனில்.
-
முன்சேர் வார்த்தை இல்லை என்றால் 1 ஆகும்.
-
டெசி (தசமம்) என்றால் 0.1 அல்லது 1/10.
-
செண்டி என்றால்,
-
செண்டி என்றால், 0.01 அல்லது 1/100.
-
மில்லி என்றால், 0.001 அதாவது
-
1/1000.
-
இதை எப்படி நினைவு கொள்ள வேண்டுமென்றால்,
-
செண்டிபீட் (பூரான்) -க்கு 100 கால்கள்.
-
மில்லிபீட் என்றால், 1000 கால்கள்,
-
ஏனெனில், மில்லிபீட் என்றால்,
-
பீட் என்றால் கால் ஆகும்.
-
எனவே, நாம் கணக்கை பார்க்கலாம்.
-
நம்மிடம் 0.05 கிலோமீட்டர் உள்ளது, அது எத்தனை செண்டிமீட்டர்?
-
பொதுவாக இது போன்ற கணக்குகளுக்கு,
-
மீட்டரில் மாற்றுவது நல்லது,
-
ஏனெனில், அது தான் சுலபமானது.
-
இதை கீ.மீ. என்று சுருக்கி எழுதிக்கொள்ளலாம்.
-
இதனை செ.மீ. என்று சுருக்கலாம்.
-
எனவே, இது 0.05 கீ.மீ.
-
இதை மீட்டர் ஆக மாற்ற வேண்டும்,
-
அது 0.05 ஐ விட அதிகம் இருக்குமா அல்லது குறைவாக இருக்குமா?
-
கிலோமீட்டர் என்பது நீண்ட தூரம்,
-
எனவே, மீட்டர்-க்கு மாற்றினால், இது பெரிய எண்ணாக இருக்கும்.
-
இதனை 1000 ஆல் பெருக்கினால்
-
மீட்டர் கிடைக்கும்.
-
இதன் விடை என்ன?
-
0.05 பெருக்கல் 1000 என்றால் 50 ஆகும்.
-
0.05 x 1000.
-
அலகுகள், கிலோமீட்டர் பெருக்கல்
-
மீட்டர் -ன் கீழ் கிலோமீட்டர்.
-
கிலோமீட்டர் நீங்கி விடும்.
-
உங்களுக்கு இது நன்கு பழகி விட்டால்,
-
இதை எண்களை போல்
-
சுலபமாக கையாளலாம்.
-
பகுதியிலும், தொகுதியிலும்
-
ஒரே அலகு இருந்தால், அது நீங்கி விடும்,
-
அதாவது பெருக்கும் பொழுது.
-
எனவே, கிலோமீட்டர் x மீட்டர்
-
வகுத்தல் கிலோமீட்டர், விடை 50 மீட்டர் ஆகும்.
-
விடையை சரி பார்ப்பது நல்லது.
-
இது போன்ற கணக்குகளை செய்யும் பொழுது,
-
உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும், கிலோமீட்டரை
-
மீட்டராக மாற்றினால், 1000 -ஐ உபயோகிக்க வேண்டும்.
-
ஏனெனில், 1 கீ.மீ = 1000 மீ.
-
1000 ஆல் பெருக்க வேண்டுமா அல்லது வகுக்க வேண்டுமா
-
என்று குழப்பம் அடையலாம்.
-
எனவே, எப்பொழுதும்,
-
கிலோமீட்டரை மீட்டராக மாற்றினால்,
-
1 கீ.மீ. என்றால் 1000 மீ.
-
எனவே, 1000 ஆல் பெருக்க வேண்டும்.
-
நமக்கு பெரிய எண் கிடைக்கும்.
-
ஆகையால், 0.05 ஐ 1000 ஆல் பெருக்கினோம்,
-
50 கிடைத்தது.
-
நமது கணக்கை முடிக்கலாம்.
-
0.05 கீ.மீ. என்றால் 50 மீ. ஆகும்.
-
இன்னும் முடியவில்லை.
-
இப்பொழுது 50 மீட்டரை செண்டிமீட்டராக மாற்ற வேண்டும்.
-
அதே போல தான்.
-
50 மீட்டர் பெருக்கல்,
-
1 மீட்டர் என்றால் எத்தனை செண்டிமீட்டர்?
-
100 ஆகும்.
-
இப்பொழுது 100 ஆல் பெருக்க வேண்டுமா?
-
அல்லது வகுக்க வேண்டுமா?
-
இதுவும் அதே போன்று தான்,
-
பெரிய அலகை சிறிய அலகாக மாற்றுகிறோம்,
-
எனவே, ஒரு பெரிய அலகு என்பது பல சிறிய அலகுகளாகும்.
-
எனவே, இதனை பெருக்க வேண்டும்.
-
ஒரு மீட்டருக்கு 100 செண்டிமீட்டர்கள் இருக்கும்.
-
எனவே, இது சரியானது.
-
ஒரு மீட்டருக்கு 100 செண்டிமீட்டர் இருக்கும்.
-
எனவே, 50 மீட்டர் x 100 செண்டிமீட்டர் கீழ் மீட்டர்,
-
50 பெருக்கல் 100 என்பது 5000 ஆகும், மீட்டர் நீங்கி விடும்.
-
நமக்கு செண்டிமீட்டர் கிடைக்கும்.
-
எனவே, 0.05 மீட்டர் என்பது
-
5000 செண்டிமீட்டர் ஆகும்.
-
மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம்.
-
அப்பொழுது தான் உங்களுக்கு,
-
தெளிவாக புரியும்.
-
இதை சற்று கற்பனை செய்து பாருங்கள்,
-
இல்லையெனில் இது சற்று குழப்பமாக இருக்கும்.
-
அதாவது, இதனை பெருக்குவதா அல்லது கழிப்பதா என்பது.
-
என்னிடம், 422 டெசிகிராம் (தசமகிராம்) உள்ளது.
-
கிராம் என்றால் எடையை குறிக்கும்.
-
ஒரு கிராம் என்பது மிக சிறிய அளவு.
-
இதனை மெட்ரிக் அளவுகோளில் தான்
-
கணக்கிடுவார்கள்.
-
இதனை மில்லிகிராமாக மாற்ற வேண்டும்.
-
தொடங்குவதற்கு, சரி பார்க்க வேண்டும்.
-
பெரிய அலகிலிருந்து சிறிய அலகிற்கு மாற்றுகிறோமா?
-
அல்லது சிறியதிலிருந்து பெரியதிற்கு மாற்றுகிறோமா?
-
டெசிகிராம் என்றால் ஒரு கிராமில் 1/10 ஆகும்.
-
எனவே, நாம் ஒரு கிராமில் 1/1000 மாக மாற்றுகிறோம்.
-
இதற்கு, இரண்டு வழிகள் உள்ளன.
-
இதை கிராமிற்கு மாற்றி பிறகு மற்ற அலகிற்கு மாற்றுவது.
-
இது சுலபமானது.
-
அல்லது ஒரு மில்லிகிராமில்
-
எத்தனை டெசிகிராம் உள்ளது?
-
மில்லிகிராம் என்றால் 100
-
மடங்கு சிறியது.
-
1/10 அல் 1/1000 ஆக்க அளவை
-
100 முறை குறைக்க வேண்டும்.
-
அதாவது, 422 டெசிகிராம் பெருக்கல் 100
-
மில்லிகிராம் கீழ் ஒரு டெசிகிராம்.
-
டெசிகிராம் நீங்கி விடும்.
-
பிறகு 422 x 100, அதாவது 42,200 மில்லிகிராம்.
-
இதனை வேறொரு வழியில்,
-
அதாவது போன கணக்கின் வழியில் செய்யலாம்.
-
422 டெசிகிராம், இதனை கிராம் ஆக மாற்ற வேண்டும்.
-
422 டெ.கி. எனலாம்.
-
இது சற்று புதுமையான அலகு.
-
ஒரு கிராமில் எத்தனை டெசிகிராம் உள்ளது?
-
இதனை கிராமாக மாற்றினால், 422
-
குறைந்து விடும்.
-
1 டெசிகிராம் எத்தனை கிராமிற்கு
-
சமம்?
-
1 டெசிகிராம் என்பது, இல்லை
-
1 கிராம் என்பது எத்தனை டெசிகிராமாகும்.
-
1 கிராம் என்பது 10 டெசிகிராம்.
-
இது சரி. ஏனெனில், பகுதியில்
-
டெசிகிராம் இருக்கிறது, இங்கு
-
தொகுதியில் இருக்கிறது.
-
அவை நீங்கி விடும். 422 வகுத்தல்
-
10 என்பது 42.2 கிராம் ஆகும்.
-
இப்பொழுது கிராமை மில்லிகிராமாக மாற்ற வேண்டும்.
-
இது சற்று சுலபமானது.
-
1 கிராம் என்பது 1000 மில்லிகிராம்.
-
இதனை பெருக்க வேண்டும்.
-
கிராம் நீங்கி விடும். பிறகு,
-
42,200 மில்லிகிராம்.
-
42.2 x 1000
-
இது உங்களை குழப்பமடைய செய்யாது என்று நம்புகிறேன்.
-
இதில் முக்கியமானது,
-
சற்று கற்பனை செய்து பார்க்க வேண்டும்,
-
அதாவது, நமது எண் தொடங்கிய எண்ணை விட
-
பெரியாதா அல்லது சிறியதா என்று.
-
நீங்கள் இதில் நன்கு தயாராகி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
-
-